kolathoor mani and vidhuthalai rajendran

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய உரிமை முழக்க ஊர்திப் பேரணியின் பரப்புரை குறித்த ஓர் தொகுப்பு:

9.5.2018 காலை 12 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவு இல்லம் அருகில் பெரியார் கைத்தடி - அம்பேத்கர் கண்ணாடி - உரிமை முழக்க ஊர்திப் பேரணி ஆரம்பமானது. மதியம் 2 மணிக்கு பவானியில் பயண நோக்கம் குறித்து நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் பேசினார். அம்மாபேட்டையில் 3 மணியளவில் மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கழக ஒன்றிய செயலாளர் வேல் முருகன், வழக்கறிஞர் பிரகாஷ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் பிரகலாதன், மணிகண்டன் (தி.க.), மகாலிங்கம் (தி.க.), வை. இராமன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செல்வராஜ் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) உரையாற்றினர்.

மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் 3 மணிக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.30 மணிக்கு மேட்டூர் நகர தி.வி.க. சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 4 மணிக்கு மேட்டூர் பேருந்து நிலையத்தில் சி. கோவிந்தராசன் ( சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்), 5.20 மணிக்கு ஆர்.எஸ். பகுதியில் ஏற்காடு பெருமாள் பயண நோக்கம் குறித்துப் பேசினர். மாலை 6.15 மணிக்கு நங்கவள்ளியில் சக்திவேல், கார்த்திக், சந்துரு, விக்னேஷ் ஆகியோரின் பறை முழக்கத்துடன் இரா. முத்துக் குமார் இயக்கப் பாடலைப் பாடினார்.

சேலம் தாதகாப்பட்டி கேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு க. சக்திவேல் (கிழக்கு மாவட்ட தலைவர்) தலைமையில், இரா டேவிட் (கிழக்கு மாவட்ட செயலாளர்) முன்னிலையில், த. பரமேஸ்வரன் (சேலம் மாநகரத் தலைவர்) வரவேற்புரையாற்றினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இரா. நாவரசன் (வி.சி.க.), பரமசிவம் (சி.பி.ஐ.), ஜோ. பிரபு (சேலம் மாநகர கழக செயலாளர்) ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இரவு அன்னதானப்பட்டி டாக்டர் அம்பேத்கர் சமுதாயக் கூடத்தில் தோழர்கள் தங்கினர்.

மே 10 : ஓமலூர் பேருந்து நிலையத்தில் காலை 10 மணிக்கு சக்திவேல், அண்ணாதுரை, கார்த்திக், சந்துரு, விக்னேஷ் ஆகியோரின் பறை முழக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இரா. முத்துக்குமார் இயக்கப் பாடலைப் பாடினார். நீட் தேர்வு குறித்த வீதி நாடகத்தை கண்ணன் நடித்து காட்டினார். அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி பயணம் நோக்கம் குறித்துப் பேசினார். சிந்தாமணியூர் பிரகாஷ் நன்றி கூறினார்.

தீவட்டிப்பட்டியில் காலை 11.10 மணிக்கு பறை முழக்கத்துடன் இரா. முத்துக்குமார் இயக்கப் பாடலைப் பாடினார். நாமக்கல் மாவட்டத் தலைவர் மு. சாமிநாதன் பயண நோக்கம் குறித்துப் பேசினார். சிந்தாமணி பிரகாஷ் நன்றி கூறினார்.

தொப்பூர் கடைவீதி அருகில் பகல் 12 மணியளவில் பறை முழக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தருமபுரி மாவட்ட அமைப்பாளர் சந்தோஷ் தலைமையுரையாற்றினார். பவானி வேணுகோபால், மாணவரணி சவுந்திரராஜன் பயணம் நோக்கம் குறித்துப் பேசினர். அரூர் ஒன்றியத் தி.வி.க. பொறுப்பாளர் பெருமாள் நன்றி கூறினார்.

நல்லம்பள்ளியில் நண்பகல் 1.20 மணிக்கு பறை முழக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இரா. முத்துக்குமார், பெரியார் பிஞ்சுகள், யாழினி, யாழிசை ஆகியோர் இயக்கப் பாடலைப் பாடினர். அரூர் ஒன்றிய அமைப்பாளர் பெருமாள் பயண நோக்கம் குறித்துப் பேசினார். தருமபுரி மாவட்ட அமைப்பாளர் சந்தோஷ் சிறப்புரையாற்றினார்.

மாட்டலாம்பள்ளியில் மாலை 4 மணிக்கு பறை முழக்கத்துடன் இரா. முத்துக்குமார் பாடலைப் பாடினார். சிவகாமி (அறிவியல் மன்றம்), கதிர்வேலு (ஆனைமலை ஒன்றிய அமைப்பாளர்), சந்தோஷ் (தருமபுரி மாவட்ட அமைப்பாளர்) ஆகியோர் பயண நோக்கம் குறித்துப் பேசினர்.

கழக ஆதரவாளர் மோகன், கழகப் பொதுச் செயலாளருக்கு பயணத்iதை வாழ்த்தி சால்வை அணிவித்தார். பயணக் குழு தோழர்களுக்கு தேநீர் வழங்கினார்.

காரிமங்கலத்தில் மாலை 5 மணிக்கு பறை முழக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இரா. முத்துக்குமார் கழகப் பாடலை பாடினார். மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, அறிவியல் மன்றம் சிவகாமி ஆகியோர் பயணம் நோக்கம் குறித்து பேசினர். மாலை 6 மணிக்கு காமராசர் பேருந்து நிலையத்தில் பொதுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் தி.க. குமார் தலைமையில் நடந்தது, கா. குமார் (மாவட்ட செயலாளர்),

ப. வாஞ்சிநாதன் (மாவட்ட துணை செயலாளர்), கிருஷ்ணன் (மாவட்ட துணைத் தலைவர்), மைனர் (மாவட்ட பொருளாளர்), சு. வெங்கடேசன் (அறிவியல் மன்றம்) ஆகியோர் உரையாற்றினர்.

இரா. தமிழரசன் (தமிழ் தேசிய குடியரசு இயக்கம்), சி. கனியமுதன் (வி.சி.க.), பெ. பாரதி இராமச்சந்திரன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), பி.சி.ஆர். மனோகரன் (தி.மு.க.), கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஆ. மணிகண்டன் ஆகியோர் பயணத்தின் நோக்கங்களை விளக்கினர்.

மே 11 : கிருஷ்ணகிரியில் காலை 10.45 மணிக்கு அண்ணாதுரை, சக்திவேல் பறை முழக்கத்துடன் இரா. முத்துக்குமார் பாடலைப் பாடினார். சிவகாமி (அறிவியல் மன்றம்), மேட்டூர் சுதா (தி.வி.க.), ஊத்தங்கரை வீரமணி (பகுத்தறிவாளர் கழகம்) ஆகியோர் பயண நோக்கம் குறித்துப் பேசினர். பழனி (தி.வி.க.) நன்றி கூறினார்.

பர்கூரில் மதியம் 12 மணிக்கு பறை முழக்கத்துடன் தொடங்கியது. பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்), ப. வாஞ்சிநாதன் (மாவட்ட துணைச் செயலாளர்) உரையாற்றினர்.

கரியாம்பட்டியில் மதியம் 1 மணிக்கு அரசு கலைக் கல்லூரி உணவு இடைவேளையின்போது வெளியே வந்த மாணவ மாணவியர்களிடம் பயண நோக்கம் குறித்த துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. அப்போது மாணவ மாணவியர்களிடம் அறிவியல் மன்றம் பொறுப்பாளர் சிவகாமி மற்றும் பயண ஒருங்கிணைப்பாளர் செல்வேந்திரன் நீட் தேர்வு குறித்த விளக்கங்களைக் கூறினர்.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் 1.30 மணிக்கு அய்யா சிலைக்கு கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி மாலை அணிவித்தார். சக்திவேல், அண்ணாதுரை பறை முழக்கத்துடன் இரா. முத்துக்குமார் கழகப் பாடலைப் பாடினார். பரத், குமரரேசன் ‘நீட்’ தேர்வு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் நடித்துக் காட்டினார்கள். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் பயண நோக்கம் குறித்து உரையாற்றினர்.

ஜோலார்பேட்டையில் 2.15 மணிக்கு பயணக் குழு வந்த போது அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் வரவேற்புக் கொடுத்தனர். அங்கிருந்த பெரியார், அம்பேத்கர், காமராசர் சிலைக்கு அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி மாலை அணிவித்தார். முல்லை (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), பால். பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்) பயணத்தை வாழ்த்திப் பேசினர். பயணக் குழுவை வரவேற்று பரப்புரைச் செயலாளருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு உறுப்பினர் முல்லை சால்வை அணிவித்தார். பயணக் குழுவை பா.ம.க. மாநில துணை அமைப்புச் செயலாளர் குட்டிமணி வரவேற்றார்.

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மாலை 4 மணிக்கு தோழர்கள் இரு சக்கர வாகனத்துடன் திரளாக வந்து பயணக் குழுவை வரவேற்றனர். பறை முழக்கத்துடன் இரா. முத்துக்குமார் பாடலைப் பாடினார். பால். பிரபாகரன் (மாநில பரப்புரைச் செயலாளர்), செவ்வேள் (ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), புருசோத்தமன் (வாணியம்பாடி பொறுப்பாளர் தி.வி.க.), கொளத்தூர் பரத், டாக்டர் ஞானசேகரன் (வி.சி.க. மருத்துவர் அணி), சீனி பழனி (சமூக ஆர்வலர்), அன்பு (தி.க.), வேலு (வி.சி.க.), சிவா (வேலூர் மாவட்ட செயலாளர்) ஆகியோர் பயணத்தை வாழ்த்திப் பேசினர்.

மாலை 4.45 மணிக்கு வாணியம்பாடி கோணாம்மேடு பகுதியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க, இரு சக்கர வாகனத்துடன் பயணக்குழுவை அழைத்துச் சென்றனர்.

ஆம்பூரில் மாலை 5.15 மணிக்கு அனைத்துக் கட்சிகளின் வரவேற்பில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார்.

மே.எ. சுந்தர், ஓம். பிரகாஷ் (மாநில வி.சி.க. துணை செயலாளர்), ரூபன் (தொழிலாளர் முன்னணி), கருணாநிதி (பகுஜன் ஜமாஜ் கட்சி), கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விமல் (தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றம்) ஆகியோர் பயணத்தைப் பற்றி பேசினர்.

பள்ளி கொண்டான் சந்தைமேடு அருகில் 6.45 மணிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அம்பேத்கர் சிலைக்கும், விடுதலை இராசேந்திரன் தளபதி கிருஷ்ணசாமி சிலைக்கும் மாலை அணிவித்தனர். பள்ளிகொண்டா பகுதியிலுள்ள தளபதி கிருஷ்ணாசாமி பௌத்த ஆராய்ச்சி மையத்தை கழகத் தலைவரும் தோழர்களும் பார்வையிட்டனர்.

11.5.2018 அன்று மாலை 7.30 மணிக்கு வேலூர் பொதுக் கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட செயலாளர் இரா. ப. சிவா தலைமையில் திருப்பூர் துரைசாமி (பொருளாளர்), ரத்தினசாமி (அமைப்பு செயலாளர்), பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்), சதீஷ் (மக்கள் மன்றம்), தங்கராஜ் (தமிழ்ப்புலிகள் கட்சி), நீல. சந்திரகுமார் (வி.சி.க.), மருத்துவர் முகமது சயி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திலீபன் (திவிக) ஆகியோர் உரையாற்றினர். இரவு மருத்துவர் முகமது சயி மருத்துவமனையில் தோழர்கள் இரவு தங்கினர்.

மே 12 : 12.5.2018 அன்று காலை 10.10 மணிக்கு காவேரிப்பாக்கத்தில் மக்கள் மன்றம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மே17 இயக்கம் சார்பில் மேளதாளத்துடன் பயணக் குழுவை வரவேற்றனர். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கழகப் பொதுச்செயலாளருக்கு தினேஷ் (விசிக) சால்வை அணிவித்தார்.

பெரிய காஞ்சிபுரம் தேரடி தெரு அருகில் 11.20 மணிக்கு மக்கள் மன்றம், வி.சி.க., மே 17 இயக்கம் சார்பில் மேளதாளத்துடன் பயணக் குழுவுக்கு வரவேற்பு கொடுத்தனர். அய்யா சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார்.

அய்யம்பேட்டையில் 12.15 மணிக்கு வரவேற்புக் கூட்டம் பறை முழக்கத் துடன் நடைபெற்றது. இரவி பாரதி (காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்) வரவேற்புரையாற்றினார். வெற்றித் தமிழன் (தமிழ் தேச மக்கள் கட்சி), மோகன் (விவசாய சங்கம்), மகேஷ் (ம.தி.மு.க.), கொண்டல் சாமி (மே 17), காஞ்சி அமுதன் (பாலாறு பாது காப்புக் குழு), சிவகாமி (அறிவியல் மன்றம்) ஆகியேர் பேசினர்.

வாலாஜாபாத்தில் 2.30 மணிக்கு பறை முழக்கத்துடன் முத்துக்குமார், சம்பத்குமார் கழகப் பாடலைப் பாடினர்.

காஞ்சி அமுதன் (பாலாற்று பாது காப்புக் குழு), மேட்டூர் சுதா (பயணக் குழு), செல்வேந்திரன் (பயண ஒருங் கிணைப்பாளர்), இரவி பாரதி (தி.வி.க.), ஈரோடு சவுந்திரம் (தமிழ்நாடு மாணவர் கழகம், தி.வி.க.) ஆகியோர் பேசினர்.

ஐந்திணை கலை பண்பாட்டு இணைய உறுப்பினர் சம்பத் குமார், பரப்புரை செயலாளர் பால் பிரபாகரனுக்கு சால்வை போர்த்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் உதயசூரியன், பொரு ளாளர் திருப்பூர் துரைசாமிக்கு சால்வை போர்த்தினார்.

பயணக் குழுவினர்களுக்கு கழக ஆதரவாளர் குளிர்பான கடை உரிமையாளர்கள் சங்கர், ரமேஷ் அனைவருக்கும் குளிர் பானங்களை வழங்கினார்.

நிறைவு விழா பொதுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ் சேரியில் செ.கு. தெள்ளமிழ்து தலைமையில் நடந்தது. பறை இசை கழகத் தோழர்கள் குமரேசன், பரத் ‘நையாண்டி’ உரையாடல், நிகழ்ச் சிகள் நடந்தன. சு. செங்குட்டுவன், வழக்கறிஞர் அருண், பால். பிரபாகரன் ஆகியோரைத் தொடர்ந்து வன்னியரசு (விசிக துணைப் பொதுச் செயலாளர்), அப்துல் சமது (மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர்), விடுதலை இராசேந்திரன், கொளத்தூர் மணி உரையாற்றினர். பயணக் குழு பொறுப் பாளர் கொளத்தூர் செல்வேந்திரன், பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். குழுவினர் அனைவருக் கும் நினைவுப் பரிசுகள் வழங்கப் பட்டன. 10.30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

செய்தி: மேட்டூர் அண்ணாத்துரை

மேலும் செய்திகள் அடுத்த இதழில்