Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Dalithmurasu
 width=
 width=ஜூலை 2008
சாதியின் இடத்தில் வர்க்கத்தை வைப்பதால் வெற்றி கிடைக்காது-II
அசோக் யாதவ் / தமிழில் : ம. மதிவண்ணன்


சாதி இந்துக்கள் மேலாதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்கத்தாலும், அதிகாரிகள் கூட்டத்தாலும், ஊடகம், நீதித்துறை போன்றவற்றாலும் ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பிற பிற்படுத்தப்பட்டவர்கள் பாரபட்சத்தை சந்திக்கின்றனர். நன்கு முறைப்படுத்தப்பட்ட தங்களது ஒருங்கிணைப்பின் மூலம் இந்த நாட்டிலுள்ள வரம்புக்குட்பட்ட வளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதோடு, பிற பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேல்நோக்கிய நகர்வை திட்டமிட்டே தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில், சமூகப் போராளியான பிரபாத்குமார் சாண்டிலியாவால், பீகார் மாநிலத்தில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் சாதி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தலித்துகள், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு மரண தண்டனையில் 100 சதவிகித இடஒதுக்கீடு இருப்பதை அந்த ஆய்வு சுட்டிக் காட்டியது. தூக்கில் இடப்படுவதற்காக காத்திருக்கும் 36 கைதிகளில் 25 பேர் பிற பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவர். இந்த கொடூர உண்மைகளை சி.பி.எம்.இன் மேல் மட்டத் தலைமை அறியுமா? மரண தண்டனை விதிக்கத் தக்க குற்றங்களை ஆதிக்க சாதியினர் செய்வதே இல்லை போலும்!

அய்க்கிய ஜனதா தளத்தின் அனைத்திந்திய தலைவரான சரத் யாதவ், 7. 7. 2006 அன்று ‘தி இந்து' இதழில் எழுதியுள்ள தமது கட்டுரையில், இந்திய அரசின் மத்தியப் பணியாளர் தேர்வுக்குழுவும், பணியாளர் மற்றும் பயிற்சித்துறையும் இந்தியாவின் எதிர்கால ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் தேர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் எவ்வாறு வெளிப்படையான பாரபட்சத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

பொதுப் பிரிவில் தேர்ச்சி அடைந்த பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 40 பேரை இடஒதுக்கீடு பட்டியலுக்குத் தள்ளிவிட்டு, அதன் மூலம் அதே எண்ணிக்கையிலான பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள் ஆட்சிப் பணியில் தேர்ச்சி பெறுவதை, கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தடுத்த செயலை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். இது, புறவாசல் வழியாக 50 சதவிகித இடஒதுக்கீட்டை பொதுப் பிரிவிற்கு, இன்னும் சரியான வார்த்தையில் சொல்வதென்றால் ஆதிக்க சாதியினருக்கு உறுதி செய்வதாக இருக்கிறது.

கடந்த 12 ஆண்டுகளாகத்தான் மய்ய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீடு பெற்று வருகின்றனர். மேலும், மய்ய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பிறகு, மய்ய அரசுப் பணியில் இருந்த மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டு விட்டது. அரசுத் துறைக்கான பணி நியமனமே நடைமுறையில் தடை செய்யப்பட்டு விட்டது. அண்மையில், அனில் சமாரியா, ஜிதேந்திர குமார், யோகேந்திர யாதவ் ஆகிய புகழ்பெற்ற பத்திரிகையாளர்களின் குழு ஒன்று, டெல்லியிலுள்ள 37 தேசிய ஊடக நிறுவனங்களில் உள்ள 315 பேரின் சமூகப் பின்புலத்தை ஆய்வு செய்ததில், வெறும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும், தலித் மற்றும் பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை என்றும் கண்டுபிடித்தது.

பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் சந்திக்கும் சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் குறித்த கதைகள் ஏராளமாக உள்ளன. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும்; எல்லா தகவல்களும் தெளிவாக வெளிப்படும் அளவுக்கு இந்திய சென்சஸ் நிறுவனம், தனது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும் என்பதே நம் முழக்கம். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதியவாதிகளான மேட்டுக்குடியினர் ஒருபோதும் அனுமதிக்காத ஒன்றாகவே இருக்கும். சாதி குறித்த விபரங்கள் இல்லாத மக்கள் தொகை கணக்கு என்பது கேலிக்கூத்தாகவும், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பயனற்ற ஒன்றாகவுமே இருக்கும்.

கடைசியாக வெளியான மக்கள் தொகை அறிக்கையில், மொத்த மக்கள் தொகையில் தலித் மக்கள் மற்றும் பழங்குடியினரின் சதவிகிதக் கணக்கு இருக்கவே செய்கிறது என்றாலும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்த எந்த விபரமும் அதில் இல்லை. மண்டல் 2 க்கு எதிரான தற்போதைய கிளர்ச்சியில் பார்ப்பனிய சக்திகள் 1931இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை வைத்துக் கொண்டு, பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எப்படி இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று தொண்டை வறளும் அளவுக்குக் கூப்பாடு போடுகிறார்கள். அன்றைக்கும் இதே பார்ப்பனிய சக்திகள்தான் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்தார்கள் என்பதுவும் கூட, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

சுதந்திர இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பார்ப்பனிய சக்திகள், சாதிவாரி கணக்கெடுப்பை அனுமதிக்கவில்லை. சாதி குறித்த கேள்வி மேலெழும்பாமல் அடக்கவே இவையெல்லாம் நடைபெறுகின்றன. இருப்பினும் ஒவ்வொரு முறையும் சாதி குறித்த கேள்வி தீவிரத்துடன் மேலெழும்பவே செய்கிறது. சாதி என்பது அருவருப்பான நாற்றத்தை வெளியிடும் ஒரு வார்த்தையாக வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இருக்கிறது. சாதி குறித்த கேள்வியை மேலெழும்ப விடாமல் அமுக்கும் புள்ளியில், வலதுசாரிகளும் இடதுசாரிகளும் ஒன்றிணைகின்றனர். ஏமாற்றுத்தனமான இந்து மத அடிப்படையிலான ஒருங்கிணைவுக்காக வலதுசாரிகளும், தெளிவற்ற வர்க்க ஒற்றுமைக்காக இடதுசாரிகளும் இவ்வாறான புள்ளியில் ஒன்றுபடுகின்றனர். இதைப் பின்னர் பார்ப்போம்.

சாதிப்பிரச்சனை என்பது இவர்களைப் பொறுத்தமட்டில் தலித்துகளோடு முடிந்து விடுகிறது. மொத்த சாதிப் பிரச்சனையின் மீச்சிறுபொது வகு எண்ணாக, அதன் கொடூர வடிவமாக, மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானதாக தலித் பிரச்சனைதான் இருக்கிறது என்பதாலும், சி.பி.எம். கட்சி சாதிப்பிரச்சனையின் முழுமையை எதிர்கொள்ள அஞ்சுவதாலும் தான் இவ்வாறு நிகழ்கிறது. மீச்சிறு பொது வகு எண்ணோடு மட்டும் தன்னைக் குறுக்கிக்கொள்ளும் அரசியலால், இந்திய அரசியல் ஓர் அங்குலம் கூட நகர முடியாது.

