லிமரைக்கூ
வசீகரன்
சில்லென்று வீசியது காற்று
சிறுதூரல் போட்டதில் நிலம் மகிழ்ந்தது
தலை தூக்கிப் பார்க்கிறது நாற்று!
இளமையில் விளையாடினார் கில்லி
இளமை திரும்பியதால் மீண்டு விளையாடுகிறார்
தலைவர் அணித்தலைவியைக் கிள்ளி!
காணாமல் போனது கைக்குட்டை
கண்டு எடுத்த கவர்ச்சி நடிகை
ஆக்கி அணிந்தாள் மேல்சட்டை!
விரியும் தொழில் உலகம்
விவசாயம் சுருங்க விளைச்சல் குன்றி
உணவுக்கு அடிதடி கலகம்!
ஒரே கடவுள் ஒப்புகிறார்
வெவ்வேறு பெயர்கூறி தன் கடவுளே
உண்மை என்றே செப்புகிறார்!
மணலைத் தோண்டி விற்பனை
தொடர்ந்தால் ஆறு காணாமல் போகும்
செய்து பார் கற்பனை!
பண்டிகைக்கு கேட்கிறார் பட்டு
ஆடம்பரப் பகட்டுக்காய் வதைபடும் சிற்றுயிர்
பட்டுப்புழு உயிரை விட்டு!
முன்னே நடக்கிறாள் கைவீசி
கணவன் முதுகில் மளிகைப்பொருள்கள்
பேசி செல்கிறாள் கைப்பேசி
நடந்து சென்றான் தூரம்
அபிமான நடிகை காண மறுத்தாள்
ஒப்பனை கலைத்த நேரம்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|