இந்தியாவில் வறுமை கணிசமாககுறைந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். அதில் ஓரளவு உண்மையும்இருக்கிறது. ஆனால், மக்களிடையேசமத்துவம் உருவாகியிருக்கிறதா? அதாவது, ஏற்றத்தாழ்வுகள்குறைந்திருக்கிறதா என்பதே முக்கியகேள்வி! ஏற்றத் தாழ்வுகள் இல்லாதசமூக சமுத்துவம் தான் – பெரியாரின்இலட்சியம்.

பெரியார் வாழ்நாள்முழுதும் போராடிய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற கொள்கையின்அடிநாதமே அனைத்து சமூகப்பிரிவினரையும் சமப்படுத்துவது தான்.இந்தியாவின் உயர் அதிகார மட்டத்தில், பார்ப்பனர்களே கொடி கட்டிப்பறக்கிறார்கள். அவர்கள் கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்துக் கொண்டு, வெகு மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளின் இடைவெளிகளை மேலும்மேலும் அதிகப்படுத்தும் திட்டங்களையே உருவாக்குகிறார்கள்.

இந்தியாவில் “பொருளாதாரசீர்திருத்தம்” என்ற பெயரில், கடந்த30 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டகொள்கைகள் ஏற்றத்தாழ்வுகளைஅதிகரிக்கச் செய்துவிட்டது என்பதைபுள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. 2000ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவின் மொத்த சொத்து -செல்வங்களில் 66 சதவீதம், 10 குடும்பங்களிடமே தங்கியிருந்தது. இப்போது, இது 66-லிருந்து 74 சதவீதமாகஅதிகரித்துவிட்டது. இதேபோல்2000-த்தில் இந்தியாவின் உச்சகட்டப்பணக்காரர்களாக இருக்கும் ஒருசதவீதத்தினரிடம் இந்தியாவின்சொத்து வளங்களில் 37 சதவீதம்இருந்தது. இது இப்போது 44 சதவீதமாக அதிகரித்துவிட்டது.

நாட்டின் பொருளாதாரவளர்ச்சியின் பயன் ஒரு குறிப்பிட்டவளர்ச்சியடைந்த பெரும்பணக்காரர்களுக்கே போய்ச்சேரும்போது, சமமற்ற சமூகம் எப்படிஉருவாக முடியும்? 60 மில்லியன்பழங்குடி மக்களில் 40 சதவீதம் பேர் வளர்ச்சித் திட்டங்களுக்காக தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டுஉள்ளார்கள். விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித், மிகவும்பிற்படுத்தப்பட்ட ஜாதிப் பிரிவினரிடம்நாட்டின் ‘பொருளாதார வளர்ச்சி’ சென்று அடையவில்லை என்பதைஅண்மையில் வெளிவந்துள்ள சமூகப்பொருளாதாரக் கணக்கெடுப்புகளும்உறுதி செய்கின்றன.

கல்வி மற்றும்சுகாதாரத்துக்கான அரசின் திட்டங்கள்அரசால் புறக்கணிக்கப்படுகின்றன.இவை மக்களுக்கான வளர்ச்சிக்குஅடிப்படையானவை. இத்திட்டங்களில்அரசு நிதி ஒதுக்கீடு செய்ய முன்வராமல், தனியார் கார்ப்பரேட்டுகளிடம்ஒப்படைத்து விட்டது. கல்வி-மருத்துவசேவைகளைப் பெற முடியாமல், தனித்துவிடப்பட்டுள்ள ஒடுக்கப்பட்டஜாதி மற்றும் வர்க்கப் பிரிவினர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்பங்கேற்க முடியாதவர்களாக ஓரம்கட்டப்பட்டுவிட்டனர். ஆக பார்ப்பனியம், பொருளாதாரத்திலும் ஏற்றத்தாழ்வுகளை உறுதிபடுத்தி வருகிறது.