Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தண்டிக்கப்பட வேண்டியோர்க்கு மறுபடியும் மகுடமா?

ஆனாரூனா


Hordings Hording - (ஹோர்டிங்) என்றால் விளம்பரப் பலகை, பழுதுபார்க்கப்படும் அல்லது புதிதாய்க் கட்டப்படும் கட்டடத்தின் அலங்கோலத்தை மறைக்க வைக்கப்படும் மறைப்பு, என்றும் பொருள்படும். இம்மாதிரியான விளம்பரத் தட்டிகளை, அல்லது மறைப்புகளை வைப்பவர்களை விளம்பரதாரர் என்று அகராதி பொருள் தரவில்லை. Hoarder என்றால் பதுக்கல் பேர்வழி, உண்மைகளை மறைக்கிறவர் என்றே குறிப்பிடுகிறது.

‘புகழ்பெற்ற’ சென்னை மியூசிக் அகாடமியின் வளாகம் முழுவதும் Hoarding அமைக்கப்பட்டு - ‘அகாடமி’யின் பெயரே மறைகிறது என்றால் அங்கே பல Hoarders - புதுக்கல் பேர்வழிகள் இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.
இப்படி ஒரு முடிவுக்கு வர என்ன காரணம்? உயர் நீதி மன்றத் தீர்ப்புத்தான்!

1929 இல் தொடங்கப்பட்ட சென்னை மியூசிக் அகாடமிக்குள் அதன் நிறுவனத் தந்தையரை அமுக்கி மறைத்து விட்டுப் புதிதாய் - சங்க விதிகளுக்கும், தார்மீக நெறிகளுக்கும் புறம்பாக வந்து ஆக்கிரமித்துக் கொண்டவர்களால்

* கலைஞர்களை ஏமாற் றும் வழிப்பறிகள்,
* கலைஞர்களுக்கு வாய்ப்புத் தருவதற்காக நிர்ப் பந்திக்கப்படும் காம லீலை கள்,
* நுழைவுக் கட்டணச் சீட்டுகளில் கள்ளச் சந்தை,
* முறைகேடான ஒப்பந் தங்களால் பணப்பதுக்கல்,
* ‘செக்’ மோசடிகள்,
* வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிதிகளில் திரை மறைவு வேலைகள்,
* வரவு செலவுக் கணக் கில் நம்பகத் தன்மையற்ற பொய்மை -

என்று பல்வேறு விதமான ஊழல்கள் நடப்பதாக மியூசிக் அகாடமி உறுப்பினர்களான - ஆடிட்டர் பார்த்தசாரதியும், வழக்கறிஞர் வேணுகோபாலும் தொடர்ந்த வழக்கில், பல தடைகளைக் கடந்து இப்போது பதுக்கல் பேர் வழிகளின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, முறையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது உயர்நீதி மன்றம். வழக்கு தொடரப்பட்டதும் பல அதிர்ச்சி தரும் மர்மங்கள் வெளியாகின.
இந்திய ‘விடுதலை’ப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ஆங்கில மோகத்தால் இந்திய - குறிப்பாகத் தென் னிந்திய இசையும் மறைந் தொழியுமோ என்கிற பதைப்பில், இந்திய(!) இசைக்கு வளம் சேர்க்கும் முயற்சியாக இசைப்பிரியர்களான செல்வந்தர்கள் பலர் - சாதி மதம் பாராமல் - ஒன்றுபட்டு உருவாக்கியதுதான் மியூசிக் அகாடமி.

தொடங்கியபோது பார்ப்பனர் அல்லாதாரே மிகுந்திருந்தனர். நிறுவனர்களில் இருவர் மாத்திரமே பார்ப்பனர்கள்.
அகாடமிக்குப் பெருமி வரும் செல்வாக்கைப் பார்த்த பலர் பின்னால் வந்து நுழைந்தார்கள். மெல்ல மெல்ல மியூசிக் அகாடமி ஒருசில பணக்காரப் பார்ப்பனர்களின் முற்றுகையில் வீழ்ந்தது. பணக்காரப் பார்ப்பனர்களின் சாம்ராஜ்யத்தில் இசை ஆர்வத்தைத் தவிர வேறு எந்த ஆசையும் இல்லாத ஏழை - நடுத்தரப் பார்ப்பனர்களும் அவமதிக்கப்பட்டார்கள்.

Music Academy உறுப்பினர்கள், பொறுப்பு வகிப்பவர்கள் திராவிடராயிருந்தால், ஏழைப் பார்ப்பனராக இருந்தால் குற்றேவல் புரியும் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று ஆக்கிரமிப்பாளர்கள் விரும்பினார்கள். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சங்க விதிகளையெல்லாம் சங்கத்தின் செயற் குழுவிலோ பொதுக்குழுவிலோ ஒப்புதல் பெறாமல், அரசுப் பதிவாளரிடமும் காட்டாமல் விதிகளைக் கழித்தும் நுழைத்தும், திருத்தியும் மோசடி செய் தார்கள் பிரபல பணக்கார ஆக்கிரமிப்பாளர்கள்.

தேர்தல் நடத்தாமலேயே சர்வாதிகாரிகளாகச் செயல்பட்டார்கள். சங்கத்தின் அமைப்பு விதிகளிலேயே (பைலா) முறை கேடு நடந்திருப்பதை ஆதார பூர்வமாக மனுதாரர்கள் நிரூபித்ததும் புதிய தந்திரத்துக்குத் தாவினார்கள்.
மியூசிக் அகாடமி 1975 ஆம் ஆண்டில்தான் தொடங் கப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டி போட்டார்கள். இந்த வரலாற்றுப் புரட்டையும் உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.

1929 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமைப்புதான் நியாயமானது. அதன் பைலாதான் உண்மையானது; நிலையானது.
1975 - 1979 ஆம் ஆண்டு களில் தாக்கல் செய்யப் பட்டதாகக் கூறப்படும் எந்த ஆவணமும் செல்லத்தக்கது அல்ல
என்று நீதிமன்ற ஆணைப்படி ஆய்வு நடத்திய அரசு சங்கப் பதிவாளர் பி.கே. குணசேகரன் பிறப்பித்த ஆணை உயர்நீதி மன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விட்டது.

சுமார் 1,500 அங்கத்தினர்களைக் கொண்ட மியூசிக் அகாடமிக்கு கோடிக் கணக்கில் ஏராள மான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களின் பலன்களை ஒரு சில பார்ப்பன குடும்பங்களே அறு வடை செய்து பதுக்கிக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் களும், ஏழை - மத்திய தரவர்க்கத்துப் பார்ப்பனர்களும் தொடங்கிய போராட்டத்தில் வஞ்சிக்கப்பட்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மியூசிக் அகாடமி - ஃபார்தி பிராமின்ஸ் - பைதி பிராமின் - ஆஃப் தி பிராமின்
என்று எக்காளமிட்ட மோசடிப் பார்ப்பனர்களை, ஏமாற்றப்பட்ட திராவிடர்களும், ஒதுக்கப்பட்ட பார்ப்பனர்களும் வென்றிருக்கிறார்கள். மியூசிக் அகாடமியில் நடந்தது ஆரிய - திராவிடப் போராட்டம் என்றால் திராவிடர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நடந்தது வர்க்கப் போராட்டம் என்றால் பூர்ஷுவாக்கள் முறியடிக்கப் பட்டிருக்கிறார்கள்.

தமிழக முதல்வரையும் ஆட்டிவைப்போம். குடியரசுத் தலைவரையும் குற்றேவல் புரிய வைப்போம் என்று மார்தட்டிய கூட்டம் இப்போது அப்பாவிகளாய், சங்கத்தைக் கட்டிக் காத்த செயல் வீரர்களாய், புனிதர்களின் ஒப்பனையில் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிறார்கள். முறைகேடு நடந்துள்ளது; விதிகளை மீறி இனியும் நடக்கக் கூடாது என்று நீதிமன்றத்தால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் மறுபடியும் மியூசிக் அகாடமியைத் திருடிக் கொள்ள உறுப்பினர்களிடம் ஒப்புதல் கேட் கிறார்கள்.

நவம்பர் 6 ஆம் நாள் நடக்கும் தேர்தலில் இந்த மோசடிப் பேர்வழிகளுக்கு சங்க உறுப்பினர்கள் சரி யான தீர்ப்பு வழங்கு வார்களா?

- ஆனாரூனா

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com