எடுத்துக்காட்டாக, அரசியலின் மீச்சிறு பொதுவகு எண்ணான மதச்சார்பின்மையை எப்படியேனும் பாதுகாத்து விட வேண்டும் என்பதற்காகவே அனைத்து வகை ஆற்றலும் அர்ப்பணிக்கப்படுவதால், இந்திய அரசியல் தேக்கம் அடைந்திருக்கிறது. ஒன்றுக்கொன்று பகைமை கொண்ட சக்திகள் மதச்சார்பின்மையைக் காப்பதற்காக இணைவதால், அடிப்படையான முரண்பாடுகள் கூர்மையடைவது தடுக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 15 சதவிகிதம் மட்டுமே உள்ளவர்களின் சாதிப்பிரச்சனையைத் தாண்டிப் போகாத அளவுக்கு, சி.பி.எம்.இன் பார்வை மிகக் குறுகியதாக இருக்கிறது.

வாழ்வைத் தமது கடின உழைப்பால் தாங்குபவர்களும், செல்வத்தை உருவாக்குபவர்களும், ஆனால் அச்செல்வத்தின் மீது மிகச்சிறிய அளவே உரிமை உடையவர்களுமான பிற பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் திரளுக்கு சி.பி.எம். தலைவர்களின் ‘புரட்சிகரப் பார்வை'யில் ஓரிடமும் இல்லை. விவசாயி, குறு விவசாயி, குத்தகை விவசாயி, நெசவாளர், தச்சர், பால்காரர், மீனவர், படகோட்டி, கொல்லர், நாவிதர், பொன்னாசாரி, இடையர், குயவர், போன்றவர்களே பிற்படுத்தப்பட்ட மக்களாகவும், இந்தியாவின் 60 சதவிகித மக்கள் தொகையுடையவர்களாகவும் உள்ளனர்.

ஆனால் சி.பி.எம்.முக்கு விவசாயி என்பவன் ஒரு பொருளாதார வர்க்கம் மட்டுமே. மொத்த விவசாய வர்க்கமும் பெரும்பான்மையான சாதி அடையாளத்தை ஒருபோதும் இழக்க முடியாத பிற்படுத்தப்பட்ட சாதி மக்களே ஆவர். தற்கொலை செய்து கொண்டு மடிந்து போன ஆயிரக்கணக்கான விவசாயிகளில் பெரும்பான்மையோர் பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள்தான். விவசாயிகளைப் போன்றே நெசவாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேசிய குற்றத் துறை ஆவணம், 1998 முதல் 2006 வரையில் ஏறத்தாழ 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர் என்று சொல்கிறது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியிலும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எந்த பயனுள்ள நடவடிக்கையையும் மய்ய அரசும் சரி, மாநில அரசும் சரி எடுக்கவில்லை.

விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அரசு காட்டிய செயலின்மை அல்லது அலட்சியம், ‘கீழ்சாதி’ மக்களுக்கு எதிரான மிகப்பெரிய பாரபட்ச உணர்வைக் கொண்ட பார்ப்பனிய அமைப்பிலேயே குடிகொண்டிருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த அமைப்புக்கு விவசாயிகள் என்பவர்கள் ஒரு பொருளாதார வர்க்கம் என்பது மட்டுமல்லாமல், எப்படியேனும் வஞ்சிக்கப்பட்டே ஆக வேண்டிய ஒரு சமூகக் குழுவினராகவும் இருக்கிறார்கள். அவர்கள் செத்தொழிகிறார்கள் என்பதைப் பற்றி எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை.

அது மட்டுமல்ல, சூத்திர, ஆதி சூத்திர மற்றும் பழங்குடியினர் கல்வி கற்று, அதன் மூலம் தங்கள் மேலாதிக்கத்திற்குச் சவாலாக வந்து விடுவார்கள் என்ற தீய நோக்கத்துடன், அடிப்படைக் கல்வியைப் பரவலாக்கும் ஒவ்வொரு முயற்சியையும் தடுக்கும் பார்ப்பனிய மனநிலைதான், சுதந்திர இந்தியாவில் தொடக்கக்கல்வி மற்றும் உயர் நிலைக்கல்விக்கு எதிரான வரலாற்று ரீதியிலான புறக்கணிப்புக்குக் காரணமாகும். இந்தியாவில், அடிப்படைக் கல்வியின் கேவலமான அலட்சியத்திற்கு வேறென்ன விளக்கத்தைக் கொடுத்துவிட முடியும்?

ஒரு சூத்திரனின் முதன்மை அடையாளமாக இருப்பது சாதியேயன்றி வர்க்கம் அல்ல. இதற்கான மிக எளிய காரணம், சமூக மற்றும் பொருளாதார நிலையை ஒன்றாகக் குறிப்பிடுவதாகவும், வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகக் குழுவாக தாங்கள் மாறிய வரலாற்றைக் குறிப்பிடுவதாகவும் சாதியே உள்ளது என்பதுதான். அதே வேளையில் வர்க்கம் என்பது பொருளாதார நிலையை மட்டுமே குறிப்பிடுவதாகவும், நமது வரலாற்றை அசட்டை செய்வதாகவும் இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்து வசதிபடைத்த ஒரு மத்திய தர வர்க்கம் உருவாகி வெளிப்பட்ட போதிலும் கூட, இந்த உயர் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை சாதி வர்க்க இணைவைப் பெருமளவுக்குப் பாதிக்கக் கூடிய அளவிற்கு இல்லை.

வர்க்கப் போராட்டமானது அல்லது அவ்வாறு நம்பப்படுவது, சாதியின் இடத்தில் வர்க்கத்தை வைப்பதில் ஒரு போதும் வெற்றியடையாது. சமூக எதார்த்தத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வழிவிலகிச் சென்றுவிட்ட வர்க்கச் சக்திகள் அல்ல; சாதிய சக்திகளின் தோற்றமே நிலைப்பட்டுவிட்ட ஆளும் மேட்டுக்குடியினருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்றன. இதற்கு மேலும் விமர்சனங்களை வளர்த்துக் கொண்டு போகாமல், சி.பி.எம்.முக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் என்போர் ஒரு பொருட்டே அல்ல என்பதையும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அதன் தடுமாற்றமான நிலைக்கு இதுதான் காரணம் என்பதையும் மட்டும் இங்கு அழுத்தமாகச் சொல்வது போதுமானது.

-அடுத்த இதழிலும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
SUNDAR
2008-08-20 12:13:00
sundar96@yahoo.com

ஐயா, இந்தியாவில் மக்கள் முன்னேற வேண்டுமானால், எல்லா சாதி,எல்லா இன, எல்லா மத மக்களும் ஒன்றாக முன்னேரினால் தான் உண்டு. தனியாக தான் சாதி மட்டும், தான் சமுதாயம் மட்டும் முன்னேறும் என்று நினைத்தலது பேதமை.
தாழ்த்தப் பட்ட மக்கள் பல காலமாக அமுக்கி
வைக்கப் பட்டு இருந்தார்கள். எனவே அவர்களுக்கு முன்னேற்றாதுக்காக அதிகப்படியாக திட்டங்கள் வகுக்கப் பட்டே ஆகா வேண்டும். அதே நேரம் 'பிற்ப்படுத்தப் பட்ட' மக்கள் , அவர்கள் உண்மையிலேயே முன்னேறி வருவதை யார் தடுத்தது? அவர்கள் உண்மையிலேயே 'பிற்ப்படுத்தப் பட்ட' நிலையில் இருந்தார்களா? அம்பேத்கார் வரலாற்றை நன்கு படித்தால், தாழ்த்தப் பட்ட மக்கள் மட்டுமே பள்ளியில் ஒதுக்கி வைக்கப் பட்டு இருந்தது தெரிய வரும். பிற்பபடுத்தப் பட்ட மக்கள் படிக்கும் வாய்ப்பை யாரும் மறுக்கவில்லை. எந்த ஆதிக்க சாதி திட்டமிட்டு மற்றவர் முன்னெருவதை தடுத்தார்கள்? பீம ராவ் ராம்ஜி, படிக்க உதவி செய்து, வூக்குவித்தது யார்? அப்துல் கலாம் அறிவியல் அறிங்கர் ஆனதர்க்கு காரணம் யார்?
ஒரு மனிதன் தெரு விளக்கின் அடியில் ஒரு பொருளை தேடிக்
கொண்டு இருந்தானாம்! எதைத்
தேடுகிறாய் என்று கேட்டால், என் மோதிரம் கீழே விழுந்து விட்டது, அதை தேடுகிறேன் என்றானாம்! எங்கே விழுந்தது என்றால், அந்த மரத்திற்கு அடியில் என்றானாம்! பின் ஏன் இங்கே தேடுகிறாய் என்றால், இங்கேதான் வெளிச்சம் இருக்கிறது என்றானாம்! திண்ணியத்தில் தலித் இன் வாயில் மலம்
திணிக்கப் பட்டதற்கு உங்கள் எதிர்வினை என்னவாக இருந்தது? வழக்கம் போல பார்ப்பானைத் திட்டி எழுதி முடித்து விட்டீர்கள்! ஆனால் திண்ணியத்தில் தலித் வாயில் மலம் திணிக்கப்பட்டதில் எந்த பார்ப்பாணுக்கும் சம்பந்தம் கிடையாது! ஆனாலும் முற்போக்கு எழுத்தாளர்களும், தமிழக அரசியல்வாதிகாளையும் மலம் திணிக்கும் கூட்டம், நன்றாகப் புரிந்து கொண்டு விட்டது! அதாவது தலித்களின் வாயில் மலம் திணித்ாலும், தலித் மக்களின் குடிசைகளை யெரித்தாலும்
, தலித் பெண்கள் கற்ப்பலிக்கப் பட்டாலும், அதற்கான காரணம், பார்ப்பாணாக தான் கூறப் படுமே தவிர, உண்மை இல். கொலை, தீ வாய்ப்பு, கற்ப்பு அலிப்பு, பீ திணிப்பு சக்தி களுக்கு எந்த தடையும் கிடையாது!
எனவே அவர்கள் மலம் திணிக்கும் சுய மரியாதை ஐ மீண்டும் அறங்குகெற்றியுள்ளனர்! இதில் முன்னேற்றம் என்னவென்றால், இந்த முறை ஒரு வழக்கு அறிந்க்ர் வாயில் மலம் பூசி உள்ளனர்!
இதற்கு முற்போக்கு எழுத்தாளர்கனின் எதிர்வினை என்னவாக இருக்கும்? வழக்கத்தை விட பார்ப்பானை இன்னும் அதிகமாக திட்டுவார்! அதற்கு மேல் அவரால் ஒன்றும் செய்ய இயலாது! ஏன் என்றால், இன்று தமிழ் நாட்டில் எளிதாக செய்யக் கூடிய செயல் என்ன என்றால் அது பார்ப்பானைத் திட்டுவதுதான்! ஏன்
என்றால் மற்ற சாதி ஹிந்துக்கள், ரவூடீ தனத்திலும், அரசியல் செல்வாக்கீலும், தலித்களை
விட வலிமையாக இருக்கிறார்கள்! பெரிய அரசியல் கட்சிகளுக்கு சாதி இந்துக்களின் ஒட்டு மிக முக்கியமானது! தெளிவாக சொன்னால், தலித்களின்
மீது சாதி இந்துக்களின் ஆதிக்கம் எப்போதைக்குமாக
பட்டயம் செய்யப் பட்டு விட்டது! இனி எத்தனை முறை மலம் திணிக்கப் பட்டாலும், "முற்போக்கு" எழுத்தாளர்கள் அதற்காக கண்ணீர் வடித்து விட்டு, சாதி இந்து அரசியல் தலைவர்களுக்கு பல்லக்கு தூக்க சென்று விடுவார்கள்!
இந்தியாவில் சாதி வரலாற்றை எடுத்துப் பார்த்தால், பல பரிணாமங்கள் கிடைக்கும்! வரூநாசிரம முறையால், அதிகம் பாதிப்புக்கு உள்ளானது யார் என்று பார்த்தால், கண்டிப்பாக தலித்கள் தான்! அதே வரூநாசிரம முறையால், அதிகம் பலன் அடைந்தது யார் என்று பார்த்தால், மேல் எழுந்த வாறியாகப் பார்த்தால் பார்ப்பான் என்று தோன்றும். நன்கு ஆராய்ந்தால் பார்ப்பானாரை விட
வைசியரும், ஸத்திரியர் களும் அதிக பயன் அடைந்துள்ளது புரியும்! ஏன் என்றால், விவசாயம் கூலி வேலை செய்ய எதிர்ப்பு காட்ட முடியாத வேலை ஆட்கள் வைஷ்யருக்கும்,
சத்திரியருக்கும் தேவைப் பட்டது! அதற்கு
இந்த சாதி முறை அவர்களுக்கு உதவியாக இருந்தது! இன்னும் சொல்லப் போனால், வர்ணாசிரம முறையால் பார்ப்பணர்கள் கஷ்டப் பட்டார்கள் என்பதே உண்மை! ப்ரோகிதம் செய்வதையும், பீட்சை எடுத்து வாழ்வதையும் தவிர வேறு வாழ்க்கை முறை பார்ப்பணர்களுக்கு மறுக்கப் பட்டது என்பதே உண்மை!
வர்ணாசிரம முறையை உடைத்து எறியும் சக்தி பார்ப்பணர்களுக்கு அப்போதும் இல்லை! இப்போதும் இல்லை என்பதையே இந்த பீ தினிப்பு நிகழ்சிகள் காட்டுகின்றன! வாய்ப்பு கிடைத்த போது எல்லாம் அம்பேத்கர், நம்பூதிரிபாத், பாரதியார் பொன்ற பாப்பணர்கள் சாதி கொடுமை ஐ உடைக்க முயன்றார்கள் என்பது இவர்களுக்கு தெரியாதா? ஆனால் இவர்களுக்கு தங்களை தாங்களே யீமாற்றிக் கொள்ள வேண்டும்! இவர்கள் விரும்புவது கான்சி பண்ணயாரைப் போன்ற பார்ப்பானை தான்! சங்கர் ராமனை போன்ற பார்ப்பனரை அல்ல! பார்ப்பானை திட்டிக் கொண்டே, பீ திணிப்புவானைப் பாராட்டிக் கொண்டும் இருந்தால், இன்னும் பல பீ தினிப்புகளுக்கு தயாராக வேண்டியது தான்! இங்கே யாரும் பிற்பபடுத்தப் பட்ட மக்களுக்கும், தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் மொதலை உருவாக்க விரும்பவில்லை. பிற்பபடுத்தப் பட்ட மக்கள் வலமாக வாழ்ந்தால், எங்களுக்கு நெஞ்சார்ந்த மகிழ்ச்சிதான்!
பிற்ப்டுப்பட்ட சாதியினர் திட்டமிட்டு கொலை செய்தால், மரண தண்டனை வழங்கினால், சாதி அடிப்படையில் வக்காலத்து வாங்குவது சமூகத்தில் இன்னும் அதிக கொலை காலை உருவாக்கும்!
பீகார் மாநிலத்தில் கடந்த 20 வருடமாக, பிற்பபடுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் ஆட்சி தான் நடக்கிறது. அரசு தரப்பு வக்கீலை நியமிப்பது யார்? அரசு நினப்ப்து போலத்தானே வக்கீல் நடந்து கொள்வார்? இந்தியா முழுவதும் கொலாயாளிகள் தப்பிப்பது இப்படித்தானே?

s.saravanan
2008-08-20 06:15:00
saranmadras@yahoo.com

Nanbar Thiru . Athavan Deetshanyaavi ku entha pakkathai samarpikeren ..

s.saravanan

puramboakku
2008-08-20 01:05:00
puramboakku@gmail.com

கரூர்: அரவாக்குறிச்சி அருகே நடைபெற்ற கோவில் விழாவில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அரசு மருத்துவமனை சூறையாடப்பட்டது.

அரவாக்குறிச்சி அருகே உள்ளது சீத்தப்பட்டி. இங்கு ஊர் மக்கள் சார்பில் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

இதே போன்று இந்த வருடமும் திருவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மாரியம்மனுக்கு புனித நீர் அமராவதி ஆற்றில் இருந்து எடுத்து வந்தனர்.

அப்போது பிரபு என்ற இளைஞர் தனது ஆதரவாளர்களுடன் ஆடி பாடி வந்துள்ளார். இதற்கு கோவில் நிர்வகி நவநீதன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த பிரபு, கிருஷ்ணமூரத்தி, ஜோதி, நவநீதன் ஆகியோர்க்கு படுகாயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக இவர்களை பள்ளபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு டாக்டர்கள் முதலில் யாருக்கு சிகிச்சை வேண்டும் என்பதில் பிரச்சனை ஏற்பட்டது.

எங்களுக்குத் தான் முதலில் சிகிச்சை தர வேண்டும் என்று கூறியபடி இந்தக் கும்பல் மருத்துவமனையில் இருந்த சேர், டேபிள், மருத்துவ உபகரணங்களை அடித்து உடைத்தது.

இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

தகவல் அறிந்த அரவாக்குறிச்சி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பிரபு, கிருஷ்ணமூரத்தி, ஜோதி, நவநீதன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இவர்களை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இவர்களுக்கு சிகிச்சை ஒரு கேடா? இதுவா நாகரீகம்? இதுவா தமிழர் பண்பாடு? நான்தான் பெரியவன் என்ற அகந்தையை நிலை நிறுத்த கோவிலில் தொடங்கிய சண்டை, மருத்துவமனையிலும் தொடர்கிறது. "பிரபு என்ற இளைஞர் தனது ஆதரவாளர்களுடன் ஆடி பாடி வந்துள்ளார். இதற்கு கோவில் நிர்வகி நவநீதன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த பிரபு, கிருஷ்ணமூரத்தி, ஜோதி, நவநீதன் ஆகியோர்க்கு படுகாயம் ஏற்பட்டது"- இது காட்டு மிராண்தித் தனம்! அங்கு டாக்டர்கள் முதலில் யாருக்கு சிகிச்சை வேண்டும் என்பதில் பிரச்சனை ஏற்பட்டது. "எங்களுக்குத் தான் முதலில் சிகிச்சை தர வேண்டும் என்று கூறியபடி இந்தக் கும்பல் மருத்துவமனையில் இருந்த சேர், டேபிள், மருத்துவ உபகரணங்களை அடித்து உடைத்தது. இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்!"- இது பச்சை காட்டு மிராண்தித் தனம்! பார்ப்பனர்கள் தனியே அக்கிரகாரம் என்ற பெயரில் முன்பு தனியிடத்தில் வாழ்ந்து வந்தது தவறு என்று எண்ணியிருந்தேன்! இந்த அளவுக்கு வன்முறை வெறியாட்டம் போடும் மக்கள் இருக்கும் வரையில், வன்முறையில் ஈடுபட விரும்பாதவர் தனியே ஒதுங்கி வாழ்வதில் தவறு இல்லை! மனிதன் நாகரீகமுள்ள gentle man ஆக மாறாத வரையில் சாதிப் பிரிவுகள் மறைந்து சமத்துவ சமுதாயம் தோன்ற முடியாது!

R.SRIDHARRAJAN
2008-08-21 04:35:00
rmvs.sridhar@yahoo.com

saathiyin idathil vargathai vaippathal vetri kidaikkathu enra intha katturai arumai. sathiya porattathai sari paduthamal varga porattathai mun vaippathu enbathu 'ariveenamana pokku' enbathai asiriyar thelivu paduthiyullar.pirpaduthapattor nalanukkana porattam avarkalin thalathilirunthu mattum alla anaithu sathikalin thalithlirinthum ollikka pada vendum.intha katturai migavum payan ullathai irunthathu. nanri.

விடுதலை
2008-08-21 06:31:00
karkkivijay@gmail.com

சாதியா? வர்க்கமா? என்பதில்
சாதியை தனியாகபார்க்கும் பிழைப்புவாத பார்வையும் தவறு.
வர்க்த்தை தனியாக பார்க்கும் குழப்பவாதமும் தவறு.
இரண்டும் சேர்த்துபார்க்வேண்டிய அவசியம் இருக்கிறது.
இரண்டும் தனித்தனியாகவும் செயல்படவேண்டும்.
இரண்டும் சேர்ந்தும் செயல்படவேண்டும்.
அசோக் யாதவ் குருட்டுதனமாக ஏதோ சிபிஎம் கட்சியை எதிர்க்வேண்டும் என்று எழுதி இருப்பதாகதான் தெரிகிறது.

Dr. V. Pandian
2008-08-21 11:06:00
porkkaiponds@yahoo.co.in

ஐயா, புரம்போக்கே! பார்ப்பனர்களுக்கு வன்முறை பிடிக்காதா? அதனால் தான்
அகரஹாரத்தில் வசித்தனரா? பகுத்தறிவு மதங்களான புத்த, சமண, ஆசீவக மதங்களை
எப்படியையா அழித்தீர்கள்? அஹிம்சையாலா? நீங்கள் நேரிடையாக செய்தது குறைவுதான். நீங்கள்
மைனாரிட்டி. அதனால், அரசர்களையோ, அரசாங்கத்தையோ, மக்களையோ பின்னிருந்து தானே
ஐயா இயக்குகிறீர்கள். ஜம்மு, காஷ்மீரில் தற்போது நடக்கும் வன்முறைகளுக்கு யாரையா காரணம்?
எந்தக் கட்சி? அதன் தலைவர்கள் யாரையா?
ஐயா, சுந்தரே! பிற்பட்டவர்கள் படிப்பிற்கு பார்பனர்கள் தடையா யிருந்ததில்லையா?
ராஜாஜி 6000 பள்ளிகளை மூடினாரே, தெரியாதா? அல்லது மறந்துவிட்டீர்களா? அது ஒரு பெரிய
வரலாறய்யா! தெரியாவிட்டால் உமது அப்பனைக் கேளுங்கள். இந்த கடிதத்தை எழுதுபவரே,
புத்திசாலியாக இருந்த ஒரே காரணத்திற்காக, முதுகலை இறுதியாண்டில் ஒரு கேடுகெட்ட
பார்பனரால் பழிவாங்கப் பட்டவரய்யா!
அன்றும், இன்றும் மலத்தை ஊட்டியவர்கள் பார்ப்பனரல்லர். அவர்கள் மலத்தைத்
தொடுவதில்லை. ஆனால், நீங்கள் ஏற்படுத்திய பல்லாயார ஆண்டு வர்ணாசிரமத்தின் எச்சங்கள்
தானையா இன்றும் நடந்தேறும் கொடுமைகள். இன்னொன்றும் தெரியுமா? தமிழகத்தின்
வடமாநிலங்களில் இக்கொடுமைகள் பெரிதளவு குறைந்து விட்டன. ஆனால், ஜெயலலிதாவிற்கு
ஓட்டுப்போடும் ஒரு தெற்கத்திய சமூகம் தானையா இக்கொடுமைகளை சிறிதளவும் குறையாமல்
செய்கிறது. இப்போது புரிகிறதா?
அய்யா அறிவு ஜீவிகளே! மகான்களே! நாங்கள் கட்டிய கோயில்களி லிருந்துகொண்டு
எங்களுக்கு புரியாத 'பாஷை'யில் வழிபாடு நடத்துவது அட்டூழியம் என்று இன்னும் உங்கள் பெரிய
மூளைகளுக்கு எட்டவில்லையா? நீங்களா திருந்திவிட்டீர்கள்?
இலங்கையில் எமது உடன்பிறப்பகளை இனப்படுகொலை செய்கின்ற சிங்களக்
காடையர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். எங்களது மனம் பதறுகறது, குமுறுகிறது. பல்லாயரக்
கணக்கான ஆண்டுகளாக எமது உழைப்பில் மட்டுமே உயிரும் உடலும் வளர்த்த உங்களுக்கு
சிறிதேனும் நன்றியுணர்ச்சி உண்டா? உங்களிடம் துக்ளக் இருக்கிறது. இந்து பத்திரிகை இருக்கிறது.
இவர்களுக்கு 'பாஸிசம்' என்றாலே என்னவென்று தெரியவில்லை போலும். புலிகளை பாஸிஸ்ட்
என்கின்றனர். கோடிக்கணக்கான யூதர்களை படுகொலை செய்த வம்சம் தானே உங்களது.
ஆகையால் உங்களுக்கு 'நாஸிஸம்' பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். தமிழீழம் அமையக்
கூடாதென்கிறீர்களே அது உங்களின் கேடுகெட்ட சுயநலத்தால் தானே. நீங்கள் ஆயிரங்காலமாக
செய்த அட்டூழியங்களுக் கெதிராக நாங்கள் உங்களுடன் 'கருத்துப்போர்' தானேயையா
புரிகின்றோம். நாங்கள் ஒப்பற்ற இனம்; தமிழினம். இதுவே நீங்களாக இருந்திருந்தால்?

அடச்சீ....ச்சீ........ச்சீ.....

சுந்தர்
2008-08-21 01:21:00
sundar96@yahoo.com

ஐயா, Dr. V. Pandian,தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு நேர்ந்த விஷயத்தை ஒரு சமுதாயத்தின் மீது பழி போடுவது சரியா? பீம ராவ் ராம்ஜி க்கு உதவி செய்து
வூக்குவித்தவர் யார்? அப்துல் கலாமுக்கு அறிவியல் அறிங்கர் ஆக காரணம் என்று அவரே குறிப்பிடும் அவரது ஆசிரியர் யார்? ஒரு ஆசிரியர் தன் மாணவன் சிறப்பாகப் படித்தால் கண்டிப்பாக , தன்னையும் மீறி வூக்குவிப்பான். அதே நேரம் குறு மதியாளர் எல்லா சமூகத்திலும் உண்டு! பிரபல அறிவியல் அறிங்கராண சந்திர சேகர், தன் 25ம் வயதில், சென்னைப் பல்கலை கழகத்தில் தன் ஆராய்ச்சியை சமர்ப்பித்தார். அவரது ஆராய்ச்சி தவறு என்று ஒதுக்கி விட்டனர். அவர் அதே ஆராய்ச்சிக் கட்டுரையை அமெரிக்க பல்கலை கழகத்தில் சமர்ப்பித்து, அவர்கள் அதை ஏற்று, அதே ஆராய்ச்சிக் காக அவருக்கு நொபெல் பரிசும் கிடைத்தது. எனவே வாழ்க்கையில் தடங்கல் வரும்போது எதிர்த்து நின்று போராட வேண்டுமே தவிர, இப்படி மொத்த சமுதாயத்தையும் பழிப்பது கூடாது!

பிற்ப்பட்டவரோ, தாழ்த்தப்பட்டவரோ யாரையும் படிக்காமல் தடுக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது! அதற்க்கு அவசியமும் இல்லை. இராசாசி எல்லோரையும் தொழில் கல்வி படிக்கச் சொன்னது தவறு இல்லை- ஆனால் அவரவருக்கு விருப்பமான கைத்தொழிலைப் பயில வேண்டும் என்று சொல்லியிருந்தால் சிறப்பாயிருந்து இருக்கும். ஆனால் தகப்பனின் தொழிலை மகன் கற்க் க வேண்டும் என்று சொன்னதை, இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று வர்ணாசிரமத்தைப் பாதுகாக்கும் குலக் கல்வி திட்டம் என்ற பார்வை- இன்னொன்று, படித்தவுடன் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் நிலை இல்லாமல், படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் கஷ்டப் படுபபவர், தன் தந்தை இன் வணிக, தொழில் தொடர்புகள்(clients & contacts) மூலமாக வருவாய் ஈட்டும் தொழில் கிடைக்கும்-என்ற பார்வை! இராசாசி எந்த எண்ணத்தில் கொண்டு வந்தார் என்பது அவர் மனசாட்சிக்கு தான் தெரியும். அவர் நல்லது நினைத்து இருக்கலாம். எனவே அவர் மேல் நான் தீர்ப்பு சொல்ல தயார் இல்லை. அவர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் கூட அதற்க்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது- பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியமும்
இல்லை.
துக்ளக், இந்து அவர்கள் பிழைப்புக்கு அவர்கள் பத்திரிகை நடத்தி சம்பாதிக்கிறார்கள். துக்ளக், இந்து வைத்துக் கொண்டு எங்களுக்கு என்ன பலன்? பழைய பேப்பர் கடையில் போட்டு கிடைக்கும் பைசா தான் எங்களுக்கு மிச்சம். நீங்கள் நினைப்பது போல நாங்கள் ஒன்றும் அவர்களைத் தலைவர்கள் போல எண்ணவில்லை. இலங்கை பிரச்சினையில், ஈழத் தமிழர்கள் மீது எங்களுக்குப் பரிவு உண்டு. இலங்கை பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள மற்ற தமிழர்களின் நிலைப்பாடு தான் எங்கள் நிலைப்பாடும்!எல்லோரும் உழைத்துதான் பிழைக்கிறோம்.மிகக் குறைந்த வறுவாயில் ஒரு வேலை உணவு உண்டு வாழ்ந்த பார்ப்பணக் குடும்பங்கள் அநேகம். பார்ப்பணருக்கு உயர் சாதி அந்தஸ்த்த அளித்தது மற்ற சமுதாயத்தினர் தான்!எண்ணிக்கையில் குறைந்த, உடல் வலிவு குறைந்த பார்ப்பனர், புதிதாக உள்ளே புகுந்து, தங்களைத் தாங்களே உயர்ந்த சாதி என்று அறிவித்துக் கொண்டால் மற்றவர் எப்படி ஒத்துக் கொண்டார்கள்? அதுவும் அரசர்கள் எல்லோரும் தமிழர்கள், படைத் தளபதிகள்,அமைச்சர்கள், வியாபாரிகள், விவாசாயப் பெருங்குடியினர் எல்லோரும் தமிழர்கள். மிகப் பழமையான மொழி, மிக நீண்ட வரலாறு, ஆட்சி, வீரம், நிர்வாகம், பண்பாடு, சிறந்த அறிவு, நாகரீகம், வாணிகம், செல்வச் செழிப்பு,மிகச் சிறந்த இலக்கியம் உடைய தமிழ் சமுதாயத்தை வெளியில் இருந்து வந்த பிரிவினர் "நாங்கள் உயர்ந்த சாதி" என்று எப்படி கூறியிருக்க முடியும்? அதைக் கேட்டுக் கொண்டூ அறிவும், வீரமும் உடைய தமிழ் சமுதாயம் சும்மா இருந்திருக்குமா? அப்போது சாமி, கீமி என்று மரியாதையை குடுத்து விட்டு ஆனால் சோற்றுக்கு பீட்சை எடுத்துப் பிழைக்கும் சாதி என்ற நிலையில் வைத்து விட்டார்கள். நீங்கள் சந்தோசமாக பார்ப்பாணை வைது கொள்ங்கள்! பார்ப்பானை திட்டிக் கொண்டே, பீ திணிப்புவானைப் பாராட்டிக் கொண்டும் இருந்தால், இன்னும் பல பீ தினிப்புகளுக்கு தயாராக வேண்டியது தான்!

SUNDAR
2008-08-21 01:23:00
sundar96@yahoo.com

தமிழ் நாட்டில் பார்ப்பனர் வெளியில் இருந்து வந்து தமிழ் நாட்டினருக்கு, சமுதாயம், மதம் ஆகியவற்றை அமைத்து தந்தனர் என்பது, மிகச் சிறந்த பண்டைய தமிழ் சமுதாயத்தை அவமானப்படுத்தும் செயல் ஆகும்! அப்படியானால் அவர்கள் வட இந்தியாவில் இருந்தோ, ஐரோப்பாவில் இருந்தோ, ரூஷியாவில் இருந்தோ வந்து தமிழ் நாட்டிற்க்குள் புகுந்தால், தமிழ் சமுதாயம் எப்படி அவர்களை யெற்றுக் கொண்டது? எண்ணிக்கையில் குறைந்த, உடல் வலிவு குறைந்த பார்ப்பனர், புதிதாக உள்ளே புகுந்து, தங்களைத் தாங்களே உயர்ந்த சாதி என்று அறிவித்துக் கொண்டால் மற்றவர் எப்படி ஒத்துக் கொண்டார்கள்? அதுவும் அரசர்கள் எல்லோரும் தமிழர்கள், படைத் தளபதிகள்,அமைச்சர்கள், வியாபாரிகள், விவாசாயப் பெருங்குடியினர் எல்லோரும் தமிழர்கள். மிகப் பழமையான மொழி, மிக நீண்ட வரலாறு, ஆட்சி, வீரம், நிர்வாகம், பண்பாடு, சிறந்த அறிவு, நாகரீகம், வாணிகம், செல்வச் செழிப்பு,மிகச் சிறந்த இலக்கியம் உடைய தமிழ் சமுதாயத்தை வெளியில் இருந்து வந்த பிரிவினர் "நாங்கள் உயர்ந்த சாதி" என்று எப்படி கூறியிருக்க முடியும்? அதைக் கேட்டுக் கொண்டூ அறிவும், வீரமும் உடைய தமிழ் சமுதாயம் சும்மா இருந்திருக்குமா? எனவே மற்ற பிரிவீனரைப் போல தமிழ் பிராமணர்களும் தமிழ் சமுதாயத்தின் பூர்வ குடி மக்கள் ஆகத்தான் இருந்திருக்க முடியும்!கண்ணகி அம்மாள் மதுரையை எரிக்க "தீ"க்கு ஆணையிடும் போது, "பார்ப்பனர், பெண்டிர், குழவிகள், முதியோர் பசு இவர்றை விட்டு விடும்" படி கூறியது ஏன்? தமிழ் நாட்டில் பார்ப்பனர் வெளியில் இருந்து வந்தனர், அவர்கள் வந்து தமிழ் நாட்டினருக்கு, சமுதாயம், மதம் ஆகியவற்றை அமைத்து தந்தனர் என்பது, மிகச் சிறந்த பண்டைய தமிழ் சமுதாயத்தை அவமானப் படுத்தும் செயல் ஆகும்! தயவு செய்து தமிழ் சமுதாயத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்!

P.K.Rajan
2008-08-22 03:32:00
pkrajan_61@yahoo.co.in

அன்புள்ள தோழர்,
நான் இந்தக் கட்டுரைக்கும் இந்த விவகாரம் குறித்து வந்துள்ள வேறி சில கட்டுரைகளுக்கும் எதிர்வினை யாற்ற விழகின்றேன். கட்டுரையின் முதல் பாகத்தின் கனினி மென்வடிவை அல்லது (PDF) வடிவில் தயவு செய்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு (pkrajan_61@yahoo.co.in)அனுப்பி வைத்தீர்கள் என்றால் நான் மிகவும் நண்றி யுடயவனாவேன்.
நன்றி.
தோழமையுடன்
ப.கு.ராஜன்.

Dr. V. Pandian
2008-08-22 07:32:00
porkkaiponds@yahoo.co.in

ஐயா, சுந்தரே! எந்த ஒரு சமூகத்திலும் அனைவருமே நல்லவராகவோ அல்லது கெட்டவராகவோ இருக்க முடியதென்பது எமக்கும் தெரியும். எமது கருத்துக்கள் அனைத்து பார்ப்பனர்களையும் நோக்கியதல்ல. கொடும்புத்தி கொண்ட கணிசமான தொகையிலான பார்பனர்களைப் பற்றித்தான். யாம் ஒரு பகுத்தறிவாளர், நேர்மையானவர், இயல்பாகவே மனிதநேயம் கொண்டவர். நிற்க.

சந்திரசேகர் சென்னையில் அவரது ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கவில்லை. இங்கலாந்தில்! இவரது பேராசிரியர் இவரை ஏளனம் செய்ததால் அமெரிக்கவிற்கு இடம் பெயர்ந்தார். இந்த 'சென்னை' பொய்யை தவர்த்திருக்கலாம் அய்யா. இதிலென்ன உங்களுக்கு ஓர் அரசியல்?

அமெரிக்கவில் கூட, இவர்களது மாணவர்களெல்லாம் நோபல் பரிசு கொடுக்கப்பட்ட பிறகு தான், சாவுகாசமாக ( இவர் ஒரு ஆசியன் என்பதால்) தனது எழுபதுகளில் தான் இவருக்கு பரிசு கொடுக்கப்பட்டது. இந்த உலகம் மிக மோசமானதென்று அறிவீரா?

ஐயா, அந்தனர், பார்ப்பனர் எல்லாம் ஆதிகாலத்தில் தமிழர்களே! உங்களுக்கு தெரியாதா? நூலைப் பார்ப்பவர் (அதாவது படிப்பவர், படித்து விடயங்கள் சொல்பவர்) பார்ப்பன ரெனப்பட்டார். அரசர்களின் உதவியுடன், தமது சூழ்ச்சியால், அவர்களை விரட்டிவிட்டு பிராமனர்கள் அத்தொழில்களை ஆக்கிரமித்துக் கொண்டனர். ஆக, கண்ணகி சொன்ன பார்ப்பனர் உம்மைக் குறிக்காதய்யா.

ஐயா, பார்ப்பனர்கள் இந்த மன்னைச் சேர்ந்தவரல்லர். கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட உஷ்ணப் பிரதேசத்திற்கும் உங்கள் தோலின் நிறத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லையையா. நீங்கள் கருப்பு பார்ப்பனரா? கலப்பினமாக இருக்கும் அல்லது கருப்பு
பார்ப்பனர்களில் ஒரு பகுதியினர், தொழில் போட்டிக்காக, தங்களை தரம் உயர்த்திக் கொண்ட
தமிழரென்றும் ஒரு கருத்து நிலவுகின்றதய்யா.

கலை, இலக்கியம், அறிவு நிறைந்த பழந்தமிழர்களை பார்ப்பனர்கள் எப்படி அடிமைப்படுத்தி யிருக்க முடியுமென்பது தானே உமது கேள்வி? அது தானய்யா சூழ்ச்சியென்பது! உங்கள் பாஷையில் சானக்கியம் என்பது! இலக்கியத் தாக்கம் கொண்ட தமிழன் உயர் நோக்குடையவனாக இருந்தான். உங்களின் சூழ்ச்சிக்கு முன் அவன் எம்மாத்திரம்? தற்கால சான்று வேண்டுமா அன்பரே? 16 வயதினிலே சினிமாவில் நடிக்க மைசூரிலிருந்து சென்னைக்கு வந்து தனது 40வது வயதிலேயே தமிழகத்தின் முதலரைச்சராகிறார் கன்னட பாரப்பனரான ஜெயலலிதா. இந்த அரிய காரியத்தை நிகழ்த்திய சூத்தரதாரி யார் தெரியுமா? ஷாட்சாத் 'சோ' பார்ப்பனர் தான்.

ஐயா, நான் 17 ஆண்டுகளாக துக்ளக் வாசகனாயிருந்தேன். 'சோ' என்றால் துள்ளுவேன். இந்த சூழ்ச்சியை உணர்ந்த்தும் விசிரியடித்தேன்- அந்தப்பத்திரிகையை. ஜெயலலிதா போன்ற ஒருவரை தமிழர்களின் தலைவராக திட்டம் போட்டு திணிக்கிரா னென்றால் அவன் எப்பேர்பட்ட கயவனாக இருக்க முடியும்? 'தலைவன் எவ்வழி - குடிகள் அவ்வழி', நாசமாய்ப் போனானடா தமிழன். இந்த உலகத்திலேயே தன்னை ஒரு உன்னதமான யோக்கிவானாக பிரகடணப் படுத்திக்கொண்டே தான் இந்த காரியத்தை அந்த பார்ப்பனர் செய்தேற்றினார். ஒருமுறையல்ல, இது வரையில் இருமுறை. இன்னும் எத்துனை முறையோ?

ஜயா, இவர்கள் உங்கள் தலைவரோ இல்லையோ எமக்குத் தெரியாது. ஆனால், இவர்கள் திட்டமிடுவது நடக்கிறது? எப்படி? இந்தியாவெங்கும் பார்ப்பனர்களய்யா! ஈழத்தமிழ்கள் பற்றிய இந்துவின் நிலைப்பாடு எடுபடுகிறது? எப்படி? உலகெங்கும் ஆரியர்களய்யா! அப்புரம் எங்கே நீதி?

யாம் சொன்ன ஒரு கருத்துக்கு மட்டும் ஏனய்யா எதிர்வினை புரியவில்லை? சவுகரியமாக மறந்துவிட்டீர்களா? அதான் - தமிழ் வழிபாடு... ஒன்று சொல்லுவார்கள். பார்ப்பனர்கள் எழுதுவதைப் படிக்கும்போது வரிகளைப் படிப்பதைவிட வரிகளுகிடையே படியுங்கள் என்று. அதுதானய்யா உங்களைப்புரிந்து கொள்ள எங்களிடமுள்ள சாவி. ராஜாஜியைத் தாங்கிப் பிடித்த அளவுக்கு கூட இந்த விடயத்தில் இயலாமல் சோடை போய்விட்டீர்களே! இதைப் போன்றொரு அபத்தத்தால் அதையும் தாங்கி யிருக்கலாமே? விட்டுவிட்டீர்களே!

இது சம்பந்தமாக இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன், எனக்குள்ள கடின வேலை நிமித்தமாக உமது எதிர்வினைக்கு எமது நன்றி. கடைசியாக ஒன்று. சமஸ்கிருதத்தை விட்டெரிந்து விட்டு, தமிழை ஏற்றி, பொதுஉடைமைக் கொள்கைக்கு எற்பிசைவு தந்து, திமிரை ஒதுக்கி, உண்மைத் தமிழராக வாருங்கள், உம்மை எமது தோளில் சுமக்கிறோம். ஈழம் மட்டுமல்ல, தமிழ்த்தேசமும் பிறக்கத்தான் போகிறது. இது காலத்தின் கட்டாயம். நாமெல்லாம் பல்லாயிரகனக்கான ஆண்டுகள் சேர்ந்து வாழத்தான் போகிறோம். யாம் மேற்ச்சொன்ன வழியில் நீர் மாறுவதுதான் இயங்கியல்படி ஒரே வழி. நல்ல வழி. சிந்தியும்!

SUNDAR
2008-08-23 03:30:00
sundar96@yahoo.com

ஐயா. மாற வேண்டும் என்று சொல்கிறீர்களே! என்ன மாற வேண்டும் என்று தெளிவாக சொன்னால் பராவாயில்லை! 1)நான் யாரையும் தாழ்வாகவோ, என்னை உயர்வாகவோ எண்ணுவதில்லை- ஆனால் என்னைச் சந்திக்கும் யாரும் ((எல்லா தமிழரும்) நான் என்ன சாதி என்று அறிந்து கொள்ளத் துடிக்கிறார்கள்!மாற வேண்டியது யார்? நானா, அவர்களா?
2) நானும் பகுத்தறிவாளன் தான்! உண்மை மட்டும் தான் வெல்லும்- என்பதுதான் என் கொள்கை- கடவுள் இல்லை என்பது நூற்றுக்கு நூறு தெளிவாக இருந்தால், கடவுள் இல்லை என்பது உண்மையானால்,நானும் அதை யெற்றுக் கொள்ளத் தாயார்- யெற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இறப்புக்கு பிறகு உயிர் தொடர்ந்து வாழ்கிறதா என்பது ஒரு அறிவியல் (உயிரியல் அறிவியல்) என்று எண்ணுகிறேன்- தியானம் மூலமாக உயிர் அறிவியல் ஆரய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்- இந்த ஆராய்ச்சியின் முடிவு கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பதை உணர்த்தும் என்று நினைக்கிறேன்!
3) நான் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன்- ஆனால் இன்றைக்கு சில வழக்கறீங்கர்கள் எப்படி நடக்கிறார்கள்? தங்கள் கட்சிக்காரருக்கு ஜாமீனில் வெளியே வரும் படி நீதிபதி தீர்ப்பு வழங்கவில்லை என்றால், மேல் நீதி மன்றத்தில் முறையீடு செய்யாமல், அதர்க்குப் பதிலாக நீதிபதியைத் தாக்கி அவர் மூக்கை உடைக்கிறார்கள்!ஒவ்வொரு மாதமும், வழக்கறீங்கர்கள் பஸ் ஓட்டுனர், காவல் துறையினர், லாரி உரிமையாளர் என்று சமுதாயத்தின் எல்லா பிரிவினரூடனும் சண்டையிட்டு,சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். 20 வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்ததா? மாற வேண்டியது யார்? நானா, அவர்களா?
4) நான் லஞ்சத்தை, நேர்மையற்ற வழியில் பணம் பெறுவதை எதிர்க்கிறேன்- கையூட்டுப் பெரும் வாய்ப்பு இருந்தும் பெறாமல் இருக்கிறேன்- மாற வேண்டியது யார்? நானா?
5) வன்முறை தவறு- பீடிக்கு நெருப்புக் கேட்க ஆரம்பித்து சண்டை உண்டாகி கொலையில் முடிகிறது- குடும்பங்கள் சமுதாயம் பாதிப்பு அடைகிறது-மாற வேண்டியது யார்? நானா, அவர்களா?

4) பார்ப்பானரே இல்லாத கிராமங்கள் தான் தமிழ் நாட்டில் பல உண்டு. ஆனால் தங்களுக்கு குறைந்த வூதியத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க வேண்டும் என்பதர்க்கு ஆக தாழ்த்தப் பட்டவரை நிலவுரிமை சாதியினர் அடக்கி வைக்க வன்முறையில் ஈடுபடுகின்றனர். தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைங்கர்களும் , பிற வகுப்பைச் சேர்ந்த பெண்களைக் கேலி செய்வது போன்ற செயல்கள் வன்முறைக்கு வாய்ப்பாக
அமைகின்றன- எல்லோரும் அடுத்தவரை மதித்து நடக்க வேண்டும்-வன்முறையில் யீடுபடக் கூடாது- பிரச்சி நாய்களைப் பேசித் தீர்ர்க்க வேண்டும்- என்று நாங்கள் விரும்புகிறோம்- மாற வேண்டியது யார்? நானா, அவர்களா?
சாதி தமிழ் நாட்டில் உண்டாக்கியது எப்படி? தமிழ் நாட்டில் எத்தனை சாதிகள்!!! செட்டியார் வகுப்பை எடுத்துக் கொண்டால் நகரத்து செட்டியார், நாட்டுக் கோட்டைச் செட்டியார், கோமூட்டிச் செட்டியார்....இப்படி எத்தனை பிரிவுகள்? ஆச்சாரிகள் வகுப்பை எடுத்துக் கொண்டால். மர ஆச்சாரி, பொன் கொல்லர், இரும்புக் கொல்லர்... இப்படி எத்தனை பிரிவுகள்?! இதை எல்லாம் வேதத்தில் சொல்லி பார்ப்பான் வந்து, பிரித்து வைத்தானா? அவரவர் அவரவர் தங்கள் தொழிலுக்கும், வாழும் இடத்தீர்க்கும் ஏற்ப்ப சாதிப் பிரித்துக் கொண்டனர். பார்ப்பான் கையில் தருப்பையை எடுத்துக் கொண்டு பீட்சை எடுத்து எளிமையாக வாழ வேண்டும்- பார்ப்பான் மற்றவருக்கு உதாரணமாக வாழ வேண்டும், பணத்தை குறிக்கோளாகக் கொண்டு வாள் வேண்டும்- என்று பார்ப்பானுக்கு ஆப்பு வுவைத்து விட்டனர். வேறு சாதியில் பிறந்து இருந்தால், வேலைக்குப் போய், கூலி வாங்கி காஞ்சி குடித்திருக்கலாம்! வேறு வேலைக்கும் போக்ககக் கூடாது- காசு சேர்க்கவும் கூடாது- வர்ணாசிரம முறையில் நசுக்கப் பட்டது, ஆப்பு வைக்கப் பட்டது பார்ப்பானுக்குத் தான்! ஸொற்றுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்தவர்களுக்குத் தான் அந்தக் கஷ்டம் தெரியும். உங்கள் கண்ணுக்குத் தெரிவது எல்லாம் கொடீசுவரப் பார்ப்பணர்கள் மட்டுமே! நீங்கள் பழகுவது உயர் மட்ட கனவான்கள் நிலையில் என்று நினைக்கிறேன்!தமிழிலே அழகான வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆனால் வற்புறுத்தி மாற்றுவது இந்து மதத்தில் இல்லை.
மேலும், மேலும் தமிழ் வழிப்பாட்டு முறை அனுசரிக்கப் பட்டு, பிறகு தமிழுக்கு முன்னுரிமை, வடமொழிக்கு பின்னுரிமை என்று வைத்துக் கொள்வது சிறந்த முறை. சிதம்பரம் கோவிலில் நடந்தது வட மொழி- தமிழ் மொழி சண்டையில்லை. கோவிலின் கட்டுப்பாடு யார் கையில் என்பதுதான் உண்மையான பிரச்சினை. அந்தக் கோவிலில் பூசனைத் தொழிலில் யீடு படுவதில் கிடைக்கும் வறுவாயில் பல குடும்பங்கள் உள்ளன! நடைபாதையில் கடை விரிப்பவர், தன் இடத்தில் இன்னொருவர் கடை விரிக்க வந்தால் சண்டை இடுவது போலதான் இதுவும்! பார்ப்பணர், ஈழத் தமிழர்கள் மீது அன்பு உடையவர்கள். ஒருவர் கஷ்டப் பாடும் போது, அதைப் பாராமல் செல்பவர் பார்ப்பனர் அல்ல. ஈழத் தமிழர் சிங்களரால் துன்புறுத்தப் படுவது எங்களுக்கு தெரியும். அதற்க்கு தேவையான தீர்வு என்ன என்பதை, அது ஈழமோ,இல்லை கூட்டடாச்சியோ- அதை எல்லாம் தீர்மானிக்க வேண்டியது ஈழத் தமிழர்தான்-பார்ப்பணர்கள் அவர்களுக்கு எதிராக செயல் படுவதும் இல்லை- செயல் பட வேண்டிய அவசியமும் இல்லை! ஈழம் புரிகிறது! ஆனால் நீங்கள் சொல்லும் தமிழ் தேசம்-அது என்ன என்று எனக்குப் புரியவில்லை- விளக்கினால், அதிலும் எங்கள் நிலைப் பாட்டை விளக்குவோம்!நான் ஒன்றும் சோ உக்கு காரியதர்சி அல்ல. ஆனதே சோ தான் 1982 முதல் 1988 வரையதே செயலலிதாவை
கடுமையாக விமரீசித்தவர்- சாணகி அணியை ஆதரித்தவர்- 1995 ல் கலைங்கார், மூப்பனார் கூட்டணிக்கு ஆதரவு அளித்து, உருவாக உழைத்தவர். செயலலிதா பார்ப்பணருக்கு ஆதரவாக நடப்பவர் கிடையாது! கலைங்கார், சுயனல அரசியலை விட்டு, வன்முறையை எதிர்த்து, லஞ்சத்தை
ஒழித்து, வாரிசு அரசியலை கை விட்டால், அவர் எங்களை திட்டினாலும், அவரை ஆதரிக்க தயார்!
















Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP