நடிக்க விரும்பும் இயக்குனர்கள்
இயக்குனர்கள் நடிகர்களாக அவதாரம் எடுக்கும் நேரம் இது. எஸ்.ஜே.சூர்யா, சுந்தர்.சி ஆகியோரைத் தொடர்ந்து இயக்குனர் அமீரும் பருத்திவீரன் வெற்றிக்குப் பிறகு யோகி படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சுப்பிரமணிய சிவா இயக்குகிறார்.
ஒரு கல்லூரியின் கதை இயக்குனர் நந்தா பெரியசாமி சைதாப்பேட்டை படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். பாலாவின் நான் கடவுள் படத்தில் காமெடியனாக நடிக்கிறார் மாயாவி படத்தின் இயக்குனர் சிங்கம்புலி.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் அங்காடித் தெரு படத்தில் வில்லனாக நடிக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ்.
|