Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
முதலைக் கண்ணீர்

கிருஷ்ணகுமார்


முதலைக் கண்ணீர் என்று சொல்வார்களே, அப்படியென்றால் என்ன என்று யோசித்தேன்!

Steve Irwin விலங்குகளிடமிருந்து தப்பித்து கடைசியில் ஆஸ்திரேலியாவில் கடலுக்கடியில் ஒரு ஸ்டிங்க் ரேவினால் குத்தப்பட்டு வெளியே வந்து செத்தானே, ஸ்டீவ் இர்வின்! அவன் சாவு குறித்து பல்வேறு நிபுனர்கள் தங்கள் கவலைகளைத் தெரிவித்து கடைசியில் ஒரு சொட்டு கண்ணீர் வலுக்கட்டாயமாக விட்டு முதலைகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு உண்டு என்று தெரிவித்தனர்.

உயிரோடு இருந்த போது இர்வின் முதலைகளிடம் புரிந்த சாகசம் என்ன? அழுத பிள்ளையும் வாயடைக்கும்! முதலைகளின் கோரப்பற்களிடையே கால்கள் விட்டு தாவி இர்வின் நடனமாடும் காட்சிகளை உலகில் பல்வேறு நாட்டு மக்களும் கோக் அருந்தியபடி டிவியில் டின்னர் சாப்பிடும்போது பார்த்து ரசித்திருப்பர். எங்கள் வீட்டு பிள்ளை கூட டிஸ்கவரி சேனல் காட்டினால் தான் சாப்பிடும். இர்வினைக் காட்டிப் பயமுறுத்தினால் தான் கழிப்பறை பக்கம் தலைகாட்டும்.

பெரிய ஆமையின் அருகே எப்படி தலை காண்பிக்கின்றான் பாருங்கள்! ஆமையைப் பார்ப்பதா, அதனருகே இருக்கும் 'பிகரை'ப் பார்ப்பதா அல்லது இர்வினின் சிரித்த மூஞ்சியைப் பார்ப்பதா? இவனா மீனால் குத்தப்பட்டு வீழ்ந்தான்?.

என் கண்களில் ஒரு சொட்டு முதலைக் கண்ணீர் வந்தது.

தன்னால் முடிந்த மட்டும் விலங்குகளைப் பந்தாடி கோமாளித்தனம் புரிந்தவன் அவன்! அவனைப் பற்றி பேசாதீர்கள்! விலங்குகளைக் கொடுமைப்படுத்த யார் அவன்? என்று அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசினால் ஒரு மூதாட்டி! பத்திரிக்கைகள் கடும் கண்டனம் தெரிவித்தன! முதலைக் கண்ணீர் சொட்டியது!

கடலுக்கடியில் இந்துயப் பெருங்கடலின் ஆமை நூற் ஆண்ட்டுகள் ஆகுமாம்! அது 76 வயதின் போது இர்வின் பிடித்துக் கொண்டு அருங்காட்சியகத்தில் "இப்படி சிரி! இப்படி சிரி! என்று ஆமையின் முகவாய்க்கட்டைப் பிடித்துக் கொண்டுபடுத்த, வேண்டா வெறுப்பாய்,

சிவாஜி போன்று "சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்!" என்று ஆமை அழுதது.

இந்த ஆமைக்கு நல்லது பண்ணிய அந்தப் புண்னியவானா மேலுலகம் ஆமைக்கு முன்னால் சேர்ந்தார்? பாவம் தான்! ஆமையின் சொற சொறப்பான தோலைக்கூட மென்மையாகத் தடவி ஆமையைப் பற்றி நல்லது கெட்டது நமக்கெல்லாம் ரசம் சாதம் சாப்பிடும்போது சொல்லிக் கொடுத்த மகானா தவறிப் போனார்?.

கண்ணீர் விட முதலை ஊர்ந்தது.


ஜெமினி சர்க்கஸில் இருந்த நண்பன் ராஜசிங்கம் புலிக் கூண்டினில் சாட்டையடித்துப் புலிகளைக் கட்டுப்படுத்தி கரகோசம் வாங்கினார். ராஜ சிங்கம் பேசும் போது கூட சிங்கம் போல கர்ஜனை புரிவார்! ஒரு நாள் அருகே இருந்தப் புலியினைச் சாட்டையினால் சொடுக்கவே கோபம் கொண்ட பொல்லாத புலி அவர் கையினைக் கடித்து பலகாரம் பண்ணியது. கருணை காட்ட வேண்டாமோ?. சித்திரவதை பண்ணினால் அப்படி தான்!

முதலைக் கண்களால் வள்ளலாராய் கருணை காட்டினேன்.

பின்ன என்ன சார்! பின்ன என்ன மேடம்! பின்ன என்ன ஐயா! பின்ன என்ன அம்மா!

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்! கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! என்று நீங்கள் தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தீர்கள்! ரயில்வே தண்டவாளத்தில் இருக்கும் கருங்கற்கள் என் பயினில் எப்பவும் இருக்கும்! அந்த தரித்திரம் பிடித்த நாய் வந்தது, பைரவனை ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன்! கருங்கல் விட்டால் "சர்" தான்! நம்மைக் கடிக்காமல் விட்டால் சரி!

செல்லமாக வளர்க்கப்பட்ட நாய்க்குட்டி படுக்கையின் மீது ஏறத் தவிக்குமாம். அதற்காக சிறு சிறு படிக்கட்டுக்களாக மரத்தில் நா! படிகளைக் கட்டி வைத்தேன். தன் பிஞ்சு கால்களால், தாவித் தாவி ஏறி என் மனதில் இடம் பிடித்தது. இர்வினும் இதைத் தான் சொல்லிக் கொடுத்தான். அப்படி பட்ட கருணாமூர்த்தியைச் "சர்!" மீன் விலா அம்பெனத் தைத்து ரணமாக்கியது.

மகாபலிபுரத்து முதலையாய் மண்ணில் ஏறித் தலையைத் தூக்கி சற்று கருணைப் பார்வை பார்த்து விட்டு மீண்டும் சகதியில் நுழைந்தேன்!

வீட்டில் கரப்பான் வந்தது. சனியன்! அது வந்தால் தொல்லை தான்! சக்கென்று நசுக்கி கூளமாக்கினேன்! சிலந்தி வந்தது! வந்தால் நமது குழந்தைகள் கடிபடுமே என்று செருப்பு கொண்டு அடித்து துவம்சமாக்கினேன்! கண்ணீராவது! வெந்நீராவது! முதலையில் வால் தூக்கி அடித்தது!

மகாபலிபுரம் போகும் போது முதலைப் பண்ணையில் சற்று நேரம் ஒதுக்கி விட்டு போய் பாருங்கள். அவர்களைக் காப்பாற்ற நாங்கள் பெரும் முயற்சி செய்கிறோம்! இரண்டு முதலைகளோடு ஆரம்பித்தோம்!

இப்போது 57 முதலைகளும் சுமார் 32 குட்டிகளும் உள்ளன. எங்களாலான கைங்கரியம். முட்டை பொரித்துக் குஞ்சுகள் அடைகாக்கப்பட்டன. இந்த மாதிரி கைங்கர்யம் பண்ணும் முதலை என் கையைக் கடித்தால், பாவமில்லையா?

பார்க்கும் உங்களுக்குக் கண்ணீர் வரவில்லையா?. முதலையாயிருந்தாலும், மனிதக் கண்ணிர் விடுங்கள்! எங்களைப் போன்று முதலைகளைக் காப்பாற்றும் இர்வினைப் போன்ற மனிதர்களை நினைத்து!

அடுத்த முறை பக்கத்தில் வந்து பாருங்கள்! ஒரே கடி தான்!

நான் முதலை தான்! மாறுவது கடினம்! கண்ணீர் விடுவதற்கு கண்ணைத் திறந்து மூடப்பார்க்கிறேன்! கடற்கரை மணல் வந்து நிறைந்து முதலைக் கண்ணீர் வந்தது!

எதற்கும் இளகாத கல்லுளிமங்கன் என்று நாமகரணம் சூட்டுங்கள்! அஞ்சா நெஞ்சன் என்று கூவுங்கள்! பணியமாட்டேன் அடுத்த மீன் குத்தும் வரை! மீன் விட்டால் ஆமை! ஆமை விட்டால் முதலை! முதலை விட்டால் பன்றி!

கருணையே வடிவாய் பிடித்து ஆட்டுவித்தால் போச்சு! என் மூலமாய் எவ்வளவு குழந்தைகள் சமர்த்தாய் சாப்பிடுகிறது பாருங்கள்! அஞ்சா நெஞ்சர்கள் இந்த மாதிரி கிண்டல்களுக்குப் பணியப்போவதில்லை! முன் வைத்த காலை பின்வைக்கமாட்டார்கள்!

பின்னால் வைத்தால் முள் குத்தினாலும் சரி!

அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டேன்!

- கிருஷ்ணகுமார்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com