Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
KeetruCinemaNews
வெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்: கமலஹாசனுக்கு உலக நாயகன் பட்டம்!
தீசுமாசு டி சில்வா

ஜூன் 12. ‘தசாவதாரம்’ ரிலீசுக்கு ஒரு நாள் முன்தினம். வழக்கொன்று வந்தது உச்ச நீதிமன்றத்தில். வழக்கம்போல் தள்ளி வைக்கவில்லை. காரணம், வழக்காடியவர்கள் புறப்பட்ட இடம் அப்படி. விடுமுறையென்றாலும் வீட்டிலிருந்தேனும் விசாரித்தாக வேண்டும்! விசாரித்தார்கள்.

Kamal “முதலில் படத்தைப் பாருங்கள். பிறகு போடுங்கள் வழக்கை” என்றார்கள். ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று ரகசிய ஜாடை காட்டி, தைரியமூட்டி சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். படம் வந்து வாரம் நான்காகி விட்டது. வழக்கையும் காணோம், ஒரு புண்ணாக்கையும் காணோம். என்னாச்சு? 12 ஆம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் நடந்த பங்காளிச் சண்டையைச் சொல்லி இந்துக்களின் மானத்தைக் கூண்டிலேற்றுகிறார் கமல் என்ற குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை என அறிந்து, வருந்தி ஜகா வாங்கி விட்டார்களா? ‘இருக்கலாம்’ என்பவர்கள் அப்பாவிகள்.

சுஜாதா செத்துப்பூட்டாரு, பாலச்சந்தருக்கு வயசாயிடுச்சு, மணிரத்னத்துக்கோ முடியல. கொஞ்சம் வெவரஞ் தெரிஞ்சவாளா இருக்குற இவரையும் பகைச்சுக்கிட்டா கோடம்பாக்கத்துல நமக்கு ஆளில்லாமப் போயிடுமேங்கிற கரிசனையால அடக்கி வாசிக்கிறாங்களோ....? அப்படியும் இருக்கலாமென்பவர்கள் உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள். இப்படி யோசித்துப் பார்க்கலாம்.

ஓடாத படத்தைத் தடை செய்து ஓடவைக்க சில தயாரிப்பாளர்களே பினாமிகளின் பெயரில் கோர்ட்டுக்குப் போவார்கள். ஆஸ்கார் ரவிச்சந்திர அய்யரின் பினாமியாக இராம. கோபாலய்யர் ஏனிருக்கக்கூடாது? போஸ்டரில் பெயர் இல்லாவிட்டாலென்ன? ‘சைலன்ட் பார்ட்னராக’ இருக்கலாமில்லையா?

வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை எனும் அறிவிப்புடன் படம் ஆரம்பிக்கிறது. இந்த அறிவிப்பு மட்டும் போதுமா? வரலாறு எங்கே முடிகிறது, கற்பனை எங்கே தொடங்குகிறது என்று சொல்ல வேண்டாமா? இரண்டாம் குலோத்துங்கன், ரங்கராஜன் நம்பி சைவ - வைணவ யுத்தம், ‘ஓம் நமோ நாராயண நமஹ...’ இவையெல்லாம்தான் வரலாறு என்று ஒரு கூட்டம் நம்பிப் படம் பார்த்துக் கொண்டிருக்க, மல்லிகா ஷெராவத், பிளெட்சர், கிளப் டான்ஸ் சமாச்சாரங்கள்தான் வரலாறு, மற்றதெல்லாம் கப்ஸா என்று இன்னொரு கூட்டம் குழம்பி விடக்கூடாதே!

ஒரு படைப்பாளனின் நேர்மை அவன் சொன்ன செய்தியில் மட்டுமல்ல, சொல்லாமல் விட்ட சங்கதிகளிலும் இருக்கிறது. பம்பாயில் இந்து - முஸ்லீம் கலவரத்தைச் சொன்ன படைப்பாளி மணிரத்னம், கலவரத்துக்குக் காரணமான பாபர் மசூதி இடிப்பைத் திட்டமிட்டே மறைத்ததுபோல்... ‘ஜென்டில்மேன்’ முதல் ‘சிவாஜி’ வரை கல்வி வியாபாரமாகி விட்டது என புலம்பும் ஷங்கர் கூட்டணி, அது தனியார்மய - தாராளமய தாசர்களால் நேர்ந்தது என்பதைச் சொல்ல மறுப்பது போல்... கிருமி யுத்தத்தின் பூர்வ ஜென்மத் தொடர்பை ஜப்பானின் ஹிரோஷிமா - நாகசாகியில் தேடுவதற்குப் பதில் கையில் கிடைத்த புராணக் குப்பைகளில் அலசியிருக்கிறார் கமல்.

