தொல்லைகள் நீங்கி வாழ்வதற்கான வழிகளை ‘தினமலர்’ ஆன்மிக மலர் ‘ராம நவமி’ சிறப்பு இதழில் வெளியிட்டிருக்கிறது (மார்ச் 20, 2010) இதன்படி - “வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லை என்றால், வால்மீகி இராமாயணம் யுத்த காண்டத்தி லுள்ள ஆதித்ய ஹ்ருதயத்தை எடுத்து வைத்துக் கொண்டு, மனப்பாடம் (பாராயணம்) செய்ய வேண்டும். கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், எதிரிகளால் ஏற்படும் துன்பம் ஒழியவும், யுத்த காண்டத்தில் நாகபாச விமோசன கதையைப் பக்தியுடன் படிக்க வேண்டும்.

மங்கள நிகழ்ச்சிகள் தடையின்றி நடத்தவும், குழந்தைகள் படிப்பில் முன்னேற்றமடையவும், ‘புத்திர பாக்கியம்’ ஏற்படவும், குறும்பு செய்யும் குழந்தைகளை திருத்தவும் - ராம ஜனனம், சீதா கல்யாண வைபோகம், பாதுகா பட்டாபிஷேகம், விபீஷண பட்டாபிஷேகம், ராம பட்டாபிஷேகம்  ஆகிய இலாமாயணத்தின் பகுதிகளைப் படிக்க வேண்டும்.”

- என்று ‘தினமலர்’ அதி அற்புதமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.

எனவே உடல்நலன் பெறவும், கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், எதிரிகளை சந்திக்கவும்,  குழந்தைகள் நன்றாக படிக்கவும்,மங்கள நிகழ்ச்சிகள் நன்றாக நடக்கவும், வால்மீகி ராமா யணத்தை படிக்க வேண்டுமே தவிர, வேறு ‘வெட்டி வேலைகள்’ எதிலும் ஈடுபடாதிருப்பீர்களாக. மருத்துவமனை போக வேண்டாம்; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்; வாங்கிய வங்கிக் கடனை திருப்பி செலுத்த வேண்டாம்; திருமணத்துக்கு வரன் தேடித் திரிய வேண்டாம்; எல்லா வற்றையும் ‘ஸ்ரீராமன்’ கவனித்துக் கொள்வான்! சரி, தானே!

Pin It