அரசு மருத்துவமனை வளாகத் தில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கோயில் கழக தோழர்களின் முயற்சி யால் இடித்து அப்புறப்படுத்தப் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவ மனை வளாகத்தில் புதியதாக ஒரு வினாயகர் கோயில் கட்டப்பட்டு வந்தது.

nammakal temple 600

இந்த தகவலை அறிந்த கழகத் தோழர்கள், மாவட்ட செயலாளர் வைரவேல் தலைமையில் அந்த கோயிலை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் 26.03.2015 அன்று அரசு மருத்துவமனை நிலத்தை ஆக்கிரமித்த மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செங்கோடு நகர காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகமே இரவோடு இரவாக அந்த கோயிலை இடித்து கட்டுமான பொருட்களையும் அப்புறப்படுத்தினர்.

இந்த முயற்சிக்கு பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதி கழகத் தோழர்கள் பெரிதும் உழைத்தனர்.