Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2008
பெண்மைக்கு ஒரு வாள்
சு. பொன்னியின் செல்வன்

உன்னையே நீ அறிவாய்’
சாக்ரட்டீசின்
சக்கரை வார்த்தையை
பெண்ணே...
உனக்காக முன் மொழிகிறேன்!
கூட்டுப் புழுவாய்
நீயே
கட்டிக் கொண்ட
கூட்டைக் கழற்று!
உனக்கு எதிரி; நீ தான்
வேண்டாம்; வெகுண்டெழு!
புறநானூறு போற்று;
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
உன்னைச் சுற்றிப் போட்ட
பழைய வேலிமுட்கள்
உன்
பயணப்
பாதையில்
பரவிக் கிடக்கின்றன;
எடுத்தெறிவதற்கு
எதிர்ப்பா?
இரண்டிலொன்று பார்;
உனக்கு -
வரலாற்றை
புரட்டவும், புதுக்கவும் தெரியுமே;
புரிந்து கொள்;
நகை, நாணம், புகழ்ச்சியின்
முக்கூட்டுச் சதி;
உன் விடுதலைக்கு
முதுமையைக் கொணர்கிறது!
முறத்தால்
புலி விரட்டியவளே
உன் திறத்தில்
நீ.. தீயாய் உருவெடு!
புவுக்குள்
பூகம்பம் இருப்பதை
உலகம் பார்க்கட்டும்!
நீ போகப் பொருளல்ல;
புத்துலக விடியல்;
பிள்ளைகள் பெற்றது போதும்;
இனி
புரட்சிகளாய் பெற்றெடு!
உயரட்டும் கைகள்;
நீ
ஓங்கித் தூக்கும் சம்மட்டியில்
உன்னைத் ‘தளை’த்த
விலங்குகள் நொறுங்கட்டும்!
‘பெண்ணைப் போல் அழுவதாய்’
வாழும்
திண்ணைத் தெருப்பேச்சு
இனி
பெண்ணைப் போல் எழுவதாய்
பேசட்டும்!
ஒப்பாரிகள் உனக்குச்
சொந்தமல்ல;
பொங்கி... நில்;
இனி உனக்கு
பூபாள ராகமே புதிய ஏற்பாடு!
பழைய பஞ்சாங்க இருட்டு
உன்
வெளிச்சம் பட்டுத்தான்
வெருள வேண்டும்!
அதற்காக
பகுத்தறிவுச் சுடரைக்
கையிலேந்து
மூடநம்பிக்கைக்கு மூச்சு நிற்கட்டும்!
உனக்கான விடுதலை
பெண்ணே
உன்னில் தான் இருக்கிறது;
உன்னால்
உனக்கு எழும் தடையை
உடைத்து எறி;
பழைய பெண்மைக்குப் புதிய
பாடை கட்டு;
அதோ -
புதிய பெண்மைக்குக் கட்டியம் கூறி
ஊதுகிறது துந்துபீ !
வலக்கையில்
இனி எதற்கு விளக்குமாறு
வேலு நாச்சியாராய்
வெளியே...வா; இந்தா... வாள்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
s.kalpana
2008-08-27 09:00:00
seekal_zhar@yahoo.com

keetru ejounal really super

rajagopal
2008-10-03 08:27:00
bsnlgopal@yahoo.co.in



A verey good kavdai



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP