இசைவாய் பேசுவதே அலுவலக மொழி
ப.நாராயணன்
உருண்டு திரண்ட தோள்களை கண்டு
பயந்தது ஊர்
அதை உருட்டி விளையாடியது
பணம் கொழிக்கும் தனியார் நிறுவனம்
தாவணி குமரிகளுக்கு மன்மதன்
அலுவலக ஆங்கில குமரிகளுக்கு அடிமை!
மறுத்து பேசாமல் இசைவாய் பேசுவதே
அலுவலக மொழி
ஆயிரம் முறைகள் ஏறி இறங்கிய பிறகும்
அடக்கத்தோடு ஆயிரத்தொன்னாவது
முறையும் இறங்க வேண்டும்
வேசியின் வடிவில் அதிகாரிகள்
அன்புடன் மதுகடைக்கு அழைத்துச் சென்று
அர்ச்சனை செய்வார் அடுத்த மாத
வேலை இலக்கு பற்றி!
வேலையில் சேர கல்வி சான்றிதழ்கள்
தேவையில்லை!
தேதி குறிப்பிடாத ராஜினாமா
கடிதம் போதும்
அடிமையாய் இயங்க
அபினுக்கு பதிலாய்
அம்பானியின் கதை சொல்லப் படுகிறது
வெற்றியின் கனவுகளோடு
தோற்றுக் கொண்டேயிருப்பதற்காய்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|