 |
கட்டுரை
இருளின் ஜொலிப்பு ஆதவன் தீட்சண்யா
வெற்றியின் கீதத்தை இசைத்துப் போகிறான் அவன்
குருதியில் ஒளிரும் வாளின் மகிமையை வெளியெங்கும் நிறைக்கிறது பாடல்
புலம்பலை பரிகசிக்கும் அவன் பாடலில்
துயரில்லை
வாதையில்லை
குருதியின் பிசுபிசுப்பில்லை
களியாட்டத்திற்கான உற்சாகம் பீறிட்டு வழிகிறது
தோற்றவர்களின் சடலங்களை நெறித்தபடி வரும் ரதத்திலிருந்து
முடிவற்றப் போருக்கான பேரழைப்பு கேட்கிறது
துணிவை விதைக்கும் அவ்வழைப்பில்
நடுக்கமில்லை
ஈரமில்லை
உயிரை மதிக்காத
கொலைக்களத்தின் ஆரவாரமே நிரம்பியிருக்கிறது
பகுத்தறிவின் கழுத்தை சுருக்கிட்டுத் தூக்கும் கேபிள்ஒயரிலிருந்து
கையசைத்து புன்னகைக்கிற கருணையற்ற எதிர்காலம்
புராணத்திலிருந்து வருவிக்கும் எதிர்காலத்தில்
வண்ணத்ப்பூச்சியில்லை
பறவகளில்லை
மலர்களில்லை
நீ இல்லை
நான் இல்லை
சங்கீதத்தின் அமைதியில் சாவின் ஓலம் நிரம்பி
வரலாறும் வாழ்வும் வெளுத்து காவியாகியிருக்கும்
சம்மதமானால்
ரிமோட்டை அமுக்கு
நம் அடுப்பில் மூட்டவேண்டிய நெருப்பைத் திருடி
அறுபத்திநாலு சேனல்களிலும் இந்தியா ஒளிரும்.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|