நினைவுள்ளவரை நான்
அ. சித்ரா தேவி
நண்பனே
நினைவலைகள்
எதிரடிக்கும்போது
என்னை ஒருமுறை
எண்ணிப்பார்!
உன்மனக்கடலில்
ஒரு
காகித ஓடமாய் என்னை!
அதுவே
நம் நட்பிற்கு
அடையாளம்!
உன் இரவுகளை
காக்கும்
இமையாக
நானிருக்கிறேன்!
உன்
வாழ்க்கை என்னும்
ஏட்டில்
எழுதும் பேனாவாக
இல்லாவிட்டாலும்
வான் உள்ளவரை நிலா!
நீர் உள்ளவரை கடல்!
நண்பனே
உயிருள்ளவரை நீ!
நினைவுள்ளவரை நான்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|