இந்த கல்வியாளர்களைப் பற்றிய தொகுப்பாக பாரதி புத்தகாலயம் சார்பில் வெளிவந்துள்ள “உலகக் கல்வியாளர்கள்” என்கிற

இரா.நடராசனின் நூல் ஒவ்வொரு மாணவரும் அல்ல அல்ல ஒவ்வொரு பெற்றோரும் மகன்/மகளுடன் சேர்ந்து அறிந்திருக்க வேண்டிய நூலாகும். எட்டு கல்வியாளர்கள் பற்றிய வியத்தகு செய்திகள் பொதிந்துள்ளன இந்த நூலில். குறிப்பாக கல்வி என்கிற விஷயத்தை ஜனநாயகப்படுத்தி அதனை அனைவருக்குமான உரிமை என்று அறிவிக்கிற / எழுதுகிற செய்தி இருவரி களுக்குள் வந்திருந்தாலும் மரியா மாண்டசோரி அம்மையாரின் தியாகம் மற்றும் விடாமுயற்சி அனைவரும் அறிந்திடாத செய்திகளாகத் தான் இதுவரை இருந்து வந்துள்ளது.

 

வருடம் ஒரு வகுப்பில் என்கிற விஷயங்கள் எல்லாம் இவர்கள் கூறாததாக இருப்பினும் குழந்தைகள் உரிமைகள் மற்றும் ஆலோசனைகள் மதிக்கப்பட வேண்டும் என்கிற கொள்கை வழி வாழ்ந்தவர் மரியா- அத்தோடு நில்லாது விடுதலைகளும், நாடுகளின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்தவர். ஆசிரியரின் வேலை நீக்கத்திற்கு எதிராக, மற்றும் அனைத்துக் குழந்தைகளும் சமமாக அமர்ந்து கல்வி கற்க வேண்டும் என்கிற கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்த போராளி மரியா என்கிற விஷயங்கள் அனைவரிடத்தும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

 

கான்ஹோல்ட் என்கிற கல்வியாளர் குழந்தைகளை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவும், மதபீடங் களிலிருந்து கல்வியை மீட்டெடுக்கவும், குரல் கொடுத்தவர், மேலும் கவனிப்பாரற்று கிடக்கும் சாதாரண மாணவருக்கு கல்வி ஏன் வசீகரமாக அமைய வில்லை என்கிற உண்மையை “குழந்தைகள் ஏன் பரீட்சையில் தோற்கிறார்கள்” என்கிற புத்தகம் மூலம் வெளிக்கொண்டு வந்தவர். குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் என்கிற புத்தகத்தையும் வெளியிட்டார். குழந்தைகள் மீது இன்று ஏவி விடப்பட்டுள்ள தொடர்ச்சியான பாட முறை, கண்டிப்பான சீருடை போன்றவற்றை நிராகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தவர். நகைச்சுவையாய் இருப்பதாக உணரும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் ஏன் சுரங்கப்பாதை இல்லை” என்கிற வினா விடையாக வழங்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

 

உளவியலைப் புரிந்து கொண்டு குழந்தைத் தன்மையை ஆதரிப்பது என்கிற கொள்கையாய் ரொனஸ்ஸாஸோ உருவாக்கியுள்ளார். வேலைக்கு போகவும் லட்சம் லட்சமாய் சம்பாதிப்பதும் கல்வி என்பதை எதிர்த்து மாணவனின் செயல்படாத தன்மையை உணரச்செய்து அதிகரிக்கும் புதுமை முறை உணர்த்தியவர் இவர். ஹிட்லரின் எதிர்ப்புக்கு ஆளாகிய பின்பும் கொள்கைக்காக வாழ்ந்த சமூக விஞ்ஞானியாவார். இன்று இவரது ‘ஸாஸோ உளவியல்’ பெரும்பான்மை நாடுகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

 

இன்றைய கல்வி முறை தண்டனை முறையே என்று வாதிட்டவர் பாலோ பிரையிரே ஆவார். மாணவர் ஆசிரியர் உறவு முறை குறித்து புதுமையாய் யோசித்தவர். கண்டிப்பாக கீழ்படிதல் என்பது பைத்தியங்களை/ காகிதப்புலிகளையே உருவாக்கும் என்று பேசியவர். ‘‘ஒடுக்கப்பட்டவருக்கான விடுதலைக்கான கல்விமுறை’’ இவர் உருவாக்கியதுதான் கல்விமுறையில் 10 ஆண்டுகள் வாழ்ந்த பின்பு ஒரு மாணவன் அடிப்படைத் தன்மையில் முன்னேறவில்லை என்பதை உணர்ந்து அதற்கேற்ப கல்வி அவசியம் என்று போராடியவர் ‘’அலெக்ஸாண்டர் பாடனோவிச் ஸெலென்சோ’’ இவரது கல்விக் கொள்கையை ஏற்காத நூர்பேரரசு இவரை பல முறை கைது செய்ததே இவரது கல்வியின் புரட்சித்தாக்கத்தின் அளவீடாகும்.

 

ஊனமுற்றவர்களுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த அபிசார்லஸ், பெட்ரோலிச் பாவ்லோவ், மத ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டியது கல்வி என்று பறைசாற்றிய ஜான்டுவி இவர்களது வாழ்க்கை முறைகள், கல்வி முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புகள் ஆகியவை அடங்கியுள்ளது. இந்நூலில் 48 பக்கங்களில் அடர்த்தியான பல விஷயங்களை தாங்கி வந்துள்ள.  இரா. நடராசனின் இந்நூல் வாசிப்போர் மத்தியில் பரவலாக செல்ல வேண்டும். கல்வியின் சமூக தளத்தை அதிகரிக்க அவை பயன்படும். அனைவரும் வாசித்து பாதுகாத்து வைக்க வேண்டிய புத்தகம்.


-பால்கி

Pin It