பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1973ஆம் ஆண்டு ‘தென்மொழி’ ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:

‘இராசாசி நினைவாலயத்துக்கு’ இவர்கள் தரும் விளம்பரம், காந்திக்குக் கூடத் தந்ததில்லை. ‘தமிழகத்தில் இராசாசி காலடிப்பட்ட இடங்களை யெல்லாம் புண்ணியதலமாகக் கருத வேண்டும்’ என்று ‘சுதந்திர’க்கட்சி சா. கணேசன் வெளிப்படுத்திய கருத்தை இவர்கள் மிகப் பெருமையுடன் வெளி யிட்டுக் கொண்டனர். (சா. கணேசன் மூளையில் இவ்வளவு அடிமைத்தனம் புகுந்திருக்கக் கூடாது) துக்ளக்கில் ‘சோ’ இவர்கள் இனத் தலைவர் இராசாசியைப் பற்றி இப்படி எழுதி யிருந்தார்:

“இராசாசியைப் பாராட்டுவதற்கோ அல்லது அவரிடம் குற்றம் காண் பதற்கோ அவருக்கு நிகரானவர்கள் யாரும் இந்நாட்டில் இல்லாமல் போய் விட்டார்கள்... மனம், சிந்தனை, வாக்கு, செயல் எல்லாவற்றிலும் பரிபூரணத் தூய்மையுடன் விளங்கிய ஒரு அசாதாரணமான மனிதரை மிகச் சாதாரணமாக மதித்துவிட்ட மடத் தனத்தின் விளைவுகளிலிருந்து இந்த நாடு என்று விடுபடுமோ தெரியாது... இராசாசி தெய்வ நம்பிக்கை மிகுந்தவர். அந்த ஒரு கரணியத்திற்காகவாவது அவர் வாழ்ந்த இந்த ‘பூமி’யை இறைவன் காப்பாற்றட்டும்.”

- எப்படி? துக்ளக் ‘சோ’வின் தூக்கி வைத்துப் பேசும் தன்மை, ‘அவாள்’ இனத்துத் தலைவர் என்றால் உலகத்துக்கே தெய்வம்; அவர்களைவிட மேம்பட்டவன் ஒருவனும் இருக்க முடியாது; அல்லது இருக்கவும் கூடாது என்பது பார்ப்பனர்களின் ஒருமித்த கருத்து. இராசாசிக்கென்றே சில தனித் தன்மைகள் உண்டு. அவை அவருக் குத்தான் சொந்தம். அவர் தன்மைகள் பிறர்க்கு எப்படி வரும்? பெரியார் இராமசாமியின் தனித்தன்மைகள் எப்படி ‘துக்ளக்’ இராமசாமிக்கு வர முடியாதோ, அப்படியே இராசாசியின் தன்மைகள் ஒரு கந்தசாமிக்கு வர முடியாது. மற்றபடி இராசாசி என்ன உலகத்துக்கே, அல்லது இந்தியாவுக்கே தெய்வமா? அவரைப் போல் நாட்டிற்கு உழைத்தவர்கள் இல்லையா? பார்ப்பன இனத் தலைவர் ஒருவர் இறந்து போனால், அவர் வாழ்ந்ததற்காக இறைவன் இந்தப் ‘பூமி’யைக் காப்பாற்றட்டும் என்றால் அவர் இருந்த போது ஏன் இதைக் காப்பாற்ற வில்லை? ‘துக்ளக்’ சோ ஏன் இறைவனிடம் அப்பொழுது பரிந்துரை செய்யவில்லை. இறைவன் என்றால் அவன் பார்ப்பன இனத்துக்கு மட்டுந் தானா சொந்தம்? அவர்களுடைய பாட்டனா அவன்?

இவற்றிலிருந்தெல்லாம் என்ன தெரிய வருகிறது என்றால், அவர்கள் எழுதும் எழுத்தெல்லாம் அச்சாகி வருவதற்கான வாய்ப்புகளை அவர்கள் வலிய ஏற்படுத்திக் கொண்டு, மக்களை எந்த அளவில் என்றென்றும் மடையர் களாகவே, தங்கள் நல்வாழ்வுக்குத் துணைப் போகின்றவர்களாகவே மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை நம் மக்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும் என்பதுதான். சொல்வதைச் சொன் னால் கேட்பாருக்குக் கொஞ்சமேனும் மதி இருக்கத்தான் செய்யும். அவர்கள் சொல்லுவதைக் கொஞ்சம் கவனித் தால் போதும்; எந்த நோக்கத்தில் அவர்கள் சொல்கின்றார்கள்; எந்த நோக்கத்திற்காகச் சொல்கின்றார்கள் என்பனவெல்லாம் விளங்கிக் கொள்ள முடியும்.

தமிழர்களுக்கு இழிந்த பெயர்கள்!

