Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியா?
சுடர்


ms_swaminathan “கார்ப்பரேட் கம்பெனிகள் கனிவுடனும் சமுதாய அக்கறையுடனும் அளிக்கும் தொகையைப் பயன்படுத்தி, நாட்டு மக்களின் பசியைப் போக்கத் திட்டங்கள் தீட்ட வேண்டும். சிறுகுறு விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்கி இலாபம் ஈட்டும் வகையில் அத்திட்டங்கள் அமைய வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ஒத்துழைப்போடு சத்துணவு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிப் பசியைப் போக்க வேண்டும்'' என்று அண்மையில் உபதேசித்திருக்கிறார், ஒரு மாபெரும் விவசாய விஞ்ஞானி.

“எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி ஏழை விவசாயிகளுக்கு சத்துணவு படைக்க வேண்டும். அதை இலவசமாகக் கொடுக்காமல், விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து, கூலியாக சத்துணவளிக்க வேண்டும்'' என்றும், இதற்கு “காந்தி மாவட்டத் திட்டம்'' என்று பெயரும் சூட்டியுள்ளார், அந்த உலகம் போற்றும் விஞ்ஞானி. இவர் சாதாரண விஞ்ஞானி அல்ல; உலகம் போற்றும் விஞ்ஞானி. மிகவும் செல்வாக்குள்ள நூறு பேராசிரியர்களில் ஒருவர். கௌரவ டாக்டர் பட்டங்கள் நாற்பதுக்கு மேல் பெற்றவர். “மகசேசே'' விருதும் உணவுக்கான உலகப் பரிசும் பெற்றவர். இந்தியாவிலும் அனைத்துலக அரங்கிலும் அதிகாரமிக்கப் பல பதவிகளை வகித்தவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிக் குவித்தவர். இவர் பெற்ற பட்டங்களும் பதக்கங்களும், வகித்த பதவிகளும் ஏராளம். சாமக்கோடங்கி போல குறிசொல்லி, உபதேசங்களை அள்ளி வழங்கும் இவர்தான், “பசுமைப் புரட்சியின் தந்தை'' என்றழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன்.

அரசாங்கத்தைக் கையில் போட்டுக் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களைப் பறித்து, விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கி வருகின்றன உள்நாட்டுவெளிநாட்டு கார்ப்பரேட் (பெருந்தொழில்) கம்பெனிகள். அந்தக் கம்பெனிகள் விட்டெறியும் எச்சில்காசில் விவசாயிகளை முன்னேற்றி, வறுமையை விரட்டப் போகிறேன் என்கிறார் எம்.எஸ். சுவாமிநாதன். இவர் விஞ்ஞானியா, அல்லது கிறுக்கனா என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். ஆனால், நாட்டின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை நட்டத்தில் தள்ளி கிறுக்குப் பிடித்து அலைய வைத்ததும், தற்கொலைக்குத் தள்ளியதும், இந்திய விவசாயத்தை நாசமாக்கி ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிறுவியதும் இந்த எம்.எஸ்.சுவாமிநாதன்தான்!

கும்பகோணத்தைச் சேர்ந்த பார்ப்பன மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்த சுவாமிநாதன், ஐ.நா.வின் துணை அமைப்பான “யுனெஸ்கோ''வின் உதவியுடன் நெதர்லாந்தில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஈராண்டுகள் பணியாற்றினார். அங்கு ஏகாதிபத்திய விவசாய நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட அவர், இந்தியாவுக்கு திரும்பி டெல்லியிலுள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் தாவரவியல் துறைத் தலைவரானார்.

இதே காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம், அனைத்துலக உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செய்யும் நோக்குடன், ராக்பெல்லர் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளைகளின் மூலம் மெக்சிகோவில் “சிமிட்'' எனப்படும் கோதுமை மக்காச்சோள ஆய்வு நிறுவனத்தையும், பிலிப்பைன்சில் அனைத்துலக நெல் ஆராய்ச்சி நிறுவனத்தையும் உருவாக்கியது. உணவை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க மேலாதிக்கத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றின் மூலம், அதிக விளைச்சலைத் தரும் புதிய ரக விதைகள் என்ற பெயரில் கோதுமை, நெல் மற்றும் பிற உணவு தானிய விதைகளை ஏழை நாடுகளுக்கு அமெரிக்கா விநியோகித்தது. இப்புதிய வகை நெல் ரகங்கள் உள்நாட்டு பாரம்பரிய நெல் ரகங்களை படிப்படியாக அழித்து, விதை நெல்லுக்காக அமெரிக்காவிடம் கையேந்தும் நிலையை உருவாக்கியது.

இதே நேரத்தில், தனது பார்ப்பன அதிகார வர்க்க செல்வாக்கையும் ஏகாதிபத்திய நிறுவனங்களுடனான நெருங்கிய உறவையும் கொண்டு 1966இல் சுவாமிநாதன் இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரானார். தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொண்டு அமெரிக்காவின் திட்டப்படி புதிய ரக கோதுமை, நெல் மற்றும் உணவு தானியங்களை இந்திய விவசாயத்தில் திணித்தார். அரசின் ஆதரவோடு இந்திய விவசாயத்தில் திணிக்கப்பட்ட இந்த மாற்றங்கள்தான் “பசுமைப் புரட்சி'' என்றழைக்கப்படுகிறது.

இந்தப் பசுமைப்புரட்சி இந்திய விவசாயத்தில் நோய் எதிர்ப்புத் திறன், மழைவெள்ளத்தில் நீடிக்கும் திறன், வறட்சியைத் தாங்கும் திறன் முதலான பல்வேறு அரிய பண்புகளைக் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்களை ஒழித்துக் கட்டியது. தமிழகத்தின் பாரம்பரிய கிச்சலி சம்பா, குதிரைவாலி, சிறுமணி, கரைமடையான், புழுதிகாரி, ராஜராஜசோழன், ஊடுமட்ட குறுவை, வாடன் சம்பா, சித்திரகார் முதலான பாரம்பரிய நெல் ரகங்கள் அழிக்கப்பட்டு, ஐ.ஆர். வகை நெல் ரகங்கள் ஆக்கிரமித்தன. இவை புதிய புதிரான நோய்களையும், களைகளையும் தொடர்ந்து உருவாக்கின. உரங்களும், பூச்சி மருந்துகளும் வண்டி வண்டியாகக் கொட்டினால்தான் பயிர் வளரும் என்ற நிலைக்கு இந்திய விவசாயம் தள்ளப்பட்டது. அதேநேரத்தில் ஏகாதிபத்திய உரம் மற்றும் பூச்சி மருந்துக் கம்பெனிகள் பசுமைப் புரட்சியைச் சாதகமாக்கிக் கொண்டு கொள்ளை இலாபமீட்டின.

இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தில் நீடித்து வந்த கலப்பின பயிர்முறை ஒழிக்கப்பட்டு, ஒற்றைப் பயிர் முறை திணிக்கப்பட்டது. இயற்கை உரங்கள் ஒழிக்கப்பட்டு, இரசாயன உரங்கள் கொட்டப்பட்டன. இந்திய விவசாயி, ஒரு ஏக்கரில் வெங்காயம் அல்லது உருளை பயிரிட்டால், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு விதைகள், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்காக ஏறத்தாழ ரூ. 25,000 கொட்டியழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனாலும், உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் இலட்சக்கணக்கான விவசாயிகள் திவாலாகிப் போனார்கள்.

பசுமைப் புரட்சியின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட வீரிய ஒட்டுரக நெல் ரகங்கள் மிக அதிக அளவில் தண்ணீரை உறிஞ்சின. குறிப்பாக, ஐ.ஆர்.நெல் ரகங்கள் ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு 5000 லிட்டர் தண்ணீரை உறிஞ்சின. மானாவாரி நிலங்களைப் பெருமளவில் கொண்ட இந்தியாவில் இத்தகைய நெல் ரகங்களைப் பசுமைப் புரட்சியின் பெயரால் திணித்ததன் விளைவாக, நிலத்தடி நீர் வரைமுறையின்றி உறிஞ்சப்பட்டு, மண்ணில் இருக்கும் நீரைச் சேமித்து வைக்கும் நீர்க் காப்பான்கள் மலட்டுத் தன்மைக்குத் தள்ளப்பட்டன. இதனால் மறுஉற்பத்திக்கு வாய்ப்பே இல்லாமல் பல லட்சகணக்கான ஹெக்டேர் நிலங்கள் தரிசாகிப் போயின. விவசாயிகளோ ஓட்டாண்டிகளாகினர்.

இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் நாசமாக்கிய பசுமைப் புரட்சியானது, கடைசியில் ஏகாதிபத்திய கம்பெனிகளுக்குக் கொழுத்த ஆதாயம் தரும் இரசாயன உரம்பூச்சி மருந்துகளின் விற்பனை புரட்சியாக மாறிப் போனது. இப்படி, இந்திய விவசாயத்தை நாசமாக்கிய முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவர்தான் எம்.எஸ்.சுவாமிநாதன். ஆனாலும் அவர் “உலகம் போற்றும் விஞ்ஞானி'' என்றும், “பசுமைப் புரட்சியின் தந்தை'' என்று ஏகாதிபத்தியவாதிகளால் போற்றப்பட்டார். பசுமைப் புரட்சியின் நோக்கமும் அது ஏற்படுத்திய கொடிய விளைவுகளும் நாடெங்கும் அம்பலமான பின்னரும் கூட, அவர் இதற்காக வருந்தவில்லை. “கட்டுப்பாடில்லாமல் உரம்பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தியதால், பசுமைப் புரட்சியானது பேராசையின் புரட்சியாக மாறிவிட்டது'' என்று விவசாயிகள் மீதுதான் அவர் குற்றம் சாட்டினார்.

பசுமைப் புரட்சியின் தோல்வியாலும்அதிருப்தியாலும், ஆசிய கண்டத்தில் நெல் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செய்யும் தமது நோக்கம் பின்னடைவுக்குள்ளாவதைக் கண்ட ஏகாதிபத்தியங்கள், புதிய சதிகளில் இறங்கின. இந்தியாவின் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளைக் கைப்பற்றி அவற்றுடன் தமது புதிய நெல் ரகங்களைக் கலப்பு செய்து, நோய் மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு எதிரான புதிய நெல் ரகங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கின. இந்தியாவில் சட்டீஸ்கார் மாநிலத்தில் 20,000க்கும் மேற்பட்ட அரியவகை நெல் ரகங்களின் விதைகள் டாக்டர் ரிச்சார்யா என்ற விவசாய விஞ்ஞானியால் சேகரிக்கப்பட்டு, அரசு பாதுகாத்து வந்த நிலையில், அவற்றைக் கைப்பற்ற கைக்கூலி சுவாமிநாதனை அவை பயன்படுத்திக் கொண்டன.

