அறுவை சிகிச்சையில் பயன்படும் நூல் எது?
அது நூல் அல்ல, நூல் போன்ற நரம்பு. அதற்குப் பெயர் கேட்-கட். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். அறுவை சிகிச்சை செய்து முடித்ததும் இந்த கேட்-கட் நரம்பு நூலினால்தான் மருத்துவர்கள் தையல் போடுவார்கள். இந்தத் தையலை மீண்டும் பிரிக்க வேண்டியது இல்லை; பிரிக்கவும் முடியாது. அறுவை செய்யப்பட்ட ரணம் ஆறிக்கொண்டு வரும்போது இந்த நரம்பு நூலும் உடலோடு சேர்ந்துவிடும்.
இந்த நூல் நரம்பு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? செம்மறியாட்டின் வலுவான குடல்தசை நார்களிலிருந்துதான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|