கடலில் தூக்கிப் போடப்பட்ட பெருமாள் சிலையை மீண்டும் கரைக்குக் கொண்டு வரவே சுனாமி வந்ததாம். அதாவது இயற்கைச் சீற்றத்தை புராணத்துடன் முடிச்சுப் போடுகிறார். ஜெயேந்திரனைக் கைது செய்ததால்தான் சுனாமி வந்தது என சங்கர மடத் துதிபாடிகள் அப்போது சொன்னதை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்னதற்கு வயிற்றெரிச்சல் காரணம். பின்னவருக்கு? பார்ப்பனிய விஷமத்தனமே காரணம்.

ஆன்மீக முட்டாள் ரஜினியை விட, அரைகுறை அறிவாளி கமல் உண்மையில் ரொம்ப... ஆபத்தானவர். தசாவதாரத்தைக் கிழிகிழியெனக் கிழிக்கும் விமர்சகர்களில் சிலரும் கொண்டாடும் புரட்சிப் படம் ஹேராம். ஹேராமின் நாயகன் யார்? காந்தியைக் கொன்றவன். கொல்வதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் - அதன் வழி இந்தத் தேசத்தின் ஒட்டுமொத்த முசுலீம்களையும் கருவறுக்க வசதியாக தன்னுடைய பெயரை ஒரு முசுலீம் பெயராக்கிக் கொண்ட ஒரு ஆர்.எஸ்.எஸ். கிரிமினல். அவன் பெயர் கோட்சே. அந்தக் கோட்சேவைத்தான் நாயகனாக்கினார் கமலஹாசன். அதுசரி, ஒரு கிரிமினலை கதாபாத்திரமாக்கும் உரிமை ஒரு படைப்பாளிக்கில்லையா? இருக்கிறது. ஆனால், இது வெறும் படைப்பாளியின் உரிமை பற்றிய விசயமில்லையே. அந்தக் கதையை எந்தப் பாத்திரத்தின் வழியாக அந்தப் படைப்பாளி முன்வைக்கிறார் என்பதே கேள்வி.

வேலு நாயக்கர் என்ற ரௌடியாக, பொம்பளைப் பொறுக்கியாக, மோசமான மனநோயாளியாக வந்தபோதெல்லாம் அவரின் வக்கிரங்களைக் கண்டு ரசிகர்கள் கண்களைப் பொத்திக் கொள்ளவில்லை. மாறாக கைதட்டி ரசித்தார்கள். பாத்திரத்தின் தன்மையோடு ஒன்றிப் போனார்கள். ‘சூப்பர் ஸ்டார்’ இமேஜ் உள்ள நடிகன் ஏற்கும் எந்தப் பாத்திரமும் ரசிகரிடம் அப்படித்தான் போய்ச் சேரும். கோட்சேவும் அப்படித்தான் போய் சேர்ந்திருக்கக்கூடும். ஒருவகையில் கோட்சே தரப்பு ‘நியாயங்களை’ ஹேராம் வழியாக ரசிகர்களிடம் கொண்டு சென்றார் கமல்.

சிவசேனாவும், வி.எச்.பி.யும் அரசியல் தளத்தில் செய்யும் பணியை கலைத்துறையில் செய்திருக்கிறார் இந்தக் கலைஞானி. செய்ய வேண்டிய வேலையை சரியாகச் செய்திருக்கிறேனா என்று ‘பம்பாய்’ படத்தின்போது பால்தாக்கரேவின் காலில் விழுந்து கேட்டார் மருமகன் மணிரத்னம். புஷ்ஷின் அங்கீகாரத்திற்காக அலைந்து திரிந்தார் மாமா கமலஹாசன். நல்ல கலைக்குடும்பம்.

அறுபது லட்சம் யூதர்களைக் கொன்ற ஹிட்லரின் நாஜிக் கொடூரத்தைப் பதிவு செய்யும் ஒரு எழுத்தாளன் அடுத்த வரியில் ‘குழந்தைகளென்றால் ஹிட்லருக்குக் கொள்ளைப் பிரியம்’ என்று ஒரு பாராட்டையும் சேர்த்து எழுத முடியுமா? படம் சொல்லும் அரசியலை ஒரு ஓரம் தள்ளி வைத்துவிட்டு, ஒரு நடிகனாக கமலின் பன்முக ஆற்றலைப் பார்க்க நம் கழுத்தைப் பிடித்து திருப்புகிறார்களே.... சிலர்! அவர்கள் முடியுமென்று சொல்கிறார்கள்.

