Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruHistoryIndia
இராபர்ட் கிளைவ்

Robert Clive இராபர்ட் கிளைவ் இளவயதில் லண்டன் கடைக்காரர்களை மிரட்டி மாமூல் வாங்கும் ரௌடியாக இருந்தான். இந்தியாவிற்குச் சென்றால், பெரும் செல்வத்தோடு திரும்பலாம் என இங்கு வந்தான். முதலில் துறைமுகத்தில் கணக்கு எழுதும் குமாஸ்தாவாக இருந்தான். பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைப் பிடித்தபோது முஸ்லீம் போல வேடம் தரித்துத் தப்பி ஓடினான். பிறகு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ராணுவத்தில் சேர்ந்து தனது இரக்கமற்ற தந்திர புத்தியால், அதன் தளபதியாகி இந்தியாவையே ஆட்டிப்படைத்தான்.

வங்களத்தில் பிளாசியுத்தத்தில் வென்ற கிளைவ் ஆற்காட்டு நாவாப் முகம்மது அலிக்கு அதனை சந்தோஷத்துடன் தெரிவித்த கடிதத்திலிருந்து.......

“முர்ஷிதாபாத்தை அதன் ஏராளமான வளங்களோடு நான் கைப்பற்றியதை எதனாலும் தடுக்கமுடியவில்லை. நான் இந்நாட்டை அழிக்க வரவில்லை. இந்த நகரத்தை ஆளுவதற்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அதன் பெரிய மனிதர்களிடம் விட்டுச் செல்கிறேன். அவர்கள் தைரியமான நல்ல மனிதர் ஜாபர் அலிகானைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த மாகாணங்களில் சந்தோஷம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் மூலம் கம்பெனிக்கு பல அனுகூலங்கள் கிடைப்பதோடு - இங்கு ஒரு இடத்தில் கூட பிரெஞ்சுக்காரன் காலூன்ற முடியவில்லை என்பது ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது. இங்கு உள்ள பெரிய மனிதர்கள் தங்கள் நன்றியை எனக்குத் தெரிவிப்பதுடன் வெகுமதியும் கிடைக்க அரசவைக்குப் பரிந்துரைத்துள்ளார்கள். இந்த வெற்றியின் சந்தோஷத்தை நீ கொண்டாடுவதை நான் பார்க்க வேண்டும். உனக்காகச் சண்டையிட்டு உண்மையான நட்பின் அடையாளங்களை நான் உனக்குக் காண்பித்ததைப் போன்ற சந்தோஷம் வேறு எதுவும் எனக்கு இந்த உலகில் இல்லை”.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com