வடபழனி சிவன் கோயிலில் ஆகமவிதிகளின் படி அர்ச்சகராகப் பணியாற்றும் ஒரு ‘பிராமண’ இளைஞர் மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ளார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 2 பேர் மரணமடைந் தார்கள்; 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பழனி கோயிலில் முருகன் நவபாஷாண சிலையை மறைத்து தங்கத்தால் செய்து வைக்கப்பட்ட சிலையில் தங்கத்தைத் திருடி யதாக சிலை செய்த ஸ்தபதியும் அற நிலையத் துறை அதிகாரியும் கைது செய்யப்பட் டுள்ளனர்.

திருத்தணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 ஊர் களில் கோயில்களுக்கு தங்கத்தில் தேர் செய்ததில் மோசடிகள் நடந்தது அம்பலமாகி யுள்ளது.

இவை இவ்வாராய்ச்சி செய்திகள்.

உண்மையில் கடவுள் என்பது சிலை தான் என்ற உண்மை அர்ச்சகருக்கும் சிலை செய்பவருக் கும் கோயிலை நிர்வகிப்பவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால்தான் இவ்வளவு மோசடிகள்.

பாவம்; அப்பாவி மக்களுக்குத்தான் புரியவில்லை; தன் பெயரால் வழங்கப்படும் பிரசாதத்தில் நச்சுத்தன்மை இருக்கிறது என்பது அந்தக் கடவுளுக்கும் தெரியவில்லை.

சக்தி இருந்தால்தானே தெரியும்?