trupur thiravidam funtionதிருப்பூர் மாநகர திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 24.01.2021 அன்று தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா திருப்பூர் மாஸ்கோ நகர், பெரியார் திடலில் 12 ஆவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றது.

காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்த விழாவில் பறை இசை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள், மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சி, சிறுவர் பாடல்கள், தமிழிசைக்கு நடனங்கள் ஆகியவை சிறப்புடன் நடைபெற்றன.

அப்பகுதி வாழ் பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் என ஆர்வமுடன் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரவு வரை பங்கேற்றனர்.

நிகழ்வுகள் காலை 9 மணி முதல் நிகர் பறை இசைக் குழுவின் பறை இசை நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. முதலில் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

பின்பு அதனைத் தொடர்ந்து 10.00 மணியளவில் குழந்தைகள் பெண்களுக்கான பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் துவங்கி மாலை வரை நடைபெற்றது.

மேடை நிகழ்வுகள் மாலை 6 மணி அளவில் கழக மாநகரச் செயலாளர் மாதவன் தலைமையில் துவங்கியது. நந்தினி வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி, பூங்குன்றன், த.பெ.தி.க.வின் தியாகு ஆகியோர் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினார்கள்.

தமிழிசைப் பாடல்களுக்கு பகுதி வாழ் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது. காவை.இளவரசனின் ‘மந்திரமா தந்திரமா’ அறிவியல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொங்கல் புத்தாண்டு சிறப்புரையாக தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சந்தோஷ், திமுக பொறுப்பாளர் கதிரேசன், மதிமுக பொறுப்பாளர் வடிவேல் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு அறிவியல மன்றத் தலைவர் சிவகாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்ற பெண்கள் குழந்தைகளுக்கு மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழா ஏற்பாடுகளில் தொடர்ந்து, மகாலட்சுமி, கோமதி, கணபதி, மோகன், நாகராஜ் ஆகியோர் முழுமையாகப் பங்கேற்றனர். இந்நிகழ்வில் கழகப் பொறுப்பாளர்கள் அகிலன், நீதிராஜன்,

வீ. தனபால், சங்கீதா, ராமசாமி, முத்து, ஐயப்பன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள். கழகத் தோழர் கார்த்திகா நிறைவாக நன்றி கூறினார்.

- திராவிடர் விடுதலைக் கழகம்