Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

பெண்கள் தினம் எதற்காக?

மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். இந்த தினம் எப்படித் தோன்றியது?

பிரெஞ்சுப் புரட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. 1789 ஜூன் 14 ம் தேதி சுதந்திரம், சமத்துவம், பிரநிதிநித்துவம் தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பாரிஸில் உள்ள பெண்கள் போராட்டத்தை தொடங்கினர்.

இந்தப் போராட்டம் பாரீஸ் முழுவதும் தீயாகப் பரவியது. ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று அனைத்துத் தரப்பு பெண்களும் பாரீஸ் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.

பாரீஸ் மன்னராட்சி இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என மிரட்டியது. அதற்கு அஞ்சாத பெண்கள் ஆயிரக்கணக்கான அளவில் கொட்டும் மழையில் அரச மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றனர். அவர்களை உடனடியாக கைது செய்ய அரசு உத்தரவிட்டது. அவர்களை கைது செய்ய வீரர்கள் வந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அரண்மனைக்குள் புகுந்த பெண்கள் அரசரின் மெய்க்காப்பாளர் இருவரை சுட்டுக் கொன்றனர். அரசன் வேறு வழியின்றி அவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் சொல்ல வேண்டியாயிற்று.

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்தான். இந்த செய்தி உலகெங்கும் பரவியது. தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலி நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர்.

ஆனாலும் பெண்களுக்கு அரசியல் ரீதியாக உரிமைகள் கிடைக்காத நிலையே வருடக்கணக்காக தொடர்ந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கிளாரா ஜெட்கின். பாரீஸில் உள்ள உலக சோஷலிச பார்டி என்ற கட்சியில் முக்கிய பங்கு வகித்தவர் கிளாரா.

உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கான பிரச்சனைகளை பேசுவதற்காக பெர்லினின் ஒரு மாநாட்டை 1915 ம் ஆண்டில் துவக்கினார். அதற்காகப் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரஷ்யத் தலைவர் லெனினை சந்தித்து பெண்களுக்கான பிரச்சனைகள் குறித்தும், அதற்கு தீர்வுகள் குறித்தும் பேசினார். பெண்களுக்கென தனியாக ஒரு தினம் தேவை என்பதை வலியுறுத்தினார்.

அதன் விளைவாக 1911 ம் ஆண்டு மார்ச் 8 ம் தேதி முதன் முதலாக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு நாடிகளும் அதிகாரப்பூர்வமாக பெண்கள் தினத்தை கொண்டாட ஆரம்பித்தன. இன்றைக்கு பெண்கள் தினம் தன் போராட்ட வரலாறை மறந்து ஆடம்பர விழாவாக கொண்டாடப்படுவது வேதனையானது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com