இங்கும்... அங்கும்...
- பா. சத்தியமோகன்
இருக்கும் பாதைவிட்டு சிறிதும்
நகர இயலாக் கால்கள்
நடுத்தர வர்க்கத்தின் விரல்களுடன் அலைகின்றன
சுதந்திர மூச்சை பேருந்து நெரிசல் சன்னல் ஓரம் வழியே
மூக்கினால் அலசிப் பார்க்கின்றன
இருக்கும் பாதைகளில் குத்தும் கண்ணாடிக் கற்கள் பற்றி
அதிகமாய் எவருடனும் புலம்புவது இல்லை
விளக்கி விளக்கிக் காட்டினால்
சொன்னதே தவறு என்பதாய் முடியும் பேச்சுகள்!
நீதி வழங்கிட உரை அரசர்கள் ஆயிரம்; ஆனால்
எடுத்துச் செய்திட நீளும் கைகள் சுருங்கிடும்
கண்ணாடித் தொட்டி மீன்கள் இட்ட குஞ்சுகள்
கடலுக்குப் போகுமென்று
கனவு கண்ட கண்களுடன் தாய்மீன்களை
வறுத்து உண்பர் வாங்கி வளர்த்தோர்!
தாய் சென்ற பாதை புரியாமல் நடுத்தர
மீன்குஞ்சு இங்கும் அங்கும் வளையவரும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|