கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை நாமக்கல் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து ஆண்டுதோறும் தலா ரூ.50,000 அளவிலான இரு இலக்கியப் பரிசுகளை, தமிழில் வெளிவந்த சிறந்த படைப்பிலக்கிய நூலுக்கும், இந்தியாவின் பிறமொழியில் வெளிவந்த சிறந்த படைப்பிலக்கிய நூலுக்கும் வழங்கி வருகிறது. சென்ற ஆண்டு மலையாள இலக்கியகர்த்தா பி.கோவிந்தப்பிள்ளைக்கு முதல் அகில இந்திய இலக்கியப் பரிசு ரூ. 50,000 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தமிழ், இந்தி மொழிப்படைப்புகளுக்கு தலா ரூ. 50,000  வழங்கப்பட உள்ளது. இவ்விரு பரிசுகளும் 2010ஆம் ஆண்டு அக்டேபர் 2-ஆம் நாள் வழங்கப்படவுள்ளது.

விதிமுறைகள் :

கவிதை, கதை, கட்டுரை, நாவல், நாடகம், என்று எல்லாத் துறைகளையும் சார்ந்த நூல்களையும் பரிசுக்கு அனுப்பி வைக்கலாம், தற்போது வாழ்ந்து கொண்டுள்ள எழுத்தாளர் ஒருவரின் பத்தாண்டுக் காலத்துக்குள்- அதாவது 2000-2010 கால அளவில் வெளிவந்த படைப்பாக இருக்க வேண்டும். நூல்களை ஆசிரியர் அல்லது பதிப்பாளர் அனுப்பி வைக்கலாம். சிறந்த ஏதாவது ஒரு துறையின் படைப்பு பரிசுக்குரியதாகத் தேர்ந்தேடுக்கப்படும். இவ்வாண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் படைப்புக்களின் இரண்டு பிரதிகளை திரு.சி.க.கருப்பண்ணன், ஐ.சு.ளு ஒய்வு, துணைத் தலைவர், கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை, செல்லம் மழலையர் பள்ளி,  சின்ன அய்யம்பாளையம், நல்லிபாளையம் அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்-637 003. (தொலைப்பேசி எண்.9487090666) என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.

இப்பரிசுகளைப் பெற இந்தி மொழி எழுத்தாளர்களும், தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் எழுத்தாளர்களும் போட்டியிட வரவேற்கப்படுகிறார்கள்

-இவ்வாறு, கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் பொ.செல்வராஜ், செயலாளர் கே.பழநிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Pin It