விழித்தெழு பெண்ணே!
நல.ஞான பண்டிதன்
அதிகாலை வேளையில்
உன் விழிப்பு .....
எதனைச் செய்திட உன் தவிப்பு
எழுந்தவுடன் உனக்குள் ஏன் இந்தப் பரபரப்பு
யாருக்காக உன் பரிதவிப்பு
அடுக்கடுக்காய் நீ! எடுத்துச் செய்யும் வேலைகள்
எத்தனை எத்தனை, அத்தனையும்
உனக்காகவே விதிக்கப்பட்டதா...
உன் ஆசைகள் தான் என்ன...?
உன் தேவைகள் தான் என்ன...?
எதுவும் உனக்காக இல்லாத வாழ்க்கையா...!
பணிவிடை செய்வதெற் கென்றே!
படைக்கப்பட்ட உருவமா!..?
உனக்குள் இல்லையா... விடுதலை வேட்கை!
பெண்ணின அடிமைப் பிடியிலிருந்து
புதுமைப் பெண்ணாய்....
விழித்தெழு பெண்ணே ...!
நாளைய விடியல் எனது கையில்
என்றெண்ணி விழித்தெழு பெண்ணே!
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|