Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2008
திராவிடத்தால் விழித்தோம்...
லலிதா

புதிய பெண்ணியம் செப் அக்டோபர் இதழில் மதி இடம் கேளுங்கள் பகுதியில் "திராவிடம் மாயையா?' என்றதொரு கேள்விக்குப் பதிலாக, அழுத்தமான பதில் ஒன்றை மிகச் suருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். பெரியார் உருவாக்கிய அல்லது பெரியாரால் உள்வாங்கப்பட்ட திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை விமர்சிப்பது என்பது வேறு, அக்கருத்தியலையே புறக்கணித்து, பெரியாரைப் பொத்தாம் பொதுவாகக் குறை சொல்வது வேறு என்ற தொனியிலேயே அந்த பதில் அமைந்திருந்தது.

periyar மிகச் சுருக்கமாக சொல்லப்பட்ட அந்தக் கருத்து சில பெரியாரியவாதிகளால் பாராட்டுப் பெற்றதோடு, சில மார்க்சியவாதிகளால் தொலைபேசி வழியே விமர்சிக்கவும் பட்டது. பெண்ணியம் இதழின் கருத்துக்களிலும், வளர்ச்சியிலும் மிகுந்த அக்கரை கொண்டுள்ள தோழர் ஒருவர் சில கருத்துக்களைச் சொன்னதுடன் "பெரியாரையே "வந்தேறி' என்று கூறிக் கொண்டிருக்கும் கூட்டம் ஒன்றிருப்பது தெரியுமா' என்றொரு வினாவினை எழுப்பினார். இந்தக் கேள்வி நம்முள் ஒரு சிறு அதிர்வினை ஏற்படுத்தியதோடு "மதியின் பதிலில்' இத்தனை செய்திகள் பொதிந்து கிடக்கின்றனவா என்ற வியப்பினையும் உண்டு பண்ணியது. கூடவே "பெரியாரின் அரசியலையும்' சிறியதோர் ஆலிவுக்குட்படுத்தினால் இன்னும் நிறையத் தகவல்கள் தெரிய வருமோ என்ற ஆர்வத்தையும் கிளப்பியது.

பல நூற்றாண்டுகளாக இன, மொழி உணர்வு அருகிக் கிடந்த அல்லது அற்றுப்போயிருந்த நிலையில் மிகப் பெரும் மக்கள் திரளை, மொழி உணர்வை ஊட்டி ஒன்று திரட்டிய பெருமைக்குரியது திராவிட இயக்கம் தான் என்பதே நமது கண்ஃணாட்டமாக இருந்து வருகிறது. அது காறும் மத ரீதியாகவும், மதிய நோக்கிலும் திரட்டப்படும் வெகுமக்கள் கூட்டத்தைத்தான் உலகம் கண்டிருந்தது. ஆனால் தமிழின் வழியே சிதறிக் கிடந்த தமிழர்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் ”யமரியாதையினை ஏற்படுத்தி, பன்னூறு ஆண்டு காலமாக அவர்கள் இழந்திருந்த அடையாளத்தை மீட்டுத் தந்தது திராவிடக் கருத்தாக்கமே என்பதும் நமது ஆழமான நம்பிக்கை.

