எல்லாம் நினைப்புதான்
ராஜ்ஜா
தூங்குமூஞ்சி திங்கட்கிழமை
தூங்கித் தூங்கியே
மூன்று திங்கட்கிழமைகளை
பிரசவிக்கும்.
நான்கு திங்கட்கிழமைகளுமே
ஒன்றோடு ஒன்று
கட்டிப் பிடித்து
புரண்டு அழும்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும்
வெள்ளிக்கிழமைக்காக
ஏங்கித் தவிக்கும்.
சனியும் ஞாயிறும்
வெள்ளிக்கிழமைக்கு
பல்லக்கு தூக்கும்.
சனி சனியனல்ல.
இனியன்.
ஞாயிறோடு கைகோர்க்கும்
வல்லமை
சனிக்கு மட்டுமே உண்டு.
:ஞாயிறுக்கு இரையாகிப் போகும் சனி.
சனிக்கு விருந்தாய் அமையும் ஞாயிறு.
சனியும் ஞாயிறும்
பூபாள ராகமிசைக்கவே
பிறந்த இரட்டையர்கள்.
வாரம் முழுவதுமே
இரட்டையர்களின்
ஆட்சியாகவே இருந்தால்...
எல்லாம் நினைப்புதான்
என்று கிண்டலடிக்கிறது
மரித்து எழுந்துகொள்ளும்
தூங்குமூஞ்சி திங்கட்கிழமை
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|