நாகேஷ் - வடிவேல் இணையும் காதலிக்க நேரமில்லை
காதலிக்க நேரமில்லை படத்தின் இரண்டாம் பாகத்தில் நாகேஷ், வடிவேலு இணைகிறார்கள்.
இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் காதலிக்க நேரமில்லை. ரவிச்சந்திரன், முத்துராமன் இருவரும் கதாநாயகர்களாகவும், நாகேஷ் காமெடியனாகவும் கலக்கியிருப்பார்கள். டி.எஸ்.பாலையாவும் சிறப்பாக நடித்திருப்பார்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் மனோபாலா திட்டமிட்டிருக்கிறார். இதில் டி.எஸ்.பாலையா நடித்த வேடத்தில் நாகேஷிடமும், நாகேஷ் நடித்த வேடத்தில் நடிக்க வடிவேலுவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் மனோபாலா.
காதலிக்க நேரமில்லை முதல் பாகத்தின் சிறப்பை எந்தவிதத்திலும் குறைக்காத விதத்தில் இந்தப் படத்தை எடுப்பதாக ஸ்ரீதரிடம் வாக்களித்துள்ளார் மனோபாலா.
|