Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
ஜனவரி - பிப்ரவரி 2009
சேலம் தொடர்வண்டிக் கோட்டம் தொடக்கமும், முடக்கமும்
பொன். மாயவன்


தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக் கையின் விளைவாக கடந்த 2007-இல் சேலம் தொடர் வண்டிக் கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. கோட் டம் உருவாவதை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதில், மலையாளிகள் எல்லா மட்டத்திலும் முட்டுக் கட்டைப் போட்டனர். ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் களம் இறங்கி உறுதியாக நின்று போராட, மலையாளிகள் முயற்சி முறியடிக்கப்பட்டு, சேலம் கோட்டம் உதயமானது. ஆனால் கோட்டம் உதயமானா லும், அது இயல்பாக இயங்க விடா மல், அதற்கு எல்லா வகையிலும் இடை யூறு விளைவித்து அதை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் தொடர்வண்டித் துறை உயர் பொறுப் பில் உள்ள மலையாள அதிகாரிகள்.

இதுவரை சேலம் கோட்டத்திற்கு உரிய உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப் படாமல் உள்ளது. கோட்ட வளர்ச்சிக்கு உரிய திட்டங்களோ, தேவையான ஊழியர்களோ, போது மான தொழிலாளர்களோ இன்றி கோட்டச் செயல்பாடு மிகமிக மந்தமாக உள்ளது. சேலம் கோட்டத்திற்கு தேவை யான 100 ஏக்கர் நிலமும் மாநில அரசு தர வில்லை என தொடர்வண்டித் துறையின் இணை அமைச்சர் வேலு கூறியுள்ளார். இது ஆளும் தி.மு.க. அரசின் பொறுப் பற்றப் போக்கைக் காட்டுகிறது. சேலம் கோட்டம் அமைய தி.மு.க. போராட் டங்களை நடத்தியது. ஆனால் கோட்ட வளர்ச்சியில் அக்கறை காட்ட வில்லை. எல்லாவற்றிலும் அரசியல்.

ஆக இப்படி தொடர்வண்டித் துறையைச் சார்ந்த மலையாளிகளின் ஆதிக்கம், ஆட்சியாளர்களின் அலட்சி யம் ஆகிய பல்வேறு காரணங்களினால் சேலம் கோட்டம் வாட்டமுற்று நிற்கிறது. சேலம் கோட்ட இருப்புப் பாதை அண்டை மாநிலங்களில்: சேலம் கோட்டத்தின் எல்லைகளை அதிகாரப் பூர்வமாக அறிவித்த போது, சேலம் கோட்டத்திற்கு ஓமலூரிலிருந்து ஓசூர் வரையில் 144 கி.மீ. உள்ளடக்கிய தொடர் வண்டி வழித்தடத்தை பெங் களூர் கோட்டத்தில் இணைத்து விட் டார்கள். நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த பொள்ளாச்சி கிணத்துக் கடவு பகுதி களையும் சேலம் கோட்டத்தில் இணைக்காமல் பாலக்காடு கோட்டத் தில் இணைத்து தமிழகத்திற்கு இரண் டகம் செய்துவிட்டனர்.

ஆனால் சேலம் கோட்டத்திற்காக போராடிய தமிழக கட்சிகள், இப்படி தமிழகத்தின் எல்லைகளை பறித்த தொடர் வண்டித் துறையின் போக்கைக் கண்டித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஏற்கெனவே தமிழ் நாட்டிலுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர் கோவில் ஆகியப் பகுதிகளை கேரளா வில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தில் இணைத்துள்ளனர். இந்தப் பகுதிகளை மதுரைக் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற மதுரை மக்களின் கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.

1956இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அண்டை மாநி லங்களான கேரளம், ஆந்திரம், கர்நாட கம் ஆகியவற்றிடம் தமிழகத்தின் எல்லைகளை இழந்து விட்டோம் என்கிற குமுறல் தமிழக மக்களிடையே உள்ளது. இப்போது தென்னகத் தொடர் வண்டித் துறை என்பதன் பெயரால், தமிழகத் தொடர் வண்டி இருப்புப் பாதைகளை அண்டை மாநிலங்களின் கோட்டங்களில் இணைத்திருக்கிறார் கள். எனவே முதலாவதாக இவற்றை மீட்டெடுத்து தமிழகத்தின் கோட்டங் களில் இணைக்கவேண் டும்.

அப்போதுதான் தொடர் வண்டித் துறையில் ஒதுக்கப் படும் நிதிகளை நமது இருப்புப் பாதைளை சீரமைக்க வும், நிலைய கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்தவும், நடை மேடைகளை பராமரிக்கவும், ஊழியர்களைப் பாது காக்கவும், முறையாகப் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் போனால் ஒதுக்கப்படும் நிதிகளை தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் தங்களின் மாநிலங்களின் எல்லைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, தமிழக எல்லைப் பாதைகள் தொடர்ந்து புறக்கணிக்கும் நிலையே ஏற்படும்.

சேலம் கோட்ட உருவாக்கத்தின் நோக்கமும்,மக்களின் கோரிக்கையும்:

புதிய கோட்டம் தொடங்கினால், புதிய வழித் தடங்களில் வண்டிகள் இயக்கப்படும் என்றும், இதனால் வசதி வாய்ப்புகள் பெருகும் என்றும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் மக்கள் ஆவலோடு எதிர் பார்த்தார்கள். ஆனால் இந்த எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டுவிட்டது தொடர் வண்டித் துறை. சேலம் வழியாக கோவை முதல் திருப்பதி வரை தொடர் வண்டி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது அறிவிப்போடு நிற்கிறது. சேலத்திலிருந்து கோவை மற்றும் தென் தமிழக ஊர்களுக்கு தனியாக பயணிகள் வண்டி விட வேண்டும் என கடந்த 35 ஆண்டு காலமாக வணிகர் களும், பொது மக்களும் வலியுறுத்தி, தில்லி, சென்னை, பாலக்காடு என மூன்று கோட்ட அலுவலகங்களுக்கும் நேரில் சென்று முறையிட்டும், கையெழுத்து இயக்கம் நடத்தியும் இதுவரை எந்தப் பயனும் இல்லை.

ஈரோடு - திருநெல்வேலி சாதாரண பயணிகள் வண்டி சேலம் வரை நீடிக்க வேண்டும் என்றும், பாலக்காடு - கோவை - ஈரோடு சாதா ரண பயணிகள் வண்டியை சேலம் வரை நீடிக்க வேண்டும் என்கிற கோரிக்கை யும் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. சென்ற ஆண்டு தொடர் வண்டி நிதி நிலை அறிக்கையில் சேலம் கோட் டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒரே ஒரு தொடர் வண்டி சென்னை எழும்பூர் - சேலம் மட்டுமே. இவ்வளவு பின்னடைவு களுக்கு மத்தியிலும், சேலம் கோட்டம் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 250 கோடி ரூபாயையும் தாண்டி வருவாயில் சாதனை படைத்துள்ளது. என்றாலும் புதிய தொடர் வண்டிகளை இயக்க நிர்வாகம் அக்கறைக் காட்டாதது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர்களின் வேலையைப் பறித்த மலையாளிகள் : சமீபத்தில் சேலம் கோட்டத்திற்கு தொடர் வண்டி துறை சார்பாக 52 எழுத்தர் பணிக்காக சிறப்புத் தேர்வு நடைபெற்றது. தொடர் வண்டித் துறையில் கீழ்நிலையில் உள்ள கூலிகள் (போர்ட்டர்) உள்ளிட்ட பல் வேறு பணிகளுக்கு கல்வித் தகுதி அதிக முள்ள பலர், தேர்வுகளை எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாகி, தங்க ளுக்கு பணி நியமனம் வரும் என இவர்கள் காத்திருந்த நிலையில், தென்னகத் தொடர் வண்டித் துறையில் உள்ள சில மலையாள உயர் அதிகாரிகள், இத்தேர்வு முடிவுகளை வெளியிடா மல், அவசர அவசரமாக பாலக் காட்டில் மற்றொரு தேர்வு நடத்தி, அதில் ஒன்பது பேரை தேர்வு செய்து, சேலம் கோட் டத்திற்கு பணி நியமனம் செய்துள்ளனர். இந்த அநியாயத்தைக் கண்டித்து, தொடர் வண்டித் துறை தொழிற்சங்கங் கள் கடும் போராட்டம் நடத்திய பிறகே, பாலக்காட்டில் தேர்வு செய்து சேலத் தில் நியமனம் செய்த ஒன்பது பேரை மீண்டும் பாலக்காடு கோட்டத்திற்கு திருப்பி அழைத்துக் கொண்டனர்.

