கனவில் வந்த நட்சத்திரமொன்று
க. அம்சப்ரியா
அவர்கள் சில நட்சத்திரங்களைக்
காலடியில் கொட்டுகிறார்கள்
அதைத்தான் அவன் எதிர்பார்த்திருந்ததாக
அவர்கள் நினைத்திருக்கக்கூடும்
இருளுக்குள் இருப்பவனுக்கு
அதிர்ச்சியூட்டும்படியாகவே இருக்கிறது
நட்சத்திரங்களின் மின்னிடும் வெளிச்சம்
கனவில் வந்த நட்சத்திரமொன்று
கண்ணெதிரே காணாமல் போனதையும்
கைகோர்ப்பதாகச் சொன்ன நட்சத்திரம்
வழிதடுமாறிப் போனதையும்
அறிந்திருந்த அவனின் உலகில்
ஒருபோதும் நட்சத்திரங்களுக்கு
இடமில்லையென்பதும் அறிந்திராத
சிலரே நட்சத்திரங்களாகி விடுகிறார்கள்
நட்சத்திரங்களால் புறம் தள்ளப்பட்ட
இருளுக்குள் சொந்தக்காரனால்
புறக்கணிக்கப்பட்ட நட்சத்திரத்தின் கண்ணீர்
களவாடிக் கொண்டது நிரந்தரமாய்
அவனின் இருளையும்!
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|