இம்மாபெரும் மதனையை நிகழ்த்த, முன்னுதாரணமே இல்லாத அவர்களின் முழுமையான முயற்சிகளே காரணம் என்பதும் இந்த ஆலிவின் வழியே தெரிய வந்தது. ஊர் தோறும் தெருமுனைக் கூட்டங்கள் எனும் மேடைப்பேச்” தொடங்கி பலதரப்பட்ட இதழ்கள், நாடகங்கள், திரைப்படங்கள், இலக்கியம் என அனைத்து வடிவங்களிலும் போராடி வென்று தமிழருக்கு முகவரி கொடுத்தது திராவிட இயக்கம் தான். இதனை எவரேனும் மறுப்பர் எனில் அவர்களை வரலாறு அறியாதவர்கள் என்றே மதிப்பிட வேண்டியதாக இருக்கும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியர்களின் நலம் காக்கத் துவங்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதோரான நீதிக்கட்சி (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்) யும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் ஒன்றிணைந்து தான் 1944ம் ஆண்டில் திராவிடர் கழகமாக உருமாற்றம் பெற்றது. 1912ம் ஆண்டிலேயே மருத்துவர் சி.நடேசன் என்பாரால் "சென்னை மாகாண திராவிடர் சங்கம்' தோற்றுவிக்கப்பட்டது. பின்னரே அது 1916ல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக மாறியது. அக்காலச் சூழலில் மூன்று விழுக்காடே இருந்த பார்ப்பனர் தொண்ணூற்றியேழு விழுக்காட்டு மக்களைத் தங்கள் வசம் இருந்த அரசுப் பதவிகளின் வழியே அடக்கியாண்டனர். மெத்தப்படித்திருந்தும், வசதி வாலிப்பிருந்தும் அரசுப் பதவிகளை அடையமுடியாத பார்ப்பனரல்லாத முற்பட்ட வகுப்பினரே இந்நிலையை மாற்றிட நீதிக்கட்சி எனும் ஜஸ்டிஸ் கட்சியைத் தொடங்கினர்.

1920ஆம் ஆண்டு தொடங்கி 1934 முடிய பரந்துபட்ட சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சியே நடந்து வந்திருக்கிறது. ஏழுமுறை தேர்தலில் வென்று ஆட்சி நடத்திய நீதிக்கட்சியில் ஆறு முறை தெலுங்கர்களே தலைமை அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். ஒரே ஒரு முறை மட்டும் தமிழர் (பி.சுப்பராயன்) தலைமை அமைச்சர் பொறுப்பு வகித்திருக்கிறார். தமிழர் அல்லாதோரே நீதிக்கட்சியில் முன்னிலை வகித்து வந்தனர் என்ற நிலையாலும், பார்ப்பனர்க்கு எதிராகப் அரசுப் பதவிகளைப் பிடிப்பதொன்றையே நோக்கமாகக் கொண்டிருந்ததாலும், நீதிக்கட்சியின் குறிக்கோளற்ற பயணம் இடையிலேயே நிலை தடுமாறியதுடன் கட்சி உடைந்து சிதறியது.

1922ம் ஆண்டு தமிழக காங்கிரசு தலைவராக இருந்த பெரியார், மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே பார்ப்பன ஆதிக்கம் மிகுந்த அக்கட்சியுடன் முரண்பட்டு வெளியில் வந்தார். 1926ம் ஆண்டு ”யமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, இயக்கப் பரப்புரைக்கென குடியரசு, விடுதலை போன்ற பல்வேறு இதழ்களைத் தொடங்கி நடத்தி வந்தார். இதனால் தமிழ்நாட்டில் சிந்தனையாளர்கள் கூட்டம் பெருகியது. தமிழகத்தின் வாசிப்புத் தளம் விரிந்து பரந்தது. தமிழ் மொழி புத்துயிர் பெற்று, தமிழர்களை இன உணர்வோடு ஒன்றிணைக்கும் வல்லமை படைத்ததாக மாறியது.

சென்னை மாகாணத்தில் மதிப்பிரிவுகளாலி பிரிந்து கிடந்த திராவிடச் சங்கங்களான பறையர் மகாசபை, நாடார் ஜன சங்கம், நாயுடுகள் சங்கம், விசுவகர்மா ஜனசங்கம், வன்னியகுல சத்திரிய சங்கம், வேளாளர் சங்கம் என்கிற அனைத்து அமைப்புக்களையும் ஒருங்கிணைப்பதொன்றே சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகவும் இருந்தது. இதில் பெரியார் ஓரளவு வெற்றியும் பெற்றார். பின்னாளில் நீதிக்கட்சி சிதறியபோது அரசுப்பதவி வேண்டாதோர் என்போர் பெரியாரின் தலைமையை ஏற்றனர்.

