|
கட்டுரை
குழந்தை வளர்ப்பு கோட்பாடுகள் ஆதவன் தீட்சண்யா
வரலாற்றுபேதமின்றி குழந்தையை
வளர்த்துவிட முடியுமானால்
அர்த்தம் புரியாமலே
எல்லாப் பண்டிகைகளையும்
கொண்டாடத் தயாராகிவிடுகிறது அது
நாமும்
நமது ஒவ்வாமையை தெரிவித்துக்கொண்டே
குற்றவுணர்ச்சியின்றி
குழந்தைக்காகவென்று கொண்டாடத் துணியலாம்
சராசரிக்கும் மேலானவரென்ற
அலட்டலை குறைத்துக் கொள்ளாமலே
மந்தையிலொரு மறியாடாய் இழியலாம்
தீபாவளியென்று பட்டாசு வெடிப்பதைப் போல.
ஆனாலும் இப்போது
பட்டாசு வெடிப்பது
கொண்டாட்டத்திற்கானது மட்டுமல்ல
பயிற்சியும்கூட
வேட்டுச்சத்தத்திற்கு மருளாமல்
வளருமொரு குழந்தையால்தான்
இடிவிழுந்தாலும்
தேமென்றிருக்க முடியும் பிராயத்தில்
இல்லையானால்
சின்ன சத்தத்திற்கும்
உயிர் பதைத்து மாளும்
ஈராக் குழந்தைகளைப் போலாகிவிடும்.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|