சில வருடங்களுக்கு முன், ஜப்பானிப் பிரதமர் மோரி அமெரிக்கப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. அங்கு போனால், அமெரிக்க அதிபர் கிளிண்டனிடம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஏதுவாக மோரிக்கு அடிப்படை ஆங்கிலம் கற்றுத் தரப்பட்டது.

பயிற்சியாளர் மோரியிடம் சொன்னார். “கிளிண்டனின் கையைக் குலுக்கும்போது, ‘How are you?’ என்று கேட்க வேண்டும். அதற்கு கிளிண்டன் ‘I am fine and you?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘me too’ என்று பதில் சொல்ல வேண்டும். அதற்குப் பின் நடைபெறும் உரையாடல்களை மொழிபெயர்ப்பாளர்கள் கவனித்துக் கொள்வார்கள்” என்றார்.

மோரியும் சரி என்று கேட்டுக் கொண்டார். ஆனால் வாஷிங்டனில் கிளிண்டனைச் சந்திக்கும்போது, தவறுதலாக இப்படித் தொடங்கினார்.

“Who are you?”
அதிர்ந்து போனார் கிளிண்டன். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “Well, I'm Hillary's husband,” என்று பதில் சொன்னார்.

அதற்கு மோரி சொன்னார், “me too”

-அனுப்பியவர்: மேதா பிரமிளா

Pin It