Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

கொட்டை எடுத்த புளியும் கொட்டை எடுக்காத புளியும் ... 1

வளர்மதி

தமிழர்கள் மட்டும்தான் ரசம் வைக்கிறார்களாம்
திசையெட்டும் திரிந்து நா வளர்த்த
மடத்தமிழர் சொல்லக் கேட்டதுண்டு
வழமையான ரசம்தான்
என் ரசம் அலாதி
அரிசி கழிந்த நீரில் வைத்தது அம்மாவுக்குக் கேலி
கவனம் சிதறிய ஒரு பொழுதில் உப்பு குறைய
எரும
உப்புப் போட்டுத் தின்னாத்தானே சொரண
சட்டித் தலையுள் எங்கோ ஒலித்தது வசவு
உப்பில்லாத பண்டம் குப்பையிலே
எவரோ சொன்னது
பழந்தமிழர் வீரமறவராம்
இருக்கலாம்
மற்றவர்க்கு எப்படியோ
எதிலும் உப்பு கொஞ்சம் மட்டு எனக்கு.

கவிதை எழுதப் பழகிய புதிதில் 'கவிதை மாதிரி' எப்போதோ எழுதி வைத்தது. ஆரம்ப காலம் முதலே வருடத்திற்கு நாலைந்து எழுதினாலே அதிகம். இப்போது சிக்கலான இந்த விஷயத்தை எதில் தொடங்கி எப்படி எழுதுவது என்று அசைபோட்டுக் கொண்டு, எதையோ புரட்டிக் கொண்டிருந்தபோது தட்டுப்பட்டது. ஏதோ 'பொறி பறக்க' கணிசமான மாற்றங்கள் செய்து, செய்ய நினைத்ததை - சொல்ல வந்ததை விட்டுவிட்டு, சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்களில் மாட்டிக் கொள்ளும் எனது வழக்கத்திற்கு ஏற்ற மாதிரி, இந்த ‘வெட்டிக்' கவிதையில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

Prabakaran கவிதைக்கு கற்பனை அழகு. புளியில்லாமல் ரசத்தை கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. புலி ? கூண்டுக்குள் இருப்பது நல்லது. வேடிக்கை பார்க்கலாம், சீண்டி விட்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம், பூச்சி காட்டலாம், வீரம் பேசலாம், இட்டுக் கட்டி கதை சொல்லித் தம் பெருமை பேசித் திரியலாம், இன்னும் பல நிம்மதியாகச் செய்யலாம். இல்லாமலிருப்பது மேல். நிம்மதி. ஜனநாயகம் பேச, புரட்சி பேச, சாதி ஒழிக்க, நாடு தழைக்க, நலிந்தோர் கடைத்தேற, நல்லோர் நிம்மதி கொள்ள இப்படி இப்படியாக.

சமீப காலமாக பல்வேறு தரப்புகளில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்மம் மிகுந்த புலி எதிர்ப்பு பிரச்சாரத்தையே இங்கு குறிப்பிட வருகிறேன். புலிகள் 'இல்லாது போனாலும்', (யாருக்குத் தெரியும்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்) அவர்களை வசைபாடுவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் முன்வைக்கும் கருத்துக்களின் அரசியல் - சமூகவியல் பின்னணி குறித்து சில விஷயங்களை தெளிவுபடுத்தவே ஒரு தொடராக இங்கு எழுத விழைகிறேன்.

புலிகளின் அரசியல் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. கடுமையான விமர்சனங்களே உண்டு. ஆனாலும், ஜனநாயகம், மாற்றுக் கருத்துக்கள், தலித்தியம் என்பவற்றின் பேரால் செயல்பட்டு வருபவர்களைக் காட்டிலும், புலிகள் சில விஷயங்களில் எவ்வளவோ மேல் என்று தோன்றும் அளவுக்கு மேற்குறித்தவர்களின் சமீபகாலச் செயல்பாடுகள் இருப்பதாக உணர்கிறேன். ஈழத்தில் சாதிய அமைப்பு, தமிழகத்தின் சாதிய அமைப்பிற்கும் அதற்கும் இடையிலான வித்தியாசங்கள், ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலை சர்வதேச ரீதியில் காத்திரமாக பேசப்படாமைக்கு சர்வதேச அரசியல் சக்திகளின் சதிகள் என்பதற்கு மேலாக சர்வதேசச் சட்டச் சிக்கல்கள், கருத்தியல் எல்லைகள் இவை குறித்தும் இத்தொடரில் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன். இதனை மையமாக வைத்து எழுதிச் செல்லும்போதே இது தொடர்பான விஷயங்களில் மிக மோசமான அணுகுமுறையை மேற்கொண்டிருக்கும் சில தனிநபர்களை சற்றே நையாண்டி செய்யவும் வேண்டியிருப்பதால் அதுபோன்ற சில விஷயங்களும் இதில் வரும். சில தனிநபர்களின் மோசடிகள் குறித்தும் எழுத வேண்டியிருக்கும். மற்றபடி, அவர்கள் மீதான தனிப்பட்ட காழ்ப்போ, பகைமையோ எனக்கில்லை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன்.

சரி, திரும்பவும் புளிக்கு வருவோம். புலிகளுக்கு நேர்ந்த கதி புளிக்கு ஒருபோதும் ஏற்படாது. புளி இல்லாமல் போனால் 'மறத்' தமிழருக்கு நாக்கு செத்துவிடும். உணவோடு சேர்ந்து நமது பண்பாட்டிலேயே கலந்து ஊறிவிட்ட ஒன்று. மேற்கு வங்காளத்தில் ”புளிக்கரைச்சலைக் குடிப்பவர்கள்” என்ற பொருள்பட தமிழர்களைக் கேலி செய்வார்கள் என்று கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு நமது பண்பாட்டு அடையாளமாகவே பிற மொழி பேசுபவர்களால் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பண்பாட்டையும் இது போல ஏதோ ஒன்றை வைத்து அடையாளப்படுத்துவது புதிதும் இல்லை. கேரளம் என்றால் தேங்காய், ஆந்திரா என்றால் மிளகாய் என்பதுபோல. தேங்காய், மிளகாய் என்று சொல்லும்போதே அதோடு சேர்த்து அந்த பண்பாட்டு மக்களின் - குறிப்பாக பெண்களுடைய பாலியல் வேட்கை சூசகமாக கேலி செய்யப்படுவது சிறிது விவரம் அறிந்தவர்களுக்கும் தெரியும்.

பிற கலாச்சாரங்களை கேலியாகப் பார்க்கும் வழக்கம் மனித சமூகங்களுக்குள் ஊறிப்போய்விட்ட ஒன்றோ என்று தோன்றும் அளவிற்கு இது போன்ற கேலிப் பேச்சுகள், அவற்றில் தொனிக்கும் மதிப்பீடுகள் எங்கும் பரவியிருப்பதைப் பார்க்கலாம். இதை சற்று எளிமைப்படுத்தி சொல்வதென்றால், நமக்குப் புரியாத எது ஒன்றைப் பார்த்தாலும், அதை அரவணைத்துக் கொள்ள நம்மால் முடிவதில்லை. சமமாக நடத்த முடிவதில்லை. அது, நமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று உடனடியாக நமக்குள் எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்து விடுகிறது. இதன் காரணமாக, அதை நமது ஆளுகைக்குள் கொண்டுவரப் பார்க்கிறோம். முடியாமல்போகும்போது நமது இயலாமை பயமாக, வெறுப்பாக மாறுகிறது.

புவியியல், வரலாற்று - அரசியல் ரீதியாக இரண்டு கலாச்சாரங்கள் இப்படித் தொடர்ந்து இருக்க நேரும்போது, இது பகைமையாகவும், இனவெறித் தூற்றுதலாகவும் வன்முறையாகவும் உருவெடுக்கிறது. முதலீட்டியத்தின் பரவலோடு இது இன வெறியாகவும் இனப் படுகொலையாகவும் புதிய வடிவங்கள் எடுக்கிறது. புவியியல், வரலாற்று - அரசியல் ரீதியாக தூர அல்லது விலகி இருக்கும் இருக்கும் இரண்டு பண்பாடுகள் தொடர்பு கொள்ள நேரும்போது வெறும் (சில நேரம் இழிவும் கலந்த) கேலிப் பேச்சுகளோடு இந்த வெறுப்பு மட்டுப்பட்டு இருப்பதையும் பார்க்க முடியும்.

அபூர்வமாக சில சமயம், விலகி இருக்கும் ஒரு பண்பாட்டை உயர்வாக நினைக்கும் வழக்கங்களையும் பார்க்கலாம். உதாரணமாக, கேரளப் பண்பாட்டை சிங்களவர், ஈழத் தமிழர் - குறிப்பாக யாழ்ப்பாணத்தார், இருதரப்பினருமே வெவ்வேறு காரணங்களுக்காக தமக்கு நெருக்கமாக உணர்வதைச் சொல்லலாம். எப்படி இருந்தாலும், இந்த அடிப்படையான பயம் - வெறுப்பு எல்லாவற்றையும் மீறி பண்பாடுகளுக்கு இடையே தவிர்க்க முடியாமல் உறவுகளும் பரஸ்பர பகிர்வுகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு உதாரணத்திற்குச் சொல்வதென்றால், கேரளாவிலும் ரசம் வைக்கிறார்கள். ஆனால், ரசத்திலும் தேங்காயைத் தூவி விடுகிறார்கள். பண்பாடுகள் கலந்தாலும் தனித்தன்மையும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த ருசிக்குப் பழகுவது தமிழகத் தமிழர்களுக்கு சிரமாக இருக்கலாம்தான்.

ருசிக்குப் பழகுவது கொஞ்ச காலம் பிடிக்கும். பயத்திற்குப் பழகுவதற்கும் கொஞ்ச காலம் பிடிக்கும். எதற்குமே கொஞ்ச காலம் பிடிக்கத்தான் செய்யும். ஆனால், என்ன செய்தாலும் பழக்கத்திற்கு கொண்டுவர முடியாத சில விஷயங்களும் (சிலருக்காவது) இருக்கத்தான் செய்கின்றன.

உதாரணத்திற்கு, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்களுக்கு புளி பழகக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். எந்தக் காரமான காய்கறியிலும் கொஞ்சம் சர்க்கரை தூவிவிடும் வழக்கம் அவர்களுக்கு உண்டு. அது நமக்கு ரொம்பக் கஷ்டம். அதே போல, புலி அவர்களுடைய பண்பாட்டுப் பெருமிதச் சின்னம். நிஜப் புலிகள் சுற்றித் திரியும் சுந்தர்பந்த் காடுகள் இருப்பதால்தான் என்னவோ இப்படி.

ஆனால், கதைகளில் மட்டுமே புலிகளைக் கேள்விப்பட்டு - அதுவும் பயங்கர மிருகமாகவே - பழகிப் போன நமக்கு புலி என்றாலே நடுக்கம்தான். புலி என்றாலே பயங்கரம்தான். சங்க காலக் கவிதைகளில் இருந்தே புலி பயங்கரமான கொடூர மிருகமாகவே ஒரு சித்தரிப்பு உண்டு.

அதிக பட்சமாக வீரம் பேச மட்டுமே புலி நமது பண்பாட்டில் புழங்கி வந்திருக்கிறது. புலியைவிட கொட்டைப் புளியும், கொட்டை எடுத்த புளியும்தான் நமக்கு அதிகப் பரிச்சயம். புலி அல்ல புளிதான் நமது நாவுக்கு உவப்பான விஷயம். சென்னை வட்டார வழக்கில் அதிகமாக வாய்ப்பந்தல் போடுகிற நபர்களை, “புளிப்பு” என்று சொல்லும் வழக்கமும் உண்டு.

நிஜப்புலிகளைவிட கழுதைப் புலிகள் (1880 - ஆண்டு வாக்கில்கூட செங்கல்பட்டு மாவட்டத்தில் எஞ்சி இருந்த காட்டுப் பகுதிகளில் கழுதைப் புலிகள் ஏராளமாக இருந்திருக்கின்றன. காடுகளைத் திருத்தி பஞ்சமி நிலமாக தலித் மக்களுக்கு வழங்க முற்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம், அவற்றைக் கொல்பவர்களுக்கு சன்மானமெல்லாம்கூட அறிவித்திருக்கிறது), காகிதப் (மக்குப்) புலிகள், சூரப்புலிகள்தான் நமது பண்பாட்டில் அதிகம்.

Ahilan Kadirkamar அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ, புளி - புலி - நாய் இந்த மூன்று விஷயத்திலும் தமிழகத் தமிழர்களின் பண்பாட்டுக்கும் ஈழத் தமிழர்களின் பண்பாட்டுக்கும் ஒரு நெருக்கம் உண்டு. ஈழத் தமிழர் சமையலில் புளி உண்டு. அங்கு புலியும் இருந்தது. கழுதைப் புலிகள் இருக்கின்றன. காகிதப் புலிகள் அதிகம். சூரப்புலிகள் அதைவிட அதிகம்.

நாய்களும் உண்டு. இரு பண்பாட்டிலுமே நாய்களுக்கு அதிக மதிப்பும் உண்டு. இரண்டுமே அவற்றின் விசுவாசப் பண்பை உச்சிமோந்து பாராட்டும் பண்பாடுகள்.

தமிழகத்திலிருந்து ஈழம் இது விஷயத்தில் வித்தியாசப்படும் ஒரு புள்ளியும் உண்டு. அது “நாய்ப்பீ” குறித்த அவர்களது மதிப்பீடு. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலகட்டத்தில் அவர்களுடன் கைகோர்த்து தமது மக்களையே கொடூரமாக வதை செய்த EPRLF இயக்கத்தினரை அக்காலகட்டத்தில் ஈழ மக்கள் “நாய்ப்பீ” என்று விளித்து மனதார வெறுத்து ஒதுக்கவும் செய்தனர். இதன் தீவிரத்தை உணர்த்தக்கூடிய ஒரு சம்பவத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் விளக்க முற்படுகிறேன்.

தற்சமயம், மேற்சொன்ன இயக்கத்தினரோடும் இந்திய இராணுவத்தோடும் சேர்ந்து ஈழத்தமிழ் மக்களை வேட்டையாடிய மற்றொரு இயக்கமான ENDLF இயக்கத்தினர் கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நடத்திவரும் கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் இவை குறித்து ஜனநாயகம், மாற்றுக் கருத்துக்கள், தலித் விடுதலை பற்றியெல்லாம் பெருத்த “புளிப்புப் பேச்சு” பேசும், அருவருக்கத்தக்க, மலினமான காரியங்களைச் செய்வதற்கு எந்தத் தயக்கமும் கொள்ளாத நபர்கள் வாய் திறப்பதே இல்லை என்பதை கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

மேற்சொன்ன இயக்கத்தினர் கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் செய்து வரும் நடவடிக்கைகளை வைத்துப் பார்த்தால் அவர்களை மாஃபியாக்கள் என்றுதான் சொல்ல வேண்டிவரும். ஆனால், நமது மறுத்தோடி சூரப்புலிகள் இவர்களைப் பற்றி வாய் திறக்காதது மட்டுமல்ல, ஈழவிடுதலை என்ற நோக்கில் சமரசமற்று இருந்த, ஆனால், அரசியல் செயல்பாடுகள் குறித்த அடிப்படை அறிவும் இல்லாதிருந்த இயக்கமான விடுதலைப் புலிகளை மாஃபியாக்கள் என்று கூசாமல் விமர்சனம் செய்யத் துணிகின்றனர்.

சரி, கிடக்கட்டும். சிங்கள அரச நடவடிக்கைகள், இராணுவப் படுகொலைகள், மே 16 - 17 அன்று நடந்தேறிய கொடூரப் படுகொலை குறித்தாவது தமது கண்டனத்தை வெளிப்படுத்துகிறார்களா? "உள்ளேன் ஐயா" வகை முணுமுணுப்புகளுக்கு மேலாக இது குறித்து அவர்களது எழுத்துக்களில் பார்க்க முடியாது. ஆனால் பாருங்கள், சரியாக மே 16 இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு இணையத்தைத் திறந்தால், "பிரபாகரன் உயிருடனோ அல்லது இறந்தோ வெல்லப்பட்டுவிட்டார்" என்ற செய்தியோடு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பாக பிரபாகரனை "நாயாக" உருவகித்து எழுதப்பட்ட கவிதையை வெளியிட்டு தமது மேன்மையை வெளிப்படுத்தத் தவறுவதில்லை இந்தக் கழுதைப் புலிகள்.

இந்திய - சிங்கள ஊடகங்கள் இந்தச் செய்தியை பெரும் பிரச்சாரமாக ஒலிபரப்பத் துவங்குவதற்கு முன்னால் - எல்லோருக்கும் முன்னால் இந்தச் செய்தி இவர்களுக்கு எப்படித் தெரிய வந்தது? அதுவும் ஜெர்மனியில் உட்கார்ந்துகொண்டு? யார் இந்த நபர்கள்?

மேலே சுட்டியிருக்கும் வலைப்பக்கம் வேறு யாருடையதுமல்ல. "ஈழத்தில் நடப்பது இனப்படுகொலையே அல்ல" என்று பேட்டி கொடுத்த மேன்மை தங்கிய திருவாளர் சுசீந்திரனேதான். தமிழகத் தமிழர்கள் இவரது நடவடிக்கைகள் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் தலித் எழுத்தாளராக அறியப்பட்ட ஆதவன் தீட்சண்யாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் வெகு குறைவு. தலித் அரசியல் என்ற போர்வையில் சுசீந்திரன் அவருக்கு அணிவித்திருப்பது கோமாளித் தொப்பி.

திருவாளர் சுசீந்திரனின் மேற்சுட்டிய அதே வலைப்பக்கத்தில் கொஞ்சம் பின்னே போனால் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக அறியப்பட்ட திருவாளர் இராகவன் என்பவரின் பேட்டி யையும் நீங்கள் வாசிக்கலாம். திருவாளர் இராகவன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்ப்பதையே தமது முக்கியக் 'கடமையாகக்' கொண்டவர் என்பது அந்தப் பேட்டியை மேய்ந்தாலே தெரிந்துவிடும்.

அந்தப் பேட்டியை எடுத்தவர் யார் தெரியுமா? திருவாளர் அகிலன் கதிர்காமர். இவர் சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவாலும் பல ஐரோப்பிய அரசுகளாலும் தடை செய்யப்படுவதற்கு 'அரும்பாடுபட்ட' லக்‌ஷ்மன் கதிர்காமரின் தவப்புதல்வர். கதிர்காமர் என்ற பெயரே சொல்லும் இவர்கள் யாழ்ப்பாணத்து சைவ வெள்ளாளப் பெருந்தனக்காரர் என்று. அகிலன் கதிர்காமர் தற்சமயம் மேற்கொண்டிருக்கும் அரும்பெரும் பணியாகப்பட்டது என்னவென்று தெரியுமா? ஈழத்துப் புலம் பெயர் அறிவு'சீவி'கள், 'ஜனநாயகவாதிகள்', 'எழுத்தாளர்கள்' அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து இலங்கையில் 'இனநல்லிணக்கத்தை உறுதி செய்யக்கூடிய 'கூட்டாட்சி' அரசை உருவாக்குவது. இவர் ஒருங்கிணைத்துள்ள அறிவு'சீவி'களில் ஒருவர்தான் திருவாளர் சுசீந்திரன். 'ஜனநாயகவாதிகளில்' ஒருவர் எக்ஸில் ஞானம் என்று அறியப்பட்ட திருவாளர். எம். ஆர். ஸ்ராலின். இவர் கருணாவுக்கு ஆலோசகராகச் செயல்பட்டு, கிழக்கின் அதிகார பீடத்தில் அவர் ஏறுவதற்கு உறுதுணையாகச் செயல்பட்டவர். சுசீந்திரன் தற்சமயம் நடாத்தும் இணைய இதழ் புகலி. தவப்புதல்வன் அகிலனை உச்சி மோந்து பாராட்டும், தலித் அரசியல் பேசும் ‘கவிஞர்' யார் தெரியுமா? தமிழகத்துக்கு வந்து சிங்கள தேசிய கீதத்தை விறைப்பாக நின்று பாடி பெருமை சேர்த்த 'ஆசுகவி' திருவாளர் சுகன்.

இதில் ‘எழுத்தாளர்' ஷோபா சக்தியின் இடம் என்ன? மேற்சொன்னவர்கள் எல்லோரும் இவருக்கு 'தோழமைச் சக்திகள்'. இவர்களுடைய கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும் இவருடைய இணையப் பக்கத்தில் 'ஜனநாயக வெளி' திறந்து விடப்பட்டிருக்கும். ஆனால், ஷோபா சக்தியையோ அவரது 'தோழமைச் சக்திகளின்' கருத்துக்களையோ மறுத்து எழுதுபவர்களுக்கு இந்த ‘ஜனநாயக வெளி' மூடப்பட்டுவிடும்.

முதலில் அகிலன் கதிர்காமர் இலங்கைத் தீவில் ஜனநாயகம் மலரவேண்டும் என்ற உயரிய நோக்கோடு அறிவு'சீவி'களையும் எழுத்தாளர்களையும் 'களச்' செயல்பாட்டாளர்களையும் எங்ஙனம் இணைத்து வருகிறார் என்பதற்கு சில தகவல்களைப் பட்டியலிடுவது அவசியம்.