மைய அரசின் விவசாயத் துறை முதன்மைச் செயலராகவும், பின்னர் மைய அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், திட்டக் கமிசனின் துணைத் தலைவராகவும் இருந்த எம்.எஸ்.சுவாமிநாதன், திடீரென ஒரே நாளில் அமெரிக்காவின் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரானார். உலக அரங்கில் எந்த ஒரு நாட்டிலும் உணவு மற்றும் உணவுப் பாதுகாப்பு இரகசியங்களைக் கையாளும் ஓர் அரசு உயரதிகாரி, அமெரிக்க நிறுவனத்திலும் அதிகாரியாக இருக்கவே சாத்தியமில்லை. மிகப் பெரிய விவசாய நாடான இந்தியாவில்தான் இந்த அயோக்கியத்தனம் நடந்தது.

தனது அதிகாரத்தைக் கொண்டு, டாக்டர் ரிச்சார்யாவுக்குப் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து அவரைப் பொறுப்பிலிருந்து விரட்டியடித்த எம்.எஸ்.சுவாமிநாதன், அவரது முயற்சியால் சேகரிக்கப்பட்ட இந்தியப் பாரம்பரிய நெல் நகரங்களின் விதைகளை அமெரிக்காவின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் அள்ளிக் கொடுத்தார். இந்திய விவசாயிகள் தமது அனுபவத்தாலும் திறமையாலும் உருவாக்கியிருந்த அரிய வகை நெல் ரகங்களின் விதைகள் அனைத்தும் இன்று அமெரிக்காவின் இரும்புப் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளன. “விதைத் திருடன்' சுவாமிநாதனின் விசுவாச சேவையைப் பாராட்டி, ஏகாதிபத்தியவாதிகள் அவருக்கு ஏராளமான பட்டங்களையும் பதக்கங்களையும் கருப்புப்பண நன்கொடைகளையும் அள்ளிக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டு இந்தக் கைக்கூலி, விவசாய ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கி, தனது துரோகத்தனத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

பசுமைப் புரட்சியின் மூலம் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கிய எம்.எஸ்.சுவாமிநாதன், இப்போது இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப் பயிர்களைப் பரவலாக்கும் வேலையில் இறங்கியுள்ளார். ஏற்கெனவே வாழ்விழந்து நிற்கும் விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மையுடன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைப் பயிரிடுவதன் மூலம், நெருக்கடியிலிருந்து மீண்டு அதிக லாப மீட்ட முடியும் என்று ஆதரவு திரட்டி வருகிறார்.

ஆனால், சுவாமிநாதனின் பரிந்துரைப்படி அரசின் ஆதரவோடு திணிக்கப்பட்ட, மான்சாண்டோ நிறுவனத்தின் பி.டி. ரக பருத்தி, மண்ணை நஞ்சாக்கி நோய்கள் பெருகி இந்திய விவசாயிகளை பெருத்த நட்டத்திற்கும் தற்கொலைக்கும் தள்ளியது. ஆந்திராவிலும் மகாராஷ்டிராவிலும் மட்டும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இக்கொடுஞ்செயலுக்குக் காரணமான சுவாமிநாதனோ, இதற்காக வருந்தாமல், பன்னாட்டு விவசாயக் கம்பெனிகளின் கொள்ளைக்காக, பன்னாட்டு விவசாய உயிரி தொழில்நுட்பச் சேவை நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து அடுத்த கட்டமாக அரிசி, கோதுமை, தக்காளி, கத்தரி, கடலை, உருளை, வாழை மற்றும் பல்வேறு சாகுபடிகளில் மரபணு மாற்றப் பயிர்களை உருவாக்க முயற்சித்து வருகிறார். இதற்காகத் தனது அறக்கட்டளை மூலம் நாடெங்கும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.

இதுமட்டுமின்றி, பல்வேறு கிராமங்களில் இணையதள வசதி கொண்ட கிராம தகவல் மையங்களை உருவாக்கி, ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு கிராமச் சந்தையின் தன்மை, தேவைகள், விநியோகச் சங்கிலி, கொள்முதல், ஒப்பந்த விவசாயம், நுகர்வு முதலானவற்றைப் பற்றிய தகவல்களை அனுப்பும் மையமாக மாற்றியுள்ளார். கிராம மக்கள் பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டு தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவே இம்மையங்களை உருவாக்கியுள்ளதாக சுவாமிநாதன் பசப்பினாலும், ஒட்டு மொத்த கிராமச் சந்தையைக் கைப்பற்றத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்யும் மையங்களாகவே இவை அமைந்துள்ளன. இதற்காகவே “காந்தி மாவட்டம்'', “சத்துணவு பாதுகாப்பு வளையம்'' என்றெல்லாம் புதுப்புது திட்டங்களை அவிழ்த்து விடுகிறார்.

சுவாமிநாதனின் திட்டங்களை பைத்தியக்காரத்தனமான உளறல் என்று ஒதுக்கிவிட முடியாது. அத்திட்டங்களுக்குப் பின்னே, ஏகாதிபத்தியங்களின் ஆதிக்க நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனஅதிகார வர்க்க செல்வாக்கும், பார்ப்பன தேசிய பத்திரிகைகளின் ஆதரவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஏகாதிபத்தியங்களின் அருளும் கொண்டிருப்பதால் அவரது திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன. அவரது ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் மூடிமறைக்கப்பட்டு, மாபெரும் விஞ்ஞானியாக போற்றப்படுகிறார்.

பசுமைப் புரட்சியின் மூலம் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கியது போதாதென்று, இப்போது இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப் பயிர்களைத் திணித்து இந்திய விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கக் கிளம்பிட்ட இத்துரோகியை, இந்திய விவசாயிகள் அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்த வேண்டும். நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தத் துடிக்கும் ஏகாதிபத்திய சதிகளுக்கு விலைபோகும் இக்கைக்கூலியின் தகிடுதத்தங்களை, நாட்டுப்பற்றாளர்களும் அறிவியலாளர்களும் திரைகிழித்துக் காட்ட வேண்டும். சுவாமிநாதன் தலைமையிலான துரோகக் கும்பலை வீழ்த்தாவிட்டால், இரண்டாவது பசுமைப்புரட்சியின் வாயிலாக இந்திய விவசாயிகள் நாடோடிகளாக மாற்றப்படும் பேரபாயத்தைத் தடுக்கவே முடியாது.

waste_land அறிவியல் மேதையா? மோசடிப் பேர்வழியா?

“இது நம்ம ஆளு!'' என்ற கொள்கையுடன், பார்ப்பனரான எம்.எஸ்.சுவாமிநாதனை ‘உலகம் போற்றும் விஞ்ஞானி' என்று ஒளிவட்டம் தீட்டி பார்ப்பன தேசிய பத்திரிகைகள் ஊதிப் பெருக்குகின்றன. ஆனால், எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும், மோசடிகளும் பித்தலாட்டங்களும் நிறைந்தவை என்று ஏற்கெனவே நிரூபணமாகியுள்ளது.

1967ஆம் ஆண்டில் புதுடெல்லியில் நடந்த அறிவியலாளர் கருத்தரங்கு ஒன்றில், பாலுக்கு இணையான அளவில் புரதம் மற்றும் “லைசின்'' எனப்படும் அமினோ அமிலம் கொண்ட புதிய இரக கோதுமையை தான் உருவாக்கியுள்ளதாக எம்.எஸ்.சுவாமிநாதன் பெருமையோடு அறிவித்தார். இந்தப் புதிய இரக கோதுமைக்கு “சர்பதி சோனாரா'' என்று பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

ஆனால், எம்.எஸ்.சுவாமிநாதனின் தலைமையில் இயங்கும் இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த உயிர்ம வேதியல் விஞ்ஞானியான டாக்டர் ஒய்.பி.குப்தா என்பவர், இப்புதிய இரக கோதுமை பற்றிக் கூறப்படும் தகவல்கள் பொய்யானவை; மோசடித்தனமானவை என்று அப்போதே ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். இதுதவிர, “சிமிட்'' (CIMMYT) என்றழைக்கப்படும் மெக்சிகோவில் உள்ள கோதுமை மற்றும் மக்காச்சோள ஆய்வு நிறுவனம், சுவாமிநாதனின் புதிய கண்டுபிடிப்பு மோசடித்தனமானது என்று தனது ஆய்வுகளின் மூலம் 1969ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டியது. இருப்பினும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அவசியமான அமினோ அமிலப் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் புதிய இரக கோதுமையைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு 1971இல் மகசேசே விருது வழங்கப்பட்டது.

மீண்டும் 1974இல் “நியூ சயன்டிஸ்ட்'' என்ற அறிவியல் ஆய்விதழ், எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வு மோசடிகளை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்திக் காட்டியது. இவ்விதழ் வெளியிட்ட உண்மைகளின் அடிப்படையில், “ஸ்டேட்ஸ்மேன்'' நாளேடு 1977 மே 17ஆம் நாளன்று, சுவாமிநாதனின் ஆய்வுகள் மீது மீண்டுமொரு விவாதத்தைத் தொடங்கியது. அவரது மோசடிகள் நாடெங்கும் நாறத் தொடங்கியதும் வேறுவழியின்றி, தான் தவறிழைத்து விட்டதாக சுவாமிநாதன் ஒப்புக் கொண்டார்.

இவரது புதிய கண்டுபிடிப்பு “கப்சா''களும் “ரீல்'' சுற்றலும் கோதுமையுடன் நின்றுவிடவில்லை. உருளைக்கிழங்கு, பருப்பு, மக்காச்சோளம் என்று எல்லா தானியங்கள் கிழங்குகளிலும் தான் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளதாக அவ்வப்போது அவிழ்த்து விட்டுள்ளார். இவற்றையெல்லாம் அம்பலப்படுத்திக் காட்டிய குற்றத்திற்காக டாக்டர் ஒய்.பி.குப்தாவுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. அவர் அவமானப்படுத்தப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டார். எம்.எஸ். சுவாமிநாதனின் மோசடிகளையும் அதிகார முறைகேடுகளையும் எதிர்த்து டாக்டர் ஒய்.பி.குப்தா, வழக்கு தொடர்ந்தார். ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், சுவாமிநாதனின் செயல்பாடுகளை, “நீதிக்குப் புறம்பானது, இதயமற்றது, அதிர்ச்சியளிக்கக் கூடியது'' என்று சாடியுள்ளது.

இருப்பினும், இந்தப் பார்ப்பன நரி அதற்காக வருந்தவில்லை; தன்னுடைய மோசடிகள் முறைகேடுகளையோ, ஏகாதிபத்தியங்களுக்கு மாமா வேலை செய்வதையோ நிறுத்திவிடவுமில்லை. இப்போது அவர் மரபணு மாற்றப் புரட்சி என்ற பெயரில், பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்கு இந்திய விவசாயத்தைப் பலியிடும் திருப்பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

(நன்றி: புதிய ஜனநாயகம்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
சுந்தர்ராஜன்
2009-01-25 10:57:00
maratamizhan@rediffmail.com

எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியா?

முதலில் சுடருக்கு வாழ்த்துக்கள்.

இதை போன்ற கட்டுரைகள் வந்தால் தான் இதை போல் உள்ள பார்ப்பார்கள் முகமுடி கிளயும்.

இன்றைக்கு நாம் சந்திக்கும் அவ்வளவு நோய்களுக்கும் காரணம் நாம் நம்முடைய மரபை தொலைததனால் தான். இயற்க்கை விஞ்ஞானியா நம்மாழ்வார் பலமுறை நமக்கு எடுத்து சொல்லியும் நாம் நம்முடய மரபை விட்டுவிட்டோம். இதை போல் தான் தாய் வழி கல்வியும். நமக்கு என்று அறிவு வரபோகிறதோ தெரியவில்லை.

மண்புழுவை விட ஒரு சிறந்த பாதுகாப்ப ஆனா ஒரு நல்ல விசையம் கிடையாது. ஆனால் இன்று நாம் அதைகுட விலை குடுத்து வாங்க வேண்டி உள்ளது. இது கேவேலமான நிலை. என்று மாறும் இந்த நிலை?

தமிழா விழித்து எழு.

இதை போல் நிறைய கட்டுரைகள் வரவேண்டும்.


ssk
2009-01-26 03:06:00
ssktpj@gmail.com

பார்ப்பான் இருக்கும்வரை எதயும் தமிழருக்கு எதிராக செய்வான். வைகோ போன்றவர்களே சாட்சி. ஒழியட்டும் ஒற்றுமை இல்லா தமிழர்.

Natarajan Eathiraj
2009-01-26 04:02:00
ethinatarajan@yahoo.co.in

when true scientists like Nammazhvar go to peoples,frauds like M.S.S. go to corporates.how much confident they have on the peoples ignorance.He is getting wealth and famous by killing our own brothers.Even our elected governments cant do anything against him.but we can do.

Arjunan Narayanan
2009-01-26 07:47:00
narayanan_vgr@yahoo.co.in

It is a sorry state of affair that a man who killed Gandhi was a brahman; a man who guided him a brahman: the theme of manu that supports through bhagavat gita the brahmanism. It was the shame of nation that it could not allow the dalits into the temple by the BCs and MBCs since they inherited the brahminism in their mind refusing the social justice to the dalits who were outcastes as per the manu of course they are of 25% of population. This atrocity is continuing still this 21st century. It is the right time to down with the brahmanism of any kind at once.

Sargunan K
2009-01-26 08:33:00
ksargunan@gmail.com

Really an excellent article needed in the eleventh hour. We should adopt our own traditional cultivation, which is always insisted by Sri.Nammazhwar, who is working on this basis to recover the entire land for natural cultivation and formed trusts to attain this objective. We should definitely strengthen his hands.

paanjasanyan
2009-01-27 07:00:00
paanjasanyan@gmail.com

இது போன்ற நகைச்சுவை கட்டுரைகளை அதிகம் வெளியிடுங்கள், நான் இந்த தளத்திற்கு வருவதே இது போன்ற பித்துக்குளிதனங்களை இரசிப்பதற்குதான்

Dr. V. Pandian
2009-01-27 10:23:00
porkkaiponds@yahoo.co.in

4000 ஆண்டு இந்திய வரலாறு சொல்வது பார்ப்பனனை நம்பாதே என்பது தான். (சிறு பாண்மையாக உள்ள நல்ல உள்ளங்கள் என்னை மன்னிக்க!).

இயற்கைவழி வேளாண்மை, ஒருங்கினைந்த பண்ணை முறை, மண்வளத்தைக் காக்கும் சுழற்சி முறை பயிரிடுதல் போன்றவை தான் நமது நலம் தரும் உழவு முறை.

உழவு உற்பத்திப் பொருட்களுக்கு அரசு லாப விலை கொடுத்து வாங்கி, அதை மக்களுக்கு மலிவு விலையில் வினியோகிக்க வேண்டும். இது உழைக்கும் உழவர்களைக் காக்கும். உழவுத் தொழிலுக்கு மக்களை மீண்டும் இழுக்கும். நாட்டில் பசியைப்போக்கும். அறிவு வளமுள்ள தேசம் உருவாகும்.

மூலிகை வேளண்மையும் நமது நலம் பேணும் முறை. சரிப்படுத்த முடியாது என்று M.D க்களால், கைவிடப்பட்டு, தொடர்ந்த Ointment பயன்பாடு தான் ஒரே வழி என்று சொல்லப்பட்ட, தோல் வியாதி 'கற்றாழை' சோறு ( Aloe Vera Jel) தடவி மட்டும் ஒரே மாதத்தில் நிரந்தரத் தீர்வு காணப் பட்டுள்ளது.

பார்ப்பனனின் ஆதிக்கத்திலிருந்து மீள ஒரே வழி, தமிழருக்காண இறையாண்மையுள்ள தாயகம் தான். தோழர்களே! உணருங்கள், போராடுங்கள்!

ravisrinivas
2009-01-28 06:54:00
nospam@no.net


பொய்களை தொடர்ந்து எழுதுவதால் அவை உண்மைகளாகிவிடா.உண்மைகளைச் சொன்னாலும், அதை தங்கள் வலைப்பதிவு/தளங்களில் வெளியிடாமல் மீண்டும் மீண்டும் பொய்களை எழுதும் ஒரு கும்பல்தான் இது போன்ற கட்டுரைகளை இணையத்தில் எழுதி வருகிறது.அந்த கும்பல் மக்கள் சட்டம்,தமிழரங்கம் போன்றவற்றில் பொய்களை பரப்புவதை தொழிலாகவே கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரை,சுந்தர்ராஜன் எழுதி கீற்றில் வெளியான கட்டுரை,கடந்த ஆண்டு கீற்றில் வெளியான வெற்றிச்செல்வனின் கட்டுரை - மூன்றும் இத்தகயவை. சுவாமிநாதன் குறித்து கூட இவர்களால் உண்மைகளை எழுத முடியவில்லை. அவர் முனைவர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜ் பல்கலையில். இந்தக் கட்டுரையில் தகவல் பிழைகளில் துவங்கி, முழுப் பொய்கள் வரை ஏராளமான திரிபு வேலைகளை காணலாம். சுவாமிநாதனை விமர்சிக்கலாம்.ஆனால் விமர்சனம் என்ற பெயரில் பொய்களை எழுதக் கூடாது.

பிடி பருத்திக்கும் விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கும் ஒரு நம்பகமான ஆய்வினை இவர்கள் சுட்டிக்காட்டட்டும்.இந்தியாவில் பிடி பருத்தி வெற்றி பெற்றுள்ளது என்பது உண்மை.பசுமைப் புரட்சி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. அதை வெறும் சதியாக சித்தரிப்பது அபத்தம்.உலகம் இந்த பொய்யர்களை பொருட்படுத்துவதில்லை.விவ்சாயி பிடி பருத்தியால் விளைச்சல் அதிகரித்து, லாபம் வரும் என்பதால் அதை தெரிவு செய்கிறார். அதனால் பிடி பருத்தி பயிரப்படும் நிலத்தின் பரப்பளவு ஆண்டுதோறும் இந்தியாவில், உலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இந்தப் பொய்யர்கள் எதையாவது இரவல் பெற்று அரைவேக்காட்டுத்தனமாக எழுதிக் கொண்டேயிருப்பார்கள்.

சுவாமிநாதன் அமெரிக்க கைக்கூலி என்பவர்கள் பசுமைப்புரட்சியை தமிழ் நாட்டில்
பரப்பிய ஆட்சியாளர்களையும் அவ்வாறே எழுதுவார்களா?. பசுமைப்புரட்சிக்கு
எதிர்ப்பு வந்த போது அதை வலியுறுத்தி ஆதரித்தவர் அன்றைக்கு அமைச்சராக
இருந்த சி.சுப்பிரமணியம். அவரும் அமெரிக்க கைக்கூலியா.பசுமைப்புரட்சி
பரவ விதைகளை விநியோகிப்பதில் வேளாண் பல்கலைகழகங்கள் பெரும்
பங்காற்றின. அவை புதிய வகை பயிர்களையும் பசுமைப்புரட்சியின் கீழ்
அறிமுகம் செய்தன. அவற்றின் மீது அறிவுசார் சொத்துரிமை எதுவும்
கிடையாது. விதை நெல்லுக்கு இந்தியா அமெரிக்கா உட்பட எந்த நாட்டிடமும்
கையேந்தும் நிலை ஏற்படவில்லை. மாறாக பசுமைப்புரட்சிக்கு முன் உணவு
உற்பத்தி குறைவாக இருந்ததால் அரிசி, கோதுமையை இறக்குமதி செய்யும்
நிலையில் இருந்தது.IRRI என்ற சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எந்த
அரசின் நிர்வாகத்திலும் இல்லை. அது CGIAR என்ற குழுவின் கீழ் உள்ள
நிறுவனங்களில் ஒன்று. அந்தக் குழுவில் இந்தியா உட்பட பல நாடுகள்
உறுப்பினர்கள். IRRIலிருந்து விதைக்களை உருவாக்க தேவையான germplasm
த்தை வேளாண் பல்கலைகள் பெற்றுள்ளன. அதற்கு தடையில்லை.
இன்னும் சொன்னால் CGIAR கீழ் உள்ள ஆய்வு நிறுவனங்களில் உள்ள
germplasm எந்த ஒரு அரசு/தனியார் நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல.

மாவோவின் சீனாவும் விளைச்சலை அதிகரிக்க செயற்கை உரங்கள், புதிய வகை
விதைகள் கொண்ட பசுமைப் புரட்சி தொழில்னுட்பத்தை பயன்படுத்தியது. சோவியத்
யுனியனும் நவீன வேளாண்மையைத்தான் பயன்படுத்தியது. 1960களில் பசுமைப்
புரட்சி நவீனமயமாக்கல்,முன்னேற்றம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியர்கள் அதற்கு முன்பே இந்தியாவில்
எத்தகைய வேளாண்மை வேண்டும் என்பதை எழுதியிருந்தனர். குமரப்பா என்ன
எழுதினார் என்பது இந்தப் பொய்யர்களுக்கு தெரியுமா. புஜ/புக
என்றைக்காவது குமரப்பா முன்வைத்த விமர்சனங்களை அலசி எழுதியுதண்டா,
அல்லது குறைந்தபட்சம் அதை அறிமுகமாவது செய்தது உண்டா.

தகவல்களை இரவல் வாங்கி பொய்களை கலந்து எழுதும் கும்பலுக்கு பசுமைப
புரட்சியின் வரலாறும் தெரியாது, அதன் விமர்சனத்தின் வரலாறும் தெரியாது.
பெரியார் பசுமைப் புரட்சியை எதிர்த்தார் அல்லது அவரது ஆதரவு பெற்ற திமுக ஆட்சிகள் பசுமைப்புரட்சியை எதிர்த்தன என்பதற்கு ஆதாரம் உண்டா.பெரியார் என்றைக்காவது பாரம்பரிய வேளாண்மையை ஆதரித்து எழுதியுள்ளாரா,
ஆதாரம் காட்ட முடியுமா.இன்று காலச்சுவட்டில் சங்கீதா ஸ்ரீராம் ஒரு
தொடர்கட்டுரை எழுதுகிறார். இது போல் எத்தனை கட்டுரைகளை புதிய
ஜனநாயகம்,புதிய கலாச்சாரம் வெளியிட்டுள்ளது. பசுமைப்புரட்சியை
தமிழ்நாட்டில் மார்க்சிய வட்டாரங்களில் முதலில் விமர்சித்தது எஸ்.என்.நாகராஜன். இந்த விவாதங்கள் 1980களில் பரவலாக துவங்கின, அதிகம் வெளியே தெரிய வந்தன.அதில் முக்கிய பங்கு வகித்தது PPST குழு. நாகராஜன் பார்பனர், PPST குழுவிலும் பலர் பார்பனர்கள். அவர்கள் பசுமைப்புரட்சியை
கேள்விக்குள்ளாகியவர்கள். 1983ல் கிளாட் ஆல்வரிஸ் இந்த விவாதங்களை
அப்போதிருந்த இல்லஸ்டேரட் வீக்லியில் எழுதிய கட்டுரை மூலம் பலர்
அறியச் செய்தார்.

நம்மாழ்வாரை பற்றி எழுதியதுடன், இயற்கை வேளாண்மை குறித்து நூல் வெளியிட்டது நிகழ். கோவை ஞானி அதை செய்ய முக்கிய காரணி நாகராஜன். அப்போது புதிய ஜனநாயகம் எத்தனை கட்டுரைகளை இயற்கை வேளாண்மை குறித்து வெளியிட்டது என்பதை சுடர் எழுதுவாரா?

எரிதம் தவிர்க்க மின்னஞ்சல் தரப்படவில்லை.

அகராதி
2009-01-31 09:42:00
nospam@no.net

அவாளைத்தவிர வேறு எவாளும் எதுவும் எழுதக்கூடாது என நினைக்கும் நவீன ஜகத்குரு ரவிச்ரீனிவாஸ் வழக்கம்போல எரிச்சல் பட்டுள்ளார்.

எம்.எஸ்.ஸ்வாமிநாதன், அப்துல் கலாம் ஐயர், மஷேல்கர் போன்ற விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மஹாத்மாக்களைப்பற்றி யாராவது எழுதினால் ஓடோடிவந்து போராடும் வழக்கத்தை அவர் இங்கும் தொடர்கிறார்.

பிடி பருத்திக்கும், விவசாயிகளின் தற்கொலைக்கும் தொடர்பில்லை என்பதை ரவிச்ரீனிவாஸ் நிரூபிப்பாரா. பிடி பருத்தி பயிரிடப்படும் நிலப்பரப்பு அதிகரிப்பதன் காரணம் வேறு வகைப்பருத்திகள் சந்தையில் இல்லாமல் இருப்பதால்தான்.
இந்த சதியில் பன்னாட்டு நிறுவன கொள்ளையர்கள், பார்ப்பன ஆள்காட்டிகள், போலி திராவிட தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் சமபங்குண்டு.

காலச்சுவட்டில் சங்கீதா எழுதுவதை ரவீச்ரீனிவாஸ் ஆதரிப்பதுபோல் தெரிகிறது. அதுவும் பசுமைப்புரட்சியை எதிர்த்து எழுதப்படும் கட்டுரைதான். ஆக ரவிச்ரீனிவாஸைப் பொறுத்தவரை எழுதப்படும் விடயம் முக்கியமல்ல. எழுதப்படும் பத்திரிகையும், எழுதுபவரும்தான் முக்கியம். பார்ப்பன பத்திரிகையில் பார்ப்பன எழுத்தாளர் எழுதினால் அதை ரவிச்ரீனிவாஸ் ஏற்றுக்கொள்வார். அதையே வேறு யாராவது கறுப்புத்தோல(ழ)ர்கள் எழுதினால் அவர் ரத்தம் கொதிக்கும். அவரது கணிணி குதிக்கும்.

இதில் யாரும் அவரது அந்தரங்க அந்தப்புரத்தில் நுழைந்துவிடக்கூடாது என்பதால் மின்னஞ்சல் தரமாட்டார்.

suuniyam
2009-02-03 08:53:00
suuniyam@gmail.com

தோழர்களுக்கு,

ரவி சீனிவாஸ் எழுதியுள்ள எதிர்வினைக்கான மறுப்பை 'எதிர்வினை' என்ற பகுப்பின் கீழ் எனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளேன்.

http://suuniyam.wordpress.com/

- சூன்யம்

Yuvasenthilkumar R.
2009-07-01 03:51:00
ryskhtech@gmail.com

isnt this true?
http://www.keetru.com/literature/essays/sudar.php //

சிவப்பு-கருப்பு பூசிக்கொண்டு போலி சமத்துவம் பேசி திரிபவர்கள், ஒரு தனி மனிதன் செய்த காரியங்களை இடித்துரைக்கலாம். அதை விடுத்து ஜாதியை இழுத்து பேசும் இந்த திராவிட இனவாத எழுத்தாளர்களால், உண்மையை கொண்டுணர முடியாமல் நலல் விஷயம் நீர்த்து போகிறது.

"மீண்டும் 1974இல் “நியூ சயன்டிஸ்ட்'' என்ற அறிவியல் ஆய்விதழ், எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வு மோசடிகளை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்திக் காட்டியது. இவ்விதழ் வெளியிட்ட உண்மைகளின் அடிப்படையில், “ஸ்டேட்ஸ்மேன்'' நாளேடு 1977 மே 17ஆம் நாளன்று, சுவாமிநாதனின் ஆய்வுகள் மீது மீண்டுமொரு விவாதத்தைத் தொடங்கியது. அவரது மோசடிகள் நாடெங்கும் நாறத் தொடங்கியதும் வேறுவழியின்றி, தான் தவறிழைத்து விட்டதாக சுவாமிநாதன் ஒப்புக் கொண்டார்"

மேலே அவரே ஒப்புக்கொண்ட விஷயம் ஒன்று உள்ளது. பசுமை புரட்சி நிர்வாகத்திறன் குறைவு மற்றும் தொலைநோக்கு பார்வை இலாத காரணத்தால் விளைந்தவையே என உலகில் பல விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். எம்.எஸ்சும் இதனை ஒப்புக்கொண்டதின் அடையாளமாக அவரது அறக்கட்டளையின் கீழ் பல நிர்வாக சீர்திருத்த திட்டங்களை மேற்க்கொண்டுள்ளார். ஆனால், அவருக்கு இயற்க்கை விவசாயம், தற்சார்பு கிராமம் போன்ற வற்றின் மீதான நம்பிக்கை குறைவாகவே காணப்பட்டது. ஆனால், இந்த இலங்கையில் பேசியுள்ளது எனக்கு சற்று வித்தியாசமாகவும் ஆச்சர்யமாகவுமே இருக்கிறது.


அமெரிக்க கைக்கூலியா? வெங்காயமா? என்று கேள்வி எழுப்புபவர்கள் முதலில் அந்நிய துணிகளை மறுப்பார்களா? துண்டும், வேட்டியும் உடுத்தி நடக்கா தயாரா? இவர்கள் வெறும் பேச்சு உணர்ச்சி வீரர்களே! செயல்பாடு என்று வருகையில் இரட்டை நிலையையே கடைபிடிப்பார்கள்.

அவர் செய்ததை மறந்துவிட்டு, அவர் கூறும் விசயத்தில் உள்ள நல்லதை, சாத்த்யக்கூறுகளை ஜாதி, இன த்வேசங்களை விட்டு உருப்படியாக விவாதித்தால் நாட்டுக்கு நல்லது. செத்த பாம்பை அடித்துக்கொண்டே இருப்பதால் பலனில்லை.

rajkumar
2009-07-03 07:49:00
raj@india.com

காலச்சுவடும் சங்கீதா ஸ்ரீராமும் மட்டுமே படிக்கும் 'மானமுள்ள' தமிழர்களே! சங்கீதா ஸ்ரீராமுக்கு முன்பே தாளாண்மை இதழ் வெளியிட்டதை படித்தீர்களா?

ramachandran
2009-07-03 08:08:00
rchandran@gmail.com

காலச்சுவட்டில் சங்கீதா ஸ்ரீராம் எழுதுவதைவிட தமிழினியில் பார்ப்பனரல்லா பாமயன் அதிக தரவுகளுடன் எழுதுவதை படித்தீர்களா? பார்ப்பனரல்லா தமிழர்களே!



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP