Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
நிகழ்வு

துபாய் கவிதைத் திருவிழாவில் கவிச்சித்தர் ஆனார் மு. மேத்தா.!

Metha and Thuvakku members

அமீரகத்தில் பெருக்கெடுத்து ஓடும் இலக்கிய ஆறு இலக்கிய சிந்தனையாளர்களையும் வாசகர்களையும் கட்டிபோட்டு விட்டதை தொடர்ந்து துபாயில் பணிபுரியும் கடைநிலை தொழிலாளர்களையும் ரசிக்க வைத்திருப்பதைக் கண்கூடாக பார்த்தது மட்டுமல்லாமல் இதயப்பூர்வமாக உள் வாங்கவும் முடிந்தது...

ஆம் அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கூட்டிய கவிதைத் திருவிழா முழுமையான இலக்கியத் திருவிழாவாக புலம் பெயர்ந்து இலக்கியம் பேசும் கவிதை பேசும் மக்களிடையே நிறைவை தந்திருக்கிறது. சுமார் மூன்று மணிநேர இலக்கிய விழாவில் கலந்துகொண்ட அனைவரும் தமிழ்ச் சுவையில் கட்டுப்பட்டு அரங்கத்தில் பேச்சாளர்களின் பேச்சுகளில் ஒன்றர கலந்துவிட்டிருந்தனர்.

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை 15-06-2007 அன்று துபாய் இந்திய தூதரக அரங்கத்தில் கவிதைத் திருவிழாவினை கவிதை மத்தாப்பு கொளுத்தி துவங்கிய விதமே சிறப்பெனலாம். விழாவிற்கு அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் தமிழ்த்திரு. எம்.ஏ.அப்துல் கதீம் தலைமையேற்று தலைமை உரை நிகழ்த்த விழா ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு பாரத் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கவிஞர் திரு. மு.மேத்தா அவர்கள் தனது ஆகாயத்துக்கு அடுத்த வீடு கவிதை நூலுக்காக சாகித்ய அகடாமி விருது பெற்றதை பாராட்டும் விதமாக அவரை அன்போடு அழைத்த கவிப்பேரன்களின் அன்பழைப்பையேற்று புதுக்கவிதைத் தாத்தா மு.மேத்தா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சென்னை அம்பத்தூர் சோக இகதா மகளிர் கல்லூரி நிர்வாகி திரு. சேது குமணன், மராட்டிய மாநில எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. சு. குமணராசன், சென்னை புதுக்கல்லூரி தமிழ் ஆய்வுத்துறை தலைவர் திரு. கம்பம். சாகுல் ஹமீது, துபாய் இ.டி.எ.குழுமத்தின் இயக்குனர் திரு. செய்யது சலாஹத்தீன் உள்ளிட்ட சானறோர்களும் அமீரகத்தில் உள்ள தமிழ் இயக்கங்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருவிழாவில் கவியரங்கை திரு.கே.ஹபீப் தொகுத்தளிக்க. கவியரங்கில் திரு. சம்சுத்தீன், திரு. காளிதாஸ், திருமதி. ஜஸீலா ரியாஜ், திரு. கவிமதி, திரு. பூபாலகன் உள்ளிட்ட கவிஞர்கள் கவிதை சொன்னார்கள்.

திருமதி. ஜஸீலா ரியாஜ் சொன்ன கவிதை தன்னை ஈர்த்துவிட்டதாகவும் அவருக்கு தன் கல்லூரியின் சார்பில் கவிஞர். மு. மேத்தா விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் தருவதாக திரு. சேதுகுமணன் அவர்கள் உறுதியளித்து பேசினார். தனக்கு கிடைக்கப் போகும் பரிசு தொகையினை அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவைக்கே வழங்கப் போவதாக திருமதி ஜஸீலா உறுதியளித்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியதோடு அல்லாமல் கவிஞர் பேரவைக்கும் பெருமையும் சேர்த்தார்.

Metha பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சே.ரெ.பட்டணம் அ. மணி கவிஞர் மேத்தா பற்றியும், திரு. ஆசிப் மீரான் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிச்சித்தர் மு. மேத்தாவின் ஆகாயத்துக்கு அடுத்த வீடு நூலை பற்றியும் பேசினர்.

மேலும் விழாவில் மும்பையில் வசிக்கும் கவிஞர் வெற்றிவேந்தனின் 'விடுதலை வேட்கை' நூலைப் பற்றி பேரவை செயலாளர் இ.இசாக் அறிமுகம் செய்தபின் மு. மேத்தா நூலை வெளியிட திரு சேது குமணன் அவர்களும் சலாகுத்தீன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

கவிதைத் திருவிழாவின் இறுதி நிகழ்வாக கவிஞர். மு. மேத்தா அவர்களுக்கு "கவிச்சித்தர்" என்ற அடைமொழியையும் திரு. சேது குமணன், திரு. சு. குமணராசன் ஆகியோருக்கு "தமிழ் நேயர்" என்ற அடைமொழியையும் கவிஞர் பேரவை செயலாளர் திரு இ. இசாக் அறிவிப்பு செய்ய பேரவை தலைவர் அப்துல் கதீம் கேடயம் வழங்க சிறப்பு விருந்தினர்களை அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை சிறப்புச் செய்தது.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் உரையாற்ற இறுதியாக கவிச்சித்தர் மு.மேத்தா அவர்கள் ஏற்புரையில் தனக்கு இவ்விழா மிகவும் மகிழ்வுடையதாகவும் இன்னும் உற்சாகத்தை தருவதாகவும் கூறி மகிழ்ந்தார்.

கவிதைத் திருவிழாவினை முழுவதும் திரு. கவிமதி தொகுத்து வழங்க திரு. ந. தமிழன்பு நன்றியுரையாற்ற திருவிழா நிறைவடைந்தது.

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com