‘கடைந்தெடுத்த கிரிமினல்’ என்று உலகமே காறி உமிழ்கிறது ஜார்ஜ் புஷ் முகத்தில். ‘உலக நாயகனே வா... வா...’ என்று கும்மியடித்துக் குலவையிடுகிறார் கமலஹாசன். ஒரு மோசமான அரசியலை முன்னெடுக்கும் படைப்பில் நல்ல விசயங்களைத் தேடி பூதக் கண்ணாடியோடு கிளம்புபவன் நல்ல விமர்சகன் அல்ல. அந்த ஆளோட ரசிகர் மன்றத் தலைவன். தந்தை பெரியார் சொன்னதுபோல் இது பீயில் அரிசி பொறுக்கும் வேலை. சரி, ஒரு வாதத்துக்கு இவர்களிடம் மேலோங்கும் நடிப்பு ரசனையை அங்கீகரித்து ஒரு கேள்வி கேட்கலாம். முண்டாசு கட்டாத பாரதி... உடைவாளும், உறுமலும் இல்லாத ஒரு கட்டபொம்மன்... கோட்டும், சூட்டும், சவடாலும் தொலைத்த ஜார்ஜ் புஷ்... படுக்கையறையிலோ, கக்கூசுக்குள்ளோ... அனேகமாக அவர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள். ஒரேயொரு காட்சியில் அடையாளப்படுத்திவிட முடியுமா அவர்களை... எந்த ஒப்பனையாளரின் துணையுமின்றி? நடிகர் திலகத்துக்கே நிச்சயம் நாக்கு தள்ளி போகும். கலைஞானி என்ன... வெங்காயம்!

பின்னிணைப்பு அல்ல சாட்டை:

கண்டங்கள் பல தாண்டி, பல தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்த கோவிந்த ராமசாமி ஒரு பெண்ணிடமிருந்து தம்மாத்துண்டு டப்பியை பிடுங்க இத்தனை பாடா?

அந்தப் பெண் ஒரு அக்ரகாரத்து மாமி என்பதைக் கணக்கில் கொண்டால் கலைஞானியின் ‘நூல்’ அரசியல் புலப்படும். ஆலய நுழைவு, இடஒதுக்கீடு இவையெல்லாவற்றையும் பார்ப்பனர்களிடமிருந்து நாமாகப் பிடுங்க முயற்சிக்கக்கூடாது. அவர்களாகப் பார்த்து ‘ஐயோ பாவம் பொழச்சுப் போறான்’ என கொடுத்தால் எண்சாண் உடம்பையும் ஒரு சாணாக்கிக் குறுகி பெற்றுக்கொள்ளலாம்.

தில்லை வாழ் அந்தணர்களிலிருந்து தில்லி ‘எய்ம்ஸ்’ வாழ் அந்தணர்கள் வரை அதைத்தான் சொல்கிறார்கள். சுனாமியால் ஜனங்க செத்துக் கிடக்கையில் ஒருத்தனுக்கு காதல் உணர்வு கிளம்புவது குரூரமில்லையா?

தந்தை மரணப்படுக்கையில் கிடந்தபோது தனயனுக்கு மூடு கிளம்பியதாக மகாத்மா வரலாறு சொல்கிறது. சத்திய சோதனையின் அந்தப் பகுதி கமலை பாடாய் படுத்தியிருக்க வேண்டும். ஹேராமிலிருந்து அவருக்கு எழுச்சியூட்டும் தருணங்களாக இவையே அமைகிறது. தொடர்ந்து இதை இப்படியே விட்டு விடுவது ஆபத்து. மாத்ரூபூதம் செத்து விட்டதால் நாராயண ரெட்டியிடம் போய் கமல் ‘கவுன்சிலிங்’ பெறலாம்.

அடைத்து வைக்கப்பட்டதால் சுனாமியிலிருந்து முசுலீம்கள் தப்பித்தார்களா?

குஜராத்தின் கோத்ரா கலவரத்தில் விரட்டப்பட்ட முசுலீம்கள் இன்னமும் அகதி முகாம்களில்தான் அடைபட்டிருக்கிறார்கள். அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் அப்பூமியில் முசுலீம்களுக்கு பெருமாளே ஏற்பாடு செய்த பாதுகாப்பு என்கிறார் கமல்.

தேவையில்லாமல் எதுக்குப் பத்து அவதாரங்கள்?

அது, சிவாஜியின் ஒன்பது அவதாரங்களை மிஞ்ச வேண்டும் என்ற சொந்த அரிப்பால் வந்த வினை. ‘கவியரசு’ கண்ணதாசனை பின்னுக்குத் தள்ள, ‘கவிப்பேரரசு’ பட்டம் போட்டுக் கொண்ட வைரமுத்துவின் அரிப்புக்கு ஈடான அரிப்பு இது. “அந்த மேதை எங்கே; நான் எங்கே?” என்று வெளியில் கைகட்டி பவ்யம். உள்ளுக்குள்ளோ அதைத் தாண்டிக் குதிக்க சந்தர்ப்பம் தேடி அலைச்சல். அரிப்பு இருக்கும் அளவுக்கு கொஞ்சம் சரக்கும் இருந்திருந்தால் கமலின் மானம் இப்படி கப்பலேறியிருக்காது.

கிளைமாக்சில் சுனாமி வந்ததற்கு உண்மையான காரணம் என்ன?

“பெருமாளைக் கரையில் கொண்டு சேர்க்க!” - இது அசின் போன்ற அரை லூசு ஆத்திகக் கும்பலுக்கு. “கிருமியைக் கொல்ல” - இது பாராட்டி விழா எடுக்கக் காத்திருக்கும் கி. வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவுக் கோஷ்டிக்கு. உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை எடுத்துக் கொள்ளலாம். இந்த ரெண்டுகெட்டான் காட்சிக்குப்பின் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறது. உலகையே அழிக்கிற கிருமியை கடல் தண்ணீர் அழித்துவிடுமென்றால், அதற்கு சுனாமியை அனுப்பத் தேவையில்லையே! மெரினா பீச்சில் வழக்கமாக வந்து போகும் ஒரு கடல் அலை போதுமே! பெருமாள் அந்தக் காலத்து ஆள். வெவரம் பத்தாம சுனாமியை அனுப்பிட்டாரு. கலைஞானியல்லவா உஷாராயிருந்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேணும்!

அது சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு சிலையை கரையில் சேர்த்து என்ன பிரயோஜனம்? பழையபடி சிதம்பரம் கோயிலுக்குள் அதைக் கொண்டு வைப்பது யாராம்? சிதம்பரம் தீட்சிதர்களைக் கேட்டு சீக்கிரம் அதற்கொரு ஏற்பாடு செய்ய வேண்டாமோ! அவசரப்பட்டு அடுத்த சுனாமியை பெருமாள் சாமி அனுப்பிச்சிடப் போறார்.

“கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்” என்ற வசனம் கடவுள் இல்லை என்பதைத்தானே சொல்கிறது?

“நீ ஆம்பளைதானே?” என்ற கேள்விக்கு “அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்” என பதில் சொல்லும் ஜென்மம் எது? கண்டிப்பாக ஆணுமில்லை, பெண்ணுமில்லை; இடைப்பட்ட ஏதோவொண்ணு. “இருக்கிறாரா, இல்லையா?” என்ற கேள்விக்கு ‘இருக்கு’, ‘இல்லை’ என்ற ஒற்றைச் சொல் மட்டுமே பதிலாக இருக்க முடியும். மற்றவையெல்லாம் பகுத்தறிவு முகமூடிக்குப் பின்னால் பதுங்கிக் கிடக்கும் மௌடீகங்களே. “கடவுளே, உனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சா?” எனப் புலம்பும் பக்தனின் குமுறலில் வெளிப்படுவது கடவுள் மறுப்புதானென்றால் சந்தேகமே வேணாம்... கமலின் வாயிலிருந்து தெறிக்கும் ஒவ்வொரு சொல்லும் பகுத்தறிவுப் பாசறையில் புடம் போட்டவை என்று ஒத்துக் கொள்கிறோம். புகழாரம் இன்னும் கொஞ்சம் நீண்டு “வசனங்களை எழுதியவர் கமலா? பெரியாரா?” என பட்டிமன்றம் நடத்தாத வரைக்கும் நாம் தப்பித்தோம்.

- தீசுமாசு டி சில்வா (theesmas@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Baskar
2008-07-14 12:07:00
vidhya2000@yahoo.com

Good review; But again the review is done in authors perspective. If manirathinam has not gone into the Babri masjid demolition, the author has not gone into Godhra Incident. may be the name of the author suggest his religious leanings

Badrinath
2008-07-14 04:02:00
prabhabadri@yahoo.com

Mutrilum Araikurai vimarsanapparvai.
padaththai vanmam endra kannadiyoodu paarkatheergal
Munnalil avar ayangar paiyan
tharpoodu avar solkirar en thanthai peyar
ramasamy naicker endru.
Pl stop throwing mud
Badrinath

boopathi
2008-07-15 04:33:00
mech_nb@yahoo.co.in

dont writes some non-sense.......if u dont have any idea ....plz stfu...

Shanmuga Subramanian
2008-07-15 11:53:00
ShanmugaSubramanian@gmail.com

What you have written is a biased one... and utter nonsense...

From your name I can tell why you are writing like this ....

In the film
Bush asks his staff "Whether we can use atom bomb on that virus"

This clearly indicates foolishness of "bush" in that movie...

Maha
2008-07-16 01:12:00
maha4india@yahoo.com

100% nonsense. The main aim of this author is not to review the movie but ............

Karthik
2008-07-16 02:27:00
Karthirajendran@yahoo.com

Hello De Silva....

Kamal "adhi medhavi dhaan"... Avarukku unga loda certificate theva illa.....

neenga romba puthisaalithanamaa review panniyatha nenaikka vendam....

Mind your business & see the good things

DEVARASU.P
2008-07-16 05:23:00
deva_mfg@yahoo.co.in

dear silva... i think you don't know how to review,
first learn to review, then you write. becuase you are wasting our time.

kjvenkatesan
2008-07-17 10:57:00
kjvenkatesan@yahoo.com

those who doesnt have any relation with cinifield is not entitled to comment.if you like see the movie otherwise dont.
Instead criticise the creater, if u can able-why dont you produce such a movie which can educate public.
changes will happen with individual only.group of individuals are society.
let you become the creator and producer-then comment on others.

suresh
2008-07-19 03:30:00
mgk7@rediffmail.com

யார் யார் எல்லாம் விமர்சனம் செய்ய வேண்டும் என்று வெவஸ்தயே இல்லாமல் போய்விட்டது. தனி மனித தாக்குதல்கள் தான் இது. யாராவது chaos theory ஐ இவருக்கு விளக்கி ஏன் சுனாமி வந்தது என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் பண்ணும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

lavan
2008-07-19 06:57:00
lavapirathan1@yahoo.com

one dog is barking against sun

aravind
2008-07-19 11:19:00
aravindan_1981@yahoo.co.in

Actions of actor Vivek as a revolutionary priest (purohithar) in film 'Saamy' may be let without going behind the caste politics it shows to us behind the scenes, because you cannot question either director Hari or actor vivek as they are of the same 'common mass' category. But a great thinking actor, a director (not KS Ravikumar, but Kamal himself) who knows world cinema, and a rationalist (who always declares this himself) produces a crap, like dasavatharam with a lot of casteist, relegionist and capitalist politics spread carelessly (or may be carefully) must be introspected very minutely and he must answer these questions in the true spirit. Let him not bask in the glory of commercial victory of his irresponsible latest so called 'world cinema in tamil'.

Kannan
2008-07-21 12:09:00
meetsaniyan.99@gmail.com

Thamizh thiru De silva avargalukku:
Oru padathai padamaai mattum vimarsanam seyyum paarvai innum yen vimarsagargalukku varavillai? kamal avargal thaamaga mun vandhu idhuh oru kalai padam endru arikkai vittadhaai enaku ninaivillai. Thangalin vimarsana paarvai sila idangalil enaku pidithirukkiradhu pala idangalil ennai mugam sulika vaithadhu...
athanai paer irandhu kidakumbodhu kamalukku kaadhalaa endra kaelvi nyayamanadhu...
Sivaji yin 9 avadhaarathai muriyadika vendum endra aripu kamalukku vandhadhai eppadi ungalal vaeru kannotathil paarka mudindhadhu.
Adhu oru valarchiyin nimitham vandha vaetkai endru ungalal yen eduthu kolla mudiyavillai..
Ungalukkul erivadhu puratchi theeyaaa? poraamai theeyaa?
Matravargalai vida oru padi maelae poi naan vimarsikka vendum endra Aripu ungalukkum irukiradhey...
Kamalum manidhan dhan...
Adhanaal kamalin aripu nyayamanadhey...
Innum oru murai padam paarthu vittu George bush aga vandha kamalin seyalgalai oppidunagal.
Vincent poovaraaganai patri neengal yen ezudhavillai endra kaelvi ennal kaetkaamal iruka mudiyadhu...


Shekar
2008-07-21 01:43:00
shekarlenient@gmail.com

Maangaaygalum Madayanungalum Cinema Paarkka thodankittaanga... Silar thannaipol arivaali vaera yaarum illannu nenaikkirathu namakku theriyum. Aanaa, Koncham Porumaiyaa paarthaal, Avanga Nenaikkirthula thappillannu sollalaam. Aaenna Koncham Vivarathoda Vivaram Illatha Vishayatha Solliyiruppaanga... Dasaavatharam padathil theesmas madayan paarthu purinchukittathu Athila idampetra microorganism Virus vidavum siriyathu. Eppavumae vimarsanam seiyvathu miha ezhithu. Athukku theavai Kutharkka paechuthaan. Aanaal Seyalil kaattuvathu enbathu adhigabaeraal iyalaatha vishayam.

Ithaey theesmas-ai paesa vaithu, avar paesuhira ovvoru vaarthaiyum muraiyattrathu, aathaaramattrathu, thavaraanathu entru solli, nee oru muttaal enbathai kooda ennaal nirubikka mudiyum.

Naam Kattrathu Kaimannalavu,
Kallaathathu Ulahaluvu...

Yaarum thannai buthisaali entru ninathukolla vaendaam..
Thaan seyyum vaelayil kooda muzhu buthisaali entru evanaalum sollikollalaahaathu...

Kamal Solliaya Concept 'Anbae Sivam' - thirku innaiyaaha(Athu Padam Alla, Paadam) ulaha cinema ontrai ungalaal solla mudiyumaa... Kamal Ulaha Naayagan.. thaan.
Santhaeham Vaendaam

surendar
2008-07-21 07:57:00
jahoo_13@rediffmail.com

Dear silva,
The main theme in this movie is based on chaos theory.But u didnt understand what it is?u r degrade urself by reviewing like this idiot manner.If u r not having the stuff to understand,pls shut ur mouth...,

solomon jayaraj
2008-07-23 12:30:00
spjayaraj@yahoo.com

I have not seen the movie. I dont need to. So I cannot comment on the review. But in these days of wide knowledge and acceptance of transgender community the last para betrayed the reviewer's ignorance on the whole. Today the Tamil media especially has started accepting the transgender community as a part and parcel of the society. It is no more the vulgarised, commicked section. Theesumas d silva should learn lesson atleast on this from Kamal. I dont want to eulogise Kamal. But he is one actor in Tamil scene who is very careful in the scripts about values. You can rarely see in his movies wrong value judgements or passing funny remrks on women, disabled etc. We should remember that he should make movies and succede at box office also. Other wise there is only exit board. With these compulsions one should try to accept him. As for me atleast he is there in Tamil scene. Though he may not appease me always.

Ravi
2008-07-24 07:46:00
ravi100976@gmail.com

maarupadda vimarsanam. oru sila seithigalil unmai irunthalum sollum mun pala konanggalil athai yosikka vendum. 3 mani nera padathil ethanai unmaigalai yatharthamaga solla mudiyumo appadi solli irukkirar kamal. eppadi ellam athil kutram kandupidikalam endru mattum ninaithiruporku ellame thavaruthan. satru virivaana ennam kondu parunggal. nalla seithiyai sollum pothu athai kallanga pdutha vendame.

saravanan.s
2008-07-25 04:00:00
saranmadras@yahoo.com


I can see one ponit in the feedbacks sent for this review .Many who opposed the review have only one agenda " PUNOOLAI EPPIDIYAVATHU THOOKI PIDIKA VENUM" and nothing else . Some fools have mentioned above one 'elavu' theory ' and iam sure they dont know anything abot that 'elavu ' theory .

no bloddy has answer D.silva's follwoing questions ...
1) "இந்த ரெண்டுகெட்டான் காட்சிக்குப்பின் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறது. உலகையே அழிக்கிற கிருமியை கடல் தண்ணீர் அழித்துவிடுமென்றால், அதற்கு சுனாமியை அனுப்பத் தேவையில்லையே! மெரினா பீச்சில் வழக்கமாக வந்து போகும் ஒரு கடல் அலை போதுமே! பெருமாள் அந்தக் காலத்து ஆள். வெவரம் பத்தாம சுனாமியை அனுப்பிட்டாரு. கலைஞானியல்லவா உஷாராயிருந்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேணும்!

2) “இருக்கிறாரா, இல்லையா?” என்ற கேள்விக்கு ‘இருக்கு’, ‘இல்லை’ என்ற ஒற்றைச் சொல் மட்டுமே பதிலாக இருக்க முடியும். மற்றவையெல்லாம் பகுத்தறிவு முகமூடிக்குப் பின்னால் பதுங்கிக் கிடக்கும் மௌடீகங்களே. “கடவுளே, உனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சா?” எனப் புலம்பும் பக்தனின் குமுறலில் வெளிப்படுவது கடவுள் மறுப்புதானென்றால் சந்தேகமே வேணாம்... கமலின் வாயிலிருந்து தெறிக்கும் ஒவ்வொரு சொல்லும் பகுத்தறிவுப் பாசறையில் புடம் போட்டவை என்று ஒத்துக் கொள்கிறோம்.

3) கலைஞானியின் ‘நூல்’ அரசியல் புலப்படும். ஆலய நுழைவு, இடஒதுக்கீடு இவையெல்லாவற்றையும் பார்ப்பனர்களிடமிருந்து நாமாகப் பிடுங்க முயற்சிக்கக்கூடாது. அவர்களாகப் பார்த்து ‘ஐயோ பாவம் பொழச்சுப் போறான்’ என கொடுத்தால் எண்சாண் உடம்பையும் ஒரு சாணாக்கிக் குறுகி பெற்றுக்கொள்ளலாம்.

what Mr.D silva has written is correct i agree.....

thanks
s.saravanan

VENKATESAN
2008-07-26 02:39:00
venkey56@yahoo.co.in

பெருமாளைக் கரையில் கொண்டு சேர்க்க பத்து அவதாரங்கள்- KAMAL SATHI.

இசுமயில்
2008-07-26 05:10:00
dul_fiqar@yahoo.com.sg

நல்ல விமர்சனம், இரண்டு தகவல்கள் - 1. வேலு நாயக்கர் பொம்பள பொறுக்கியாக காட்ட வில்லை. 2. ஹே ராமில் கோட்சேயை முன் வைக்கவில்லை, கிட்டத்தட்ட ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை கொண்ட சாகேத் ராமை தான் நாயகனாக்கினார்.

மற்றபடி படத்தின் விமர்சனங்களை படிக்கும் போது நாயகனுக்கு தான் ஆடாகட்டியும் தன் சதை ஆடியதை நன்றாக உணர முடிகிறது

aha
2008-07-27 04:03:00
aha@gmail.com

Get well soon....I am against Kamal for his nonsense movies.But just not imagined even we have psychos to write garbages like this.To attack other caste stupidly un caste-in vishamathanathai vida brahmins hav very less vishamathanam.Please dont call the criminal kamal as Brahmin.Only euunuch like will support reservation based on ur birth.

asaithambi
2008-07-28 12:43:00
asaisivasamy@yahoo.com

I think "ulaganayakane" that title is only suitable for kamal.compare to other southindian actors.in THASAVATHARAM not necesory to act 10 carectors,If he thought that NEPOLIAN cherector also he did it.Totaly he would do 11(elevan) charectors, I donot why he miss it? To Mr.Kamal sofar I love ur acting I, infuture also I will be love ur act,please don't act like this "thasavatharam. act like THEVER MAGAN, KURUTHIPUNAL,SALANGAI OLI,etc...

prabhanathan
2008-07-28 09:46:00
pbn@gmail.com

அய்யா என் முற்போக்கே... ஆரம்பக் காட்சியில் வரும் அந்த பிராமண நம்பிக்கு தன் ஆச்சாரியார் முக்கியம்.. தன் மதம் முக்கியம்... தன் சாதி முக்கியம்.. தன்னுடைய கல் கடவுள் முக்கியம்.. அதற்காக உயிர்த் தியாகமே செய்கிறார்.. யார்.. பிராமண நம்பி.. கடைசிக் காட்சி... தலித் வின்செண்ட் (பெயரைக் கவனிக்க..) தன் மண் முக்கியம்.. அதில் வசிக்கும் இந்த உலக மக்கள் அனைவரும் முக்கியம்.. அதற்காக இறுதிவரை போராடி, மனிதனுக்காக அதுவும் தன் எதிரியின் குழந்தை உயிரைக் காப்பாற்றி, உயிர்த்தியாகம் செய்கிறார். யார்.. தலித்.. அதன் மூலம் முன்னவர் கல்லுக்காக உயிர்த் தியாகம் செய்கிறார்.. பின்னாள் வந்தவர் மனிதனுக்காக உயிர்த் தியாகம் செய்கிறார் என்று காட்சிகள் மிகத் தெளிவு. ஆனால் தீசு, மாசு மற்றும் லூசுகளுக்கு அது புரியவில்லை. மைக்ரோஸ்க்கோப் வழி புழுவைத் தேடுவதைப் போல நொட்டை சொல்கிறார்கள்.. அய்யா முற்போக்குகளே.. இப்படியே திங்க் பண்ணி வேறு ஏதாவது 'போக்காகி' விடாதீர்கள் ..

Anisha
2008-08-01 12:20:00
anisha111@live.com

ஒரு திரைபடத்தை திரைபடமாக பாருங்கள். சாதிப்படமாக பார்க்க வேன்டாம்...
சிறிது இடமும் அனுமதியும் கிடைத்தால் என்ன வென்டுமானாலும் எழுதலாமா என்ன ?

milton
2008-08-04 02:48:00
amvinoth143@gmail.com

i accept some of your views and oppose most of your views.....i think basically u dont like kamal,thats y these kind of criticism came...dasavatharam is a typical masala movie with some sort of science fiction,technical aspects and thanthai periar's pagutharivu and lots of hard works.i accept ur valid view against mani rathnam and shankar,thats damn sure....babri masjid demolision is the reason for all terrorism activities,we cant hide that.we should punish godse because he killed gandhi.but we cant kill his all communities,thats not a humanity.i accept that godra incident is sad one,we should identify the culprits and punish them,instead of that how can u kill all their communities(gujarat incident)in the support of government....anyhow for all these incidents babri masjid demolision is the root.and shankar in his gentle man movie told that we dont provide reservation and all.i dont know whether he knows or not...nearly 1000 years our people didnt study,some communities only studied.after around 1860 only some british and machinaries came and opened schools and colleges for all in equal manner.how our people get those opportunities within 200 years?resevered people can get their benifits with reservation only.Dr.Ambedkar itself has told that after some years,after all equal we can omit this.but that day didnt come...go to villages and rural areas and see the situation.ok come to point...in my point of view,i know kamal indirectly..he is very well aethist and basic humanity stuffs,we can see some kind of thanthai periyar's thoughts in that movie,those itself has revealed about him.so ple dont see with narrow angle....guys n gals whther we have faith in god or not that doesnt matter,whther we have humanities is there or not....it is the matter.in our society we can accept anythng but that shouldnt form the caste and superstition and shouldnt split and destroy the people.....finally i tell 2 points...WE CAN SEE THE GOD WITH SMILE OF POOR and HELPING HANDS ARE BETTER THAN PRAYING LIPS.humanity should be our first...........:-)

amith
2008-08-07 07:35:00
amithknair@gmail.com

This is nothing but crap. Not everybody can write a good review.

gurunaathan
2008-08-11 04:00:00
chandiranguru@gmail.com

hello shiva neenga yaarunga kamalahasana pathhi pesa?ஒரு திரைபடத்தை திரைபடமாக பாருங்கள். சாதிப்படமாக பார்க்க வேன்டாம்...
சிறிது இடமும் அனுமதியும் கிடைத்தால் என்ன வென்டுமானாலும் எழுதலாமா என்ன ?

sundaresan
2008-08-15 05:48:00
sundaresan_r@yahoo.com.sg

Tooooo much of blindness.. Can be wright anythink? Theemas having the clay in his Head.Is Mr.Gane review this ??? Totaly fucket up review.

Siva
2008-08-15 09:08:00
S.Siva@live.in

I am not good in english .Kindly bear it if i had any grammer mistakes.Regarding this review on dasavadaram ,I dont agree with this review author for some points.I hope author is more matured and have got lot of experiances.Not sure why he is against Mani ratnam and kamalhasan.Mani ratnam tried his best in bombay,and regarding Dasavadaram,why author is relating such incidents to real religious stuffs and more importently(in answers to question),Its not good for any person to underline caste difference.In my point of view,Dasavadaram is just a movie based on some kind of theory and with lot of imagination.There is no religious differences or upper caste domination in this film as everyone know.I request the author to comment on such movie wtihout quoting any religious difference.A movie should be seen as just as a movie.This movie just relates a incident with some incident.It doesn't mean that its the scientific fact or it is the principle for any natural disasters.Everyone can have the unique view on the movie but they dont have any right to take the movie in their way of thinking.Its not a personal attack against the author.What he wants what i want and what everyone wants is peace and happiness .I request everyone not to hurt people in the name of caste.Lets try to build a generation of calm and peace.

muthuraja
2008-09-04 06:19:00
mrvmfl@yahoo.com

யார் யார் எல்லாம் விமர்சனம் செய்ய வேண்டும் என்று வெவஸ்தயே இல்லாமல் போய்விட்டது. தனி மனித தாக்குதல்கள் தான் இது. யாராவது chaos theory ஐ இவருக்கு விளக்கி ஏன் சுனாமி வந்தது என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் பண்ணும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
Ivarukku vakkalathu vangaradhukku saravanan nu orutharu kooda serndhukittaru.
Pl stop such non sense comments & reviews.



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://semmalar.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP