Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2008
நாத்திகம் போற்றிடுவாய்
தேவ.சீனி. சுந்தரம்

கல்விகற்க விடுவதில்லை,
கண்ணியமாய் நடப்பதில்லை
சொல்லில் மயக்கிடுவார்,
சுகம்காண விரும்பிடுவார்,
பெண்களைப் போற்றிடுவார்,
பெண்மையை மிதித்திடுவார்,
ஆண்களால் எல்லாமே
அகிலத்தில் நடப்பதாய்,
உண்மையை மறைத்திடுவார்,
உத்தமனாய் நடித்திடுவார்,
எண்ணத்தில் எழுச்சியும்,
ஏற்றமும் விழிப்புணர்வும்,
எப்பொழுதும் வேண்டும்,
இல்லையேல் அடிமை தான்,
அப்போதும் ஆரணங்கு
அரசியலில் வந்தாலும்
எடுப்பார் கைப்பாவை
என்றென்றும் இழுக்கே!
சிந்தித்து முடிவெடுத்து
சீர்திருத்தம் பெண் கொண்டால்,
சிகரமாய் வாழலாம்,
சீலத்தில் உயரலாம்,
தாலி சுகத்திலே தாசியாய் வாழ்வதாய்
போலிகள் கணவனாய்
பொல்லாங்கு செய்வாரே,
சதியாலே கொன்றொழித்த
சதிகாரர் வீழ்ந்திடவே,
சாதி ஒழிப்பினில்
சரித்திரம் படைப்பாய்,
சாமி மதமெல்லாம்
சமுதாய நோயாகும்,
புராணப் புளுகினில் புரண்டு எழாமல்
புரட்சியைப் படைப்பாய்,
புதுமையை மேற்கொள்வாய்,
நம்பாதே சோதிடம்
நாடிடு பகுத்தறிவை,
நன்மைகள் பெற்றிட
நாத்திகம் போற்றிடுவாய்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
deepa
2008-09-10 12:32:00
deepa.ganesh@lehman.com

Neramirunthal padikkavum



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP