தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு ஆதாரமாக கூறப்பட்ட வீடியோக்களில் வார்த்தைகள் இடைச்செருகப்பட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஜே.என்.யு. மாணவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 7 வீடியோக்களில்,

2 வீடியோக்களில் இவ்வாறு மோசடி செய்யப்பட்டு இருப்பதும், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற வார்த்தை ஒரிஜினல் வீடியோவில் இடம்பெறவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தில்லி அரசால் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 7 வீடியோக்களையும் ஆய்வுசெய்த ட்ரூத் லேப்ஸ் (Truth labs) தடயவியல் ஆய்வக தலைவர் கே.பி.சி. காந்தி, என்.டி.டி.விக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “சர்ச்சைக்குரிய இரண்டு வீடியோக்களில் மோசடி செய்யப்பட்டு உள்ளது என்பதை உறுதி செய்துள்ளார். வார்த்தைகள் இணைக்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து உள்ளார். “வீடியோ மற்றும் ஆடியோவில் தொடர்பின்மையானது காணப்படுகிறது; வெட்டி உள்ளே சேர்க்கப்பட்டு உள்ளது; குரல் மாதிரிகள் கொடுக்கப்பட்டால் யாருடைய குரல் உள்ளே இணைக்கப்பட்டது என்பதையும் கண்டுபிடித்து விடுவோம்” என்று காந்தி கூறியுள்ளார்.

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அப்சல் குரு நினைவு தினத்தையொட்டி, தூக்குத்தண்டனைக்கு எதிரான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அதில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்றும் ‘இந்தியா ஒழிக’ என்றும் மாணவர்கள் முழக்கமிட்டதாகவும், அப்சல்குருவுக்கு ஆதரவாக பேசியதாகவும் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. குற்றம் சாட்டியது. சில வீடியோக்களையும் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்யா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மாணவர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட வீடியோக்கள் மோசடியானவை என்றும், பாகிஸ்தான் வாழ்க என்ற முழக்கம் இடையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் ஜே.என்.யு. மாணவர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதி அரங்கேற்றப்பட்டு உள்ளதும் அம்பலமாகியுள்ளது.

பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது?

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் கதவுகள் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு திறந்தே இருக்கும். சமூக மாற்றத்திற் கான புரட்சிக் கர சிந்தனைகள் படிந்து நிற்கும் பல்கலைக் கழகம் இது. பேராசிரி யர்கள் பலரும் முற்போக்கு சிந்தனையாளர்கள் தான். இடது சாரி சிந்தனைகளின் தாக்கம் மிகுந்து நிற்கும் இப்பல்கலைக் கழகத்தில் அண்மைக் காலமாக மாணவர்களிடையே பார்ப்பனிய எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, பெண் ணுரிமை சிந்தனைகள் மேலோங்கி வருகின்றன. காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவத்தின் ஒடுக்குமுறை களுக்கு எதிராகவும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு ஆதர வாகவும் குரல் கொடுத்து வரு கிறார்கள். இயற்கை வளங்கள், பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்படுவதற்கு எதிராக வும், மாணவர்கள் அழுத்தமாக குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர். இடது சாரி கட்சி களின் எல்லைகளைக் கடந்து சமூக எதார்த்தம் இந்த மாணவர் களை பார்ப்பன எதிர்ப்பு குறித்து வெளிப்படையாக போராட வைத்திருக்கிறது.

மறைந்த திராவிடர் இயக்க ஆய்வாளர் எம்.எஸ்.எஸ். பாண் டியன், இப்பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையில் பணி யாற்றியபோது, காஷ்மீரி-வட கிழக்கு மாநிலங்களின் உரிமைப் பிரச்சினைகளை சிறப்புப் பாட மாக்கினார். பல்கலைக்கழகத்தில் இது குறித்து விரிவான விவாதங் களுக்கு வழி வகுத்த பெருமை அவருக்கு உண்டு.

காஷ்மீரில் அஞ்சலகங்கள் வழி யாக தபால் விநியோகம் முடங்கிப் போய் நிற்கிறது. இராணுவத்தினர் பிடியில் காஷ்மீர் மக்கள் அன்றாடம் சந்திக்கும் துயரங்களை விளக்கிட, ‘அஞ்சலகம் இல்லாத ஒரு நாடு’ என்ற தலைப்பில் காஷ்மீரிகளின் அவலங்களை விளக்கும் கலாச்சார நிகழ்வுகளை மாணவர்கள் நடத்தினர். அப்போது ‘Z’ தொலைக் காட்சி குழுவினருடன் உள்ளே நுழைந்த ‘வித்யார்த்தி பரிஷத்’ கும்பல், மாணவர்களைத் தாக்கத் தொடங்கியது. பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்களை இந்த கும்பலே எழுப்பி அதை தொலைக் காட்சி பதிவாக்கி, பல்கலைக் கழக மாணவர்களை ‘தேச விரோதி’ களாக சித்தரித்து, 5 மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவும் செய்யப்பட்டது. அதில் ஒருவன் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார்.

Pin It