தீவிர தமிழ் இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத்தக்க ஒருவராக அறியப்படும் ஐசக் அருமைராஜன் பேராசிரியர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளி. "கதை என்பது என்னைப் பொறுத்தவரை படித்துவிட்டு மூடிவைத்து விடக்கூடிய விஷயமல்ல. வாசிப்பவனை மறுபடியும் சிந்திக்க வைக்காத எந்தக் கதையும் உயிர் உள்ள கதை என்று நான் எண்ணவில்லை" எனக் கூறும் அவரின் முதல் நாவலான கீறல்கள் திசைகளெங்கும் அவர் பெயரை உச்சரிக்க வைத்தது.

அழுக்குகள், தவறான தடங்கள், காரணங்களுக்கு அப்பால் முதலானவை அவரது நாவல்களில் குறிப்பிடத்தக்கவை. தேர்ந்த கவிதை நாடகக்காரரான ஐசக்.அருமைராஜனின் முல்லை மாடம், நெடுமான் அஞ்சி, வேங்கைகள் ஆகியன குறிப்பிடத்தக்க இலக்கியப் பங்களிப்புகள். இவரது பல நூல்கள் பல்வேறு பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்ந்த புலமைபெற்ற கிறிஸ்தவக் கம்யூனிசம் எனும் 'இசத்தை' தமிழுக்கு தந்த ஐசக்.அருமைராஜன் நவம்பர் 07, 2011-ல் மறைந்தார். அவரது மறைவு தமிழுக்கு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை

Pin It