Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2008

தலையங்கம்
மத்திய அரசின் அழிவிற்கே பாதை அமைக்கும்

இந்திய நாடு இதுவரை கண்டிராத அளவு பணவீக்கம் அதிகரித்து உள்ளது. சாதாரண மக்கள் தினம் பேசும் விஷயமாக மாறியது மட்டுமல்ல, உயர்ந்துள்ள விலை உயர்வால் சொல்லொண்ணா கொடுமையை அனுபவித்து வருகின்றனர். மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் மந்திரக்கோல் எங்களிடம் இல்லை என்று கூச்சமில்லாமல் பேசுகின்றனர். மக்கள் அரியாசனம் கொடுத்தது மந்திரத்தில் ஆட்சி நடத்த அல்ல என்பதை மத்திய காங்கிரஸ் அரசு உணரத் தவறுகிறது. இவர்களது தவறான கொள்கைக் காரணமாக தொடர்ந்து பல மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் தோல்வி அடைவதை அபாய எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள மறுக்கின்றனர்.


ஆசிரியர் குழு

எஸ்.கண்ணன்
ஆர்.வேல்முருகன்
ஆர்.வேலுசாமி
வி.ஜானகிராமன்
எம்.கவிதா

ஆசிரியர்

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

முகவரி:

ஏ.பாக்கியம்
118/10, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 600 003

dyfitn@yahoo.co.in

ஆண்டு சந்தா: ரூ.50
ஆயுள் சந்தா: ரூ.500

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்று பல்லவி பாடுகின்றனர். சாதாரண மக்களுக்கு சர்வதேச சந்தை, கச்சா எண்ணெய், டாலர் என்று பேசுவது, புரியாது என்று ப.சி நினைக்கிறார் போலும்! ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் துரோகம் மக்களுக்கு தெரிந்தால் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் தேர்தலில் பதில் சொல்லுவார்கள் என்பதை அவர் பலமுறை பட்டும் புரிந்து கொள்ளவில்லை.

தேசத்தில் கொழுந்துவிட்டு எரியும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மறுக்கிற, அதைப் பொறுத்துக் கொள்ளச் சொல்கிற காங்கிரஸ் அமெரிக்காவுடன் போட இருக்கிற அணு ஒப்பந்தத்தை மட்டும் கைவிட மறுக்கிறது. உள்நாட்டு மக்களின் நலனைவிட அமெரிக்காவின் நலன்தான் பிரதமருக்கும் அவரது சகபாடிகளுக்கும் முக்கியமாக இருக்கிறது. இந்திய சுயசார்புக்கு குந்தகம் விளைவிக்கும் இந்திய-அமெரிக்க அணுசக்தி விஷயங்களில் அமெரிக்காவிடம் கையேந்தி நிற்கும் நிலை உருவாகும். அதனால் தான் இடதுசாரிகள் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வருகின்றனர்.

இந்தியாவின் புகழ் பெற்ற அணு விஞ்ஞானிகள் இந்த ஒப்பந்தம் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் முக்கிய எதிர்கட்சியான பா.ஐ.க அமெரிக்காவின் விசுவாசத்தை பறைசாற்றிட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த துடிக்கிறது. இந்த அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால்தான் இந்தியாவில் மின்சாரம் எதிர்காலத்தில் கிடைக்கும் என்ற தோற்றத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தான் தியாகம் செய்வது போல் காங்கிரஸ் படம் காட்டுவது அடுத்த தேர்தலை மனதில் வைத்துத்தான்.
ஆனால் இவர்களது செயல் மதவாத சக்திகளுக்குதான் சாதகமானது. எனவேதான் இடதுசாரிகள் காங்கிரஸை எச்சரிக்கின்றனர். உள்நாட்டு மக்களின் தலையில் சுமையை வைத்து, அம்மக்கள் தவிக்கின்ற போது அதை கவனிக்காமல் அமெரிக்காவின் தாளத்திற்கு தப்பாமல் ஆடுவது மத்திய அரசின் அழிவிற்கே பாதை அமைக்கும் என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது.


- ஆசிரியர் குழு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP