Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
ஆகஸ்டு 2008
ம. அருணாதேவி கவிதைகள்

இனம் புரியா இம்சை

உடம்பு கழன்று விடும் போல் இருக்கிறது
சுடிதாரை நான்தான் மாட்டினேனா? தெரியவில்லை
பொட்டு வைத்தேனா? ஞாபகம் வரவில்லை
காது கம்மல்கள் இருக்கின்றனவா? குழப்பமாய் இருக்கிறது
துவைத்து காய்ந்த துணி விழுவது போல் தரையில் விழுகிறேன்
உடம்பிற்குள் ஏதோ சாத்தான் புகுந்து விட்டது
உடம்பில் காய்ச்சல் சூடு உயர்ந்துகொண்டே இருக்கிறது
என் உடம்பு பிணமாகிவிட்டது போல் இருக்கிறது
என்னவோ நடக்கப் போகிறதுபோல் இருக்கிறது
என் அருகில் வந்து முகர்ந்து பார்க்கும் நாயை விரட்ட முடியவில்லை
நாயைப் போலவே பயத்தையும் மரணத்தையோ விரட்ட முடியவில்லை
வாகனத்தில் நசுங்கிய நாய் போல் உடம்பு கூழாகிறது
என் உடம்பை தொடவரும் நாய்
மரணமா? பயமா?
தெரியவில்லை.

தெரியாது

புது அலுவலகத்தில் நாற்காலி கிடைக்கவில்லை
நின்றுகொண்டு இருக்க வேண்டி இருக்கிறது
எதிரில் சிம்மாசனங்கள் இருக்கின்றன
தேக்கு மர நாற்காலிகள் இருக்கின்றன
குஷன் நாற்காலிகள் இருக்கின்றன
ஒவ்வொன்றிலிருந்தும் வெவ்வேறு வகையான
கேள்விகள் எனை நோக்கி
எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாது
மூக்கைத் தெடுவதற்கு தலையைச் சுற்றிவரச் சொல்லுகிறார்கள்
எந்த குறுக்கெழுத்துப் போட்டிக்கும் பதில் தெரியவில்லை
தெரியாது என்ற பதில்களால் எனை நிரப்புகிறார்கள்
நான் நின்றுகொண்டு இருக்கின்ற இடத்தில்
நின்றுகொள்ள அடுத்தவர் வரும் வரைக்கும்
நான் நின்றுகொண்டே இருக்க வேண்டும்
நான் இந்த அலுவலகத்திற்கு வந்த புது ஆள்
நாற்காலி இல்லாத ஆள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
almatheen
2008-08-29 10:12:00
almatheen@gmail.com

உங்களுடைய "தெரியாது" கவிதை மிக அருமை...என் முந்தைய நாட்களை நினைவில் கொண்டு வந்து விட்டீர்கள்..

MUTHUBAARATHI
2008-10-06 09:39:00
tamilpriyan@bsnl.in

அன்புள்ள நண்பரே

வணக்கம். தங்கள் கவிதை எப்போதும் அருமை.
வாழ்த்துக்கள்.......... முத்துபாரதி



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP