கேள்வி: ஏழுமலையானுக்கு விசாகப்பட்டினத்தைச் சார்ந்தபக்தர், ரூ.30 இலட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ எடையுள்ள பாத கவசம் (செருப்பு) வழங்கினார். - செய்தி ஏழுமலையான் எந்தக் காலத்திலும் எழுந்து நடக்கவே போவதில்லை என்பதில் பக்தருக்குஅவ்வளவு உறுதியான நம்பிக்கை போலும்!அதனால்தான் ஒரு கிலோ எடையில் செருப்பு.

கேள்வி: 1967இல் தி.மு.க.விடம் ஆட்சியை பறிகொடுத்த போது 41.10சதவீதமாக இருந்த காங்கிரசின் வாக்கு வங்கி 2014 மக்களவைத் தேர்தலில் 4.3 சதவீதமாக சரிந்தது. - ‘தினமணி’ செய்தி திவாலாகும் வங்கியைக் காப்பாற்ற முடியாது; இதுக்கெல்லாம் ரிசர்வ் வங்கியும் உதவி செய்யாது!

கேள்வி: அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டுமே தவிர அன்னியநாடுகள் அல்ல. - ஆர்.எஸ்.எஸ். தலைவர்

ஆமாம்! ‘அன்னிய முதலீடு’ பற்றி வெளிநாட்டுக்காரர்களுக்கு முடிவெடுக்க உரிமை கிடையாது;நாங்களே அந்த முடிவை தேசபக்தியோடுஎடுப்போம்!

கேள்வி: தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்த உள்கட்சித்தேர்தலை நடத்த வேண்டும். - ஜி.கே. வாசன் அருமையான யோசனை! 

இந்தத் தேர்தலில்காங்கிரஸ் கட்சியே மகத்தான வெற்றிகளைகுவிக்கும்! இது உறுதி!

கேள்வி: கடந்த முறை திருமலைக்கு வந்தபோது நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்றுவேண்டினேன். அதை ஏழுமலையான் நிறைவேற்றி வைத்துள்ளார்.

- திருப்பதியில் வெங்கய நாயுடு பேட்டி

இந்த ‘வேண்டுதலை’யை 10 வருடத்துக்கு முன்பே வைச்சிருக்கலாம்ல! இப்படித்தான் நீங்கஎல்லாத்துலேயும் ‘லேட்’!

கேள்வி: வீட்டில் உட்கார்ந்துக் கொண்டே வெவ்வேறு ஓட்டல்களில் தனித்தனியாக உணவுப் பண்டங்களை ‘இணையம்’ வழியாக வாங்கும் காலம்விரைவில் வரும். - ‘தமிழ் இந்து’ செய்தி இதுல, என்ன பெரிசா வந்துடப் போவுது? அதற்கான செலவுத் தொகையும் இணையத்திலேயே ‘ஆர்டர்’ செஞ்சா, வருமான்னு சொல்லுங்க!

கேள்வி :ஆந்திரப் பகுதியைச் சார்ந்த அரசு ஊழியர்களை புதிதாக உருவாகியுள்ள தெலுங்கானா அலுவல கங்களில் பணிபுரிய அனுமதிக்க முடியாது.- தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

ஓ... இதற்குப் பெயர்தான் மொழி வழி ‘தேசப் - பிரிவினை’ என்பதோ!

கேள்வி: சுவிஸ் நாட்டு வங்கியில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணம், இந்தியாவின் வெளிநாட்டுக் கடனைவிட 13 மடங்கு அதிகம். - செய்தி
எனவே, கடன் கொடுத்த வெளிநாடுகள், இந்தியாவை மிரட்ட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

கேள்வி: பெரியார் இயக்கங்களுக்கு பெரியார் திடல் கதவு திறந்தே இருக்கிறது; ஆனால் கொள்கையில் சமரசம் செய்ய மாட்டோம். - மறைந்த பெரியார் சாக்ரடீஸ் படத்திறப்பில் கி.வீரமணி

அதாவது, தங்கள் கழகத்தைத் தவிர ஏனைய பெரியார் இயக்கத்தினர் எல்லோரும்‘துரோகிகள்’ என்ற ‘கொள்கையில்’ உறுதியா இருப்போம்னு சொல்ல வர்றீங்க... புரியுது!

கேள்வி: ‘ஏழுமலை’யானின் 20 லட்சம் கோடி சொத்துக்கள் சீமாந்திராவுக்கே சொந்தம்; தெலுங்கானாவுக்கு அல்ல. - சீமாந்திரா அரசு உத்தரவு ‘ஏழுமலையான்’ கனவுல வந்து அப்படி சொன்னாருன்னு உத்தரவுல சேத்துக்கங்க;வழக்கு உச்சநீதிமன்றம் போனாலும்ஜெயிச்சுடலாம்!

கேள்வி : பாதுகாப்புத் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க மோடி அரசு முடிவு. - செய்தி சரியான முடிவு! அன்னிய நாட்டு ஊடுருவல் மற்றும் தாக்குதலிலிருந்து நாட்டைப் பாதுகாக்க அன்னிய நாட்டைத் தான் பயன்படுத்த வேண்டும்! அதுதான் ‘பாரத மாதாவுக்கு’ வெற்றி!