1938ம் ஆண்டு இராஜாஜி அமைச்சரவை இந்தியைப் புகுத்திய போது பெரியார் வெகுண்டெழுந்தார். "தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கினார். இம்முழக்கத்தை தமிழர் ஒவ்வொருவரும் கையில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்றதோடு வீடுகளில் கல்வெட்டாலிப் பதித்து வைக்கவும் வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆண்டில் தான் மொழிப் போரில் பங்கேற்ற பெண்கள், மகளிர் மாநாடு ஒன்றினை நடத்தி "பெரியார்' என்ற பட்டத்தினை அவருக்கு வழங்கினர்.

தந்தை பெரியாரின் தலைமையில் கீழ் இருந்த இயக்கத்தில் தெலுங்கு, கன்னட, மலையாள இனத்தவரும் பெருமளவில் இருந்தனர். 1939ம் ஆண்டு இந்தித் திணிப்பு திரும்பப் பெறப்பட்ட நிலையில் பெரியார் திராவிட நாட்டுக் கோரிக்கையினை மீண்டும் பற்றிக் கொண்டார். திராவிடச் சங்கங்களுக்குத் தலைவர் என்ற முறையிலும், தாமே ஒரு தமிழர் அல்ல (தாயார் தெலுங்கு நாயக்கர், தந்தை கன்னட நாயக்கர்) என்ற நிலையிலும், தென்னிந்தியப் பகுதி திராவிடம் என்றழைக்கப்பட்டதாலும் இக் கோரிக்கையில் பெரியார் பிடிவாதமாக இருந்தார்.

1940ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இலண்டனில் "இந்திய விவகார ஆலோசனைக் குழு' வின் கூட்டத்தைக் கூட்டியது. இந்தியர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் நோக்கத்துடன் அக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தந்தை பெரியார் திராவிடநாடு பிரிவினைத் திட்ட அறிக்கையினைத் தயாரித்து அப்போது நீதிக்கட்சித் தலைவராக இருந்த ஏ.டி.பன்னீர் செல்வம் என்பவரிடம் கொடுத்து ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவரை அனுப்பி வைத்தார். ஆனால் எதிர்பாராவிதமாக லண்டன் சென்ற விமானம் 1940, மார்ச் ஒன்றாம் தேதியன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பன்னீர் செல்வம் மறைந்தார். இதனால் திராவிட நாட்டுக் கோரிக்கை மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது.

இதன் பின்னர் சென்னை மாகாண அரசியல் சூழல் காரணமாக ”யமரியாதை இயக்கத்தை "தமிழர் கழகம்' என்னும் பெயர் மாற்றம் செய்யும் முடிவோடு சேலத்தில் மாநாடு கூட்டப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் இயக்கத்தில் இருந்த முன்னணித்தலைவர்களான பிற திராவிட இனத்தவர் "தமிழர் கழகம்' எனப் பெயர் சூட்டினால் தாங்கள் வெளியேற நேரிடும் என்று எச்சரித்தனர். தந்தை பெரியாரும் நிலவிய சூழலை ஆலிந்தறிந்து திராவிடர் என்ற பொதுப் பெயராகவே இருக்கட்டும் என்று முடிவு செய்து "திராவிடர் கழகம்' என அறிவித்தார். எனினும் 1953ம் ஆண்டு ஆந்திரா பிரிந்து தனி மாநிலமானது போன்று 1956ல் கர்நாடகா, கேரளா, மாநிலங்கள் உருவான பிறகு பெரியார் திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டார்.

1958ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் நாள் "விடுதலை' தலையங்கத்தில் பெரியார் இவ்வாறு எழுதினார் "நான்கும் சேர்ந்து ஒரு நாடாக இருந்த போது அவர்களையும் சேர்த்துக்கொண்டு பிரிவினை கேட்க வேண்டி இருந்தது. இப்போது அவனவன் தனியே பிரிந்து போன நிலையில் அவ்வாறு கேட்க என்ன தேவை இருக்கிறது?' இவ்வாறு எழுதிய பெரியார் இனி தமிழ்நாட்டின் விடுதலைக்கே பாடுபடுவது என்று அப்போதே முடிவு செய்தார். அவரிடமிருந்து 1949ம் ஆண்டு பிரிந்த அண்ணாவும் திராவிடத்தைப் பேசினாலும், திராவிட நாட்டைக் கோரினாலும், திராவிட நாட்டில் மூன்று மொழிகள் சேர்ந்த கூட்டாட்சியே நடைபெறும் என்றும் அறிவித்தார்.

தற்போது மாயை என்று சொல்லப்படும் திராவிடம் என்கிற சொல்லும், கருத்தும் பெரியாரால் உருப்பெறவில்லை என்பதும் நமது ஆலிவில் கிடைத்த முக்கியச் செய்தியாக இருக்கிறது. 1912ம் அண்டிற்கு முன்பே பவுத்த சமய அறிஞராகக் கருதப்பட்ட அயோத்தி தாசப் பண்டிதர் 1892ம் ஆண்டு நீலகிரியில் "ஆதி திராவிட மகாஜனசபா' என்கிற அமைப்பைத் தொடங்கி நடத்தினார். இதுதான் முதலாவது திராவிட அமைப்பு என்றும் அறியப்படுகிறது. இவர் 1907ம் ஆண்டு தொடங்கி ஏழு ஆண்டுகள் முடிய "ஒரு பைமத் தமிழன்' என்ற இதழை நடத்தி வந்த போதும் தம்மை திராவிடர் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். அது மட்டுமின்றி தமிழ் மொழியை உருவாக்கியவரே புத்தர் தான் என்பதான கருத்துக்கும் ஆட்பட்டிருந்தார்.

உலகின் தலைசிறந்த வரலாற்று ஆலிவாளர்களுள் ஒருவரான யாழ்ப்பாணத்தைச் மர்ந்த டாக்டர் ஆனந்த குமாரமமி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர் என்போர் இந்தியா முழுவதும் சிறு சிறு குழுவினராகப் பரவி இருந்தனர் என்று தம் ஆலிவு நூலில் குறிப்பிடுகிறார். ஆரியர் வடநாட்டார், திராவிடர் தென்னாட்டார். ஆரியர் இவர்களைத் தாஸ்யூ, தாசர் என்றெல்லாம் அழைத்து வந்ததோடு, எப்போதும் இவர்களுடன் முரண்பட்டே வந்துள்ளனர். ஆரியர் இவர்களை அனாஸர் (மூக்கற்றவர்கள்) என்றழைத்ததற்கும் நிறைய வரலாற்றுச் மன்றுகள் உள்ளதெனக் கூறுகின்றார்.

ஆங்கிலேயரான கால்டுவெல் என்னும் மொழி அறிஞர் ஆரியர்கள் தமிழர் என்று சரியாக உச்சரிக்கத் தெரியாததால் "திரமிள', திராவிட என்று அழைத்ததே பிற்காலத்தில் திராவிடம் எனும் சமஸ்கிருதப் பெயர் ஆயிற்று என்கிறார். கி.பி.470ம் ஆண்டிலேயே வச்சிர நந்தி என்னும சமண முனிவர் மதுரையில் "திரமிள சங்கம்' என்ற அமைப்பினைத் துவங்கியதாக "தமிழ் நாடு வரலாற்றில்' ஒரு செய்தி உள்ளது. கி.பி.8ம் நூற்றாண்டில் குமாரிலபட்டர் என்பவரால் ஆந்திரதிராவிட பாஷா என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் கால்டுவெல் ”ட்டிக் காட்டுகிறார். இவ்வாறு திராவிட பாஷா என்று அழைக்கப்பட்டது தமிஃழ என்பதும் தெளிவு.

தேசிய இனங்களின் வரையறைக்கு மொழி முக்கிய காரணி என்பது வலுவாக, பரவலாக அறியப்படாத சூழலில் பெரியார் திராவிட நாட்டுக் கோரிக்கையினை வைத்ததை தவறு எனக் கொள்ள எவ்வித முகாந்திரமும் இல்லை. அவரே தமிழர் அல்ல என்கிற சூழலில், அக்கால அரசியல் மற்றும் வளர்ச்சியற்ற சமூகப் பின்னணியில் இது போன்ற திராவிடக் கோரிக்கையினை முன்வைப்பதே நியாயமாகவும், பொருத்தமாகவும் இருந்திருக்கும். மொழி வாரி மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகு தமிழ்ச்சமூக மாற்றத்திற்கென்றே தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் தந்தை பெரியார் என்பதும் எவரும் அறியாததல்ல.

உலகில் வேறெந்தவொரு தலைவரும் நிகழ்த்தி இராத மாபெரும் மதனையாக பெரியார், தமிழ்நாட்டில் 10,700 பொதுக்கூட்டங்களில் தமது பகுத்தறிவுப் பிரச்மரத்தை நடத்தி இருக்கிறார். அவர் இதற்காகப் பயணம் செய்த தூரம் என்பது நம்மை மிகவும் மலைக்க வைக்கக் கூடியது. இந்த பூமிப் பந்தை பத்து முறை ”ற்றி வந்தால் எத்தனை லட்சம் மைல்கள் கணக்கிடப்படுமோ, அவ்வளவு தொலைவிற்குத் தமது கொள்கைப் பரப்புப் பயணத்திற்கென தமிழ்நாட்டில் ”ற்றுப்பயணம் மேற்கொண்டவர் தந்தை பெரியார்.

தமிழர் தலைவரான தந்தை பெரியாரை "வந்தேறி' என்று குறிப்பிடுவோர், அவ்வாறு கூறக் காரணம் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்பது தான். காஞ்சி சங்கராச்மரியார் கூறிய தமிழ் நீச பாஷை என்பதையும் இதற்குத் துணையாக அழைத்து கொண்டு, இருவருமே தமிழர்கள் அல்ல. வந்தேறிகள் தான், எனவே தான் தமிழைப் பழிக்கின்றனர் என்பதாக இவர்கள் கருதுகின்றனர். இவ்விரு கூற்றுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய இடைவெளியினையும் காணத் தவறுகின்றனர்.

ஓர் அன்னை தன் குழந்தையின் பசியாற்ற முனையும் போது, உண்ண மறுத்து அடம் பிடிக்கும் குழந்தையினை மிகக் கடுமையான வார்த்தையில் ""சனியனே... எக்கேடும் கெட்டுப் போ...'' என்று கூறுவதற்கும், அதே குழந்தை அடுத்த வீட்டில் சென்று விளையாடும் போது, அது பிடிக்காத அவ்வீட்டுப் பெண் ""சனியனே.... போலித் தொலை'' என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு உள்ளதோ அதே வேறுபாடு தான் இவை இரண்டிற்கும் இடையில் உள்ளது. தமிழருக்கு முகவரி கொடுத்த தந்தை பெரியாருக்குத் தமிழரைத் திட்ட உரிமை இல்லை எனில் தமிழகத்தில் பிறந்த எந்தத் தமிழனுக்கும் அந்த உரிமை இல்லாமலேயே போலிவிடும். கூடவே அன்னையை அந்நியராக்கிப் பார்க்கும் அறியாமையும் வெளிப்பட்டு விடும்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தில் வேங்கடம் முதல் குமரி வரை தமிழகம் பரவி இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கடுத்து வந்த சங்க இலக்கியம் சேர, மேழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பற்றிப் பேசிப் புகழாரம் சூட்டுகிறது. பண்டைத் தமிழ் நூல்கள் பறைமற்றும் தமிழர் பெருமை கி.பி.1050 களிலேயே முடிவுக்கு வந்து விடுகிறது என்பதையும் வரலாறு நமக்குச் ”ட்டிக் காட்டுகிறது.

பதினோராம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே தமிழ் மூவேந்தரின் ஆட்சி முடிவுக்கு வந்து விடுகிறது. சோழ நாட்டை முதலில் கைப்பற்றியது முதலாம் குலோத்துங்கன் என்னும் கீழைச் மளுக்கியனே. இவன் கன்னடத் தெலுங்கன் என்றே வரலாறு கூறுகிறது. பாண்டிய நாட்டிலோ விசயநகரப் பேரரசின் ஆட்சி நாயக்கர் ஆட்சியாக மலர்ந்தது. நாயக்கர்களில் பெரும்பாலோர் முதலில் கன்னடர்களாக இருந்தாலும் பின்னாளில் தெலுங்கர்கள் கையில் பாண்டியப் பேரரசு சென்றது. இவர்களே தமிழ் மன்னர்களது ஆட்சி முறையினை மாற்றி "பாளையப் பட்டுகள்' எனும் குறுநில ஆட்சி முறையினை ஏற்படுத்தினர்.

சோழரின் தலைநகராக இருந்த தஞ்சாவூரோ மராட்டியரின் ஆளுகைக்குள் அடங்கியது. திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் நீலமலைப் பகுதிகளில் படுகர் எனப்படும் கன்னடர் பெருமளவில் வந்து குடியேறினர். பாளையக்காரரான பாஞ்மலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனும் தெலுங்கு குறுநில மன்னனே. தென்பாண்டி நாடும் இதுபோன்ற பாளையத்துக்காரர்களால் இராசபாளையமாகவும் மாறியது.

இவ்வாறு பண்டைத் தமிழ் நூல்களால் புகழப்பெற்ற தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழக மன்னர்களின் ஒற்றுமையின்மையினால் மொழி உணர்வை இழந்து, இனப்பெருமை இழிந்த நிலையில் சிதிலப்பட்டு அந்நியர் வசம் சென்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது தனித்தன்மையை இழந்து விட்ட தமிழகம் ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு, பதினேழாம் நூற்றாண்டில் நிர்வாக வசதிக்காக சென்னை மாகாணமாக உருப்பெற்றது. இந்தச் சென்னை மாகாண நிலப்பரப்பில் தமிழினம் மட்டுமின்றி திராவிட மொழிகளின் இனத்தாரும் ஒட்டு மொத்தமாக இரண்டறக் கலந்திருந்தனர். ஆரியர் தமது இலக்கியங்களிலும், புராணங்களிலும் தென்னிந்தியாவை திராவிடப்பகுதி என்று குறிப்பிட்டிருந்ததை, ஏறக்குறைய முன்னூறு ஆண்டு கால ஆங்கிலேயரின் ஆட்சி உறுதி செய்தது. தென்னிந்தியப் பகுதி திராவிட நாடு என்றே அழைக்கப்பட்டது.

இந்தியாவின் இத்தகைய சமூக அரசியல் சூழலில், இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தில் பகுத்தறிவுப் பகலவனாலி உதித்தார் தந்தை பெரியார். தமது வாழ்க்கை, சொத்து, சுகம், சுற்றம் என அனைத்தையும் தமிழ் நாட்டிற்கே அர்ப்பணித்தார். அந்தப் பகலவனின் அர்ப்பணிப்பு மிகுந்த பேரொளியில் பல நூற்றாண்டுகளாலி உறங்கிக்கிடந்த தமிழகம் மெல்ல விழித்தது. திராவிடர் தான் தமிழர், சென்னை மாகாணம் தான் திராவிடம் என்ற அக்கால வரையறுப்பின் படி திராவிடர் கழகத்தையும், திராவிட நாட்டுக் கோரிக்கையினையும் முன்னெடுத்தார் தந்தை பெரியார். மாநிலப் பிரிவினைகளுக்குப் பிறகு முற்றிலுமாக அதனைக் கைவிட்டார்.

மாற்றம் என்பதொன்றே மாறாதது என்பதை நன்குணர்ந்த தமிழரின் ஒரே தலைவரான தந்தை பெரியாரின் கனவுகள் மெலிப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து ஏற்பட வழியே இல்லை. ஏற்படின், அவரைத் தமிழராகக் கொள்ள வாலிப்பில்லை. எனவே திராவிடம் என்கிற கருத்தாக்கத்தின் வழியே, நெடுந்துயிலில் இருந்து விழித்த தமிழகம், அந்த எழுச்சியினையே அடித்தளமாக்கி அதன் மீதுதான் தமிழ்த்தேசியம் என்கிற மாளிகையினைக் கட்டி எழுப்ப வேண்டும். அந்நாளில் மகத்தான அம்மாளிகையின் திறவுகோல் என்பது "பெரியாரியம்'' என்றே பெயர் கொண்டிருக்கும் என்பதை எவரால், எவ்வாறு மறுக்க இயலும்?



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com