‘துக்ளக்’ இராமசாமி எழுதி வரும் ‘வாசிங்டனில் நல்லதம்பி’ எனும் தொடர்கதையில் வரும் கதைத் தலை வனாக இப்பொழுதுள்ள முதலமைச் சரைத்தான் (கலைஞர்) கிண்டல் செய்து எழுதுகின்றார் என்பது எல்லோருக்குமே வெளிப்படையாகத் தெரியும். அதைப் பற்றிய ஆய்வுகள் இருக்கட்டும். ஆனால் அதில் நல்ல தம்பிக்குத் துணையாக வருபவர்களின் பெயர்களையும் அவர்கள் பேசிக் கொள் கின்ற தமிழ் (!) உரையாடல்களையும் பார்த்தாலே ‘சோ’ என்னும் இருபதாம் நூற்றாண்டுப் பார்ப்பானுக்குத் தமிழினத்தின் மேல் எவ்வளவு எரிச்சல் - வெறுப்பு இருப்பதைக் கண்டு கொள்ளலாம். நல்லதம்பியின் நண்பன் பிசாசு, முக்கண்ணனாம்! இன்னொரு வன் உலக்கைக் கொழுந்தாம். எப்படி! வேடிக்கையாக இப்படி எழுதுவதாகக் கூறிக் கொண்டு தமிழ் மக்களை இழிவுபடுத்துவதும் தமிழ் மொழியைத் தாழ்த்துவதும்தான் ‘துக்ளக்’கின் நோக்கம்.

தனக்கு நேர்எதிரிடையான ஓர் இன அரசனின் பெயரைத்  தனக்கே உரிய ‘கிண்டல்’ மனப் பான்மையுடனும் கோமாளித்தனமாக வும் சூட்டிக் கொண்டு, இப் “பிராமண” வழக்கறிஞன் எழுதி வரும் கதைகளைப் போலத்தான் அன்றைய இராமாயண, மகாபாரதங்கள் எழுதப் பெற்றன. நல்லதம்பிக் கதையில் வரும் இட்சுகாக், பர்ட்டன், நிக்சன், கீசிங்கர் முதலிய உண்மை மாந்தர்களையும், நல்லதம்பி, பிசாசு, உலக்கைக் கொழுந்து முதலிய உறுப்பினர்களை யும் எதிர்கால மக்கள் படிக்க நேர்ந்தால் முன்னையவர்களின் வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்டு பின்னையவர்களும் வாழ்ந்து தான் இருக்க வேண்டும் என்று கருதிக் கொள்வார்களா இல்லையா? அப்படிக் கருதிக் கொள்ள வேண்டும் என்பது தான் இந்தக் கோமாளியின் நோக்கம். மேலும்  இந்தத் ‘துக்ளக்’ இராமசாமி வைத்த பிசாசு, உலக்கைக் கொழுந்து முதலிய பெயர்களைப் போலத்தான் இராமாயணத்திலும் தமிழர்களுக்கு இழிந்த பெயர்களே சூட்டப் பெற்றிருக் கின்றன. கும்பகர்ணன் (கும்பம்-குடம், கர்ணன்- காதன் = குடக்காதன்) மண்டோதரி (மண்டை - பானை; உதரம் - வயிறு = பானை வயிறு), சூர்ப்பநகை (சூர்ப்பம் - முறம், நகை - பல் = முறப்பல்லி) இராவணன் (இரவு வண்ணன் - கறுப்பன்) முதலிய பெயர்களும் இழிவான பொருள் தரும்படி வைக்கப் பெற்றிருக்கின்றன.

நாம் அப் பெயர்களில் உள்ள இழிவு களை அறியக் கூடாது என்பதற்காக அவை வடமொழியில் வைக்கப் பெற்றுள்ளதை அறியுங்கள். அந்த இராமாயண, மகாபாரதக் கதைகளி லெல்லாம் உள்ள இழிவுகளை எடுத் தெழுதினால் இவ்வேடு கொள்ளாது. இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதி யிலேயே சென்னையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனன், நம் இனத்தைப் பார்த்து இவ்வாறு கிண்டல் செய்து எழுதுவதும், அதை நாம் பொறுத்துக் கொண்டிருப்பதும் நேரு மானால் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டு களுக்கு முன் இவ்வினத்தினால் நேர்ந்த - முன்னோர் பட்டபாடுகளை நினைத்தும் பார்க்க முடியாதன்றோ? அக்காலக் கதைகளைச் சொல்லி இக் காலத்தில் அவர்களை வஞ்சம் தீர்க்க முடியாமற் போயினும், இக்காலத்தில் நம் கண் முன் நிகழும் அக்கொடுமை களை நாம் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? எனவே நமக்கு அவர்கள் மேல் வளர்ந்து கொண்டு வரும் வெறுப்புணர்ச்சிக்குங்கூட அவர்களே தாம் பொறுப்பன்றி நாமோ நம் செயல்களோ பொறுப்பாவதில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

- ‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ நூலிலிருந்து