Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

புலிகள் அல்ல, புலிவேடக்காரர்கள்
பா.செயப்பிரகாசம்


ஈழத் திசைக்கு ‘வடஞ்சுருட்டி’ மூலை என்று ஒரு பெயருண்டு. காட்டு வேலைக்குப் போய், அவிழ்த்து விட்ட, மாடு, வண்டிகளின் வடத்தை (கயிறு) சுருட்டுவதற்கு முன், ஈழத்திசையில் ஒரு மின்னல் மின்னினால் மழை கால் வாங்கி வந்துவிடுமாம்.

Jayalalitha and Ramdoss பூமி வெப்படைவதால் ‘ஓசோன்’ படலங்கள் ஓட்டையாகி தற்கால பருவநிலை சிதைந்து பாழாகியுள்ளது. அது போல், நாடாளுமன்ற ‘‘ஸீட்டுக்’’ காக அடித்துக் கொள்ளும் தேர்தல் வெப்பத்தில், ஈழத்திசையில் சூல்கொண்ட மேகக் கூட்டம், திசை மாற்றி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தாயகத் தமிழினத்தின் எதிர்வரும் தலைமுறைகளின் வாழ்வும் ஈழமழையால் பசுமையாய் வடிவுகொள்ளும் என்றிருந்த எதிர்பார்ப்பு பொய்யாகியது.

நாசமாக்கினார்கள் தமிழ்த் தேசியம் பேசிய அரசியல் தலைமைகள். ஒரு இடத்துக்கும், இரண்டு இடத்துக்கும் ஓடி ஓடி, இந்த அணியா, அந்த அணியா என்றலைந்து, எங்கெங்கே உட்கார வேண்டுமோ அங்கே உட்கார்ந்து கொண்டார்கள். புரட்சிப் புயல், எழுச்சித் தமிழர், தமிழ்க்குடி தாங்கி, ‘புதுப் புனல்’ வலது கம்யூனிஸ்டு - எல்லோரும் ஸீட்டுக்கு ஏங்கிகளாக மாறி அலைந்த கேவலம் நிகழ்ந்தது.

இலங்கையின் செய்தித்துறை அமைச்சர் லக்ஸ்மண் யாப்பா இருமாதங்கள் முன்பு சொன்னதை இங்கு நினைவு கொண்டாக வேண்டும்; ‘‘இந்தியாவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்தச் சூடான நிலைமை தணிந்து விடும். இதைக் கண்டுகொள்ளத் தேவையில்லை’’ என்று சொன்னார்.

‘‘தேர்தல் குளிர் அடிக்கப் போகிறது. ஈழப்பிரச்னையை எடுத்து வீசிவிட்டு, எல்லோரும் தேர்தல் போர்வையைப் போர்த்திக் கொள்ளப் போகிறர்கள்’’ என்று ஊடுருவிப் பார்த்து லக்ஸ்மண் யாப்பா சொன்னதின் மெய்ப் பொருளைக் கொள்ளவேண்டும். கொள்கையற்றதுகள் தமிழக அரசியல் தலைமைகள் என்ற உண்மையை அந்த வாசகம் மெய்ப்படுத்தியிருக்கிறது.

தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் தங்கள் ஆற்றலை தாங்கள் அறிந்திருக்கவில்லை. மக்களால் வழங்கப்பட்டிருந்தது இந்த ஆற்றல். எதிரிகளை துல்லியமாக குறிபார்த்து அடிக்கும் வித்தையை தந்தது அது; தமிழகம் முழுக்க சிறுகுடிசை முதல் உயர் நடுத்தர வாழ்வு வரை எழுந்து உயர்ந்த தமிழின உணர்வு அலை எனும் அபூர்வ ஆற்றலை, இச்சக்திகள் தி.மு.க, அ.தி.மு.க என்ற தலைமை பூதங்களிடம் மாற்றி அளித்தனர். ஈழப் பிரச்னையில் ஒருமித்த நிலைப்பாடுடைய ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தாமே ஒரு அணியாக உருக்கொள்ள வேண்டுமென்பது மக்கள் விருப்பம்.

ஒரு தானி (ஆட்டோ) ஓட்டுநர் சொன்னார். ‘‘இவங்க ஒன்னாச் சேர்ந்தா, நாற்பது ஸீட்டையும் பிடிச்சிரலாம் ஐயா’’

அவர் ஒருவர் என்றில்லை; தமிழக மக்களில் பாதிப் பேர், இந்தச் சொல்லால் தான் பதிலளித்தார்கள். தேர்தலில் பங்கேற்காத, தமிழ்த் தேசிய நலன்களை, ஈழத்தமிழரது விடுதலையை முன்வைக்கும் பெரியார் திராவிடர் கழகம், தமிழத் தேசிய இயக்கம், தமிழ்த் தேசப்பொதுவுடமைக்கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் போன்றவை மக்களுடனிருந்தன. முன்னர் தனித்தமிழால் தனிமைப்பட்டு, இப்போது காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்னைகளாலும் ஈழத் தமிழர் பிரச்னையாலும் மக்களோடு இணைந்து விட்ட தமிழுணர்வாளர்கள் தீவிரமாய் முன்வந்தார்கள். இத்தனையையும் திரட்டி, தலைமைப் பூதங்களுக்கு எதிராய், தங்களுக்கென திடமான வாக்கு வங்கியை தமிழ்த் தேசிய சக்திகள் உருவாக்கியிருக்க முடியும். இந்தத் தேர்தல் போல், இனியொரு தேர்தல் வர முடியாது. தமிழ்த் தேசியம் சார்ந்த ஒரு வாக்குவங்கியை உண்டு பண்ண முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. தமக்கென தனித்த வாக்குவாங்கியைக் கொண்டுள்ளதாக கருதப்படுகிற தலைமை பூதங்களிடம் ஓரிடத்துக்கும் ரெண்டிடத்துக்கும் போய் சரணாகதியாகினர்.

சரணாகதிப் படலத்தை முதலில் தொடங்கியவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர். அகில இந்தியத் தலைமை நேரடியாக அ.தி.மு.க. மகாராணியைக் காண போயஸ் தோட்டம் புகுந்தது. உடன்பாடு பற்றிப் பேசியது; காத்திருந்த மார்க்சிஸ்டுகள், அடுத்தாக போயஸ் தோட்டம் புகுந்தனர்.

ஒன்றுக்கும் இரண்டுக்குமாக அவருக்கு இவ்வளவு, எனக்கு இவ்வளவுதானா என்று பேரம் பேசினர். இடப்பிரச்னையில் ஈழத்தின் பேரவலம் தூரப்போனது. அதே நேரத்தில் மூன்று கட்சிகளில் கால்வைத்து, கால் எங்கிருக்கிறது என்று கண்டுகொள்ளவிடாமல் பேரம் பேசிக்கொண்டிருந்த தமிழ்க் குடிதாங்கிதான் தமிழர்களை ஆச்சரியப்படவைத்ததில் முதல்வர்.

உண்மையில் - தமிழ்த் தேசிய நலன்விரும்பிகள் ஓரணியாய் சேருவதற்கான முயற்சியை பழ.நெடுமாறனும் தொல்.திருமாவளவனும் மேற்கொண்டார்கள். ‘‘அப்படியொரு அணி உருவாக வேண்டுமென்கிற பெரு விருப்போடு எத்தனை முறை ஒவ்வொரு கட்சி அலுவலகத்துக்கும் அலையாய் அலைந்தேன்’’ என்று தொல்.திருமாவே ஒரு அரங்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இவர்களிருவரும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன; மக்களுடைய எதிர் பார்ப்பு ஒன்றாகவும், அரசியல் இயக்கங்களின் ஆசை, செயற்பாடு வேறொரு திசையிலும் இருந்தன என்பதை இது காட்டுகிறது.

முதலாளிகளுக்கும் ஆதிக்கக் குழுக்களுக்குமான ஜனநாயகம் இது. அதற்கான தேர்தல் இது. எல்லோரும் பங்கேற்கும் தேர்தல் என்பதின் மூலம் மக்களுக்கானதாக வேடமிட்டு வருகிறது. தேர்தல் மூலம் நிலைப்படும் முதலாளிகளுக்கான அரசியல் அதிகாரம் அனைத்து மனிதர்களையும் சீரழித்துவிடும், நகக் கண் அளவுகூட கொள்கையாளராய் இருக்க எவரையும் விட்டு வைக்காது என்பதற்கு, தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளும் பொதுவுடமைக் கட்சிகளும் நேரடி நிரூபணமாகினர். ஈழவிடுதலைப் போருக்கு எதிராக எப்போதும் கொடியேந்தும் ஜெயலலிதா, ஈழத்துப் பிரச்னையில் எப்போதும் நிரந்தர வேடதாரி கருணாநிதி - ஆகியோரை தலைமையாக்கி தேர்தல் நடத்தும் கேவலத்துக்கு வந்தனர். தாமே தலைமைச் சக்தியாகி ஈழத் தமிழர்களின் துயர் நீக்கும் வாய்ப்பை இடறி விட்டனர்.

கடைசியில் ஈழத் தமிழருக்கான யாதொரு வேலைத் திட்டங்களும் இல்லாது முடங்கிப் போயிற்று. தாய்த் தமிழக மக்கள் தங்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்ற ஈழத் தமிழரின் எதிர்பார்ப்புகளை சிதைத்தார்கள்.

யாழ்ப்பாணம், வன்னி வட்டாரங்களில் மட்டுமல்ல; கொழும்பிலும், கிழக்கு மாகாணத்திலும் இராணுவத்தின் தேடுதல் வேட்டை, சித்திரவதை, மரணக்குழி எப்போதும் தயாராக உள்ளன. வெள்ளைவேன் கடத்தல்கள், கொலை அன்றாடம் நடைபெற்றுக் கொண்டிக்கின்றன. யுத்தகளப் பகுதிக்கும், யாழ்வட்டாரத்துக்குள்ளும் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட, அவுட்லுக் வார இதழின் செய்தியாளர் கவிதா முரளிதரன் ‘‘உங்கள் புத்தர் இதையா சொன்னார்’’ என்று கேள்வி எழுப்பினார். ‘‘அங்குள்ள நடைமுறைகள் இங்குள்ள தமிழரை இயற்கையாக பாதித்தது என்று கூறுவதைவிட பாதிக்கும் என்று கூறுவதே சரி. தொப்புள்கொடி உறவு...... எல்லாவற்றையும் இழந்த அவர்களுக்கு சிறிய ஆறுதலாக போர்நிறுத்தத்தைக் கூட நம்மால் தர முடியவில்லை’’ என்று கூறிய அவர் தொடர்கிறார்.

‘‘நாம் இருக்கிறோம் தோள் கொடுக்க என்று சொல்லி அவர்களை ஏமாற்றுகிறோமா என்று தோன்றுகிறது’’

ஆமாம், நமது தலைவர்கள் தேர்தல் கூட்டு என்ற பெயரில் அதை வெறிறிகரமாகச் செய்து முடித்துள்ளனர். தமிழ்த் தேசிய நலனின் அக்கறையோடு இருக்கும் கட்சிகள் - எதைச் செய்ய மாட்டார்கள் என்று கருதினோமா, அதனைக் கொஞ்சமும் தயக்கமேதுமின்றி செய்தார்கள்.

8.4.2009 அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலைஞரையும் நடுவணரசையும் எதிர்த்து வீராவேச உரைநிகழ்த்திய புரட்சிப்புயல், அந்த இடத்துக்கு ஜெயலலிதாவை, அ.தி.மு.வை ஏன் கூட்டிவர முடியவில்லை? கலைஞரை, நடுவணரசை சாடுவது அந்த அம்மாவுக்கு உடன்பாடானது தானே? அவ்வாறானால், ஈழப்பிரச்னையில் ஆத்மார்த்த ஈடுபாடில்லாத ஒரு நபர் செல்வி என்பது தானே பொருள்? திருமங்கலம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் செல்வியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஈழப்பிரச்னை பற்றி உதடு பிரிக்காத புரட்சிப்புயல், இந்தத் தேர்தலிலும் அந்தவழி மேற்கொள்வார் என எதிர்பார்க்கலாம். கருணாநிதி மீது முக்கி முக்கி குற்றச் சாட்டுக் குண்டு வீசுகிற தமிழ்க் குடிதாங்கி, அதே குண்டுகளை போயஸ் தோட்டம் கருகும் வண்ணம் வீசக்கடமைப்பட்டவரா, இல்லையா?

கூட்டணி தர்மம் பற்றி இவர்கள் நிறைய, நிறைய முத்துதிர்க்கிறார்கள்; முன்னர் பகையாளிகள்; இப்போது பங்காளிகள். தோசை திருப்புவது போல் திருப்பிப் போடலாம். ‘‘கொள்கை முரண்பாடுகள் உள்ள கட்சிகள், தேர்தல் கூட்டணியில் இடம் பெறக் கூடாதென்றால் இந்தியாவில் யாரும் யாரோடும் கூட்டுச் சேர முடியாது’’ எழுச்சித் தமிழர் கூறுகிறார், அதனால் ‘‘இலங்கைத் தமிழர்களைக் காக்க உள்ளது ஒருகை தான், அந்தக்கையை விடமாடேன்’’ என்று கருணாநிதி உறுதியுடன் கூறியதை, ‘‘சோனியாகாந்தி ஒருவர்தான் எங்களுக்கு இருக்கும் நம்பிக்கை’’ என்று பின்பாட்டுடன் வழிமொழிபவராக வந்து நிற்கிறார்.

ஒரு சீக்கியனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், தமிழனுக்கு இல்லை. அமிர்தசரஸ் பொற்கோயிலில் ‘நீல விண்மீன் தாக்குதல்’(ழுpநசயவழைn டீடரந ளுவயச) என்றபெயரில் சீக்கியர் படுகொலை நிகழ்த்தப்பட்ட 1982 முதல் சீக்கிய இனப் பயம் டெல்லி அரசின் நரம்புகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

டெல்லிக்கு அருகிலேயே இருக்கிறது பஞ்சாப். டெல்லியின் தண்டுவடமாக அதன் புவியியல் அமைப்பு ஆகிவட்டது.

மற்றொன்று: போரிடும் இனம் சீக்கியஇனம். வரலாற்றின் தொடக்கந் தொட்டு, படையெடுப்புகளையும் ஆக்கிரமிப்புகளையும் எதிர் கொண்டு போராடிப் போராடி வீர உயிர்ப்பு கொண்ட இனம். பஞ்சநதிகள் ஓடும் பூமியில் போருக்குச் சென்றவர் ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும். ஒவ்வொரு பெண்ணும் போர் வீரனை விரும்பினாள். போருக்குக் செல்லும் போது கூட, தன்னைக் கூட்டிச் செல்ல வேண்டுமென அவள் கேட்டுக்கொண்டாள்.

‘‘நீலக் குதிரை ஓட்டிச் செல்பவனே
என்னையும் உன்
முதுகுச் சேனத்தில் கட்டிக்கொள்.
இரவு இறங்குகிற போது
நீலக் குதிரை வீரனே
என்னை வெளியே எடுத்து
கைகளில் ஏந்திக் கொள்’’

வீரமும் மானமும் உள்ள இனமாக சீக்கிய இனம் இன்றும் பரிணமிப்பதற்கு இத்தகு வலுவான அடிப்படைகள் உள்ளன.

Tirumavalavan and Veeramani ‘முதுகில் வேல்பட்டு, என் மகன் இறந்தானெனக் கண்டேனாகில், அவனுக்குப் பால்தந்த மார்பகங்களை அறுத்தெறிவேன்’ என்று வீரம் பேசிய புறநானூற்றுத் தாய் இங்கேயும் உண்டு. ஆனால் அவள் செத்துவிட்டாள். வாய் வீரம் பேசிப் பேசியே புறநானூற்றுத் தாயைப் புதைத்து தன் வாழ்வை உயிர்ப்பித்துக் கொண்டவன் இன்றைய தமிழன்.

புவியியலில் தமிழகம் டெல்லியிலிருந்து வெகுதூரத்திலுள்ளது; தென் கோடியில் அது ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக 14ம் நூற்றாண்டு வரை தனித்த ஆட்சியைக் கொண்டிருந்த தமிழர்கள் - இன்று எங்கோ வட கோடியில் அதிகாரம் மையம் இருப்பதால் அதில் பங்கேற்க துடிக்கிறார்கள். மற்ற மாநிலத்தவரை விட, விசுவாசமுள்ளவராக டெல்லிக்கு காட்டிக் கொள்வதின் வழி, அதிகாரத்துக்குள் செல்ல முனைகிறார்கள். எதையாவது செய்து, தேர்தல் திருவிழாவில் முண்டியடித்து டெல்லிக்குப் போய்விட நினைக்கிறான் இன்றைய தமிழன். அதிகார மையத்துக்கு எப்போதும் விசுவாசமுள்ள அடிமை தேவைப்படுகின்றான்.

சீக்கியர்கள் தமக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராக நீதிமன்றத்தை சூறையாடினார்கள் யாரும், எதுவும் சொல்ல இயலவில்லை. அந்த இனத்தைப் பகைத்துக் கொள்ளப் பயம். தன்மேல் செருப்படி வீசிய சீக்கிய செய்தியாளரை ‘மன்னித்து விட்டேன்’ என்கிறார் ப.சிதம்பரம்; ஒன்றும் செய்யாதீர்கள் என்று சொன்னது சிதம்பரத்தின் நாக்கு அல்ல; டெல்லிக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நடுநடுங்கவைக்கும் அச்சம். மறுபடியொரு முறை சீக்கிய இனத்தை உசுப்பிவிட்டு, இந்தியா இரத்த பூமியாவதை அதிகார மையம் விரும்பவில்லை.

