Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ரோபாவின் முன் அ.ஆ என்னுள்ளே
பாண்டித்துரை

எனக்கான தேவைகள் எல்லா இடங்களிலும் நிரம்பிக் கிடக்கிறது. அப்படித்தான் ஆவியும். புரிதலற்ற ஒரு காலத்தில் புரண்டு எழுந்துவந்த தடங்கள் இருந்தாலும் என் சகோதரனின் உபயத்தால் ஆவியின் சில பக்கங்களை அவ்வப்பொழுது விரும்பி படிப்பதுண்டு. அப்படித்தான் ஞாநியின் ‘ஓ’ பக்கங்களும். ஞாநியின் ‘ஓ’ பக்கங்கள் ஒரு கட்டத்தில் (100க்கு பிறகு ) தடைபட்டபொழுது மீண்டுவரும் என்று எண்ணியதுண்டு. அப்படித்தான் அடுத்தடுத்த பக்கங்கள்.

07.02.08 சீனப்புத்தாண்டை (சிங்கப்பூர்) கொண்டாடிக் கொண்டிருந்தது. இன உணர்வுகள் எனக்கான தேவை என்றாலும் அவை என்றுமே பூசலுக்கு அடிக்கோடிடுதை அனுமதித்ததில்லை. பல்வேறுபட்ட இனமக்கள் வாழும் ஒரு சமுகத்தில் வாழும்பொழுது அவர்களின் உணர்விற்கு என்னையும் உட்படுத்த முயல்வதுண்டு அப்படித்தான். ஆனாலும் மனதளவில் சீனப்புத்தாண்டை கொண்டாடினேன் கூடுதலாக என்னுடைய முதலாளிக்கு ஒரு குறுந்தகவல் அவ்வளவே. கடந்த ஆண்டு சீனப்புத்தாண்டை நினைத்துப்பார்க்கும் அளவிலே இந்த ஆண்டு சீனப்புத்தாண்டு என்னை ஆட்கொண்டது. கடந்த ஆண்டு புத்தாண்டிற்கு மலேசிய லங்காவி தீவிற்கு நானும் என்னுடைய சகோதரர்களும் பயணித்ததே. இந்த ஆண்டு என்னுடைய சகோதரர்கள் அனைவரும் இந்தியாவில் விடுமுறையை கொண்டாட நான் மட்டும் இங்கே.

சீனப்புத்தாண்டை கொண்டாடும் முகமாகவும் கவிமாலை கவிஞர்கள் குடும்பத்துடன் கலந்துரையாடும் ஒரு பகுதியாக எனக்கு வந்த அழைப்பினையொட்டி சிங்கப்பூர் பொட்டானிக்கல் கார்டன் (பூ மாலை) பகுதிக்கு ஒரு நாள் முழுமைக்கும் என் சின்டெரெல்லா கனவுகளுடன். எல்லோரையம் எனக்கு பிடிக்கும் என்றாலும் என்னருகே சிலரே இருக்க கூடும் அப்படிச் சிலர் வந்த மகிழ்ச்சியில் நாளைய பொழுதில் அதன் ஞாபகங்கள் எங்காவது துருத்திக்கொண்டிருக்கலாம்.

மாலையில் தேக்காவின் வீதிகளில் பயணிக்கும்பொழுது சனசந்தடி பற்றிய சலிப்பு ஏற்பட்டாலும் இதை விட்டால் இவர்கள் வேறு எங்குபோய் மகிழக்கூடும் இவர்களின் மகிழ்ச்சிக்கு இடைஞ்சலாய் (இடையே) நான் என்றவாரு கால்களின் போக்கினில் கண்களில் ஒரு மாற்றம். ஏதேச்சையாய் நான் படித்த சில வரிகள் ஞாநியின் ஓ... பக்கங்கள் ஆரம்பம் ஆரம்பித்த ஒன்று மீண்டுமா என்ற ஆர்வமிகுதியில் மேலெழுந்த பார்வையில் கொட்டை எழுத்துக்களில் குமுதம். வாங்குவோமா இல்லையா என்று யோசிப்பதற்கு முன்னே என்கைகளில் தாங்கியபடி பிறகு என்ன சில்லறையை சரிபார்க்காமல் கொடுத்துவிட்டு செல்ல மறதியில் நடைபோட்ட என்னை அங்காடிக்காரர் அழைத்து மிச்சமாக 0.30 சென்ட் கொடுக்க அட என சொல்லிக் கொண்டே முதல் பக்கத்தை திருப்பினால் வாங்கியதன் சந்தோசங்கள் ஒரு பக்கம் வடியத்தொடங்கியது.

“ரோபோ” படத்திற்கு தமிழில் என்ன பெயர் சூட்டலாம். சரியான பெயரை சொல்லும் ஒரு வாசகருக்கு பரிசு ரூபாய்.1000.00உடனே என்னுள் எட்டிப்பார்த்தது அ.ஆ (இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா) படத்திற்கான தலைப்பு போட்டியே. (நான் எழுத ஆரம்பித்ததற்கு ஒரு வகையில் அ.ஆவிற்கும் ஒரு தொடர்பு உண்டு)

100 கோடிக்கும் மேல் பட்ஜெட் பிரம்மாண்டம் சங்கர் இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடப்போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இத்தகு பிரமாண்டத்தின் படத் தலைப்புக்கு ரூபாய் 1000.00 ? ரசிகா! பெயரை தமிழ்ப்படுத்துவதால் கிடைக்கும் வரிச்சலுகையை...?

ரோபாவின் முன் அ.ஆ என்னுள்ளே பிரமாண்டமாய்....
குமுதம் ரஜினி ரசிகர்களை வைத்து சம்பாதிக்கிறதா அல்லது ரஜினி...
ஆக மொத்தத்தில் ரஜினி ரசிகர்களின் மதிப்பு ஒரு ஆயிரமாய்…..

- பாண்டித்துரை ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com