அகிலன் கதிர்காமரை ‘எடை போடுவது' அவ்வளவு சுலபம் அல்ல. இலங்கைத் தீவின் தமிழ் அறிவு'சீவி'களின் பிரதிநிதியாக ஜனநாயகவாதியாக, ‘களச்' செயல்பாட்டாளராக சர்வதேச கல்விப் புலங்களில் உலா வருபவர் அவர். இலங்கை ஜனநாயகக் களன் (Sri Lanka Democracy Forum - SLDF) என்ற அமைப்பினை நிறுவி 'தீவிரமாகச்' செயல்பட்டு வருபவர். HIMAL SOUTH ASIAN என்ற இணைய இதழின் Contributing Editor - களில் ஒருவர். இதுவல்லாமல், தீவிர 'இடதுசாரி' நோக்கிலிருந்து ஊடகங்கள் மீதான விமர்சனங்களையும் அரசியல் விமர்சனத்தையும் முன்னெடுப்பதாக அறிவித்துக் கொள்ளும் kafila.org என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவர் (இதன் ஆசிரியர் குழுவில் பேராசிரியர் வீ. அரசு - வின் தவப்புதல்வி பொன்னி அரசுவும் இருக்கிறார். அது குறித்து பிறகு வருகிறேன்). சும்மா ahilan kadirgamar என்று கூகிள் - ல் போட்டு தேடிப் பாருங்கள் தெரியும். வாஷிங்டன் போஸ்ட் - ல் இருந்து சிறீலங்கா கார்டியன் வரைக்கும் இவரை மேற்கோள் காட்டி எழுதாத பத்திரிகைகளே இல்லை என்பது தெரியவரும்.

சமீபமாக இவர் தீவிரமாக முன்னெடுத்திருக்கும் விவாதம், ஈழத்திற்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு என்ற கருத்தையே மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதே. இரண்டு அழிவுத் தேசியங்களுக்கு (சிங்கள - தமிழ் தேசியங்கள் இரண்டுமே destructive nationalisms என்கிறார். அதாவது சிங்கள இனவெறி தேசியத்தையும் தற்காப்பு நோக்கில் எழுந்த ஈழத் தமிழ்த் தேசியத்தையும் சமன் செய்கிறார். ஈழத் தமிழ் தேசியத்தை defensive nationalism என்று விளக்குவாரும் உண்டு. அது குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்) இடையிலான மோதல் என்ற நோக்கில் இருந்து அணுகுவதிலிருந்து விலகி, சிறுபான்மையினருக்கு அரச அதிகாரத்தில் பங்கு என்ற நோக்கில் மொத்த பிரச்சினையையும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிறார். மலையக மக்கள், இஸ்லாமியர்கள், பெண்கள் ஆகிய அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினருக்காகவும் (இந்தப் புள்ளிகளை வலியுறுத்தி அவர் எழுதியிருக்கும் கட்டுரையை இங்கு வாசிக்கலாம்) இதைவிடவும் 'முற்போக்காக' யாரால் சிந்திக்கத்தான் முடியும்?!

(ஆனால், பாவம் ராஜபக்‌ஷேவுக்குத்தான் காது செவிடு போலிருக்கிறது. தேசிய முரண்பாடு என்பதையே மறந்துவிட்டு சிறுபான்மையினர் பிரச்சினையாக அணுக வேண்டும் என்று உலக மகா முற்போக்காளர் அகிலன் கதிர்காமர் முன்வைக்கும் தீர்வுக்கான 'புளிப்பான' வழி அவருக்குக் கேட்க மாட்டேன்கிறது. சர்வ சாதாரணமாக "சிறுபான்மையினர் என்ற வார்த்தையே எமது அகராதியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது" என்று பேசிவிட்டுப் போகிறார்.)

தேசியப் பிரச்சினையையே தலைமுழுகிவிட்டு, இஸ்லாமியர், மலையகத் தமிழர், பெண்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான அதிகாரப் பரவல் என்று பேசுவதைவிட மாபெரும் 'முற்போக்கு' வேறு எதுவாக இருக்க முடியும்? ஆகையால்தான், தமிழ் முற்போக்கு அறிவு'சீவி'களான சுசீந்திரன், எம். ஆர். ஸ்ராலின், சுகன், ஷோபா சக்தி (பின்னவர் இருவருக்கு இது விஷயத்தில் 'ஞான குரு' என அகிலனைச் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். 'மாமேதை' அ. மார்க்ஸ் அவர்களே இவர்களது 'ஞான குரு' என்பதே உண்மை) போன்றோர், "தேசியப் போராட்டம் உயிர்ப் பலியைத் தவிர வேறு எதைப் பரிசாகத் தந்தது? ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளையும் ஒதுக்கிவிட்டதல்லவா?" என்று 'கரிசணையோடு' பேசுகின்றனர்.

Lakshman Kadirkamar and Rice இந்தக் 'கரிசணையை' இவர்கள் மனதார உணர்ந்தே வெளிப்படுத்துகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகள் புறந்தள்ளப்பட்டதற்கு ஒட்டுமொத்த பழியையும் விடுதலைப் புலிகள் மீது போடும்போதுதான் நமக்கு சந்தேகம் எழ ஆரம்பிக்கிறது.

ஒரு விஷயத்தை ஊன்றிக் கவனித்தால், புலிகள் மீதும், புலம் பெயர் சமூகங்களில் உள்ள அவர்களுடைய ஆதரவாளர்களையும் விமர்சிப்பதற்கு இவர்கள் காட்டும் ஆர்வத்தை, சிங்கள இனவெறி அரசையோ, கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் சிங்கள அரசின் பினாமிகளாக செயல்பட்டு, நாள்தோறும் ஆட்கடத்தல்களையும், கொலைகளையும் வரைமுறையின்றி அரங்கேற்றி வரும் கருணா குழுவினரையோ டக்ளஸ் குழுவினரையோ விமர்சிப்பதில் இவர்கள் காட்டுவதில்லை என்பது புலப்படும். தற்சமயம், வன்னியில் அகதி முகாம்களில் சொல்லொண்ணாத் துயர் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் துயரைத் தீர்க்க சர்வதேச நிர்ப்பந்தங்களை உருவாக்குவற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தத் தரப்பினர் மகாஅசட்டையாக நடந்துகொள்வதும் புரியவரும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த மே 16 - 17 தேதிகளில் சிங்கள இனவெறி இராணுவம் 20 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததற்குக் காரணமே விடுதலைப் புலிகள்தான் என்று இவர்கள் பிதற்றும்போது நமக்கு அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.

ஈழம் தொடர்பான எந்தப் பிரச்சினை குறித்துப் பேச ஆரம்பித்தாலும் இவர்கள் (முக்கியமாக அகிலன் கதிர்காமர், சுகன், ஷோபா சக்தி) உடனடியாக புலிகளைப் பாய்ந்து பிடுங்குவதை இவர்களது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் கவனிக்க முடியும். சிலகாலத்திற்கு, புலிகள் இயக்கத்தினரின் வன்முறையால் நேரடியாக பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பதால்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றே நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், இதில் மற்றொரு கோணமும் இருக்கிறது என்பதை ஈழம் தொடர்பாக சில மாதங்களாக தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தபோது புலப்பட்டது.

தொடர்ந்து வரும் பகுதிகளில் அது குறித்து விரிவாக எழுதும் யோசனையும் இருக்கிறது. ஆனால், தற்சமயம் இதை சற்று எளிமையாக விளக்க இந்த உதாரணத்தைக் காட்டுவது உதவியாக இருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலை குறித்து பல்வேறு ஊகங்களும் புரளிகளும் எல்லையில்லாமல் பரவி சற்று அடங்கிய பிறகு ஜூன் 10 ஆம் தேதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைகழகப் பேராசிரியர்களின் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டதைப் பலரும் கவனித்திருக்கலாம். பிரபாகரனை சிங்கள இராணுவம் கொன்றுவிட்டது என்பதை அந்த நாட்களின் சம்பவங்களை ‘ஆய்ந்து' பேசும் இந்த அறிக்கை சிங்கள அரசின் இனவெறித் தேசியத்தையும் விமர்சிக்கிறது. அதற்கும் மேலாக, விடுதலைப் புலிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்கிறது. மேலோட்டமாக வாசிக்கும்போது ‘நடுநிலையான' அறிக்கையைப் போலத் தோற்றமும் தருகிறது.

ஆனால், சற்றே ஊன்றி வாசித்தால், அறிக்கையின் இடையிடையே அந்த நாட்களின் சம்பவங்களில், சிங்கள இராணுவத்தை தமிழர்களை மீட்க வந்த படையாக சித்தரித்திருப்பதையும் கவனிக்க முடியும். எடுப்பாகத் தெரியும் பிரிவு 4.1 - ல் வரும் இந்த வரிகளைப் பாருங்கள்:

We begin with what is creditable. Soldiers who entered the No Fire Zone on 19th April 2009 and again on the 9th and 15th May acted with considerable credit when they reached the proximity of civilians. They took risks to protect civilians and helped across the elderly who could not walk. Those who escaped have readily acknowledged this. (பாராட்டத் தகுந்தவற்றில் இருந்து தொடங்குவோம். ஏப்ரல் 19 ஆம் தேதியும், மீண்டும் மே 9 மற்றும் 15 ஆம் தேதிகளிலும் போர் நிறுத்தப் பகுதிக்குள் நுழைந்த இராணுவ வீரர்கள், பொதுமக்களை நெருங்கியபோது மிகுந்த பாராட்டுக்குரிய வகையில் நடந்து கொண்டனர். பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ஆபத்துகளையும் எதிர்கொண்டனர். நடக்க முடியாத முதியவர்களுக்கு உதவவும் செய்தனர். தப்பி வந்தவர்களும் இதை தாராளமாக ஒப்புக் கொள்கின்றனர்).

நம்புவதற்குக் கடினமாக இருக்கிறதா?

இன்னொன்றையும் காட்டுகிறேன். அறிக்கையின் தொடக்கத்தில் தரப்பட்டிருக்கும் சுருக்க விளக்கத்தில் வரும் ஒரு வரி: The report closes with a warning, noting the danger posed by the present government behaving increasingly like a replica of the LTTE (எல். டி. டி. ஈ யின் பிரதிம்பமாகவே மேலும் மேலும் மாறிவரும் தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்த எச்சரிக்கையோடு அறிக்கை நிறைவு பெறுகிறது).

மே 16 -17 நாட்களின் சம்பவங்களை கோர்வையாக அடுக்கி, அலசி ஆராய்ந்து பிராபகரன் படுகொலை செய்யப்பட்டு விட்டார் என்பதையும் நிரூபிச்சாச்சு. புலிகள் அப்பாவிப் பொதுமக்களை பிணையக் கைதிகளாக சிறைப் பிடித்து வைத்திருந்தார்கள் என்பதையும் கடுமையாக கண்டிச்சாச்சு. சிங்கள இராணுவம் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவர்கள் என்பதற்காக அவர்களுக்கு ஒரு ஷொட்டும் கொடுத்தாச்சு. புலிகளைப் போல மாறிக்கொண்டிருக்கும் ராஜபக்‌ஷேவுக்கும் எச்சரிக்கை விடுத்தாச்சு.

ஒரே கல்லில் (அறிக்கையில்) எத்தனை புளியங்காய் விழுந்திருக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.

யாழ்ப்பாணத்துப் பேராசிரியர்களின் அறிக்கையையும், அப்பன் 8 அடி பாய்ந்தால் 16 அடி பாய்ந்து கொண்டிருக்கும் அகிலன் கதிர்காமரையும் முன்வைத்து இந்த விஷயங்களைப் பேசுவதற்கு ஒரு காரணம் உண்டு. இவர்கள் யாழ்ப்பாண சைவ வெள்ளாளப் பிள்ளைமார்களின் கடைந்தெடுத்த பிரதிநிதிகள்.

யாழ்ப்பாண சைவ வெள்ளாளப் பிள்ளைமார்கள் விடுதலைப் புலிகளை வெறுத்து கனகாலமாயிற்று (இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழத்தை ஆக்கிரமித்திருந்த ஆண்டுகளிலேயே இது வெளிப்பட்டுவிட்டது). அவர்கள் விடுதலைப் புலிகளை வெறுக்க மிகமுக்கியக் காரணமாக இருந்தது விடுதலைப் புலிகளின் சமூக அடித்தளம். அதுநாள் வரையில் யாழ்ப்பாண சைவப் பிள்ளைமார்களின் ஆதிக்கத்தில் இருந்த ஈழ விடுதலைக்கான போராட்டம், விடுதலைப் புலிகள் ஆதிக்கத்திற்கு வந்ததோடு கரையாளர் சமூகத் தலைமைக்கும் சமூக அடித்தளத்திற்கும் கைமாறிப் போனது. சொல்லப் போனால், ஈழப் போராட்டம் இத்துனை உக்கிரமானதற்குக் காரணமே இந்த சமூக அடித்தளம்தான். (இது குறித்தும் ஈழ சாதிய அமைப்பில் ஏற்பட்டு வந்திருக்கும் மாற்றங்கள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.)

இந்த மாற்றத்தை செரித்துக்கொள்ள இயலாமல்தான் லக்‌ஷ்மன் கதிர்காமர் போன்ற யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்தின் பிரதிநிதி சிங்கள அரசோடு சேர்ந்து விடுதலைப் புலிகள் சர்வதேச அளவில் பல நாடுகளால் தடைசெய்யப்படுவதற்கு அரும்பாடுபட்டார். அவரது ‘தவப்புதல்வன்' அகிலன் கதிர்காமர் இன்னும் நுணுக்கமாகச் சென்று தலித் அரசியலுக்காகவும், இஸ்லாமியர் உரிமைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் இன்னும் சகல ஒடுக்கப்பட்டோருக்காகவும் கசிந்துருகி சர்வதேச அளவில் கல்வியாளர் வட்டங்களில் அறிவு'சீவி'யாக உருவெடுத்து புலிகளை ஜனநாயக விரோதிகளாக மட்டுமே சித்தரித்து கணிசமான அளவுக்கு அங்கீகாரமும் பெற்றுள்ளார். (ஆதவன் தீட்சண்யாவின் கவனத்திற்கு: ஈழத்தைப் பொருத்தவரையில், சிறுபான்மையினர் அரசியலையும் தலித் அரசியலையும் யாழ்ப்பாணத்து சைவப் பிள்ளைமார் hijack செய்துவிட்டார்கள் என்பதற்கான குறியீடே அகிலன் கதிர்காமர்.)

இதில், சுசீந்திரன், எம். ஆர். ஸ்ராலின், சுகன், ஷோபா சக்தி இவர்களை எப்படிச் சொல்வது?

இந்தப் புளியங்கா அடிக்கிற பயல்கள் எப்போதும் ஒரு பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களாக இருப்பார்கள் (கதிர்காமர் வகையறா). அவர்கள் ஒரு நாலு கல்லை வீச ஒரு நாலு கொத்து கீழே விழும். அப்போது, பக்கத்தில் நின்று வாயைப் பிளந்துகொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் 4 வயதுப் பொடிசுகள் "கே" வென்று கத்திக் கொண்டு கீழே விழுவதைப் பொறுக்கி எடுத்து அந்தப் 'பெருசுகள்' கையில் கொடுக்கும். 'பெருசு'களாப் பார்த்து சிறுவர்களுக்கு ஒன்றிரண்டைத் தருவார்கள்.

அதுதான் இவர்களுடைய 'ரேஞ்ச்'.

அதையும் பார்ப்போம்.

(தொடரும் ...)

- வளர்மதி (http://vinaiaanathogai.blogspot.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
குணாளன்
2009-07-13 08:23:00
kunalan.shan@yahgoo.com

அகிலனுக்கும் கதிர்காமருக்கும் எந்த வகையிலும் எந்த சம்பந்தமும் இல்லை நண்பரே. தெரியாதென்றால் தெரியாதென்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு எல்லாம் தெரிந்ததுபோல் பாவனை செய்து உங்களை நீங்களே நாறடிக்காதீர்கள். உங்கள்மீது நாம் கொண்டுள்ள குறைந்த பட்ச மதிப்பையும் ஏன்தான் வீணாக கெடுத்துக் கொள்கிறீர்கள்.

-குணாளன்-

குணாளன்
2009-07-13 08:41:00
kunalan.shan@yahoo.com

நண்பரே வளர்மதி!
"தொடரும்.." என்று நீங்கள் பாதியிலேயே கட்டுரையை முடித்து விட்டீர்கள். நீங்களும் தொடருங்கள் நானும் தொடர்கிறேன். உங்களை நான் விடுவதாயில்லை. ஏனென்றால் நான் எழுதவேண்டுமென்று நினைத்த பல விடையங்களுக்கு உங்களை அறியாமலே எனக்கு களம் அமைத்துத் தந்திருக்கிறீர்கள். அந்த வகையில் உங்களுக்கு என் நன்றிகள். நான் எறியும் கல்லில் உங்களது மண்டையும் உடையலாம். சத்தியமாக அதற்கு நான் பொறுப்பாளியல்ல... "100மில்லி போட்டாலே நீ நீயாக இல்லை நைனா" இந்த தத்துவத்தை எடுத்து விட வேண்டுமானாலும் அதையும் நாம் ஒளிப்பதிவில் எடுத்துவிடத் தயார். எது வேண்டும்...?

-குணாளன்-

குணாளன்
2009-07-13 08:55:00
kunalan.shan@yahoo.com

மச்சான் வளர்மதி! நீ ஏனடாப்பா தேடிவந்து உனது மதிப்பையே குறைப்பதில் நீயே களம் அமைக்கிறாய்? உனக்கென்று ஓரிடம் ஈழத்தமிழரிடம் உண்டு. ஆனால் அதையெல்லாம் நாறடிக்க வேண்டுமென்று ஏன்தான் குறியாயிருக்கிறாய் நண்பா!
யோசி மச்சான்.

-குணாளன்-

Vijay
2009-07-13 09:56:00
vijaykumar1981@yahoo.com

இந்த குணாளன் பெரிய ஆக்கிரமிப்பு பார்ட்டி போல் தெரிகிறது. வளர்மதி யின் கட்டுரையை விடுத்து உடன் அவரது தனிப் பட்ட விஷ்யங்களுக்கு சென்று விடுகிறார்,”உங்களை நினைத்தால் ரொம்பப் பரிதாபமாய் இருக்கிறது. தங்களது ஒருதலைக் காதல், அது நிறைவேறாமல்ப் போனதால் நீங்கள் மேற்கொள்ளும் பழிவாங்கல், மற்றவர்களெல்லாம் ஒரு கல்லில் கொத்துக் கொத்தாய் புளியங்காய் விழுத்துவதாய் எழுதிக் கொண்டு நீங்கள் ஒரே கல்லில் புளிய மரத்தையே சாய்க்கும் முயற்சியை மேற்கொள்கிறீர்கள் என்பது மற்றவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் குணாளனுக்கும் புரியாதா என்ன...? நீங்கள் "தொடரும்.." என எழுதியிருப்பதால் நானும் இத்தோடு நிறுத்தி, ஒருதலைக் காதலுக்காக தாங்கள் வடித்த கண்ணீரிலிருந்து நானும் தொடங்குகின்றேன். ஓகே வா? ”
அவர் அதை இது வரை மற்ற்வர்களுக்கு உபதேசித்தாரோ அதை இப்போ அவரே செய்கிறார்.
அருமையான ஜனநாயக காவலர் அய்யா நீர்.

Satyaseelan
2009-07-13 10:02:00
satyaseelan@hotmail.com

கட்டாயம் குணாளன் யாருக்காகவோ இங்கு வந்து பேரம் பேசிகிறார் என்பது சித்தம். வளர்மதிக்கு ஒரு கருத்து இருப்பது போல் அவரும் தைரியம் இருந்தால் வந்து ஒரு கட்டுரையை எழுதி கிற்றுக்கு அனுப்பட்டும். இங்கு வந்து அனைவரிடமும் ’தாதா’ வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை

சார்வாகன்
2009-07-13 10:48:00
arkali@gmx.net

குணாளன், ரொம்ப டென்சன் ஏறுது போல இருக்குது. உண்மைகளப் பேசுறப்ப அப்படித்தான் ஆகும். அது தான், 4,5 வாட்டி வந்து கருத்து பதிஞ்சு போயிருக்கீக!
பார்த்து இரத்தக் கொதிப்பு அதிகமாயிடப் போவுது அப்பு! மருத்துவர நாடவும்!

வளர்,
கட்டுரை நன்றாகவே வந்துள்ளது. தொடரவும்!!

PANCHAN
2009-07-13 01:21:00
panchan@hotmail.com

வளர்மதி அவர்களே நீங்கள் சொந்த முகத்தோடு துணிந்து எழுதுகிறீர்கள்.குணாளன் என்பவர் முகமூடி தரித்து எழுதுகிறார். எனவே கவலை வேண்டாம். துணிந்து உண்மைகளை கொண்டுவாருங்கள். சில நாட்களாக எல்லா இணையத்தளங்களிலும் குணாளன் என்ற இப் பிணாமி பின்னூட்டம் இடுவதிலேயே காலத்தைக் கழிக்கிறது. குறிப்பிட்ட சிலரைப்பற்றி எழுதினால் இப் பிணாமி அடுத்த நிமிடமே பதில் எழுதுகிறார். முழு நேரத் தொழில் இதுதான்போலும். எனவே இப் பிணாமியின் பிதற்றலுக்கு அஞ்சாதீர்கள். இவரின் எழுத்துக்களை படித்தாலே அண்ணன் யார் என்பது யாரால் இயக்கப்படுகிறார் என்பது சுலபமாக புரிகிறது. தனிநபர் தாக்குதல் என்று சொல்லிச் சொல்லி அண்ணாச்சி உங்கள் மீது அதைத்தான் செய்துள்ளார்.

உங்களுடைய கட்டுரையில் முக்கிய திருத்தம் உள்ளது. அகிலன் கதிர்காமரின் தந்தை பெயர் சீலன் கதிர்காமர். அகிலன் என்பவர் லக்‌ஷ்மன் கதிர்காமரின் மகன் அல்ல. இவர் லக்‌ஷ்மன் கதிர்காமரின் உறவினர். குடும்பத்தை சேர்ந்தவர். குடும்பப் பெயராக இவர்கள் கதிர்காமர் என்ற பெயரை பயன்படுத்துகின்றனர். இதனால் இலங்கை அரசோடு ஒட்டிக் கொள்ள விசுவாசியாகக்காட்டிக் கொள்ள இந்த கதிர்காமர் என்ற குடும்பப் பெயர் உதவுகின்றது.

maran
2009-07-13 03:32:00
maran1971@yahoo.com

எங்கும் பொம்மலாட்டம் ஆடிகாட்டும் சீரழிவுவாதியான சுசீந்திரன் 'இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை" என்கின்றான். சரி அங்கு நடந்தது என்ன? அரசு சொல்வது போல் புலி அழிப்பா!?

ஏகாதிபத்திய பணத்தில் எப்போதும் லாடம் கட்டி ஆடும் பொம்மலாட்டங்கள், இனவழிப்பை இல்லையென்று சொல்வது தான் அதன் அரசியல் அடிப்படையாகும். 60 வருட காலமாக சிங்களப் பேரினவாதம் நடத்தும் இனவொடுக்குமுறையோ இனவழிப்புத் தான். அதன் ஒரு அங்கமாக நடந்ததுதான், இந்த யுத்தம்.

இதை மறுத்து புதுவிசை என்ற சஞ்சிகைக்கு சுசீந்திரன் என்ற கூத்தாடி வழங்கிய பேட்டியின் சாரம் இதுதான். இதைத் தொடர்ந்து பேரினவாதத்தை ஆதரிக்கின்ற ஈழத்து இணையங்கள் வரை, இதை மறுபிரசுரம் செய்தது. அந்தளவுக்கு இந்த கூத்தாடியின் கடந்தகால நிகழ்கால அரசியல் பொம்மலாட்டம், இதற்கு துணையாக உள்ளது. புலம்பெயர் நாடுகளில், மக்களுக்கான ஒரு அரசியலை முன்னெடுப்பதற்கு எதிராக குழிபறித்த, குழிபறிக்கின்ற நபர்களில் முதன்மையானவர் இவர். நடத்தையாலும், அரசியலாலும், இதற்கென்று பெயர் பெற்றவர். மேடைக்கேற்ற சிறந்த நடிகர்.

இன்று உயிர்நிழல் சஞ்சிகை ஆசிரியராக உள்ள இவர், அதன் கடந்தகால அரசியல் சீரழிவின் தொடர்ச்சியில் பயணிக்கின்றார். அத்துடன் ஏகாதிபத்தியம் போடும் பணத்தில் (தன்னார்வ நிறுவனங்களில்) 'இலங்கையரின் சர்வதேச வலைப்பின்னல்" என்ற, மக்கள் விரோத ஏகாதிபத்திய அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றார்.

இந்த பொம்மலாட்ட சீரழிவுவாதி கூறுகின்றார் 'மன்னிக்கணும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை." என்கின்றார். இப்படி கூறும் நீ, நம்பிக்கை ஊட்டக் கூடிய எதை நீ வைத்திருக்கின்றாய்! அதை முதலில் சொல். உன்னிடம் இல்லாதது, எப்படி சமூகத்திடம் இருக்கும். சமூகத்தின் முன்னோடியாக காட்டிக்கொள்ள முனையும் உன்னிடம் அது இல்லாத போது, சமூகத்திடம் அது இல்லை என்று சொல்லும் உன் அரசியல் நிலைப்பாடு படுபிற்போக்குத்தனமானது.

கடந்த 20 வருடமாக உலகம் முழுக்க ஏகாதிபத்திய தன்னார்வப் பணத்தில் சுற்றி வலம் வரும் நீ, ஒவ்வொரு சந்திப்பையும் எழுத்தையும் காட்டி பணம் வாங்கிப் பிழைத்த நீ, இந்த மக்களுக்காக எதைச் சொன்னாய்!? 'நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும்" நீ எங்கே எப்போது மக்களுக்காக முன் வைத்தாயா? அதைச் சொல்லு. நீயும், உன் கூட்டாளிகளும் 20 வருடமாக மக்களுக்கு எதிராக, மக்கள் விரோத அரசியலுடன் புலம்பெயர் நாட்டில் கூடிக் கூத்தாடினீர்கள். இறுதியில் அதில் பெரும்பான்மை, அரசு சார்பு நக்குண்ணிகளாக மாறிவிட்டனர். அவர்களுடன் இன்றும் நட்பும், கூடிக் கூத்தாடும் சந்திப்புகளும், தமிழ் மக்களுக்கு எதிரான சதிகளும் உங்கள் பின்னால் தொடருகின்றது. புலி இல்லாத இன்றைய நிலையில், இந்த கூத்தாடிகள் மக்களுக்கு சொல்லவும், வழிகாட்டவும், அவர்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.

இப்படி இந்த மக்களுக்காக என்னத்தை நீங்கள் நம்பிக்கையுடன் சொன்னீர்கள்? ஒவ்வொரு கூட்ட அழைப்பிலும் பெயரை தவறாது பதிவு செய்து, அதை காட்டி ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனத்திடம் பணம் பெற்று வாழ்ந்த வாழ்வுதான், தமிழனைச் சொல்லிப் பிழைக்கும் உங்கள் நம்பிக்கையாக இருந்தது.

அந்த பணத்தை பெறமுடியும் என்ற நம்பிக்கையில், உலகம் முழுக்க சுற்ற முடிகின்றது. இதற்காக உன் பெயர் அழைப்பிதழில் தவறாது வருமாறு பார்த்துக்கொள்கின்றாய். இதற்கு வெளியில் மக்களுக்காக சொல்ல என்ன உன்னிடம் உள்ளது. 'மன்னிக்கணும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை." என்று சொல்ல வெட்கமாயில்லை. 20 வருடமாக இந்த மக்களுக்காக, நம்பிக்கையூட்டும் வண்ணம் நீ என்ன கருத்தை வைத்தாய்! அதைச்சொல். பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5796:2009-05-28-08-57-40&catid=277:2009

Jeevamuraly
2009-07-13 07:19:00
jsinnatham@aol.com

தோழமையுடன் வளர்மதி

தெரியாததை தெரியாது என்று சொல்வதே குறைந்தபட்ச நேர்மை. அகிலன் கதிர்காமருக்க்கும் லக்சுமன் கதிர்காமருக்கும் எந்த சம்மந்தமுமே இல்லை. அகிலனின் தந்தையார் பெயர் சீலன் கதிர்காமர். பிள்ளைமார் தேவர் நாhடர் என்ற சாதிப் பெயர்களின் குறியீடுகள் போல் தான் கதீர்காமர் என்ற பெயரும் இருந்திருக்கலாணம் அல்லது தற்செயல் குறியீடாகக் கூட இருக்கலாம். லக்சுமன் கதிர்காமர் கொழும்பை இருப்பாகக் கொண்ட கதீர்காமர். சீலன் கதிர்காமர் யாம்பாணத்தை இருப்பாகக் கொண்ட கதிர்காமர். வளர்மதி என்று தந்தையாரின் பெயரைக்கொண்ட எல்லோரும் உங்களின் பிள்ளைகள் என்று யாரவது சொன்னால் தமித்தேசயக்கலாச்சாரத்தின் படி நீங்கள் மிக மோசமக தந்தையாரும்,போர்வழியும் ஆகி விடுவீர்கள் கேள்விச் செவியன் ஊihக்கெடுத்தான் பாணியில் நீங்கள் எங்களுக்கு அம்புலிமாமா விக்கிரமாதித்தன் கதை சொல்லிக்கொடுபக்க வேண்டாம் தோளரே
தமிழீழம் கேட்ட நாங்களே இப்போ வேண்டாம் என்று சொல்கிறேர்ம் நீங்கள் ஏன் அடம்பிடிக்கிறீங்க? பிரகாகரன் கொல்லப்பட்டபின் துரோகம் என்ற தமிழ் சொல்லுக்கு அர்த்தமே இல்லாது போய்விட்டது. அது அர்த்தமிலில்லாத ஒரு அரசியல் சொல்லாடல் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள இன்னும் முப்பாதாண்டுகள் செல்லாம் ஆனால் நாங்கள் ஒரு ஐனநாகக சூழலுக்கான தொடக்கமாக உணர்ந்து கொள்கிறோம். துரோhகம் என்ற தமிழ்ச் சொல் அர்த்தமிழந்த வரலாற்றுப்பதிவை நாற்கள் நிஐமாகவே கண்டு கொண்டோம். கருணாநிதியின் தமிப்பற்று கோபால்சாமி நெடுமாறன் தமிழ் உருவாட்டம் மாதிரி எங்களுக்கு ஆடிக்காட்டி வேண்டாம் ஏனெனில் நாங்களே தமிழ் உருவாடிக் கழைச்சுப் போய் தான் இப்ப தனித்தமிழ் கூத்து வேண்டாம் என்கிறோம்
இலங்கையின் அரசியல் தனித் தமிழுக்கான அரசியலல்ல பல்யினங்களுக்கான அரசியல் இதில் மகிந்தவும் பிரபாவும ஆடிய சூதில் மகிந்த வெற்றிபெற்றார் பிரகாகன் தோற்றுப்போயவிட்டார் உங்களுக்கு இப்:ப என்னவாம் நாங்கள் இப்ப தப்பிப் பிழைத்தலுக்கான அரசிலில்வாழ்ந்து கொண்டீருக்கிறோம். தப்பிப் பிமைத்தலுக்கான போராட்ட வடிவமே மனிதனின் முதிர்ச்சியான போராட்ட வடிவம்.

உறையாடு
2009-07-13 09:53:00
uraiyaadu@gmail.com

அகிலன் கதிர்காமர் பன்சாயத்தில் தகவல் பிழை இருப்பது உண்மைதான். ஆனால் குணாளன் மாதியானவர் பேசுகிற பிரச்சனையை விட்டு தனி நபர் தாக்குதலில் இறங்குகிறார்கள். உண்மையில் கீற்று இம்மாதிரி தனி நபர் தாக்குதலை அனுமதிக்கக் கூடாது. வளர்மதியின் கேள்விகளை முன்வைத்து தேவை அரசியல் விவாதமே.

Editor
2009-07-13 10:22:00
editor@keetru.com

வளர்மதியின் கட்டுரைக்கு குணாளன் இட்ட பின்னூட்டத்தில், கட்டுரையில் பேசப்பட்ட விடயங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாமல் தனிநபர் விமர்சனத்தில் இறங்கியதால், அந்தப் பின்னூட்டம் நீக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டங்களில் இடம்பெறும் தனிநபர் தாக்குதல்கள் குறித்து அண்மைக்காலமாக கீற்று ஆசிரியர் குழுவிடம் தோழர்கள் பலர் வருத்தங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இனி இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம், இது எங்களுக்கு கூடுதல் வேலைப்பளு என்றாலும் கூட.

கட்டுரைகள் முன்மொழியும் அரசியலை மட்டுமே விவாதிக்க வேண்டுகிறோம். கட்டுரையாளர் மீதான தனிநபர் விமர்சனம் இருந்தால், அத்தகைய பின்னூட்டங்கள் இனி கீற்றில் இடம்பெறாது.

Murugan
2009-07-14 08:31:00
murunew@gmail.com

First of all thanks to keetru editor to taking a decision for not allowing the criticism on indiviuals who are writing the articles...
"""ஒரு விஷயத்தை ஊன்றிக் கவனித்தால், புலிகள் மீதும், புலம் பெயர் சமூகங்களில் உள்ள அவர்களுடைய ஆதரவாளர்களையும் விமர்சிப்பதற்கு இவர்கள் காட்டும் ஆர்வத்தை, சிங்கள இனவெறி அரசையோ, கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் சிங்கள அரசின் பினாமிகளாக செயல்பட்டு, நாள்தோறும் ஆட்கடத்தல்களையும், கொலைகளையும் வரைமுறையின்றி அரங்கேற்றி வரும் கருணா குழுவினரையோ டக்ளஸ் குழுவினரையோ விமர்சிப்பதில் இவர்கள் காட்டுவதில்லை என்பது புலப்படும். தற்சமயம், வன்னியில் அகதி முகாம்களில் சொல்லொண்ணாத் துயர் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் துயரைத் தீர்க்க சர்வதேச நிர்ப்பந்தங்களை உருவாக்குவற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தத் தரப்பினர் மகாஅசட்டையாக நடந்துகொள்வதும் புரியவரும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த மே 16 - 17 தேதிகளில் சிங்கள இனவெறி இராணுவம் 20 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததற்குக் காரணமே விடுதலைப் புலிகள்தான் என்று இவர்கள் பிதற்றும்போது நமக்கு அதிர்ச்சிதான் ஏற்படுகிறது""""""""

A very good question i too thought several times and asked people why are you not writing about the stuffs you asked here instead you are always ciriticising LTTE for everything.... especiallytamilcircle,Vinavu websites which i keep looking, past one month these two websites are much interested in explainning about how LTTE being cheated from the international community , how LTTE leaders being tortured, and LTTE is the only one who is responsible for the peoples death... they keep on publishing this..; I would like to ask these guys ok we understood that you wanted draw a attention from people who support blindly LTTE and to know these facts ...but you also should know that you should be genuine and honest to write and do research on everything possibly to give the true information, why always commenting on LTTE for every thing? ? ? please do search and compare manythings before writing something....

Raj Kumar
2009-07-14 05:54:00
no-spam@yahoo.com

Laxman Kathirgamar has roots in Manipay, Jaffna. Someone told that he is from Colombo/Kanday. That may be correct, who knows where he was born at?

However, I know Laxman's direct relative who are from Manipay, Jaffna and they told me how they are related to LAxman K.

srimathi
2009-07-15 03:01:00
srimathi@gmail.com

  உண்மைகளின் முன்னே... புதுவையாரும்,புலிகளும் பிரபாகரனைச் சொல்லிப் புனையும் புதிசு...  Written by ப.வி.ஸ்ரீரங்கன் Tuesday, 14 July 2009 18:38 அரசியல்/சமூகம் ப.வி.ஸ்ரீரங்கன் எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)


"நம்மிடம் எந்த நம்பிக்கைகளும் கைவசமில்லை. நாம் வாழ்வு மறுக்கப் பட்ட சூழலுக்கு மறுப்பும்,நமது குடியிருப்புகளை இராணுவ உயர் பாதுகாப்பாக்கிய யுத்தத்தையும்- இலட்சக்கணக்கான மனித அழிவையும் வெறுக்கிறோம்.இதனால் பாதிப்புக்குள்ளானது மட்டுமல்ல வேரோடுபிடுங்கியெறியப் பட்ட உயிர் வாழ்வின் விழுமியங்களை மீட்பதற்கு யுத்தம் குறுக்கே நிற்பதால் அதை உடலில் உயிருள்ளவரை எதிர்ப்போம்.













"ஏதிலிக்குழந்தைகள்"(!) அழகான தமிழ்.இப்படிக் கூறுவதால் அந்தக் குழந்தைகளுக்கு எந்த நிறைவும் வந்நு விடாது.முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள அவகாசம் தேவை.எதற்கெடுத்தாலும் மறுப்புச் சொல்லாதீர்கள்.ஈழப்போராட்டத்தைப் புரிந்துகொள்ள தமிழ்பேசும் மக்களுக்கு சுமார் இருபதாண்டுகள் சென்றது.மக்கள் இழந்த அனைத்தும் மண்ணுக்காகவென்ற கருத்தியல் தளத்தை இனியும் நாம் மௌனமாக 'ம்'போடமுடியாது.மழலைகள் எப்படி அநாதைகளானார்கள்?அவர்களது வாழ்வை எந்தப்பூதம் தின்று ஏப்பமிட்டதது? எதன்பொருட்டு அவர்தம் பெற்றோர்கள் அழிந்தார்கள்? ஊனமானது அவர்தம் வாழ்வு மட்டுமல்ல ஒரு சந்ததியே போராடிச் செத்த பின் நீங்கள் கதைசொல்கிறீர்கள்.

யுத்தத்தால் முடமாக்கப்பட்ட சிறார்களை முல்லத்தீவுக்குள்ளும் வன்னிமண்ணுக்குள்ளும்தாம் உங்களுகுத் தெரிகிறது.நமக்கோ தமிழ்பேசும் மக்கள் வாழும் முழு இலங்கைக்குள்ளும் தெரியும்.தொடார்புகள் உண்டு.இவர்களது வாழ்வை எந்த அமைப்பு சீராக்குகிறது?வெட்கங்கெட்ட இயக்கங்கள் தத்தம் தேவைக்காகச் சிறார்களைப் போருக்கு அனுப்பிக் கொன்றும்-ஊனமாக்கியும்-அநாதவராக்கிவிட்டும்,இப்போது காப்பகங்கள் நடாத்துகின்றனவாம்.பேருக்குச் சில விளம்பர நாடகங்களைச் செய்பவர்களுக்காக- இப்படி ஓட்டுமொத்தச் சிறார்களுக்காகக் குரல் கொடுப்பதுபோல் பாயும்போது-எந்த விளம்பரமுமின்றிக் காரியமாற்றும் மனிதர்கள் இந்தக் கண்றாவித்தனங்களை இனியும் மூடிமறைக்கத் தயாரில்லை.புலிகள்தாம் தமிழர்கள்,தமிழர்கள்தாம் புலிகள் என்பதெல்லாம் முன்னோருகாலத்தில் சாத்தியமாகலாம்.இப்போது ஜனநாயக அரசியலுக்கு வருகிறார்களா வாருங்கள்-பன்முக அரசியலோடு-பன்முகத் தலைமைத்துவங்களோடு கலந்து நமது விடிவைத் தேடி விவாதிப்போம்-செயற்படுவோம்.அதை விட்டுவிட்டு விசமத் தனம்-திரிபுவாதம் என்பதை அவிட்டுவிட வேண்டாம்.இவற்றைக் கடந்த கால் நூற்றாண்டாய் கேட்டுக்கேட்டு நமது வாழ்வே நாசமாகிவிட்டது..." -அன்று(01.04.2005), அன்பர் ஈழநாதனோடான விவாதத்தில் ஸ்ரீரங்கன்.
 
 
ஆல்பிரேட் துரையப்பா முதல் கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தத் "துரோகிகள்" பட்டியல் நீளமானது!தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப்பிலிட்டுக்கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.இன்று புதிதாகப் புதுவையாருக்கு ஞானம் பிறந்து அவர் தான்போற்றிய நெருப்புக் கடவுள்-சூரியதேவனைச் சர்வதிகாரியாக்கித் தன்னை "மக்கள் கவிஞனாக்க" இடைத்தங்கல் முகாமிலிருந்து முணுமுணுக்கிறார்.இதையும் "அநாமதேயன்"என்று காலச்சுவட்டில் இனவாதக் குண்டு தயாரிக்கும் இன்னொரு முகமூடி(நம்மால் அறியப்பட்ட அவலம்)சாம்பல் பூத்த தமிழ்க் குறுந்தேசியத்தை ஊதிப் பார்க்கிறது.இதற்குச் சர்வதிகாரியாகிப்போன பிரபாகரனது போராட்டம் நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் தலைகீழாகப் போய்விட்டதாம்.வரலாற்றில் புலிகளது வரவுக்கும்,பிரபாகரனது பாத்திரத்துக்குமான சரியான புரிதல் இங்ஙனம் குறுக்கப்பட முடியாது.நமது மக்களது சுயநிர்ணயப் போரைச் சிதைப்பதற்குப் பிரபாகரனுக்குப் பின்னால் நின்றவர்கள், இப்போது பிரபாகரனை அழித்துவிட்டுத் தம்மை எம் மக்களது மேய்ப்பர்களாக்குவதில் மையமுறும் அரசியலை"அநாமதேயன்"எழுத்துக்களுக்குள் இனங்காண்பது ஒன்றுஞ் சிரமமான காரியமில்லை!
 
 
இவர்கள்தாம் கடந்தகாலத்தில்"ஆய்வாளர்கள்"-அறிவுமேதைகள்.தேசியச் சக்திகள் குறித்துக் கரிகாலன் காதை நமக்குச் சொன்னவர்கள்.இன்று,புலிகளது அழிவு திடீரென நிகழ்ந்துவிட்டதாம்.சிந்திப்பதற்குள் நடந்த "தலைகீழ்"வரலாறாகிறதாம்.புலிகளது தோற்றத்திலேயே அது அழிவு யுத்தத்தைச் செய்வது குறித்துப் பேசியவர்களை எல்லாம்"துரோகி"எனச் சொல்லிக் கொன்ற கூட்டம் இலட்சம் மக்களை அழித்துவிட்டுத் தமிழ்பேசும் மக்களை உலக எஜமானர்களுக்கும் உள்ளுர் தமது பங்காளிக்களுக்கும் அடிமையாக்கிவிட்டுப் பிரபாகரனே இவற்றுக்குப் பொறுப்பென்று தம்மை தமிழ்மக்களது மீட்பர்களாகக் காட்டுகிறது இப்போது.இந்தச் செயற்பாடு மிகக்கொடுமையானதொரு இன்னொரு அரசியல் நாடகத்தை-துரோகத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கிறது.இத்தகைய சதிகாரர்களைக் குறித்து அன்று,2005 மட்டில் இங்ஙனம் எனது அகதிப்பதிவில் எழுதினேன்:
 
 
"அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய்
அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய்
அண்ணனைத்
தம்பியை
அக்காளைத் தங்கையை
மாமனை மச்சானை
மடிதிறந்த மனைவியைப் பேரனைப் பூட்டனை
குருவை
அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை
இன்பிறவெல்லாம் கொன்றாய்
தேசத்தின் விடுதலையின் பெயரால்."
 
 
 
இன்று,நாம் சந்திக்கும் இந்த வலைப்பதிவு "வாசகர்களையும்"அவர்களின் பார்வையையும் பற்றிப் பெரிதும் கவலைகொள்வதற்கில்லை.ஆனால்,புலிகள் தமது இராணுவத்தையும்,அதன் தலைமையையும் உலக எஜமானர்களோடு சேர்ந்து அழித்தபின் நடாத்தும் அரசியல்சதியே நமது மக்களை மேலும் மொட்டையடிப்பதாகும்.இவர்கள் இலங்கையில் புரட்சிகரமான உணர்வு அரும்புவதற்கே தடையாக இருக்கின்றார்கள்.அல்லது அங்ஙனம் விடப்பட்டு,அவர்களது எஜமானர்களால் கண்காணிக்கப்பட்டு ஊதியம்-உபயம் பெற முனைவதில் இன்னொரு சதிவலை பின்னுகிறார்கள்.இவர்களது அன்றைய எதிர்ப்புரட்சிப்பாத்திரத்தில்
"ஈழமென்றும்,தமிழ்க் கலாச்சாரமென்றும்,தாம் உலகில் "அதியுன்னத"மக்கள் பிரிவென்றும் ஆலவட்டம் பிடிக்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமெனத் தம்மை சொல்லி வரும் புலிகள் இயக்கத் தலைவர்கள்,பதவிக்காகவும்,சுகத்துக்காவும் நாயாய்ப் பேயாய் அலைந்தும் சரணடைந்தும்- வார்தைகளினால் தமது வேசத்தைக் கலைத்தபோது"அவற்றைப் பிரபாகரனது சர்வதிகாரத்துக்குள் திணித்துவிட்டுத் தம்மைக் குறித்து மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாகப் புலிப் பினாமிகள் ஊளையிடுவது மக்களை மேலும் இனவாதிகளாக்கி அவர்களைத் தொடர்ந்து அழிக்கவே.இதை அனுமதிப்பதென்பது தற்கொலைக்கு நிகரானது.
 
 
"குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்
அகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ
மூளையை விறைப்பாக்கிறது,
இந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க
உனக்காகவும்
எனக்காகவும்-எமக்காவும்
நாம்,எதையேனும் செய்தே ஆகவேண்டும்!
 
 
இருள் சூழ்ந்த நாளிகையிலே
பலரைத்தின்றுவிட்டு
இடைத்தங்கல் முகாமிலிருந்து இரை மீட்கிறாய்" -இன்று.
 
 
புதுவை இரத்தினதுரை அன்று,தனது வார்த்தைகளால் எத்தனையோ அப்பாவிகளது கொலைகளை நியாப்படுத்திய அவரது மக்கள் விரோதம்,இன்று பிரபாகரனைப் பெரும் சர்வதிகாரியாக்கும் அரசியலோடு மக்களிடம் வருகிறது.இதையேதாம் "அநாமதேயன்"கூடச் செய்கிறார்.அன்று புலிகளைத் "தேசியச் சக்தி-தேசிய இராணுவம்"எனக் கருத்துக்கூறியவர்,இன்றோ அனைத்துக்கும் பிரபாகரனது தவறே காரணமென்று புலிகளுக்குப் பின்னாலிருந்து இயக்கிய சக்திகளை மறைத்து மீளவும் தமிழர்களுக்கு ஆப்பு வைக்கிறார்.ஒரு தலைமுறையையே கையாலாகாத கூட்டமாக்கி அவர்களைக் கொன்றுதள்ளிய புலிப்பரப்புரையாளர்களெல்லோரும் இனிமேல் இதே தமிழ்ச்சமுதாயத்துள்தாம் வாழப்போகின்றார்கள்.தம்மால் அநாதைகளாக்கப்பட்டு ஒட்டக் காயடிக்கப்பட்டவொரு இனத்தின் அழிவைச் செய்த இதே நபர்கள் எந்த முகத்தோடு மேலும் உயிர்வாழ்வார்கள்?"உண்மை மனிதர்களக்கு நிச்சியம் உறுத்தும்.அவர்கள் தமது தவறுகளுக்காக வருந்துவதுமட்டுமல்ல தமக்குத் தாமே தண்டனையைக் கோருபவர்களாகவும் இருப்பார்கள்." கூட்டாகக் கோழியடிச்சு உண்டு,தலைமுறையையே நாசங் செய்துவிட்டு,அதைத் தமது தலைவனுக்கு மட்டும் பொறுப்பாக்கும் எவனும்-எவளும் மனிதவிரோதிகளே.தமது தவறைத் தார்மீக அடிப்படையிற்கூட ஏற்கமுடியாத மனித விரோதிகள்.இவர்கள் பிரபாகரன் குறித்துக் கருத்துச் சொல்லவே அருகதையற்ற ஜென்மங்கள்!இதோ உனக்கும் உனது இராணுவ வாதத் தலைமைக்கும் அன்றே இங்ஙனம் உரைத்தோம்:
 
"எச்சங்களில்
"எந்த எலும்பு" உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்!
இவையெல்லாம்
எதன் பெயரால்,
எதன் பெயரால்,
எதன் பெயராலெனப் பிதற்றுவாய்.
அன்று,
உன் பிதற்றலுக்குச்
செவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ
இல்லாதிருக்கக் காண்பாய்!"
 
 
புலிகள் நமது வரலாற்றில் "தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது, நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது" பலரிடம் உண்டு.எனினும், அஃது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத்தினதும்,இந்திய ஆளும் வர்க்கத்தினது பிராந்தியக் கனவினதும் விளைபொருளாகத் தன்னை வெளிப்படுத்தி இறுதியில் மேற்குலகிடம் சரணடைந்தது.இந்தப் புலிகள் தமிழர்களது உரிமைப்போராட்டத்தில் திடீரென வந்தவர்களே!இது இலங்கையில் அந்நியர்களது அடியாட்படையாகவே தோற்றம்பெற்று இறுதியில் எதிர்ப்புரட்சிகரச் சக்தியாகவே மக்களை யுத்தத்தில் கொன்று புரட்சிகரப் போராட்டத்தை அழித்தது.இந்த வரலாறு எழுதப்பட்டேயாகவேண்டும்!புதுவை உரைப்பதுபோல இது பிரபாகரனென்ற தனிநபரது விருப்பு-வெறுப்புக்குட்பட்டதல்ல.
 
பிரபாகரனென்ற பொம்மையைக் கடந்து சிந்தித்தால்,வர்க்க அடிப்படையாகப் புரிவதில் இவர்கள்,இலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில்,சந்தித்த முரண்பாட்டில் தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய பிராந்தியவல்லரசின் புவியியற் அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம் புலிகள் அமைப்புக்குப் பின்னால் நின்று, தமிழ் மேட்டுக்குடிகளின் நலனுக்குகாகத் தமிழ்பேசும் மக்களைக் கட்டாயப்படுத்தி இராணுவப்படையாக்கிக் கொன்றுள்ளார்கள்.
 
இன்று,இவர்களது வர்க்க ஊசாலாட்டம் மேற்குலகச் சார்ப்பு-இந்தியச்சார்பு என எல்லா வகை ஊசாலாட்டைத்தையும் தமது வர்க்க நலனிலிருந்து அறுவடையாக்கிப் பிரபாகரனைச் சர்வதிகாரியாக்கி"ஈழப்போரை"இலட்சம் மக்களைக் கொன்று-கொலையாக்கி முடித்துள்ளது.இவர்களைத் தண்டிப்பார் எவர்?புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் மேலும் தவறுகளையே நியாப்படுத்தும் கூட்டமாகப் புலிகளது பினாமிகள் இன்று புலம்பெயர்ந்த தமிழருக்குள் புதிய கதை பேசுகிறார்கள்.பங்குச் சண்டையில் ஒவ்வொருவரும் புதிய வேடம் பூண்டு மக்களுக்காகக் குரல்கொடுப்பதாக் கருத்துக்கட்டுகிறார்கள்.
 
இந்தப் புலிப்பினாமிகளின் வால்களது வெறும் தமிழ்ப் பாசம் இங்கு யாரையும் காப்பாற்றாது.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு "அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாக"க் கிடக்கிறார்கள்.இங்கே, ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளையும்,அவர்களுக்குப் பின்னால் நின்ற தமிழ் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தையும் வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது, விஞ்ஞானப+ர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்!இன்று, கேவலம் இந்தக் கேடுகெட்ட நாய்கள் போடும்"நாடுகடந்த அரசாங்கம்"என்ற கூச்சல் மக்களைச் சொல்லித் திரட்டப்பட்ட நிதியைத் தக்கவைக்கவும் தம்மை இலங்கை அரசியலில் ஏதோவொரு முறையில் தவிர்க்க முடியாத சக்திகளாய் உருவாக்கவதற்கு முனையும் கபடத்தனத்தின்மீது கட்டப்பட்டதாகும்.தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறுதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற எந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.
 
இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்; அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போர் என்ற அழிவுயுத்தத்தை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்றும்,அந்நிய அடியாட்படை ஊழியம் என்றும் அன்றே வரையறுத்துப் புலிகள் அழிவார்கள் என்று குறித்துரைத்தோம்! உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் "ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப் பட முடியாது.இரண்டும் சாரம்ஸத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம்"என்றும் வரையறுத்துச் சொன்னோம்.இதுவே இன்று நிஜமாக நம்முன் நடந்தேறினாலும் இதை மறைத்து மாய்மாலஞ் செய்யப் புலிப்பினாமிகளே புதிய கதை பேசிப் பார்க்கிறார்கள்.அவர்கள் இதுவரை தம்மால் போற்றப்பட்ட ஒரு மனிதனுக்குள் அனைத்துத் தவறுகளையும் புதைத்துவிட்டுத் தம்மைப் புனிதர்களாக்குவதில் மிகத் துடிப்போடு இயங்குகிறார்கள்.கடந்த காலத்தில் தாம் இயங்கிய அரசியலானது தமிழ் மக்களுக்கு விரோதமானதென்று தெரிந்தும் தவறிழைத்த இந்தக்கூட்டம் பெருவாரியான தமிழ்மக்களைக் கொல்வதற்கு உடந்தையானது.இவர்களை வரலாற்றில் தண்டிக்கவேண்டிய பொறுப்புத் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில்வாழும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் உண்டு!
 
"இதற்கு முன்
போ,போ,
போய் உன் பெற்றோரைச் சுற்றோரைக் கேள்
சுதந்திரமென்றால் என்னவென்று?"
 
 
ஈழவிடுதலை இயக்கங்களின் எழிச்சிகள் அன்னிய சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டு வைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டுள்ளன.இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து தத்தம் உதவியால் அவற

Dr. V. Pandian
2009-07-16 12:28:00
porkkaiponds@yahoo.co.in

ஷ்ரீமதி எழுதுவதில் நேர்மை இல்லை என்றே படுகிறது. வியட்நாம் விடுதலைக்காக ஹோசிமின் போராடினார். அங்கும் லட்சக்கனக்கான மக்கள், புரெஞ்சு, அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டனர். இறுதியில் ஹோசிமின் வென்றதால் அவர் பழியிலிருந்து மீண்டார் என்று கொள்ளலாமா? பிரபாகரன் தற்போது பின்னடைந்துள்ளதால், அவரது போர் தவறு, அல்லது அவரே தவறான நபர் என்றாகலாமா?

வர்க்கம் என்றும் தரகு முதலாளி என்றெல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட, புளித்துப் போன சொல்லாடல்கள் இனி வேண்டாம். கியூபா, வியட்நாம் போன்ற வலியோடு பிறந்த "கம்யூனிச" தேசங்கள், ஈழச்சிக்கலில் எடுத்த நிலைப்பாடுகளைப் பார்த்தபின், இந்தச் சொல்லாடல்கள் எல்லாம் அருவருப்பூட்டுகின்றன.

இனி தமிழினம் என்றும், அதன் சாதிச் சிக்கல்களிலிருந்து விட்படுவது எப்படி என்று மட்டும் சிந்திப்போம்.

தமிழினம் பழம்பெரும் இனம். இங்கு ஐந்து நிலங்களும், அவற்றுக்கான தனிப்பட்ட பண்பாடுகளும் இயல்பானது தான். தமிழினம் ஒரே மரபினமாக இருந்தாலும், ஒரே மொழியினமாக இருந்தாலும், பண்பாட்டு ரீதியாக அவர்கள் வெவ்வேறானவர்களாகவே இருந்தனர். அதிலிருந்துதான் ஜாதிகள் தோன்றி இருக்கக்கூடும். இதிலே, பார்ப்பனர்கள் போல் பல வௌியினத்தவரும் உள்ள நுழைந்து, தமது வசதிக்காக, தமிழினத்தைப் பிரித்துக் கொழித்தனர்.

இந்த உண்மைகளை எல்லாம் நாம் முறையாக உணர்ந்தால், ஜாதிய கொடுமைகளில் இருந்து விடுபட்டு, இனமேலாவது இனத்தை முன்னிருத்தி மேண்மையடையலாம்.

பொதுமக்கள் பட்ட துன்பங்களுக்கு புலிகள் பொருப்பல்ல. இந்தக் கேடுகெட்ட உலகே பொறுப்பு. தனது சொந்த மன்னை மீட்பது ஒரு இனத்தின் முதன்மைப் பணி. எதிரிக்கு அடிமையாய் வாழ்வது ஒரு அவமான வாழ்க்கை. அந்த வாழ்க்கை தேவையா? இழப்புகள் எல்லா இனங்களுக்கும் இருக்கத்தான் செய்கின்றன. ஜாலியன் வாலாபாக்கில் இந்தியர்கள் கொல்லப்படவில்லையா?

யாருடைய தவறோ, ஹிரோசிமா, நாகசாக்கி இல்லையா? ஜப்பானியர்களால் சீனர்கள் படுகொலை செய்யப்படவில்லையா? அதற்காக, இரண்டு ஜப்பானிய பிரதமர்கள் வௌிப்படையாக மன்னிப்புக் கோரவில்லையா? சிந்திக்கத் தெரிந்தும் மனித, உயிர்நேயமில்லாத, மாந்தர்களாக வாழ்வது எப்பேர்பட்ட காட்டுமிராண்டித்தனம்.

புலிகளை மலினப்படுத்த இந்தியா (பார்ப்பனீயம்), சிங்களம் மற்றும் உலகமயச் சக்திகள் பெரும் முன்னெடுப்புகளைச் செய்கின்றன. ஏழையின் சொல் அம்பலமேறுவதில்லை என்பது போலத்தான், தற்கால வீழ்ச்சியடைந்த புலிகளின் நிலை போலும்.

தமிழ்நாட்டின் விடுதலையைப் பற்றி இனி பேசுவோம். நாம் விடுதலை பெற்றால் அவர்களும் பெறுவர். ஈழத்தமிழனின் கடமை முடிந்தது. இனி, தமிழ் நாட்டுத் தமிழனின் கடமை தொடங்குகிறது.

உண்மைகளைச் சொல்லி, மக்கள் எழுச்சியை உண்டாக்குவோம். நாம் கடுமையாக போராடாமலே இந்தியா சிதறும்.



Dr. V. Pandian
2009-07-16 03:52:00
porkkaiponds@yahoo.co.in

From tamilnation.org web site......

Reflection: Velupillai Prabhakaran, Interview with Sunday, September 1985 - 24 years ago...

" A liberation fighter has to transcend the confines of his ego and his self to immerse himself whole-heartedly in the struggle. We are only symbols of the aspirations of the Tamil people.... Fight we must, till our goal is achieved. India's sympathy is a morale-booster, but should India withdraw support it would not mean the end of our liberation struggle. After all we did not start our liberation movement with India's support or with the help of some other external forces. We are fighting in the hope that we will see Eelam in our lifetime. We don't want to pass the burden of a liberation struggle to the next generation: they must enjoy the fruits of our toil. But in case we do not succeed in our lifetime, we have a vision to see that the struggle is passed on to the next generation.We will fight till we die. When I die someone else will take over. As Subhas Chandra Bose said, 'No liberation fighter can delude himself that he alone can deliver freedom.' If my generation dies without attaining freedom the next generation will carry on the struggle..."

ravi
2009-07-30 06:55:00
ravin@bluewin.ch

நட்புடன் வளர்மதிக்கு

உங்கள் கட்டுரையின் முதல் பகுதியில் கண்டேன்.
நீங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறீhகள்…
///அவர்கள் விடுதலைப் புலிகளை வெறுக்க மிகமுக்கியக் காரணமாக இருந்தது விடுதலைப் புலிகளின் சமூக அடித்தளம். அதுநாள் வரையில் யாழ்ப்பாண சைவப் பிள்ளைமார்களின் ஆதிக்கத்தில் இருந்த ஈழ விடுதலைக்கான போராட்டம், விடுதலைப் புலிகள் ஆதிக்கத்திற்கு வந்ததோடு கரையாளர் சமூகத் தலைமைக்கும் சமூக அடித்தளத்திற்கும் கைமாறிப் போனது.///

இது என்னளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. பிரபாகரன் கரையார் சமூகத்தில் பிறந்ததை வைத்து வேளாளர் கைகள் பலமிழந்ததாக நீங்கள் உணருவது தவறு. நான் அவர்களுடன் படித்தவன் பழகியவன். வல்வெட்டித்துறை கரையார சமூகம் ஒதுக்கப்பட்ட ஒரு சமூகமல்ல. மாறாக மேலாண்மை மனோபாவம் கொண்டது. (கள்ளக்கடத்தல் தொழிலை செய்வதில் முன்னின்றதால் அரசின் அதிகாரத்துக்கு சவாலாக இருந்தார்கள்) அவர்கள் வேளாள சமூத்துக்கு அடிபணிந்ததில்லை. கோவில்கள் பாடசாலைகளிலும் இதைக் காணலாம். ஆசிரியர்கள்கூட அடக்கித்தான் வாசிப்பார்கள். பெயர்பெற்ற வல்லிபுர ஆழ்வார் கோவிலின் கடற்தீர்த்த உற்சவத்தில் அவர்கள் சுவாமியை கடலுக்குள் காவிச்செல்லுமளவுக்கு சைவவேளாளர்களாகவே செயற்படுபவர்கள். அவர்களை தலித்துகளின் உருவில் காண்பது தலித்தியத்தைத் திரித்துவிடும்.

அரசியல் ரீதியல் பார்த்தால் புலிகளை ஆரம்பத்தில் வழிநடத்தியது அமிர் போன்ற தமிழ்த் தலைமைகள். இந்த சைவவேளாளக் கூட்டத்தின் அசல் பிரதிநிதியாகவே புலிகள் இருந்தார்கள். செயற்பட்டார்கள். அவர்களுக்காக அரசியல்படுகொலையும் செய்தார்கள். தலித்துகள் ஆரம்பத்தில் புலிகளுடன் தம்மை இணைத்துக்கொண்டது குறைவு. (அவர்கள் ஈபிஆர்எல்எப் இலேயே பெருமளவு சேர்ந்தார்கள்.) காரணம் தலித்துகள்; புலிகளை சைவவேளாள ஆதிக்கமற்ற சக்தியாக நம்பத் தயாராக இருக்கவில்லை. சைவவேளாளத் தலைமையைக்கொண்ட புளொட் இல்கூட இணைய முன்வந்தளவுக்கு புலிகளில் அவர்கள் சேரவில்லை. ஏல்லா இயக்கங்களும் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர் தேசியவிடுதலைப் போராட்டம் உக்கிரமான காலங்களில்தான் புலிகளில் தலித்துகள் பெருமளவில் சேர்ந்தார்கள் அல்லது சேர நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். புலிகள் எப்போதுமே தலித் ஒடுக்குமுறைபற்றி கண்டுகொள்ளாமலே இருந்தனர். சைவவேளாளக் கும்பல்தான் இறுதிவரை புலிகளை வழிநடத்துபவர்களாகவும் ஆதரவாளர்களாகவும் ஈழத்தில் மட்டுமல்ல புகலிடத்திலும் மூர்க்கமாகச்செயற்பட்டார்கள் என்பதை நாம் அனுபவித்துள்ளோம். எனவே இதுபற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.

- நட்புடன் ரவி



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP