periyar 432நாம் நம்முடைய உரிமைகளை பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து அனுபவித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின் மீதுதான் நாம் நம்முடைய உரிமைகளைப் பெற முடியும், அந்த அளவுக்கு அவர்கள் நம் மீது உரிமைகளை பெறுவதற்கில்லாமல் ஆதிக்கம் பெற்று இருக்கிறார்கள்.

ஆனால் இந்தக் காரியம் சுலபமானதல்ல ; சாதாரணமாக சாதித்து விடலாம் என்கிற தன்மையில் இல்லை. இது மிகப்பெரிய காரியம் என்பதோடல்லாமல் மிகப்பெரிய பயங்கரமான பலர் பலியாக வேண்டிய காரியமாகும், நம்முடைய எதிரிகளுக்கு இருக்கிற வசதிகளும், பக்கபலமும் மிக மிக ஏராளமானவை.

மதமும் கடவுள் சாஸ்திரங்களும், ஆட்சியும், அதனைச் சார்ந்தவைகளும் அவர்கள் பக்கம் இருக்கின்றன என்பதுடன், நம்முடைய எதிரிகளை பாதுகாப்பதற்காகவே, நம்முடைய எதிரிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக வென்றேதான் அவைகளோடும் கூட சர்க்காரும் இருந்து வருகிறது.      

(விடுதலை 30.05.1951)

- பெரியார்