Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

வள்ளுவரை வசை பாடிய எஸ்.எஸ். சந்திரன்!
- அக்னிப்புத்திரன்


ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனைக் கடித்த கதையாக அதிமுகவின் எம்.பி எஸ்.எஸ் சந்திரன் தமிழரின் குலதெய்வமாகப் போற்றப்படும் அய்யன் வள்ளுவரையே வம்புக்கு இழுத்து வசை பாடியிருக்கிறார். அநாகரீகமாகப் பேசுவதிலும் அசிங்கமாகப் பேசுவதிலும் கைதேர்ந்த குரங்குச் சேட்டை மனிதரான இவர் அவ்வப்போது அரசியலை சாக்கடையாக்கி வரும் மனிதர்.

S.S. Chandran அண்மையில் ஒரு கூட்டத்தில் மதுவின் மயக்கத்தில் நிலை தடுமாறி உளறிக்கொட்டியுள்ளார்.

''கன்னியாகுமரியில் இடுப்பை வளைச்சுகிட்டு திருவள்ளுவர் சிலை இருக்கு. அந்த சிலையை பார்க்கிற வெளிநாட்டுக்காரன், "இதென்ன அனுமார் சிலையா? வாலைக் காணோமே என்று கேட்பான்'' என்று உளறலின் உச்சிக்கே சென்றுள்ளார்.

வள்ளுரைப் பற்றி மலிவாக விமர்ச்சித்துள்ள இக்கருத்து அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்கும் அவரின் கட்சிக்கு ஏற்புடையதா? உண்மையான தமிழுணர்வு இருந்தால் உடனடியாக அவரை தனது பதவியை ராஜினமா செய்யச் சொல்லியிருக்க வேண்டும் அவரது கட்சியின் தலைமை!

நடிகை குஷ்பூக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு போராடும் தமிழ் அமைப்புகள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வள்ளுவரையே வாய்க்கு வந்தபடி வசைப்பாடி உள்ளதைக் கண்டு பொங்கி எழுந்து போர்க்கோலம் கொள்ளவில்லையே ஏன்? கண்டும் காணாமல் இருப்பதன் இரகசியம் என்னவோ?

இவர் கட்சியின் தலைமையும் இவருக்கு வக்காலத்து வாங்குகிறதா? உடனடியாக மன்னிப்பு கேட்க ஏன் உத்தரவிடவில்லை?

ஒருசிலர் மட்டுமே தனிப்பட்ட முறையில் கண்டனக்குரல் எழுப்பியுள்ளனர்.

முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன் கூறுகையில், தமிழ் இன, மொழி இல்லாதவர்கள் தான் வள்ளுவரை கிண்டல் செய்வார்கள். இது நச்சுப்பிரச்சாரம் என்றார்.

கவிஞர் மு.மேத்தா கூறுகையில், குரங்குகள் மலர்களை பற்றி பேசக்கூடாது. திருவள்ளுவரை பற்றி பேசுவதற்கு சமூக யோக்கியதை வேண்டும். எஸ்.எஸ்.சந்திரன் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

கவிஞர் அறிவுமதி கூறுகையில், ஒரு குடிகார மகன் உச்ச போதையில் தன் தாயின் முகத்தில் காறித் துப்பியதற்கு சமமானது இந்த எச்சில் வார்த்தைகள் என்றார் வேதனையுடன்.

தமிழரின் தெய்வமாகப் போற்றப்படும் அய்யன் வள்ளுவரை வசைப்பாடிய சிரிப்பு நடிகன் எஸ்.எஸ். சந்திரன் மீது கட்சி வேறுபாடுன்றி தமிழ்மக்கள் அனைவரும் தங்களது கடுமையான எதிர்ப்புணர்ச்சியை காட்ட வேண்டும். அப்போதுதான் இம்மாதிரியான இழிமனிதர்கள் எதிர்காலங்களில் தங்களின் வாயைக் கட்டுப்படுத்தி வைப்பார்கள்.

தமிழ்மக்களுக்கு எதிரான கருத்தைக் கூறியதால் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்பாகும்.

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பும் அதுவே! அவர் பதவியை இராஜினாமா செய்யச்சொல்லி அவரது கட்சி உத்திரவிடுவதில்தான் அவர்களின் தமிழுணர்வும் வள்ளுவர் மீது காட்டும் உண்மைப்பற்றும் வெளிப்படும் என்பது உண்மை!

- அக்னிப்புத்திரன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com