மேலும் சேலம் கோட்டத் திற்கு வரும் ஏராளமான பணி யிடங்களையும் பாலக் காட்டுக்கு திருப்பிக் கொள் வதாகவும் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். பாலக்காடு கோட்டம் ஒன்றாக இருந்தபோது சேலம் கோட்டத்திற்காக கோரப்பட்ட பணியிடங்களுக்கு ஒப்பு தல் வரும்போது, பாலக்காடு கோட்டம் என்றே குறிப்பிட்டு வருவதால், பாலக் காட்டிலேயே பணி நியமனம் செய்து தமிழர்களை வஞ்சித்து விட்டனர் என சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி, பதவி உயர்வு மூலமாக இங்கு நிரப்பப் படவேண்டிய பணியிடங்களையும், பாலக்காடு கோட் டத்திலிருந்தே அயல் பணியிடங்களின் அடிப்படையில் நியமிக்கின்றனர். இதன் மூலம் தமிழர்களின் வேலை வாய்ப்பு தொடர்ந்து பாதிக் கப்பட்டு வருகிறது.

சேலம் கோட்டத்திற்கும், பாலக் காடு கோட்டத்திற்கும் இடையில் அடிப்படை சம்பளத்திலும் வேறுபாடு. சம்பளம் வழங்குவதிலும், காலதாம தம். தொடர் வண்டிகளை நீட்டிப்பதி லும், புதிய தொடர் வண்டிகள் இயக் குவது, மற்றும் நிதி ஒதுக்கீடு செய்வ திலும் பாரபட்சம். இப்படி எல்லா வற்றிலும் சேலம் தொடர்வண்டிக் கோட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதாக எஸ்.ஆர்.எம்.யு. பகிரங்க மாக குற்றம் சாட்டுகிறது. மலையாளிகளின் சூழ்ச்சி : சேலம் கோட்டம் அமைவதை தடுக்க முடியாது என்பதை உணர்ந்த கேரள அரசியல்வாதிகள் ஒரு தந்திரத்தைக் கையாண்டு இருக்கிறார்கள். அதாவது சேலம் கோட்டத்தின் செயல்பாடுகளை முடக்க, திருவனந்தபுரம் பாலக்காடு, சேலம் கோட்டம் உள்ளடக்கிய “வெஸ்ட் கோஸ்ட் ரயில்வே” மண்ட லம் அமைக்க வேண்டும் என வலி யுறுத்தி வருகிறார்கள் என்பதை கடந்த மண்மொழி வெளியீடு 19 - 2007-இல் எழுதி இருந்தோம்.

இதில் தமிழ்நாடு விழிப்புடன் இருக்கவேண்டும். மேலும் “தென்னக தொடர் வண்டித் துறையில் தமிழ்நாடும் கேரளாவும் சேர்ந்து இருப்பதை பிரித்து, தமிழ்நாட்டு எல்லைகளை உள்ளடக்கிய பகுதிகளைத் தமிழகத் தொடர்வண்டி மண்டலமாக அறிவிக்க வேண்டும், தனியாக நிர்வாகம் செய்ய வேண்டும். இதனால் தமிழர், தமிழக உரிமை பாதுகாக்கப் படும்.

தமிழ்நாட்டின் உரிமை :

கடந்த 13-02-2009 அன்று நடுவண் அரசு அறிவித்த தொடர் வண்டித் துறையின் நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கு ஐந்து புதிய தொடர் வண்டிகள் அறிவித் ததோடு சரி, வேறு எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற் றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநிலத்திற்கு புதிய தொடர் வண்டிகள் மிகவும் தேவைதான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதே போல் புதிய இருப்புப் பாதைகள் மிக மிக முக்கியம். இந்த புதிய பாதைகள் பற்றி இந்த ஆண்டு நிதி நிலை அறிக் கையில் தகவல் ஒன்று மில்லை.

அடுத்து அகல தொடர் வண்டி பாதையாக மாற்றும் திட்டம் தொடர் பாகவும் மூச்சு விடவில்லை. இரட்டை பாதையாக்கும் திட்டம் பற்றியும் நிதி நிலை அறிக்கையில் இல்லை.இவை ஒருபுறமிருக்க இன்னு மொரு கொடுமையும் நேர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் முதல் குமுளி வரை ஒரு தொடர் வண்டிப் பாதையும், நீடா மங்கலம் முதல் பட்டுக் கோட்டை வரை ஒரு தொடர் வண்டிப் பாதையும், அரியலூர் முதல் தஞ்சாவூர் வரை ஒரு தொடர்வண்டிப் பாதையும், திருவண்ணாமலை முதல் சோலார் பேட்டை வரை ஒரு தொடர் வண்டிப் பாதையும், ஆக ஐந்து புதிய தொடர் வண்டிப் பாதைகள் 1500 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டது. இதற்கு 2008 ஆம் ஆண்டு ஜூலையில் தொடர் வண்டி ஆணையம் ஒப்புதல் அளித்தது. அதற்கு அடுத்த மத்திய திட்டக் குழுவும் இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதலும் அனுமதியும் அளித்தது.

இதில் பாதித் தொகையை மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் தமிழக அரசு இந்தக் கோரிக் கையை நிறைவேற்றவில்லை. இத னால் இத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு நிதி நிலை அறிக்கையில் இது தொடர்பான பேச்சு மூச்சே இல்லை. பொதுவாக இப்படிப்பட்ட திட்டங்களை, தமிழ்நாட்டை விட மிகவும் பின்தங்கிய மாநிலமான கர்நாடகம், ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் செயல்படுத்த போட்டா போட்டி போடுகின்றன. ஆனால் தமிழ்நாட்டின் நிலையோ தலை கீழாக உள்ளது. அதனால்தானோ என்னவோ தொ.வ. இணை அமைச்சர் வேலு, சேலம் கோட்டத்திற்காக 100 ஏக்கர் இல்லாவிட்டாலும் பரவா யில்லை, 50 ஏக்கர் நிலமாவது கொடுங் கள் என மாநில அரசைக் கெஞ்சிக் கேட்கும் நிலை உள்ளது.

இவர்கள் சேலம் கோட்டம் கொண்டு வந்தது தி.மு.க.வா, பா.ம.க.வா என மாற்றி மாற்றி பட்டி மன்றம் நடத்தி உள்ளூர் அரசியல் நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர கோட்ட வளர்ச்சியில் உருப் படியாய் அக்கறையும் காட்டவில்லை. கூட்டணி ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் தமிழக, தில்லி கூட்டணி கட்சிகள் அதன் பேரால் தமிழகத் தின் உரிமைகளை ஒவ் வொன்றாய் பலி கொடுத்துக் கொண்டி ருக்கின்றன.

சேலம் கோட்டம் கொண்டு வந்ததே பெரிய சாதனை என ஆளும் கூட்டணி கட்சிகள் தம்பட்டம் அடித்துக் கொண்டு நிறைவடைந்துவிட்டன. ஆனால், சேலம் பகுதி மக்களும் தமிழக மக்களும் அப்படி நிறைவடைந்து விட முடியாது. சேலம் கோட்டத்தை தக்க வைத்துக் கொள்ளவும், அதன் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளவும் கோட்டம் திட்டமிட்டபடி வளர்ச்சியை நோக்கி போய்க் கொண் டிருக்கிறதா? அதற்கு எங்கே சிக்கல் நிலவுகிறது? எந்த சூழ்நிலையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது? என்பதனை ஆராய்ந்து விழிப்புணர்ச்சியுடன் செயல் படவேண்டும்.

சேலம் கோட்டத்தைக் கொண்டு வர எப்படி ஒரு போராட்டக் குழு தேவைப்பட்டதோ, அதே போன்று கோட்ட வளர்ச்சி தொடர்பாக ஒரு கண்காணிப்பு குழு உருவாக்க வேண் டும். அதில் அரசியல் கட்சிகள் உள்பட, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக் கிய ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்த வேண் டும். அது சேலம் கோட்ட நிலைமைகளை, அதன் பின்னடைவுக்கான கார ணங்களை ஆராய்ந்து அதைக் களைய திட்டமிட்டு செயல்பட வேண்டும். இப்படிப்பட்ட விழிப்புணர்வு இயக் கங்கள் மூலமே சேலம் கோட்டத்தைப் பாதுகாக்க, முன்னேற்ற முடியும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com