Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

புது ஆட்டம்
ஆதவன் தீட்சண்யா


brahmin நான் உம்மைத் தீண்ட
மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை
தீண்டுவது வெறுமனே
சரீரம் சம்பந்தப்பட்டதல்ல

உங்களை விலக்கி வைக்கும்
இத்தருணம் மிக முக்கியமானது
எனது குற்றச்சாட்டுகளைப் போலவே

குமிந்து ஊரையே நாறடிக்கும் இந்நரகலெல்லாம்
நேற்றிரவு நீங்கள் தின்றவைதான் தெரியுமா
நீங்கள் எத்தனை அழுக்கானவர்கள் என்பதை
பாழ்பட்டிருக்கும் நீர்நிலைகளைப் பார்த்தறியுங்கள்
சுத்தபத்தமாக இல்லாதாரோடு
சுமூகமாய் பழகமுடியாது என்னால்

புராண இதிகாச காலந்தொட்டு
அரசாங்கத்தின் தத்துப்
பிள்ளைகளாகவே வளர்ந்திருக்கிறீர்கள்
அடுத்தோரை அண்டிப்
பிழைக்கும் கையாலாகாதவர்களோடு
உழைத்து வாழும்
என்னால் ஒத்துப்போக முடியுமா?

காலங்காலமாக நீங்கள்
இப்படியே கிடந்து பழகியதற்கு
யாரையும் குற்றம் சுமத்தாதீர்கள்
எல்லாக்காலத்திலும் உங்களைத்
தூக்கிச் சுமக்க யாராலாகும்?
இறங்குங்கள் எல்லா பல்லக்குகளிலிருந்தும்
சலுகை இருக்குமிடத்தில்
தகுதியும் திறமையுமிருக்காது
இந்த நொடியிலிருந்து
யாருக்கும் எச்சலுகையுமில்லை
ஆட்டம் பூஜ்ஜியத்திலிருந்து
துவங்குகிறது இப்போது

பெண்டு பிள்ளை ஒண்டிப் பிழைக்க
கொட்டாய் போடத் தெரியாது
வக்கணையாய் பொங்கித் திங்க
ஒரு சொப்பு வனையத் தெரியாது
நாலு சுள்ளியொடித்து
அடுப்பெரிக்கத் தெரியாது
மமூட்டி பிடித்து ஒருவயலுக்கு
மடை திருப்பத் தெரியாது
லட்சணமாய் தோய்த்து
உடுத்தத் தெரியாது
காடாய் வளர்ந்து
காட்டுமிராண்டி போலானாலும்
மழித்துக் கொள்ள வராது
வீட்டிலே இழவென்றால்
ஒருமுழக்குழி வெட்டிப் புதைக்கவும் தெரியாது
நாய் கூட தன் உணவைத்
தானே தேடித் தின்கையில்
உங்களுக்கு ஒவ்வொன்றையும்
நானே ஊட்டித்தர வேண்டியுள்ளது

வாழத்தேவையான எதையும் கற்றிராத நீங்கள்
அறிவிலும் அந்தஸ்திலும்
தகுதியிலும் திறமையிலும்
பிறப்பிலேயே என்னை விட
ஒசத்தி எந்தவகையிலென்று
இப்போது நிரூபியுங்கள்
அதுவரை
எனக்கு சமதையற்ற உங்களைத்
தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை
தீண்டுவது வெறுமனே
சரீரம் சம்பந்தப்பட்டதல்ல.

- ஆதவன் தீட்சண்யா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com