பேருந்தில் பணிக்கும் போது
யாரோ ஒரு பெண்
தவற விட்டிருந்த
ரோஜா, மல்லிகைச் சரம் மற்றும்
கூந்தலூசி (hair pin)
காலடியில் பட்டது.

தனக்கு அழகைக் கொடுக்கும்,
வாசத்தைக் கொடுக்கும், என
அவள் நம்பிய, மலர்கள்
கீழே விழுந்ததை எப்போது அறிந்திருப்பாள்?

தனது காதலனுக்காக அவள்
அதனைச் சூடியிருக்கலாம்.
அப்பூக்கள் குறித்தும்,
அவை பிரத்யேகமாய் அவளுக்குத் தரும்
அழகு குறித்தும்
அவன் பேசுவதை கேட்கவிருந்த
அவளின் ஆசை வாடிப் போய்க் கிடந்தது.

கணவனுக்காக அதனைச் சூடியவளாகக் கூட இருக்கலாம்.

அவள், அவளுக்காகவேக் கூட,
ஒரு வேளை, சூடியிருக்கக் கூடும்.

எப்படி, அதனைத் தவற விட்டிருக்கமுடியும்?
தீவிரமாக, ஏதேனும், அவள் சிந்தனையை
ஆக்கிரமித்திருக்கலாம்.

அப்பூக்களை தூக்கியெறிய மனமின்றி
முகந் தெரியாத, அப்பெண்னைக் குறித்து
ஏன் அதிகம் யோசிக்கின்றேன்?


ம.ஜோசப் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.