ஜூன் 15 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழா கூட்டத்தில் பங்கேற்று இயக்குனர் சீமான் ஆற்றிய உரை, சென்ற இதழின் தொடர்ச்சி:

ராசா சொல்கிறார், 10 ஆண்டுகளில் திராவிட இயக்கத்தையே ஒழிக்கிறாராம். பெரியாருக்கு ஒரு இடத்திலேயும் சிலை இருக்காதாம். ஒரு சிலை மீது கை வைச்சதுக்கே என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். (கைதட்டல்) அப்போவெல்லாம் அவரு தலை எடுக்கலையாம். இப்போது நீங்கள் தலையெடுத்தீங்கன்னா நாங்கள் உங்கள் தலையை எடுப்போம். (கைதட்டல்) அதையும் தெரிந்து கொள். எங்கள் மண்ணில் நெல் விளைகிறதோ இல்லையோ வீரம் விளையும். மானம், சூடு, சொரணை உள்ளவர்கள் நாங்கள். சூடு, சொரணை உள்ள பார்ப்பானாக இருந்தால் எவனும் சோறு திங்கக் கூடாது. ஏனா அது நாங்கள் விவசாயம் செய்து விளைய வைச்சது. நீங்க விவசாயம் செய்து விளைய வைச்சி சாப்பிடுங்கடா.

நீங்கள் எங்களைப் பார்த்து வெட்டுவோம்; குத்துவோம் என்கிறாயே, புழல் மத்திய சிறையிலே போய் பார். அத்தனை பேரும் எங்கள் ஆட்கள் தான் இருக்கிறான். ஒரு பார்ப்பான் இருக்கிறானாடா? ஜெயில் கட்டினதே எங்களுக்காகத் தான் ஒன்று இரண்டு படித்ததே நாங்கள் ஜெயில் கம்பியை எண்ணுவதற்காக தான். இந்த மிரட்டல் எல்லாம் எங்களிடம் வேண்டாம். (கைதட்டல்)

பெரியார் என்ற பெருந்தலைவன் பெயர் இருக்கும் இந்த மண்ணில் (பி.ஜே.பி.யே) தனியா நின்னு ஒரு இடத்தில் வென்று காட்டு பார்க்கலாம். இந்து என்று சொல்லி ஆள் சேர்க்க எண்ணாதே. எம் சொந்த மக்களே! உன்னை தாழ்த்தப்பட்டவன் என்றும் ஒடுக்கப்பட்டவன் என்றும் அடக்கி, ஒடுக்கியவன் அவன் பின்னாடி எப்படி வெட்கம், மானம் இல்லாம போகிறாய். நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லச் சொல். ஒரு தாழ்த்தப்பட்ட தோழன் வீட்டிலே எச்.ராசாவை ஒரு வேளை சாப்பிட்டு விட்டு போகச் சொல். தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வீட்டிலே ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு போகச் சொல் பார்க்கலாம்.

நாங்கள் நாத்திகம் பேசுறோம்னா எங்க மக்களுக்கு மான உணர்வு, சொரணை வரவேண்டும், சிந்திக்கனும், அறிவார்ந்த இனமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ராசாவே இந்த தேசத்தில் உள்ள கோயில்களில் ஒரு கோயிலாவது உன் பாட்டன், முப்பாட்டன், உன் அப்பன் கட்டியிருக்கான் என்று சொல் பார்ப்போம். கட்டியவனெல்லாம் எம் இனத்தை சார்ந்தவர்கள்தானே. ஒரே ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து யாருக்கும் புரியாத சமஸ்கிருத பாஷையிலே மந்திரம் என்று சொல்லி தண்ணீர் தெளித்தான். கல்லு கடவுளாகி விட்டது என்று சொல்லி அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அவன் உள்ளே போய்விட்டான். நாம் உள்ளே போனா தீட்டு என்றான். அன்றைக்கு நாங்கள் செருப்பை கழட்டி அடிச்சிருந்தோம்னா இன்னைக்கு நீ பேசுவாயாடா? (கைதட்டல்) விட்டதுடைய விளைவு தானே?

அய்யா கேட்டாரே ஒரு சொம்பு தண்ணியிலே கல்லு கடவுளாகிப் போச்சா. அந்த தண்ணீரைக் கொண்டு வந்து தமிழக தெருக்களிலே தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தீண்டத்தகாதவன் என்ற இழிவோடு திரிகின்றான். அவன் தலையில் கொஞ்சம் தண்ணியை தெளித்து விடங்கள். அவன் கடவுளாக வேண்டாம் குறைந்தபட்சம் மனிதனாக வாவது ஆகட்டும் என்றார். (கைதட்டல்)

கடவுள் இல்லை என்றால் உனக்கேன் வலிக்குது. இராமன் ஒருத்தன் இருந்தானா? அவன் என்கிட்டே வந்து கேட்கட்டும். இராமகோபாலனை அய்யா என்று தான் சொல்றேன். உங்களை வைதால் நீங்கள் எங்கே மேலே வழக்கு போடுங்க. கடவுள் உன்னை படைச்சார் என்று நீ நம்பினினா, உலகத்தை படைச்சார்னு நம்பினினா, எங்களையும் படைச்சார்னு நம்பினினா, அவன் தானே எல்லார் தலையிலும் எழுதி வைக்கிறான். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று நீ நம்பினினா என்னையும் அவன் தான்டா கடவுள் இல்லை, இல்லை என்று ஊர் ஊரா போய் பேசச் சொல்லி, என் தலையில் எழுதியிருக்கான்.

தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் சொல்லிவிட்டு எந்த மசுருக்கடா பாபர் மசூதியை இடிச்சிட்டு, ராமர் கோயில் கட்டுறது. சுட்டுத் தள்ளும் துப்பாக்கி குண்டிலேயும் இருப்பானா, உன் கடவுள் சொல். என்ன கேவலமான சிந்தனை போக்கு. இத்தனை ஆண்டுகளாக கடவுளைப் பற்றி பேசுகிறோம், ஒரு கடவுள்கூட இது வரை வந்து எங்களை கேட்கவில்லையே. எல்லா காலங்களிலும் அவதாரம் எடுத்து வந்த இந்த கடவுளில் ஒன்றாவது அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில், இஸ்ரேலிலிலோ, ஈராக்கிலோ ஏன் எடுக்கவில்லை. உலகத்தையே படைத்த கடவுள், ஏன் இந்த தேசத்திலேயே அவதாரங்களை எடுத்துக் கொண்டது.

சேது சமுத்திரத் திட்டத்தை எதைச் சொல்லி தடுத்து வைத்திருக்கான். இராமர் பாலத்தை உடைக்கலாமா என்கிறான். அறிவார்ந்த சமூகம் 21 ஆம் நூற்றாண்டில் நிற்கக் கூடிய ஒரு சமூகம், இந்த தேசம். மக்கள் நம்ப முடிகிறதா? உண்மையிலேயே நீங்கள் கல்வியாளர்கள் தானா? உண்மையிலேயே அறிவு இருக்கிறதா? கடல் மட்டத்திற்கு மேலே தெரியக் கூடிய மண் என்பது ஒரு தீவு. தனுஷ்கோடி, கச்சத்தீவு, இலங்கை போன்ற பல தீவுகள் இருக்கின்றது.

கடலுக்கு உள்ளே இருக்கிற ஒரு மணல் மேட்டைத் தான் இவர்கள் இராமர் பாலம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பிரிட்டிஷ்காரன் இந்த மண்ணை ஆள்கின்ற போதே இந்த மணல் திட்டை ஆதம் பாலம் என்று எழுதி வைத்து இருந்தானே, அப்போ இராமர் பாலம் என்று சொல்லும் சுப்ரமணியசாமி, இந்து முன்னணி, பாரதிய ஜனதா இவர்கள் எல்லாம் அன்றைக்கு ஏன் இது ஆதம் பாலம் அல்ல, இராமன் பாலம் தான் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால் எல்லாப் பயல்களையும் கொக்கு, குருவி சுடுவதைப் போல சுட்டுத் தள்ளியிருப்பான். எங்களுக்கு வேலை மிச்சமாயிருக்கும். (கைதட்டல்)

ஒரு நல்ல இந்து இருந்தா சிவலிங்கம் என்றால் என்ன என்று பொது மேடையில் நீங்க பேசுங்கடா. (கைதட்டல்) இவ்வளவு அவதாரங்கள், கடவுள்கள் இருந்து இந்த பூமியில் விளைந்தது என்ன? நான் தமிழ் படிக்க போனேன். சிவன் தலையில் இருந்தது கங்கை என்கிற தமிழ்ப் பாடம். புவியியல் படிக்கப் போனேன், அதிலே இமயமலையில் இருக்கின்றது கங்கை என்கிருக்கிறது.

எனக்குக் குழப்பம். சிவன் தலையில் இருக்கிறதா? இமயமலையில் இருக்கிறதா கங்கை? முடிவு பண்ணிட்டு பாடம் நடத்துங்க என்கிறேன். இதிலே என்ன தப்பு இருக்கின்றது? இந்த உலகம் உருவானதே சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய துகள்கள் தான் இந்த பூமியும் சந்திரனும் என்பது உண்மை. நாளடைவில் இந்த பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் தோன்றுவதற்கு ஏதுவான சூழ்நிலை உருவானது. காரணம் இங்கு நீர் உருவாகும் சூழ்நிலை உருவானது. ஒரு செல் உயிரி உண்டாகி படிப்படியாக பரிணாம வளர்ச்சிப் பெற்று 6, 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தான் மனித இனம் உருவாகிறது. மொழி தோன்றி ஏறக்குறைய 2 லட்சம் ஆண்டுகள்தான் ஆகின்றது. இது வரலாறு, இதிலே கடவுள் எங்கே வந்தான், என்ன செய்தான்.

மாற்றம் என்பதே மானிடத் தத்துவம். மாறாது என்ற சொல்லைத் தவிர மற்றவை அனைத்தும் மாறி விடும் என்ற மார்க்சின் தத்துவத்தைக் கூறி நல்ல உறவுகளே. சத்தியராஜ் தான் சொன்னாங்க, கடவுள்னு ஒருத்தன் இருந்தா ஒன்னும் சாதிச்சி காட்ட வேணாம், என் மண்டையிலிருந்து உதிர்ந்த மயிரை முளைக்க வைச்சிக் காட்டுங்க. நான் மறுபடியும் சாமி கும்பிடுறேன் என்றார்.

உண்மையிலேயே சாமிக்கு சக்தி இருந்தா, நீங்கள் தேர் இழுக்கிறேங்களடா. நான் என்ன சொல்றேன், சாமியை தேரில் ஏத்தி வைப்போம். அது சக்தியாலே அந்த தேர் நகர்ந்துச்சினா நாங்கள் எல்லாம் சாமி கும்பிடுகிறோம்டா. இடுப்பில் துண்டைக் கட்டிக்கிட்டு நாங்க தான்டா இழுக்கவேண்டியிருக்குது. அந்தத் தேரை ஒரு பார்ப்பனனாவது இழுக்குறானாடா பாருங்கள்?

மலை மீது நின்று ஒரு லட்சம் பிரசங்கங்களை செய்கிறார், தேவனின் மகன் பரமப்பிதா. முன்னால் இருப்பவனுக்குத் தான் கேட்கும் பின்னால் இருப்பவனுக்கு கேட்காது. அந்தக் கடவுளுக்கு தெரியல, இந்த ஒலி வாங்கியை படைக்கனும் என்று, தீப்பந்தத்தை ஏற்றி வைச்சி அவர் பிரசங்கம் செய்கிறார். அந்த தேவகுமாரனுக்குத் தெரியல இந்த மின் விளக்கை படைக்கனும்னு. கட்டு மரத்தில பயணம் செய்த கடவுளுக்கு, கப்பல் கண்டுபிடிக்க தெரியல?

என்ன கொண்டு வந்தாய், கொண்டுச் செல்வதற்கு என்று கிருஷ்ணன் கூறுகிறானாம். இதை சொல்வதற்கு ஒரு கடவுளா? கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே, என்றால் வேலை செய்துவிட்டு கூலி வாங்காமல் சென்று விட வேண்டுமா? என்னடா தத்துவம் இது.

எந்த ஒன்றை இந்தக் கடவுள் படைத்தது சொல்லுங்கள்? ஒரு ரப்பரை, ஒரு பென்சிலைக் கூட படைக்காத இந்தக் கடவுள் உன்னையும், என்னையும் படைத்தது என்று எப்படி நீங்கள் நம்புகிறீர்கள்? அதுதான் என் கேள்வி. தண்ணீர் வரவில்லையா? மீனவர் சுட்டுக் கொலையா? பெட்ரோல் விலை ஏறிவிட்டதா? பள்ளிக்கூட கட்டணம் கூடி விட்டதா? மின்சாரம் ரத்தா? போராட்டம் என்று எதையொன்றையும் இந்த மன்றத்தில் போராடித் தான் பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம், சூழ்நிலை இருக்கும்போது, என் அன்புச் சொந்தங்களே, இத்தனைக் கோடி கடவுள்களும், கோயில்களும், புனஸ்காரங்களும் எதற்காக?

விலைவாசி ஏறி விட்டது என்று கோயில்களில் போய் பூசை செய்து விலையை குறை என்று கடவுளிடம் கேட்பீர்களா? அரசாங்கத்திற்கு எதிராகத் தானே போராட்டம் நடத்துகிறீர்கள். எல்லாத் தலை எழுத்து, விதி என நம்பிக் கிடக்கிறீர்கள். தலை எழுத்து என்றால் எந்த மொழியில் இருக்கின்றது. இன்னார் இன்னாரை கத்தி எடுத்துக் கொண்டு போய் கொலை செய்வான் என்று எழுதிவிட்டு, இன்னாரால் இன்னார் கொல்லப்படுவார் என இவன் தலையில் எழுதிவிட்டு, கொலை நடந்த பின்பு கொலை செய்தவனை ஏன் பிடிக்க வேண்டும்? தலையில் எழுதினவனை அல்லவா காவல்துறை கைது செய்ய வேண்டும். அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப கடவுள் இறுதி நாளில் தண்டிப்பாராம்.

அவனவன் பாவ புண்ணிய காரியங்களுக்கேற்ப தண்டனை தருகின்றது என்று சொல்லுகிறாய், எல்லா மதமும் நம்புதில்லையா? அப்புறம் இடையில் தண்டிக்க நீங்கள் யார்? இந்த நம்பிக்கை இருக்கிற இந்த மதவாதிகள் எதற்காக நீங்கள் கோர்ட் கட்டியிருக்கிறீர்கள்? காவல் நிலையம் எதற்காக? சிறைச்சாலை எதற்காக? நான் பாவம் செய்தால் கடவுள் என்னை சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பட்டும். எதற்காக என்னை கைது செய், நடவடிக்கை எடு என்கிறாய். அப்படியானால் உனக்கு நம்பிக்கை இல்லை. கடவுள் என்னை தண்டிப்பார் என்று. அது தானே உண்மை.

காலங்காலமாக ஒரு சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக ஆகவிடாமல், அவர்களை அப்படியே மூளைச் சலவை செய்து, மூடநம்பிக்கைக்குள்ளேயே அவனை வைத்திருப்பது. மந்திரக் கல் என்றும், எண் ராசி என்றும், இன்னும் சொல்லப் போனால் யானையின் வாலிலுள்ள முடியை எடுத்து மோதிரம் செய்து போட்டு இருக்கிறான். இந்த மூட நம்பிக்கையில் இருந்து இந்த இனம் எழ வேண்டும். கழுதைப் படத்தை வைத்து என்னைப் பார் யோகம் வரும் என எழுதி வைத்திருக்கிறான். கழுதையைப் பார்த்தால் யோகம் வரும்னா தினம், தினம் கழுதையைப் பார்க்கிற சலவைத் தொழிலாளி, ஏன்டா எங்கள் அழுக்கை வெளுத்து கஞ்சி குடிக்கனும். அவன் கோட்டீஸ்வரனாக வேண்டியது தானே.

இந்தக் கேள்வி எழவில்லை, இது குறித்து சிந்திக்கவில்லை. பகுத்தறிவு என்பது சிந்திக்க வேண்டும் என்பதுதான். சிந்தித்தால், எதற்கு? ஏன்? எப்படி? என்ற கேள்விகள் வரும் அந்த கேள்விகள் தான் பகுத்தறிவு. இதை எம் மக்களுக்கு நாங்கள் சொல்லித்தராமல் யார் சொல்லித் தருவது? ஏன் சுனாமி வந்ததே அதில் ராமனே, அல்லாவே, ஏசுவே என்று எவனும் கத்தாமலா இருந்தான். கோயிலும் தானே சேர்ந்து போனது.

இந்த மடமைகளைக் கடந்து வாருங்கள். சாதி, மதம், மூடநம்பிக்கைகளை தகர்த்தெறியுங்கள். எங்களுக்கு என்ன இராமனை அல்லது இந்துமதத்தை வையனும். இந்த மதம் தான் என்னை தாழ்ந்த சாதி மகன், இழி மகன், வேசி மகன் என்று சொல்லியது. அதனால் தான் இந்த மத்தை கண்டிக்கிறோம். தந்தை பெரியார் அவர்கள் பெருத்த வேதனையோடு சொன்னது என்றைக்கு தமிழன் இந்திய தேசியம் பேசினானோ அன்றைக்கு போனதடா அவன் இன மானமும், தன்மானமும் என்று சொன்னார்.

பெரியார் தள்ளாத வயதில்கூட அவர் முதுகு குனிந்தபோதுகூட எங்களையெல்லாம் நிமிர வைத்த தலைவருடா, மண்ணுக்குள் விழ வேண்டிய வயதில்கூட இந்த மண்ணுக்காக விழுந்தவர் தான் எங்கள் அய்யா. மூத்திச் சட்டியை சுமந்து தெருத்தெருவாகப் போய் எங்கள் மீது உள்ள சூத்திரப் பட்டத்தை துடைக்கப் போராடிய மாபெரும் தலைவர்தான்டா எங்கள் பெரியார்.

கண்ணாடிக்கு மேலே ஒரு பெரிய கண்ணாடியை வைத்த குனிந்து குனிந்து எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தேடிய ஒப்பற்ற தலைவர் தானடா எங்கள் பெரியார். ராசாவே பெரியாரைப் பற்றி பேச, உனக்கு என்ன யோக்கியதை இருக்கு. எங்கள் கேள்விகளுக்கு சனநாயக முறைப்படி பதில் சொல்.