Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூலை 2008

தமிழிலிருந்து திருடியது


ஆரிய மொழிக்குரிய நெடுங்கணக்கு, தமிழ்முறையைப் பார்த்துச் செய்யப்பெற்றது என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. ஆரியர்கள் தாங்கள் சென்ற இடங்கட்குத் தக்கபடி புதிய லிபியை ஏற்படுத்திக் கொள்ளும் இயல்புடையவர். ஆரியர் தமிழ் லிபியையொட்டிக் கிரந்தம் என்னும் பெயரில் புதியதோர் லிபியை ஏற்படுத்திக் கொண்டனர். - பரிதிமாற்கலைஞர். நூல் : தமிழக வரலாறு

தந்தை மொழி

வள்ளலார் இராமலிங்க அடிகளாலும் அவர் காலத்தில் வாழ்ந்த காஞ்சி சங்கராச்சாரியாரும் ஒரு முறை ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தது. சங்கராச்சாரியார், வள்ளலாரிடம், “உங்கள் பாசுரங்களைப் படித்துப் பார்த்தேன். தமிழ்மொழி நன்றாக இருக்கிறது. என்றாலும் வடமொழிதான் உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தாய்'' என்றாராம்.

உடனே வள்ளலார், “வடமொழி தாய்மொழி என்றால் தமிழ்தான் தந்தை மொழி'' என்றாராம். தாய் இருந்தாலும் தந்தை இன்றேல் பிறப்பு ஏது? உலகமொழிகள் தோன்றத் தமிழே முதற்காரணம் என்பதைச் சங்கராச்சாரியார் மனதில் சுடுமாறு வள்ளலார் கூறியுள்ளார். ஆனாலும் தமிழின் உயர்வைத் தமிழர்களே அறியவில்லையே.

தேம்சு நதிக்கரையில் தேந்தமிழ்

சீகன்பால்கு என்னும் செருமானியப் பாதிரியார் தமிழ்நாட்டின் தரங்கம்பாடியில் தங்கிச் சமயத் தொண்டாற்றி வந்தார். அவர், தம் தாய்நாடு திரும்பியபோது இலண்டன் வழியே சென்றார். இலண்டனின் மிகப்பெரிய கிறித்துவ அடிகளார் காண்டர்பரியார், சீகன்பால்குக்கு விருந்தொன்று வைத்து, தமிழ்நாட்டில் அரிய சமயத் தொண்டாற்றித் திரும்பியுள்ள அவருக்கு மிக உயர்ந்த மொழியான இலத்தீன் மொழியில் பாராட்டிதழ் படித்துத் தருவதாய் பெருமையுடன் கூறினார்.

வரவேற்பினை ஏற்றுப் பேசிய சீகன்பால்கு, “உயர்ந்த மொழியான இலத்தீனில் எனக்கு வரவேற்பிதழ் படித்தளிப்பதாகச் சொன்னீர்கள். நானும் ஓர் உயர்ந்த மொழியில் நன்றி கூறுவதுதான் பொருத்தம்'' எனச் சொல்லித் தமிழில் பேசினார். அங்கிருந்தோர் பால்குவிடம் அம்மொழியின் பெயரைக் கேட்டதும் ‘தமிழ்' எனப் பெருமை பொங்கக் கூறினார்.

18ஆம் நூற்றாண்டில் கிறித்துவப் பாதிரியார் ஒருவர் இலண்டன் மாநகரில் தமிழுக்குச் செய்த பெருமை இது.
- தரல் : கவிஞர் பல்லவன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP