காமம் பெரிதெனினும் கடந்து நில்
ஜி. மஞ்சுளா
பச்சைஇளநீர்க் காய்களை
விற்பவன் போல்
தேடியலைகிறாய்
உன் மனவோட்டங்களில்
எந்தத் தடையுமின்றி
பதியும் வார்த்தைகளை
அவ்வப்போது தெருவோரங்களில்
வீசி எறிகிறாய்
புழுதியாய் படரும்
உன் சுவாசங்களையறிந்து
விலகியே நிற்கிறது
சாலையோரத்து மரங்கள்
பறவைக் குஞ்சுகள்
கரகரத்து பாடுகின்றன
பிறிதொரு நாள்...
என் வாசலில் நின்றழும்
பெண்ணிடமிருந்து வருகிறது
உன் கண்களாலும் உடலாலும்
உறிஞ்சப்பட்ட காமம்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|