Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2009

தலையங்கம்
தற்கொலைகளல்ல தற்போதைய தேவை!

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.


ஆசிரியர் குழு

எஸ்.கண்ணன்
ஆர்.வேல்முருகன்
ஆர்.வேலுசாமி
வி.ஜானகிராமன்
எம்.கவிதா

ஆசிரியர்

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

முகவரி:

ஏ.பாக்கியம்
118/10, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 600 003

[email protected]

ஆண்டு சந்தா: ரூ.50
ஆயுள் சந்தா: ரூ.500

வள்ளுவப் பெருமகனார் பாடிய குறள். வெளிவரும் செய்திகளையும், கேட்கிற, படிக்கிற செய்தி களையும், ஆழமாகத் தெரிந்து அதற்குத் தீர்வு காணும் பாதையில் பயணிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அத்தகைய அறிவுத் தெளிவைக் கொடுப்பது சமூகத்தின் கடமை. சமூகம் தனது கடமையில் இருந்து தவறியமைக்கு உதாரணம் முத்துக்குமார். 28 வயது இளைஞன், பத்திரிகையாளன். ஆனால் சாஸ்திரி பவனுக்கு முன்னாள், ஆயிரக்கணக்கான மக்கள் நட மாட்டம் கொண்ட சென்னை மாநகரின் பொதுச்சாலையில் நெருப்புத் தனலுக்கு இரையாக்கிக் கொண்டது கொடுமை.

இலங்கைத் தமிழர்களின் துயர் 60 ஆண்டுகளாக நீடிப்பதும், 30 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டமாக மாறி இருப்பதும், அவலம் என்பது உலகறிந்த உண்மை. உலகில் எந்தப் போராட்டமும் சில ஆண்டுகளில் வெற்றி பெற வில்லை அதற்காக துயரங்களை சகித்துப் போராடி இருக்கிறார்களே ஒழிய அவசரப்பட்டு அழித்துக் கொணடதில்லை. இந்திய விடுதலைப் போராட்டம் 200 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுள்ளது. இதே இந்தியாவிற்குள், பஞ்சாப் தீவிரவாதிகள் உயர்த்திப் பிடித்த முழக்கமான காலிஸ்தான், விரைவில் முடிவுக்கு வந்தது. காஷ்மீர், அஸ்ஸாம், பகுதிகளில் நீடிக்கிறது இவற்றிற்கு பேச்சு வார்த்தை தான் தீர்வு. பல தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில், வறுமை, கல்வி, வேலை, சுகாதாரம்,ஆகியவற்றின் இல்லாமை, மொழி, இனம், மதம், சாதி ஆகியவற்றின் பெயரிலான பாகுபாடு, தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும். அதனால் தேசிய இனங்கள் பிரிந்து செல்வது, என முடிவெடுத்தால், முடிவு அபத்தமாகவே இருக்கும்.

தன் மீதான மேலாண்மை, ஆதிக்கம் ஆகியவற்றை அழிப்பதற்கு பதிலாக, தொண்மைச் சமூகம் நாடாள வேண்டும், அதற்கு தனிநாடு வேண்டும் என்பது, அதிகாரத்தின் மீதான பற்றுதலை மட்டுமே வெளிப்படுத்தும், இலங்கைக்குள் இப்போது நடைபெறும் மோதல் அதிகார நிலை நிறுத்தம் சார்ந்ததே. இதில் அப்பாவித் தமிழ் மக்கள் லட்சக் கணக்கில் சிக்கியிருப்பது பதட்டத்திற்குரியது. அப்பாவித் தமிழ் மக்களை 48 மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும், என்ற குறுகிய கால அவகாசம், ராஜபக்ஷெ தரப்பில் தருவது, தனது ராணுவத்தின் வெற்றி மீதான அதி காரம் காரணமானதாகும். லிஜிஜிணி மீதான கெடு மக்களைப் பாதுகாப்பதுடன் இணைந்தது, மக் களை போர்க்களத்தில் இருந்து மீட்க இலங்கை அரசு முன்னுரிமை தருவதாக இருக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை இந்திய அரசு தரப்பில் இலங்கையிடம் தெரிவிப்பதற்கு பிரணாப் முகர்ஜி நேரிலும் சென்றுள்ளார். அருகில் உள்ள நாடு என்கிற தன்மையில், இத்தகைய கோரிக்கையை முன்வைப்பது சரி. “இதற்கும் மேலே சென்று’’ இந்திய அரசு இலங்கையை வலியுறுத்துவது என்ற எதிர்பார்ப்பு ஒரு வித மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது” என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

இலங்கை தமிழ் மக்களை காக்க முத்துக்குமார் போன்ற இளைஞர்கள் தீக்குளிக்க முன்வருவது, சரியல்ல தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கிற சமூகக் கொடுமைகளில் ஒன்றாக தீக்குளிப்பும் நீடிக்கிறது. போராடி வெல்வது, வெல்வதற்காகப் போராடுவது, தமிழ் இலக்கிய சான்றாக இருக்கிறபோது, தன்னைத் தானே அழித்துக் கொல்வதும், அதை அரசியலாக்க முயற்சிப்பதும், இரைஞ்சுவதற்கு ஒப்பாகும்.

“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம்” என்றான் பாரதி. இதற்கு முரணாக ஒருவன் அழிந்து தமிழனை காக்கலாம் என்பது, பகுத்தறிவு அற்றது. இப்போதைய தேவை, தமிழர் பகுதிக்கான சுயாட்சி அதிகாரம், அரசியல் தீர்வு ஆகியவையே. ராணுவத் தீர்வல்ல என்பதை வலியுறுத்தும் போராட்டங்கள் மட்டுமே தற்கொலைகளல்ல.

ஆசிரியர் குழு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com