கோவையில் வழக்குரைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் (9.4.2009) ஒரு முழக்கம் தென்பட்டது.

‘‘மானமுள்ள சீக்கியன் செருப்பிலே அடிக்கிறான்
வெறுப்பிலே அடிக்கிறான்
மானங்கெட்ட தமிழன் ஸீட்டுக்காக அலையறான்’’

சுயநலம் தமிழனை சுத்தமும் மானமில்லாமல் செய்து விட்டது. மெய்ப்படுத்தும் காரியத்தை தமிழ்த் தலைவர்கள் செய்து முடித்து விட்டார்கள்.

மக்கள் எப்போதும் நியாய, அநியாயங்களுக்கெதிராய் போராடும் நேர்கோட்டிலேயே சென்றுகொண்டிருக்கிறார்கள். சொன்ன சொல் காத்தல், நேர்மை, உண்மை, இதனாலேயே ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்கொள்ளும் தீரம் - மக்களிடம் நிலவுகிறது. அவர்களிடம் இன்னொரு சுயபுத்தியில்லாத சிந்தனையில்லாத குணமும் இருக்கிறது. தலைவர்கள் வழிகாட்டுவார்கள் என்கிற நம்பிக்கை அது. சூதும் வாதும் மிக்க தலைமைகள் நேர்கோடுகளை வளைத்து, ஒடித்து, முறித்து, தன்முன்னேற்றம் ஒன்றையே பிரதானமாய் வைப்பதை, இந்த மக்களும் ஆதரித்துப் பேச வேண்டியவர்களாய் ஆகிவிடுகிறார்கள். மக்களின் சிந்திப்பை பிறழ்வழியில் செலுத்தி, அதுசரி என கெட்டுப் போக வைப்பவர்கள் இந்ந முன்னோடிகள் தாம்; இவர்களுக்கு ஏற்ப இவர்கள் வழியில் நடந்து செல்லும் அடிமைச் சிந்தனையை மக்களுக்குள் செலுத்துவது இவர்கள் தாம்.

முன்னுதாரணமாக இருக்கவேண்டிய முன்னோடிகளின் இலட்சணம் இது.

தமது சொந்தங்களுக்காக உலகம் முழுவதினும் தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ‘‘பிரிட்டன் பிரதமர் இப்போதே போர் நிறுத்தம் செய்ய பேச வேண்டும். இனப் படுகொலைக்கு உடனே முடிவு கட்டுங்கள்’’ என்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் நடாளுமன்றத்தின் முன் ஒரு லட்சத்திற்கும் மேலாய் தமிழர்கள் இரவு, பகல் தொடர்ந்து போராட்டம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சாகும் வரை நாடாளுமன்ற முன்வெளியில் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள தலைமைகள் நாடாளுமன்றத்திற்குள் போவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர் பருத்தியன் தனது கட்டுரையில் குறிப்பிட்டது போல தற்போது சிங்கள அரசுக்கு நெருக்கடியை தந்துகொண்டிருப்பது உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற ஈழத் தமிழர் நடத்துகின்ற போராட்டங்கள் தாம். அந்தப் போராட்டங்கள் உண்டு பண்ணுகிற அழுத்தங்கள் தாம்; ஈழத் தமிழர் பிரச்னையில் இதுவரை எதிர்முகம் கொண்டிருந்த உலக நாலடுகள், இந்த அழுத்தத்தால், போர்நிறுத்தம் செய்யச் சொல்கிற துடிப்புகள் தாம்.

கொடுங் குளிர்நாடுகளில் ஈழத் தமிழர்கள் ஒற்றுமையை உயர்த்துகிற வேளையில் அதில் கால்பங்கு பணிமட்டுமே ஆற்றிய இங்குள்ள தமிழன் தேர்தல் குளிரில் முடங்கிக் கிடக்கிறான.

தன்னலம் விட்டு தன்மானத்தோடு ஒன்று சேர்ந்தவர்கள் புலம் பெயர் தமிழர்கள்.

தன்மானம் விட்டு தன்னலத்தோடு கூட்டுச் சேர்ந்தனர் இங்குள்ள தமிழர்கள்.!

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் புறப்பட்ட இடத்தில் கொளத்தூரில் 13.04.2009 முதல் நூறு பெண்கள் சாகும் வரை உண்ணாநோன்புப் போரை மேற்கொள்கிறார்கள். தேர்தல் அரசியலின் துர்நாற்றம் இந்தக் கூட்டணிக் கட்சிகளால் அவர்கள் மேல் பரவாமல் காக்க விழிப்புடனிருப்போம்.

- பா.செயப்பிரகாசம் (jpirakasam@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Dr. V. Pandian
2009-04-16 06:01:00
porkkaiponds@yahoo.co.in

"அண்ணன் பா.செ. உங்களிடம் ஒரே ஒரு கேள்வி! அண்ணன் திருமாவளவன், தான் மட்டுமே தமிழ்த்தேசியத்திற்காகப் போராடுகிறேன். மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் என கருனாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், காங்கிறஸ்காரர்கள், மார்க்ஸீஸ்ட் கம்யூனிஸ்டுகள் இவர்களை எல்லாம் சுட்டுவிட்டால் எப்படி நிலைமை இருக்குமென நீங்கள் கற்பனை செய்வீர்கள்?
அப்படி ஒருநிலைதான் ஈழத்தில் நடந்தது. (இது சினிமா அல்ல!) அத்தகைய நிலையை நீங்கள் எப்படி சொல்வீர்கள் ? போராட்டம் என்றா? ஜனநாயகம் என்றா? நாங்கள் பாசிசம் என்கிறோம்."

இது சுகன் என்பவர், பா. செ. அவர்களின் முந்தய கட்டுரைக்கு எழுதிய கருத்தின் ஒரு பகுதி. இன்று அதே திருமா எப்படி ஆகிவிட்டார் பாருங்கள். ஏன் இவர் இப்படி ஆனார்?

அது தான் இந்த முதலாளித்துவ உலகமும், அதன் பிரதிநிதிகளான கருணாநிதி, ஜெயலலிதா, மருத்துவர், தா. பாண்டியன் போன்றோரின் கேடுகெட்ட ஆட்டத்தின் விளைவு.

கீழத்தரமான இந்த அரசியல்வாதிகளைப் பற்றி கற்றமக்கள் எப்படிப் பட்ட கொதிநிலையில் உள்ளார்கள் தெரியுமா?

இதை நேர்மையாக மீள் மதிப்பீடு செய்தால், சுகன் அவர்களே கூட, பிரபாகரனின் மீது அபரிமிதமான பற்றும், மதிப்பும் வைப்பார். பிரபாகரனைப்பற்றிய தனது கருத்துகளை மாற்றிக்கொள்வார்.

தலைவன் எவ்வழி; குடிகள் அவ்வழி.

தமிழனுக்கு தன்னலமில்லாத தலைமை ஒன்று வேண்டும். தேர்தல் கட்சிகளில் அதைத் தேட முடியாது.

படித்தவர்கள், பண்பாளர்கள் தம்மாலானதைச் செய்யுங்கள்.

ravi
2009-04-16 06:03:00
eravi2007@gmail.com

very nice

suresh s
2009-04-16 09:48:00
sureshpmkgac@yahoo.in

Why the writer takes soft stand on vck. Due to fail to organise the tamil welfare party in one umbrella, the vck have to face the election independently oreven it takes anti congress stand. Is it possible to vck . then why the writer advocates vck.Being a tamilan I want to permenat ceasefire in srilanka by tthrough talks which will show the way to seperate tamil state within the srilanka. All citizen in srilanka should treat equally.Tamil should also consider as a official language with sinhala.All the tamil groups in
srilanka should unite and leads a democratic struggle againt oppression against the sinhala govt. with a view to enlighten their future.

satiyakadatasi
2009-04-16 01:25:00
theonisj@gmail.com

தமிழகத்துப் படைப்பாளிகள் ஈழத்தில் நடந்துகொண்டிருக்கும் தமிழினப் படுகொலைக்கு எதிராகச் சென்னையில் கண்டனக் கவிதைப் போராட்டம் நடத்தினார்கள். டெல்லிவரை திரண்டு சென்று ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினார்கள். நாம் அவர்களுக்கு என்றும் நன்றிகளோடிருப்போம். இந்திய நடுவண் அரசு இலங்கைக்கு ஆயுதங்களையும் நிதியையும் வழங்குவதை எதிர்த்து அவர்கள் எழுப்பிய குரல் மிகச் சரியானது. இவர்களில் ஒருசாரார் விடுதலைப் புலிகள்தான் ஈழத்தமிழர்களின் காவல் தெய்வங்கள் என்றும் கருதுகிறார்கள். இருக்கட்டும்! அது அவர்களின் அரசியல் கருத்துரிமை. ஆனால் புலிகளுக்கு மாற்றுக் கருத்துக்கொண்டிருப்பவர்களை, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தில் கருத்துச் சுதந்திரத்தையும் சனநாயகத்தையும் வலியுறுத்திப் புலிகளின் ஒவ்வொரு பாஸிசச் செயற்பாடுகளையும் அம்பலப்படுத்திப் போராடிவரும் மறுத்தோடிகளை, ஈழத்தமிழ்க் குறுந்தேசியவாதத்தின் விட்டுக்கொடுக்காத எதிரிகளைப் பார்த்து நீங்களும் எங்களைப்போலவே கண்களையும் காதுகளையும் இறுகமுடிக்கொண்டு சவமாயிருங்கள், பாஸிஸ்டுகளை பகுதியளவு ஆதரியுங்கள் என்று அறிவுரை சொல்வதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

நாகார்ஜுனனின் வலைப்பதிவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த விவாதம் ஒன்றில் பேசப்பட்ட ஒரு விடயம் குறித்தும் இந்தத் தருணத்தில் பேசிவிடலாம். நோம் சோம்ஸ்கியில்தான் விவாதம் ஆரம்பித்தது. விவாதத்தின் தொடர்ச்சியில் இன்றைய நிலையில் புலிகளை விமர்சனத்தோடு ஆதரித்தேயாக வேண்டும் என்றும் ஒரு கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் ஏன் புலிகளை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் அங்கே சொல்லப்படவில்லை. புலிகள் என்ன கொடுமைகள் செய்தாலும் அவர்களால்தான் தமிழ் மக்களைக் காப்பற்ற முடியும் என்றொரு கதை இவ்வளவு காலமாகச் சொல்லப்பட்டு வந்தது. இப்போது அந்தக் கதையும் பொய்த்துப் போயிற்று. நமது மக்கள் அய்ரோப்பியத் தெருக்களில் ‘பராக் ஒபாமாவே ஈழமக்களைக் காப்பாற்று, நிக்கலோ சார்க்கோஸியே காப்பாற்று’ என ஒபாமாவின், சார்க்கோஸியின் படங்களைக் கைகளில் வைத்துக்கொண்டு பேரணியிற் செல்கிறார்கள்.

புலிகளின் எந்தப் பண்புகளுக்காக நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும்? அவர்களுடைய தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்ளைகளுக்காகவா? அவர்களின் அசைக்கமுடியாத இடதுசாரி நிலைப்பாட்டுக்காகவா? அவர்கள் முஸ்லீம் மக்கள் மீது கொண்டிருக்கும் ஆழமான அன்புக்காகவா? அவர்கள் சிங்கள உழைக்கும் மக்களைத் தமது வர்க்க சகோதரர்களாய் வரித்து வாழ்வதற்காகவா? புலிகள் கருத்துச் சுதந்திரம்மீது கொண்டிருக்கும் காதலுக்காகவா? தமிழீழம் அமைவதுதான் இந்தியாவுக்குப் பாதுகாப்பு அல்லது பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவை விழுங்கிவடும் என இந்திய அரசுக்கு அவர்கள் கொடுக்கும் துப்புக்காகவா? பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அது ஈழத் தமிழர்களுக்கு நன்மையளிப்பதாயிருக்கும் என்று அவர்கள் கசிந்துவிடும் வதந்திகளுக்காகவா? தமிழ்ச் சமூகத்தின் சாதியக் கொடுமைகளை அவர்கள் வெட்டி வீசிய வேகத்திற்காகவா? இல்லை நமது மக்களை இன்று சுட்டு நந்திக் கடலில் வீசும் வீரத்திற்காகவா? இவற்றில் எந்தக் காரணத்துக்காக நாம் புலிகளை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்லுங்கள். தயவு செய்து ஒரேயொரு காரணம் சொல்லுங்கள் ஆதரித்துவிட்டுப் போகிறோம். அதைச் சொல்வதை விட்டுவிட்டுப் புலிகளை விமர்சிப்பவர்களை சிறிலங்கா அரசின் ஆதரவாளர்கள் என போகிறபோக்கில் முத்திரை குத்துவது யோக்கியமான செயலா? உசுப்பேற்றி உசுப்பேற்றிவிட்டு முத்துக்குமாரன் முதல் பத்து உயிர்களைத் தீக்குத் தின்னக்கொடுத்துவிட்டுக் காங்கிரஸ் கூட்டணியில் சரணடைந்திருக்கும் திருமாவளவனையோ அம்மாவின் கையில் கூட்டணி வைத்திருக்கும் தா.பாண்டியனையோ சட்டையில் பிடித்து நியாயம் கேட்கத் துப்பில்லை, அந்த வரலாற்றுத் துரோகத்தை எதிர்த்து ஒரேயொரு கல்லைவீச வக்கில்லை, நமக்கு நாட்டாமை பண்ண வந்துவிட்டார்கள். தனியாக ஒரு சிங்கள இயக்குனர் வந்து மாட்டிக்கொண்டபோது கொழுந்துவிட்டெரிந்த அந்தத் தர்மஅடித் தமிழ் வீரம் இப்போது எங்கே போனது?

மேலும் வாசிக்க www.satiyakadatasi.com செல்க:


kanthasamy
2009-04-16 11:30:00
kanthanaar@gmail.com

அய்யா.. எங்களைப் போன்ற சாதாரணர்களுக்கு இந்த அரசியல் எல்லாம் விளங்காது.. எவன் நல்லவன் எவன் கெட்டவன் என்ற லாவணிக்கு நாங்கள் தயாராக இல்லை.. அதை அறவுஜீவிகளின் கைகளில் விட்டு விடலாம்..
ஆனால் "சூத்தை" பிளந்து குப்புறக் கிடந்து செத்த அந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் செய்தது என்றுதான் புரியவில்லை.. போட்டோக்கள் பார்க்க இயவில்லை..
மன வியாதி வந்துவிடுமோ என்று தோன்றுகிறது..
இந்தக் கோரப் போரை எங்ஙனம் நிறுத்துவது...? அதற்கு வழியிண்டா...?

Dr. V. Pandian
2009-04-17 12:29:00
porkkaiponds@yahoo.co.in

இந்த உலகை இன்று 'அசத்தியங்கள்' தான் ஆள்கின்றன. திரு. கந்தசாமி அவர்கள் நாசுக்காக கொட்டியுள்ளார். அறிவுஜீவிகள் என்றால், இவர்கள் அமார்க்ஸ் வகையாராவை அழைத்து வருவார்கள்.
ஆனால், தீர்வு மிகவும் எளிதானது.
ஐ.நா. வின் முன்னிலையில், நடுநிலையோடு, ஈழமக்களிடம், கருத்து வாக்கெடுப்பு நடத்தட்டும். அவர்கள் ஈழ, விடுதலைப்பற்றியோ, புலிகளின் தலைமை பற்றியோ, பெரும்பாண்மையாக என்ன கருத்து வைக்கின்றனரோ அதையே தீர்வாக ஏற்கலாம். இதற்கு புலிகள் தயாராக உள்ளனர்.

இந்தியா இதை முன்னெடுக்குமா?

எடுக்காது!

ஏன்?

காஷ்மீரில் 60 களுக்கு முன்பே எடுக்கவேண்டிய கருத்துக் கணிப்பு இன்றும் நடத்தப்படவில்லை.

இந்தியா ஒரு அயோக்கிய பார்ப்பன தேசம்!

புதூர் சிபி
2009-04-17 03:26:00
pudursiphy@gmail.com


வணக்கம் அய்யா பா.செ அவர்களே. . . .
தேர்தல் கூட்டணி முடிந்துவிட்டது எங்கே நீங்கள் காணவில்லை என்று நினைத்தேன். நினைத்தபடி வந்துவிட்டீர்கள். உங்களது தமிழ்தேசியப்பார்வையில் இடதுசாரிகளும், அதிமுகவும், அதன் கூட்டணிக்கட்சிகளும் எடுத்த நிலைப்பாட்டை வெட்கமில்லாமல் விமர்சித்து விட்டு கருணாநிதி கூட்டணியினர் மீது கடுகளவும் சினம்கொள்ளாத தன்மையைப்படித்தவுடன் அப்படியே அசந்துவிட்டேன். உங்கள் பார்வையில் ஓட்டுப்பொறுக்கி அரசியல் என்று கருதப்படும் அரசியல்வாதிகள் தான் இப்பிரச்சனையை உலகளாவிய பிரச்சனையாக ஈழப்பிரச்சனையை மாற்றினார்கள் என்பதை உங்களாலும் மறுக்க முடியாது. இரண்டு மூன்று சீட்டுகளுக்காக போயஸ தோட்டம் சென்றவர்களின் குரல்கள் இன்னமும், ஈழத்தில் போர்நிறுத்தம் ஒன்றே தீர்வு என்று முழங்கி வருகிறது. தீர்மானம், பேரணி, மனிதசங்கிலி என மாய்மாலம் காட்டும் கருணாநிதியின் கண்ணசைவிற்கு காத்திருக்கும் உங்களைப் போன்றவர்களால் இப்பிரச்சனையை மேலும் ஊதி பெரிதாக்க முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய இயலுமா?

Dr. V. Pandian
2009-04-18 11:39:00
porkkaiponds@yahoo.co.in

I am pasting an anecdote from tamilnation.org, visitors comment section.

Kindly do read these lines.

Monday after hearing what was going on in Sri Lanka, I was so depressed and felt helpless. I didn't know what to do to help the suffering people there. I was so angry with the International Community for allowing the SL government to commit such atrocities. Despite all the protests and campaigning was done by Tamils in Canada, the Canadian Government kept a tight lip about the whole thing and did not want to intervene. All this really bothered me. I felt that I had to do something to make this country act, but didn't know how.
When I arrived home from work that evening, I saw my daughters in front of the TV enjoying one of their favorite sitcoms. Then it hit me hard, here I was blaming and complaining about Canada and the world not helping save the lives of millions of Tamils in Sri Lanka, while my own daughters didn't have a clue about the situation in Sri Lanka. So I turned off the TV and tried to tell them how our family and friends back home were suffering in a 30 years old bloody civil war. Their reaction at first was somewhat caught me by surprise. My daughters got upset at me for not letting them watch their show and sprinted off to their room upstairs rudely without listening to what I had to say.
This made my day ever more sad and depressing but little later I realized my mistake. I realized that no matter how hard I try, my daughters would never listen unless they wanted to. So I put a lot of thought into how I would make my daughters know about the genocide against Tamils back home. It's not that they are not compassionate girls; it was only a month ago when both of them cried while watching Hotel Rwanda and called the Christian children foundation and adopted a child in their mother's name.
What is happening in Sri Lanka is in no way shorter than what happened in Rwanda. But when ever I tried to tell them this, it didn't really grasp them as the movie did. How could I do this then, I couldn't make a movie as I can barely afford to have cable at our home. After a while, it came to me, I got an idea.
Yesterday, I stayed home and didn't go to work. After my daughters had gone to school, I went into the kitchen and started clearing out all the food items in the fridge and cabinets. I went through the whole house and made sure that there were no food items in the house. I put them all in a big box and took the box out and put it in my car. I knew with the cold temperature outside, none of the food would go bad. I came back and waited for my daughters to come from school.
My daughters are fourteen and twelve years old, they lost their mother 5 years ago to breast cancer. Since then, I become their mother and father by doing everything for them. My daughters come home very hungry after school everyday and eat what I have left for them in the fridge. Yesterday both of them came home from school around 3:45. As I expected, they went directly to the fridge. To their shock, there wasn't any food. In fact, they had never seen the fridge so empty, not even milk. Soon they were looking around in the kitchen and it didn't take them long before they realize that there was something very wrong.
My younger daughter came up to me and asked where her meal was. Her sister also joined her expecting a perfectly valid answer from me. Calmly I replied, "We won't be eating anything tonight". I gave one whole minute for their protest to settle down so I can make my point. Calmly I continued, I told them that we would not be eating because we wanted to feel the pain our relatives feel in Sri Lanka. My younger daughter continued with her usual nagging cry by demanding her food right away not wanted to listen to anything I had to say. I promised them that if they were willing to listen to me for 15 minutes, then they could have their meals. So they obeyed.
I started telling them about how thousands of kids younger than them were starving for many days now. First they were kind of reluctant to hear what I had to say, but after spotting tears in my eyes they were with me. I don't usually get emotional that easily, but as I started explaining the situation in Sri Lanka to them my voice was tumbling and I couldn't control the tears in my eyes. Every word that came out of my mouth was heartfelt. After good 10 minutes in to the speech, I think both of my girls saw what I wanted them to see. They came closer and hugged me as I continued with the story. As I finished telling them what had happened to the 300 innocent children and women and men in Sri Lanka I realized I wasn't the only one crying.
My youngest who wanted to listen to me for 15 minutes earlier so she could have her dinner, broke the pin drop silence of 5 minutes after I finished what I had to say and said she is skipping her meal that night. My eldest followed her and all three of us skipped our meals for that evening. Rest of the night we drank water and talked about lot of things, not just about the issues back home, but also about our family. We felt, or at least I did, that somehow we got even closer to each other. It seemed that by some magical spell or something they got matured all of a sudden. They showed a new kind of love and respect for me. It wasn't easy for me to watch them go to sleep in empty stomachs, specially the young one, but it helped us a lot as a family. Some invisible void that was there which I could never point to before was gone after that night.
The next day they woke up early and came right to the kitchen where I already had their breakfast ready. We all had our breakfast and as usual they left to school and I went to work. This even when I got home, I got a call from my older daughter's school teacher. She said that how my daughter explained to the class about what had happened in Sri Lanka and how she gave up her dinner the night before and how the entire class decided to skip lunch tomorrow for the Tamil people suffering in Sri Lanka. My eyes were watery and I was ready to break down into tears. Is this the beginning of a sign of hope for the lives of the Sri Lankan Tamils? Time will tell.

mukilvannan
2009-04-20 06:40:00
saravanai1@yahoo.com

sarath ponseca was said tamil politicians are comedians.he is exactly wright.because none of the tamil politician were responsible what they were saying to people.two rupe for one kilo rice or free televison wasnt the solution to the puplic,they need permenent solution to their problems,such as creating the jobs.promises and statements wont work.
new leaders like maran is the best choise for tamilnadu.
tamilnadu need to be strong thats what world tamil want.

Valarmathi
2009-04-21 04:54:00
mathi2006@gmail.com

Dear friends following this debate here,

Sorry that i couldn't type in Tamil here since i don't have the proper access to the net or the relevant soft wares for now.

However having noticed a comment from "Sathya Kadadasi" by some dear person named "Theonis" i felt it imperative to respond here.

The following part from Mr. Thoenis' comment drew my attention.

//நாகார்ஜுனனின் வலைப்பதிவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த விவாதம் ஒன்றில் பேசப்பட்ட ஒரு விடயம் குறித்தும் இந்தத் தருணத்தில் பேசிவிடலாம். நோம் சோம்ஸ்கியில்தான் விவாதம் ஆரம்பித்தது. விவாதத்தின் தொடர்ச்சியில் இன்றைய நிலையில் புலிகளை விமர்சனத்தோடு ஆதரித்தேயாக வேண்டும் என்றும் ஒரு கருத்துச் சொல்லப்பட்டது.//

The fact of the matter can be discerned easily if readers take the trouble of resorting to the particular post by Nagarjunan and the debate that ensued. But am not sure how many will take such a 'trouble' and hence my intervention.

The post by Nagarjunan (http://nagarjunan.blogspot.com/2009/02/blog-post_13.html) referred to by Mr. Theonis, contrary to his claim, had nothing to do with Noam Chomsky initially. The post was actually on the proposed barbed wire detention camps by the Sri Lankan government, which Nagarjunan correctly compared with the nightmarish legacy of Nazi detention camps.

The 'debate' turned on the issue of the LTTE in the wake our friend Sugan's comment which ran as follows (actually it was the second comment on the post):

sugan said...

இதை நாம் 1984-ஆம் ஆண்டில் சொன்னோம்! சப்றா- சடில்லாவில் பாலஸ்தீனர்கள் படுகொலையானதை நினைவுகூர்ந்து தமிழ்ப்பிரதேசங்கள் பாலஸ்தீனம் மாதிரி அகதி-முகாம்களாக மாறும், தாக்கிவிட்டு ஓடுகிற hit and run, சே குவேராவின் போகோ தியரி எல்லாம் இலங்கைக்குப் பொருந்தாது, இது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கும் என புலிகளின் தாக்குதல்களை விமர்சித்து நீண்டகால மக்கள் யுத்தம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தோம். அப்போது ஜோன் எச் ரீட் மகாவலி புரொஜெக்டிற்கு வந்திருந்த நேரம். சிங்கள மக்கள் மற்றும் இடதுசாரிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தினோம். புலிகள் சொன்னார்கள் - ஆயிரம் பிரச்சாரத்தைவிட ஒரு தாக்குதல் அதனது வேலையைச் செய்யும், விடுதலையின் பெறுமதி மக்களூக்குத் தெரியவேண்டும். நாம் சோத்துப்பார்சல்களாக எள்ளி நகையாடப்பட்டோம்.
கவிஞர் செல்வத்தின் கவிதைவரி இப்படி வரும்.

கானமயிலாட...
துவக்கெடுத்தோம் படை அமைத்தோம்
ஆத்மாக்களைக் குறிவைத்தோம் போ!!

இப்போது எதுவுமே சீர்செய்ய இயலாத அளவிற்கு எல்லாம் முடிந்துவிட்டன. இலக்கியம் மொழி மனிதம் எல்லாம் அழிந்துவிட்டன.

எஸ். ராமகிருஸ்ணனின் நெடுங்குருதி நாவலில் ஒரு பக்கம் வரும், இறந்தவர்களின் துயரைத் தாங்க முடியாமல் மி்ஞ்சியிருந்தவர்கள் படும் வதை, அவர்களை உயிர்ப்பித்துத் தரமுடியாதா என கேட்கும்போது அவர்களுக்காக ஒருநாள் மட்டும் உயிர்ப்பித்துத் தர முன்மொழியப்படுகிறது. மேலும் துயருடன் மிஞ்சியிருப்பவர்களும் ஆற்றில் வீழ்கிறார்கள்.
13/02/09 10:10

to which i responded in dismay thus:

வளர்மதி said...

அச்சோ சுகன்,

ஈழ மக்கள் முன்னெப்போதும் சந்தித்திராத அவலங்களை எதிர்நோக்கியிருக்கையில், அதைப்பற்றி பேசுகையிலும்கூட உங்களுக்கு புலிகள்தாம் இலக்கா?!

ஈழ மக்களின் எல்லாத்துயர்களுக்கும் புலிகள்தாம் காரணம் என்று சொல்ல முனைகிறீர்களா?

புலிகளின் அரசியல்-செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எனக்கும் உண்டு என்பதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன். ஆனாலும், உங்களைப் போல இச்சமயம் என்னால் பேச இயலவில்லை.

புலிகள் இயக்கத்தினர் மீதான விமர்சனங்களைக் கைவிடாது, எனினும் அவற்றை முன்னிலைப்படுத்தாமல், அவர்களுக்கு தார்மீக ஆதரவையேனும் வழங்க வேண்டிய சூழலில் இருக்கிறோம் என்பதே தற்சமயம் எனது நோக்கு. ஆனால், நீங்களோ இன்னமும், ஈழத்தில் ஒரு பிணம் விழுந்தாலும் அதற்கு 1984-ஆம் ஆண்டில் புலிகள் செய்த காரியம்தான் மூலக்காரணம் என்று புலி-எதிர்ப்பு பல்லவி பாடிக்கொண்டிருக்கிறீர்கள். சரி, நீங்கள் அச்சூழலினால் நேரடியாக பாதிப்பிற்குள்ளானவர் என்பதால் அங்ஙனம் பேசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

காசாவை எடுத்துக்கொள்ளுங்கள். காசாவின் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னும் கொடூரப்படுகொலைகளுக்குப் பின்னும் இஸ்ரேல் அரசு ஹமாஸ் ”தீவிரவாதிகள்”தான் அப்பாவி மக்கள் இறப்பதற்குக் காரணம் என்று சொல்லிவருவது உலகப்பிரசித்தம். ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்தே எமது தாக்குதல் என்று பிரச்சாரம் செய்ததும்/செய்துவருவதும் வெளிப்படை. ஹமாஸ் இயக்கத்தினர் அப்பாவிப் பாலஸ்தீன மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்திவருகின்றனர் என்று ஊளையிடுவதும் நாமனைவரும் அறிந்தவையே.

இஸ்ரேலின் இந்த அணுமுறையை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்? இஸ்ரேல் அரசின் ‘புல்லாங்குழலாக' ஒத்து ஊதமுடியுமா?

இன்று ஈழ மக்களின் அவலங்கள், ஈழ மக்களின்மீதான சிறீலங்கா அரசின் தாக்குதல்கள், ஊடகவியலாளர்மீதான தாக்குதல்கள், ஊடக இருட்டடிப்பு உத்திகள், பொய்ப்பிரச்சாரங்கள் எனப் பலவும் முன்னெப்போதும் விட இஸ்ரேல் அரசின் உத்திகளுக்கு மிக நெருக்கமானவையாக உருவாகியிருப்பதைக் கவனிக்க முடியும்.

ஈழ மக்களின் அவலங்களுடன் உங்களுக்கு உணர்வுரீதியாக நெருக்கமான பிணைப்பு உள்ளதால், சில தவறுகளைச் செய்ய வாய்ப்பு உண்டு எடுத்துக்கொள்வோம்.

காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல்-ஹமாஸ் இருதரப்பினரையும் எப்படி அணுகுவீர்கள் என்று ஒரு கேள்வியை எடுத்துக்கொள்ளுங்கள். காசா மக்களின் எல்லாத்துயர்களுக்கும் ஹமாஸ் இயக்கத்தினரின் ஆயுதப்போராட்டமே மூலகாரணம் என்று இஸ்ரேல் அரசின் பிரச்சாரத்திற்கு ஒத்து ஊதுவீர்களா?

பொறுமையாகப் பரிசீலித்து பதில் வேண்டுகிறேன்.
13/02/09 13:19

It was at that point that another person intervened to note the interview by Noam Chomsky taken by the Sri Lanka Gaurdian a mouthpiece organ of the Sri Lanka government, from which i am pasting the relevant portion:

ace4metrosexual said...

வளர்மதி,
இது புரிவதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்ததா?

மாலன் / ராம் = சுகன் / சேனன்
இந்து / இந்திய ஊடகங்கள் = சத்தியக்கடதாசி / தேசம்

இப்படியான அகோரமான நிலையிலேதான் நிற்கிறோம்.

நேற்று நோம் ஸோம்ஸ்கியிடம் Sri Lanka Guardian கேட்டிருக்கும் கேள்விகளின் ஒரு பக்கச்சார்புக்கொடூரத்தினை வாசித்தேன்.

...

Then following other comments from friends this was my response in detail:

வளர்மதி said...

ace4metrosexual-ற்கு ...

//வளர்மதி, இது புரிவதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்ததா?//

அப்படி ஏதுமில்லை. சில மாதங்கள் முன்பாகவே வந்துசேர்ந்த புரிதல் இது. எனினும் தொடர்ந்து நிகழ்வுகளின் போக்குகளோடு உரசி சரிபார்த்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை காரணமாக இத்துனை காலம் அமைதியாகவே இருந்தேன்.

ஷோபாசக்தி, ராஜன்குறை, சேனன், இன்னும் பலருடன் மிக நெருக்கமாகப் பழகியிருந்த காரணத்தினாலும் மேற்சொன்னவர்களது அரசியல் நேர்மை மீது நம்பிக்கை இருந்த/இருக்கும் காரணத்தினாலும் மேற்சொன்னவர்கள் ஈழப்பிரச்சினை குறித்து - அது விளையாட்டல்ல, intellectual gymnastics அல்ல என்பதாலும் - பல சந்தர்ப்பங்களில் எனக்கு உடன்பாடு இல்லாதிருந்த போதிலும் அமைதியாக இருக்கவே தலைப்பட்டேன். இப்போது, சமீபத்திய ஈழத்து நிலைமகள், முத்துக்குமாரின் மரணம் இவற்றை கருத்தில் கொண்டே பகிர்வது அவசியம் என்று வெளிப்படுத்த முனைந்தேன். வேறொன்றுமில்லை.

மீண்டும் வலியுறுத்திச் சொல்வதென்றால் சுகன், ஷோபா சக்தி ஆகியோரின் நிலைப்பாடுகள்மீது எனக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே மிகக் கடுமையான விமர்சனங்கள் உண்டு. ஷோபா சக்திக்கு தொலைபேசி செய்து அதைப் பதிவும் செய்தேன். என் நண்பர் என்ற முறையில் அக்கறையுடன் அவரது நிலைகளை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளவும் செய்தேன். ஆனால், அவர்கள் தரப்பில் பரிசீலனை இல்லாதிருப்பது ... என்ன சொல்வது :((

மற்றது, சேனன் மீது எனக்கு வேறு காத்திருப்புகள் உண்டு. பொறுத்திருப்பதைத் தவிர வழியில்லை.

அ. மார்க்ஸ் பற்றி இங்கு பேச விருப்பமில்லை.

றஞ்சினிக்கு,

நன்றி.

//இங்கு பல ஜெர்மானியர்களுடன் நாசிகள் பற்றிப்பேசினால் உடன் ரஷ்யாவில் ஸ்ராலின் எவ்வளவு பேரைக் கொன்றார் அல்லது வேறு நாடுகளில் நடந்தவை பற்றிப பேசுவார்கள்.. இயலாத கட்டத்தில் வேறு சிலர் ஹிட்லர் எம் நாட்டுக்காரரில்லை, ஒஸ்றியாவைச் சேர்ந்தவர் என்பார்கள்..//

இக்கருத்தையே நானும் வலியுறுத்த முனைந்தேன். சிங்கள அரச-இராணுவ பயங்கரவாதத்துடன் விடுதலை புலிகளின் வன்முறை - கவனிக்க; நண்பர்கள் கவனிக்க; வன்முறை நடவடிக்கைகள்; விடுதலையின் பேராலான வன்முறைகள் - அவற்றில் நம் போன்றோருக்கு ஒரு உடன்பாடுமில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியறுத்திக்கொண்டிருக்க
வேண்டுமென்பதில்லை; பல காலமாக பல நோக்குகிலிருந்து பேசியாகிவிட்டது; இன்றும் பேச வேண்டிய தேவையும் இருக்கிறது என்பதையும் மறுப்பதிற்கில்லை.

எனினும் சிங்கள அரச பயங்கரவாதத்தினை விடுதலைப்புலிகளின் வன்முறைகளோடு நிறையாக ஒப்பிட்டு பேசுவதை யாரேனும் ஒப்புக் கொள்ள முடியுமா?

அரசு பயங்கரவாதத்தின் எதிராகத் தோன்றியதே ”விடுதலை” இயக்கங்களின் வன்முறை நடவடிக்கைகள் என்பதை எத்துனை முறை விளக்கிக்கொண்டிருப்பது!

ஆனால் இரண்டையும் சமப்படுத்தும் முயற்சிகளை என்னென்பது?!

இதற்கு சுகனும் அவரது சகாக்களும் விளக்கம் கொடுத்தால் மிக்க நன்று.

அன்புடன் பெருந்தேவி அவர்களுக்கு,

உங்களுக்கு என்னை நினைவிருக்குமா என்பதறியேன். நாம் சந்தித்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. அதிருக்கட்டும்.

ஊடகத்துறையினரின் மமதையை எப்படி எதிர்கொள்வது என்ற உங்கள் கேள்விக்கு வருகிறேன். ”இந்து” ஆங்கில இதழை சில மாதங்களுக்கு முன் சில அமைப்பினர் எரித்து போராட்டம் நடத்தியபோது திருவாளர் ராம் தெரிவித்த கருத்தாவது: “காசு கொடுத்து வாங்கித்தானே எரிக்கிறார்கள். தாராளமாகச் செய்யட்டும்,” என்பதே.

வேறுவழிகளில் செய்தால் என்ன நடக்கும் :)

நான் சொல்வது ”சட்டப்பூர்வமான” வழிகளில். நாளை அதற்கான முன்முயற்சிகளை எடுக்க இருக்கிறோம். தற்சமயம் அதை இங்கு வெளிப்படுத்த இயலாது.

நீங்கள் ஐக்கிய அமெரிக்க குடியரசில் இருப்பதால் ஒரு ஆலோசனை :) -
நோம் சாம்ஸ்கிக்கு ”இந்து” ராமின் அரசியலைப் புரிய வைத்து, அவர் இந்தியாவில் தாம் சாம்ஸ்கியின் குடும்ப நண்பர் என்று அலட்டித்திரிவதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கலாமே!

ராஜன்குறை,

தங்களது தொடர்ந்த பாராட்டுகளுக்கு நன்றிகள் :) இங்கு தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து:

//இன்று இலங்கையிலோ, காஸாவிலோ நடப்பதற்கு அரசியல்ரீதியாக தீர்வை வலியுறுத்துவது என்றால் என்ன, அதை யார் செய்ய முடியும், அதில் "நாம்" என்று அடையாளம் கொள்ளும் எதுவும் என்ன செய்யமுடியும் என்று அவர் இத்தருணத்தில் சிந்திக்க முன்வரவேண்டும்.//

இது தொடர்பாக எனது கருத்துக்களை தற்சமயம் விரிவாக வைக்க இயலவில்லையெனினும் அவ்வப்போது தோன்றியவற்றை என் வலைப்பக்கத்தில் முன்மொழிந்து வந்திருக்கிறேன் சமீப காலமாக.

என்து மிக முக்கியமான மொழிதல்களில் சில:

1. விடுதலைப்புலிகள் அமைப்பினர் மீதான விமர்சனங்களைக் கைவிடாமல், ஆனால், அவற்றை முன்நிபந்தனையாக முன்நிறுத்தாமல், தற்சமயம் அவர்களுக்கு, ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, தமிழகத் தமிழர்களும் (”நாம்” என நான் கருத்தில் கொள்வது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பின்னவரைத்தாம்; அதற்கான அரசியல் தேவை இங்குள்ளது - அதாவது தமிழகத்தில். அவர்களை மட்டுமல்ல ஈழத்தில் ஆயுதம் ஏந்திய எக்குழுவினரையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயலும் இந்திய மேலாண்மைக் கருத்தியலை எதிர்கொள்ள வேண்டிய தேவையும், குறிப்பாக, விடுதலைப்புலிகளை ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலைக்குற்றவாளிகள் என்ற பிம்பத்தை உடைத்தெறிய வேண்டிய தேவையும் இங்கு களைய வேண்டியிருக்கிறது. இதை எத்துனை effective-ஆக செய்கிறோமோ அந்தளவுக்கு ஈழப்போராட்டத்திற்கு தமிழக மக்களின் ஆதரவைப் பெருகச் செய்ய முடியும் என்று கருதுகிறேன்) தார்மீக ரீதியிலான ஆதரவையாவது அளிக்க முன்வரவேண்டும்.

2. சிங்கள இனவெறிப் படுகொலைகள் genocide என்ற வகையில் சர்வதேச சமூகத்தின் முன்வைக்கப்பட்டு கண்டனத்திற்கும் UN மற்றும் பிற சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் குறுக்கீட்டிற்கும் வழிவகைகள் செய்ய வேண்டும்.

3. ஈழம் ஒரு தனி நாடாக வேண்டுமா என்பது குறித்து மேற்சொன்ன சர்வதேச அமைப்புகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஒரு referendum நடத்தப்பட வேண்டும்.

இவற்றில் தங்களுக்கு ஏதும் மாறுபாடு இருந்தால் தெரிவியுங்கள். மேற்கொண்டு ஆலோசனைகள் இருந்தாலும்.

ஆனால் கருணா-பிள்ளையான் தரப்பினரின் அப்பட்டமான துரோகச் செயல்பாடுகளை “தலித்” அரசியல் என்ற போர்வையில் ஆதரித்து விடுதலைப்புலிகளை ஒரு முக்கிய காரணியாக நிராகரிப்பது மிக மிக அற்பத்தனமான அரசியல் என்றும் கருதுகிறேன்.

இது குறித்த தங்களது பார்வை என்ன?

சிங்கள இதழாளர் லசந்தவின் படுகொலையைச் செய்தவர்கள் சிங்களத்தரப்பினர் அல்ல; கருணா தரப்பினர்தாம் என்பதையாவது தாங்களோ, எதற்கெடுத்தாலும் ”இதையேதாம் யாம் 1984-லே யாம் முன்பே சொன்னோம்” என்றும் பாடம் ஒப்புவிக்கும் சுகனும் அறிவீர்களா? இலங்கையில் “நீண்ட கால மக்கள்-யுத்தப் பாதையை வலியுறுத்தினோம்” என்றும் சொல்லும் சுகனின் கருத்து உங்களுக்கு மிகுந்த கவனத்திற்கு உரியதாகப்படுவதாயின் எப்படி என விளக்க வேண்டுகிறேன்.

இலங்கையில், சீனாவில் நடந்தது போன்ற “நீண்ட கால மக்கள் யுத்தம்” என்பது நடைபெறச் சாத்தியம் உண்டா?? சீனா ஒரு மிகப் பெரும் நிலப்பரப்பு. அங்கு மாவோ அத்தகைய யுத்த தந்திரத்தை வைத்தது மிகுந்த அரசியல்-. யுத்த- காரணங்கள் கருதி.

அந்த உதவாப் பெருங்கதைகளை 1984-இல் தாம் அல்லது தாம் சார்ந்த இயக்கம் முன்வைத்தது என்று நினைவு கூர்ந்து சுகன் சொல்ல வருவது என்ன? முரட்டு புலி எதிர்ப்பு என்பதற்கு மேலாக வேறென்ன? கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் புலி எதிர்ப்பாளர்கள் செய்து கிழித்தது என்ன? இந்திய ஆட்சியாளர்களுடனும் இலங்கை ஆட்சியாளர்களுடனும் கூடிக்குலவியதற்கும் ஒரு விடுதலைப்போரைக் காட்டிக் கொடுத்ததற்கும் மேலாக இத்தரப்பினர் செய்தது என்ன?

புலிகளும் இந்திய-சிங்கள அரசுடன் பல சந்தர்ப்பங்களில் சமரசம் செய்திருக்கிறார்கள் என்று சப்பைக்கட்டுக் கட்ட வேண்டாம். தனி ஈழம் அமைந்தாலும் அது இந்திய பிராந்திய மேலாதிக்கத்திற்கு ஆட்பட்டதாக, அல்லது அமெரிக்க மேலாண்மைக்கு அடிபணிந்ததாக, இருக்கும் என்பதைக் காரணம் காட்டி அதை நிராகரிக்க வேண்டாம். அதையேதான் இன்று சிங்கள அரசும் செய்துகொண்டிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

அதை வலியுறுத்தும் நிலைப்பாடு, மேற்சொன்ன ஆதிக்கங்களின் கீழ், சிங்கள இனவெறி அரசை ஒப்புக்கொள்வேன், கருணா- பிள்ளையான் போன்ற காட்டிக்கொடுப்பாளர்களை - படுகொலையாளர்களை ”தலித் அரசியல்” என்ற ஒப்புப் போர்வையின் கீழ் ஒப்புக்கொள்வேன், ஆனால், ஒரு மிகச் சாதாரண தேசிய விடுதலைப்போராட்டத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்பதற்கு ஒப்பாகும்.

ராஜன் ... தேசியம் குறித்த எனது தேடல்களை நீஙகள் நன்கு அறிவீர்கள்.
அவற்றையும் மனதில் வைத்து இக்கருத்துக்களை பரிசீலனை செய்யுங்கள்.

சுகன், ஷோபா சக்தி, அ. மார்க்ஸ் இத்தரப்பினர் இன்று எடுத்திருக்கும் சிங்கள ஆதரவு நிலைப்பாடு மிகக் கேவலமானது என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அடடா ... பாரடா ... இவன் எங்களை சிங்கள ஆதரவு நிலைப்பாடு என்று சொல்கிறான் என்று மேற்சொன்னவர்கள் நக்கலடித்தார்களானால் (பதறக்கூட மாட்டார்கள் ... நக்கலுக்கு மேலாக கருத்தாடலுக்குத் தயாரான நபர்கள் கூட இல்லை) ரயாகரன், யமுனா அல்ல வளர்மதி என்பதை மறக்க வேண்டாம் என்றும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மிக்க நன்றிகள்.

தங்களதும் பிற எவரானதும் பகிர்தலுக்கு தயாராக காத்திருக்கிறேன்.

குறிப்பிட மறந்துட்டேன் ராஜன்.

காசா நிலப்பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினர் மீது இஸ்ரேல் கைகாட்டி தொட

valarmathi
2009-04-21 08:44:00
mathi2006@gmail.com

Dear Editor,
Thanks for allowing my comment here. However, i couldnt see some final portions of my comment. In case there is some technical problem due to the length of my comment i would like to add the remaining portion here.
Thanks
valar ...

மிக்க நன்றிகள்.

தங்களதும் பிற எவரானதும் பகிர்தலுக்கு தயாராக காத்திருக்கிறேன்.

குறிப்பிட மறந்துட்டேன் ராஜன்.

காசா நிலப்பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினர் மீது இஸ்ரேல் கைகாட்டி தொடர்ந்து குற்றம் சாட்டுவதற்கும் சிறீலங்கா அரசு அதே போன்று புலிகள் மீது கைகாட்டி குற்றம் சாட்டுவதற்கு ஒப்புமை காட்டி சற்று விலகி நின்று சிந்தித்துப் பார்க்கவே சுகனைக் கோரியிருந்தேன்.

மற்றபடி, நீங்கள் கூற முனைந்தது போல, இருவரில் எவரையேனும் குற்றவாளியாக்கு என்று பிடித்து நிறுத்துவது எனது நோக்கமல்ல. காசாவில் அங்கனம் பேசுவது சாத்தியமில்லை என்பதையே சுட்ட முனைந்தேன்.

காசாவில் அங்ஙனம் சுட்ட முடியாதென்றால் ஈழப்போரில் மட்டும் சுகன் புலிகளை கைகாட்டி குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது எங்ஙனம்? அதைச் சுட்டவே முனைந்தேன்.

எதிர் முனைகளுக்குள் மாட்டிக் கொள்வதையும் எதிர்-அரசியலையும், சில தெளிவுகளின் பிற்பாடு தொடர்ந்து பேசியும் எழுதியும் செயல்பட்டும் வருகிறேன். அதை எனது எழுத்துக்களை வாசித்தவர்களுக்கு தெரியும். நீங்கள் வாசிக்கிறீர்களா என்பதறியேன்.

அன்புடன்
வளர்...
13/02/09 19:30

It was at this point that Perundevi developed my idea of reacting against the media more concretely to send our objection to Noam Chomsky which we pursued and many friends participated with enthusiasm. In fact, after this point the sharings and comments by all those who were following the exchanges focused on how to draft the "memorandum" that we were thinking to send to Chomsky. However, Sugan or his friends never took the initiative nor showed any interest in attempt to write back to Chomsky. Instead he simply retorted back to his initial position and totally out of context sectarian debate on LTTE in the following comment:

sugan said...

இனிய வளர்!

நான் மீண்டும் 1984-இல் என்று சொல்லி ஆரம்பிக்கப்போவதில்லை!
அது மிகப்பெரிய வன்முறை இல்லையா?

அரசியல் ஆய்வு, இலக்கியம், மனிதம் எல்லாம் முடிந்துவிட்டது என்று சொன்னேன், புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். துயரங்களைச் சொல்ல மொழி முடிந்துவிட்டது எனச் சொன்னேன்!

எஸ்.ரா.வின் நெடுங்குருதி உதாரணம் சொன்னேன், மேலும் இலக்கிய உதாரணம் கேட்டால் நான் எங்கு போவேன்!

பாரத தர்மம் நாடகம் பார்த்தீர்களா?
பாண்டவர் தம் குழந்தைகளை அரக்கு மாளிகையிலிருந்து அகற்றி அதற்குப் பதிலாக சண்டாளனின் குழந்தைகளை அங்கு தீக்கு இரையாக கொடுத்தபோது (குந்திக்கு இது எற்கனவே தெரியும்) குந்தியிடம் சண்டாளனின் மனைவி தன் நெஞ்சில் அறைந்து நியாயம் கேட்கிற உவமைகள் எல்லாம் தேடித்தேடிச் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா,
நம் துயரத்தை எப்படி நான் உங்களுக்குப் புரிய வைப்பேன்.
கனத்த மெளனம் இறுக்கமான மெளனம் மோனம்!

எல்லோரிடமும் அனுதாபத்தையும் அச்சத்தையும் உருவாக்கும் இழிந்த நிலைக்கு வந்து விட்டோம். இனியென்ன! பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்னையில் எனது 'நிலைப்பாட்டை' இப்போது சுருக்கமாகவோ விரிவாகவோ பேசும் மனநிலையில் இல்லை. பின்னர் நேரில் அல்லது ஊடகத்தில் பேசலாம்.
மோசே தயான் காலம், ரபீன் காலம், சிமோன் பெரஸ் காலம், நெட்டன்யாகூ காலம் இப்படி நீங்கள் பேச நான் கேட்டுக்கொண்டிருப்பேன்!
நான் மீண்டும் சொல்லுவேன் ;1984 இல் .....

நாகார்ஜுனன் - 1998-இல் ஜெயசிக்குறு நடவடிக்கைக்குப்பின் அரசு வவுனியாவில்
உருவாக்கிய பூந்தோட்டம் அகதி முகாம் பத்து வருடங்களின் பின் இப்போதும் இயங்குகிறது. உலகத்தில் கேவலமான வாழ்க்கை உண்டென்கில் அதற்கு உதாரணம் பூந்தோட்டம் அகதி முகாம்தான்.
13/02/09 22:57

I had my response posted there and it soon turned out another debate between the earlier mentioned person and Sugan. However, since most of us felt to drop it and concentrate on the draft to Chomsky it stopped.

My point here is, the portion from Mr. Theonis' comment is a deliberate and sectarian way of twisting a complex debate to his own end. I can understand that it is the usual way of sectarian people who always want to prove that they are the right people and that they stand on the side of the "historical victims".

I just wish to register here that Mr. Theonis' way of twisting the facts of a very recent "debate" is totally unethical and sectarian and differs not much from the powers that be.

Thanks
Valarmathi.

Dr. V. Pandian
2009-04-22 07:02:00
porkkaiponds@yahoo.co.in

மிக முக்கியமான கட்டத்தில் ஈழப்போர். உலக ஏகாதிபத்தியங்களே எதிராக இருந்தும் தாக்குப்பிடிக்கின்றனர் புலிகள். ஈழ மக்களின் மன உறுதியை மிஞ்சியது உலகில் ஏதேனும் உண்டா?

கருணாநிதிக்குப் பைத்தியம் பிடிக்கும் என்று எழுதினோம்.

நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு.

பொது வேலை நிறுத்தமாம்;

பேருந்துகள் ஓடுமாம். அரசு அலுவலகங்கள் வேலை செய்யுமாம். கடைகளை மூடச்சொல்லக் கூடாதென்று எச்சரிக்கையாம்.

ஆனால், பொது வேலை நிறுத்தமாம்!

கருணாநிதிக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?

இல்லை, அவர் நாமெல்லாம் பைத்தியக்காரர்கள் என்று நினைக்கிறாரா?

ve mathiarasan
2009-05-03 07:29:00
mathi.ppn@gmail.com

i got new informative your article. thanking you.

Guru.Radhakrishnan
2009-09-14 03:25:00
radhakrishnan.guru9@gmail.com

I keenly read the article of Paa.Jayaprakasam published.He is only man who is watching the so callrd leaders of various party7 and visualising their motives and bring to the peoples of tamilnadu.My special appreciation to him personallly.Please convey to him.

raj
2009-10-06 05:06:00
raj.race@gmail.com

how to join(sign up) keetru



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP